குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Tuesday, November 22, 2011

பிராண சக்தியின் தன்மைகள் - 01


பிராண சக்தியின் தன்மைகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம்

 • உலகில் செயல்படும் சக்திகள் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பதுவே பிராணன்.
 • மனித உடலில் பிராணனின் ஸ்தூல வடிவமே சுவாசம்.
 • இது மனித உடலில் தலையில் உள்ள பிரம்மாந்திரம் என்னும் உச்சிக்குழியினூடாகவும், யோக சித்தி பெற்றவர்களுக்கு ஆறு ஆதாரங்கள் ஊடாகவும் சூஷ்ம உடலில் ஏற்கப்பட்டு, பின் ஸ்தூல உடலில் உள்ள 72000 நாடிகளூடாக உடலுறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது. 
 • பிராணன் என்பது ஒருவித மின் காந்த சக்தி, அது செல்லும் இடங்களில் உள்ள தகவல்களை எடுத்து செல்லும், அதாவது நல்லது, கெட்டது என்பதில்லை. 
 • மனதின் தன்மைக்கு ஏற்றவகையில் பிராணனின் தன்மையும் மாறும். ஒருவருடைய பிராணசக்தி அவரது எண்ணம், நம்பிக்கைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றுடன் கலந்து அவற்றை வலுப்படுத்தும். அதேபோல் பிராணசக்தியுடன் கலந்து அன்பு, எண்ணங்கள், நம்ம்பிக்கைகள், உணர்ச்சிகளையும் செலுத்தலாம். 
 • எம்மை சுற்றியுள்ள அனைத்திலிருந்தும் பிராண சக்தியினை நாம் உறிஞ்சுகிறோம், அதேபோல் இழக்கிறோம். இது அந்த இரு பொருட்களுக்குமிடையிலான சக்தி அளவு விகிதத்தினைப் பொறுத்தது. கூடியதிலிருந்து குறைந்ததிற்கு சக்தி பாயும் என்பது இயற்கை விதி.
 • ஒருவன் தனது தியான சக்தி, பிராணாயாமம், ஆசனங்கள், வர்ம புள்ளிகளை அழுத்துதல் போன்றவற்றால் பிராணசக்தியினை சீர் செய்து கொள்ளலாம். 
 • இது பஞ்ச பூதங்களாலும் இடகலை, பிங்கலை நாடிகளால் சமப்படுத்தப்படுவதுடன், யோக நிலையில் சுழுமுனை வழியாக பாயும். 
 • இந்திய யோகப்பயிற்சி, கடவுள் வழிபாட்டில் உள்ள பூஜைமுறைகள், ஜெபம், தெய்வ சாதனைகள், பிராணபிரதிஷ்டை சடங்குகள், கோயில் வழிபாட்டு முறைகள் எல்லாம் இந்த பிராண சக்தியினை சேமித்து தம்மில் பெறுவதற்கான ஏற்பாடுகள் தான்.  இவை எதுவும் மூட நம்பிக்கைகள் அல்ல. 
 • இந்த பிராண இயக்கத்தின் தடையே நோயாகும். இந்த தடைகள் மனம்,உணர்ச்சிகள், வெளிப்புற பௌதீக பாதிப்புகள், எண்ணங்கள், சூழல் என்பவற்றால் வரலாம். 

அடுத்த பதிவிலும் தொடரும்....
-----------------------------------------------------------------------------------------------------------------------

இதனுடன் தொடர்புடைய பிற பதிவுகள்


5 comments:

 1. பிராண சக்தி என்பதைப்பற்றி அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்.

  இந்த பிராணனைப் பிடித்து வைத்திருக்க (அல்) ஏற்றுக்கொள்ள நம் உடலும் தயாராக இருக்க வேண்டும். உடலில் ஏற்கனவே இருப்பதைவிட அதிக பிராணனைத் தாங்கும் சக்தி பலரின் உடலுக்கு இல்லை. உடல் பலத்தை அதிகரித்தால்தான் பிராண பலத்தை அதிகரிக்க முடியும். உடல் பலம் இல்லாமல் பிராண பலத்தை மட்டும் ஏற்றால் பல பிரச்சினைகளுக்கு ஆட்பட வேண்டி வரும் என்பது எனது தாழ்மையான கருத்து.

  இதனால்தான் ஆசனம் செய்யாமல் பிராணாயாமம் செய்யக் கூடாது என கூறுகிறார்களோ???

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. உண்மைதான், ஆனால் அளவான‌ பிராணாயமப் பயிற்சி மூலம் உடல் வலிமையினையும் கூட்டலாம் என்பது அனுபவம்! அதாவது உடல் வலிமை அற்று இருக்கும் போது ஆழ் சுவாசம் போன்ற சில மூச்சுப் பயிற்சியை (அனைத்தயும் அல்ல) செய்வதன் மூலம் உடல் வலிமையும் பெறலாம், ஆனால் குண்டலினி விழிப்பு போன்ற பயிற்சிகளில் உடல் வலிமையற்று பிராணாயாமம் அதிகம் செய்தால் பிரச்சனை வரும்!

  ReplyDelete
 3. நண்பரே , சித்த விஞ்ஞான கருத்துகளை தொகுத்து விளக்கும் நூல் ஏதேனும் இருக்கிறதா? நான் இதை பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 4. நண்பரே , சித்த விஞ்ஞான கருத்துகளை தொகுத்து விளக்கும் நூல் ஏதேனும் இருக்கிறதா ? நான் இதை பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 5. நண்பர் யுவா அவர்களே, தங்கள் தேவையின் விபரம் தந்தால் என்னால் உதவமுடியுமான அளவு உதவலாம்!

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...