குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, November 18, 2011

நோக்குவர்மமும் தாரணா சக்தியும்

இதனுடன் தொடர்புடைய மற்றைய பதிவுகள்:

  1. போதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம்
  2. போதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்



சென்ற பதிவில் நோக்கு வர்மத்தின் பிரயோக உத்தி தாரணா சித்தி என்பதனை விளக்கியிருந்தோம், இன்றைய பதிவில் தாராணா சக்தி என்பது என்ன? அதன் பயன்பாடுகள் நோக்கு வர்மத்திலும் அன்றாட வாழ்விலும் எப்படி இருக்கிறது என்பது பற்றி சிறிது ஆராய்வோம்.

அஷ்டாங்க யோகம் என்பது ஒருவர் ஆதியுடன் கலக்கும் சமாதி எனும் நிலைக்கு செல்வதற்கான சரியான இலகுவான, ஒழுங்கு படுத்தப்பட்டஒரு வரை முறையாகும். பதஞ்சலியார், திருமூலர் ஆகிய சித்தர்கள் இதனை தெளிவாக விரிவாக முறைப்படுத்தி வைத்தனர். இதன் படி ஒருவன் தன் மனதை இயம, நியமங்களால் சுத்தி செய்து, பின் சூஷ்ம ஸ்தூல உடலை ஆசன, பிராணாயாமங்களால் வலுப்படித்தி, பின் மனதை புறப்பொருட்களில் இருந்து பிரத்தியாகாரத்தினால் பிரித்தெடுத்து, குறித்த ஒரு இலக்கில் தாரணை எனும் பயிற்சியால் ஒருமைப்படுத்தி, பின் ஒருமைப்படுத்திய வஸ்துவில் மனதை கரைத்து (தியானம்) மனமற்ற நிலையுடன், ஆதியான பரம்பொருளுடன் ஒன்றாதல் (சமாதியாகும்).

இந்தக்கட்டுரையில் நாம் எடுத்துக்கொண்ட விடயம் நோக்கு வர்மத்தின் பிரயோக செயல் முறை எப்படி என்பதனை அறிந்து கொள்வதாகும். ஒருவன் நோக்கு வர்மத்தினை பிரயோகிக்க தியானம், சமாதி ஆகிய நிலைதவிர்ந்த அஷ்டாங்க யோகத்தின் படிமுறைகள் அனைத்தையும் அறிந்திருத்தல் அவசியம். 
  • இயம, நியமம் அவனது மனம் தவறு செய்ய தூண்டாமல் வைத்திருக்கும்.
  • ஆசனம் - உடலை சீர் செய்யும்
  • பிரணாயாமம் - பிராண சக்தியினை சீர் செய்யும்.
  • பிரத்தியாகாரம் - உணர்ச்சி வசப்பட்டு தாக்குதல் நடத்தாமல் இருக்க மனதை பணடுத்தும்.
  • தாரணை - நோக்கு வர்ம தாக்குதல் நடத்தும் முறை. 

சரி தாரணை என்பது அசையாமல் கட்டுப்படுத்தப்பட்ட சித்த சக்தி என பதஞ்சலியார் வரை விலக்கணப்படுத்தியுள்ளார். அது என்ன என்பது பற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம். மனம் மேல்மனம், ஆழ்மனம், மறைமனம் என்ற மூன்று அடுக்குகளை அல்லது வலயங்களை உடையதாக பிரித்துக்கொள்ளலால். இதைப்பற்றி விபரம் இந்த இணைப்புகளில் பார்க்க.

சாதரணமாக பெரும்பாலானோர்க்கு மேல்மனம் மாத்திரமே உபயோகத்தில் இருக்கும், எப்படியென்றால் கேள்வி கேட்டு தர்க்கத்தின் மூலம் அறிதல் மேல் மனத்தின் செயல்முறை, சற்று ஆழ்ந்து சிந்திப்பவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு ஆழ்மனம் செயல்பாட்டில் இருக்கும், இதைத்தான் பதஞ்ச்சலி முனிவர் சித்தம் என்று கூறுகிறார். இந்த சித்தம்தான் மனதில் வரும் எண்ணங்களுக்கு தூண்டுகோல், சக்தியின் இருப்பிடம், இந்த சித்தத்தினை ஒரு நிலைப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் சக்தி பெற்றால் அது பல சித்திகளை கொடுக்கும். இதனை பொதுவாக தாரணா சக்தி/ஏகாக்ர சக்தி எனக் கூறலாம். 

சித்திகள் பெறுவதற்கு தனியே தாரணாசக்தி மட்டும் போதுமா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ஆதாலால் இதனை சாதிப்பதற்கு பிராணசக்தியும் அவசியம். அதற்கு பிராணாயாம பயிற்சி கட்டாயம் சித்தியாகியிருக்க வேண்டும். சித்த சக்தியுடன் பிராண சக்தி கலக்கும் போது அதன் வலிமை அதிகமாகும். இவை ஒன்றோடு ஒன்று கலந்தவை. 

சரி பிராண சக்தி பற்றி இன்னொரு பதிவில் விளக்குவோம். இங்கு தாரணா சக்தி பற்றி மட்டும் பார்ப்போம். இதனை சாதிப்பதற்கான பொறிமுறை "திராடகம்" எனப்படும். இதனை (அந்தர்)அகத்திராடகம், (பாஹ்ய)புறத்திராடகம் என இருவைகைப்படுத்தலாம். நோக்கு வர்மத்திற்கு தேவையானது புறத்திராடகம். அதாவது கண்களால் சித்த சக்தியினையும், பிராணசக்தியினையும் செலுத்தும் ஆற்றலைப்பெறுவது. இப்படி கண்களால் பிராண, சித்த சக்திகளை செலுத்தும் ஆற்றலைப்பெற்ற ஒருவர் நோக்கு வர்ம பிரயோகத்தினை பயன்படுத்தலாம். 

திராடகம் என்ன என்பது பற்றி நல்ல குருவிடம் பயிற்சி பெறுதலே சித்தியை தரும், ஏனெனில் நல்ல பிராண சக்தியும், சித்த சக்தியும் உடலிலோ, மனதிலோ இல்லாமல் இதனை செய்தால் கண்கள் பழுதாகும் அபாயம் உண்டு, ஆதலால் இங்கு அதன் செயன்முறை பற்றி விளக்கம் தரவில்லை. சென்ற பதிவின் பின்னூட்டத்தில் அன்பர் ஒருவர் இது பற்றிய குறிப்பு கொடுத்துள்ளார். அதனைப் பார்க்கவும். 

இந்தப்பதிவுகளின் நோக்கமே ஆர்வமுள்ள தமிழர்கள் விடயங்களை அறிந்து உண்மையினை உணர்ந்து விஞ்ஞான பார்வையுடன் இக்கலைகளை கற்க முற்பட வேண்டும் அதானால் உண்மையில் எவ்வளவு அறிவை இழந்துள்ளோம் என்பதனை உணரவேண்டும் என்பதே. 

அடுத்த பதிவில் உடலில் பிராண சக்தியின் நிலையும் நோக்கு வர்மமும் பற்றியும் பார்ப்போம்!

2 comments:

  1. நோக்குவர்மத்தின் சூட்சுமங்களை பற்றி அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...