குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Thursday, November 10, 2011

காயத்ரி மந்திரமும் ஞான வளர்ச்சியும் - சாதனை முறைகாயத்ரி மந்திரம் வெறும் வார்த்தைகளை மட்டும் கொண்டிருக்கவில்லை, சிலர் கூறுவது போல் சூரியனை புகழ்ந்து பாடப்படும் பிரார்த்தனைப் பாடல் அல்ல! அதன் சொற்கள் அட்சரங்கள் குறித்த ஒலி உச்சரிப்புடன் திரும்ப திரும்ப சொல்லும் போது குறித்த சக்தியலைகளை உருவாக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கமான நேரடிப்பொருள்: பிரபஞ்ச முதற்பொருளே எனது அறிவினைத்தூண்டி சரியான பாதையில் என்னை இட்டு செல்வாயாக என்பதாகும்! மற்றைய விளக்கங்கங்க்களை விட இந்த பிரார்த்தனை முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் எல்லாபிரச்சனைக்கும் காரணம் ஞானம்/அறிவு இல்லாமல் இருப்பதே! ஞானமடைந்த மனது இலகுவில் பிரச்சனையினை கிரகித்துக்கொண்டு மீண்டு வருகிறது. பொருளை உணர்ந்து ஜெபத்தினை திரும்ப திரும்ப சொல்லும் போது அது ஒருவித சுய ஹிப்னாடிசம் (Self hypnosis) ஆகிறது. அதாவது எமது ஆழ்மனம்/சித்த மனம் (Sub conscious mind)  இந்த பொருளை கிரகித்து அதற்கேற்றவாறு மறை மனத்தை ((Unconscious mind)  ஒத்திசைய வைக்கிறது! இதன் மூலம் மனம் பிரபஞ்ச மனத்திலிருந்து (cosmic mind) ஞானத்தினை பெறுகிறது. அதாவது நாம் எதனை தொடர்ந்து பாவிக்கிறோமோ அதுவாகிறோம் என்ற தத்துவத்தின் படி! காயத்ரி மந்திரத்தினை பொருளறிந்து தொடர்ச்சியாக ஜெபித்தல் ஞானத்தினைக் கொடுக்கும்! இதில் எதுவித மஜிக் பர்முலாவும் இல்லை! சுய ஹிப்னாடிசம் என்ற தத்துவத்தின் படியே ஜெப சாதனை இயங்குகிறது! 

இனி காயத்ரி மந்திரத்தின் வார்த்தைகளின் தமிழ் அர்த்தத்தினை பார்ப்போம். 

 • ஓம் - பிரம்மம், பரம்பொருள் அல்லது ஒட்டுமொத்த ஞானசக்தி
 • பூர் - ப்ராண சக்தி
 • புவஹ - துன்பங்களை அழிக்கும் சக்தி
 • ஸ்வஹ - ஆனந்தத்தை தரும் சக்தி
 • தத் - அது
 • ஸவிதுர்  - பிரகாசமான, ஒளிபொருந்திய (சூரியனைப்போன்ற, ஸூரியன் அல்ல)
 • வரேணியம் - உன்னதமான
 • பர்கோ - பாபங்களை அழிக்கும்
 • தேவஸ்ய - தெய்வ சக்தியினை
 • தீமஹி - நிறைவாக்கி
 • தியோ - ஞானம்
 • யோ - யார்
 • ந - எம்மை
 • ப்ரசோதயாத் - தூண்டுகிறாரோ


தமிழில் கீழ்வருமாறு பொருள் கொள்ளலாம்

 " பிரபஞ்ச இருப்புக்கு காரணமானவரும், உலகில் உயிர்கள் வாழ்வதற்கு சக்தியினை கொடுப்பவரும், எமது துன்பங்களையெல்லாம் போக்கி இன்பத்தை அளிப்பவருமான  பரம்பொருளின் சூரியனைப்போல் ஒளி பொருந்திய அந்த ஞானசக்தி எம்மில் அறிவினைத்தூண்டி தெய்வசக்தியினை நிறைவாக்கி எம்மை சரியான பாதையில் இட்டு செல்லட்டும்" 

சமஸ்கிருத காயத்ரியினை உச்சரிக்க விரும்பாத தனித்தமிழ் விரும்பிகள் பயன் பெற விருப்பமிருந்தால் மேற்கூறிய பொருளை சுய ஹிப்னாடிசமாக செய்து பலன் பெறலாம்! 

இதை எப்படி செய்வது? பாவனை, அதாவது மனத்திரையில் சூரியனை அல்லது சூரியன் போன்ற ஒளிபொருந்திய வெண்ணிற ஒளியினை தியானித்துக் கொண்டு அந்த ஒளி எமது உடலில் புகுந்து எமது மனம், சித்தம், புத்திகளில் உள்ள அழுக்குகளை போக்குவதுபோல் பாவனை செய்து எம்மில் நல்ல அறிவு, வளர்வதாக பாவனை செய்து கொண்டு இயன்றளவு காயத்ரி மந்திரத்தையோ அல்லது பொருளையோ ஜெபித்து வரவேண்டும்.  

இதில் இன்னொரு விடயத்தினை விளக்கவேண்டுமெனவும் எண்ணுகிறோம்! பாவனை என்றால் என்ன? கற்பனை அல்ல! ஒருவன் பாம்பு கடிக்காதபோதும் தனக்கு உண்மையில் பாம்பு கடித்துவிட்டது என ஆழமாக உணர்வான் எனின் உடலில் விஷமேறியதற்கான குணம் குறிகள் உண்டாகும், அதுபோல் தனக்கு உண்மையின் ஞானம் உண்டாகிவருவதாக பாவிக்க அவனில் ஞானம் வளர்ந்து வரும்! இதற்கு காயத்ரி மந்திரத்தின் அதிர்வுகள் துணைபுரியும்!

இந்த பாவனையினை எப்படி செய்வது என்பது பற்றி பிறிதொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம்!

3 comments:

 1. பாவனை மற்றும் காயத்ரி மந்திரத்தின் பொருள் பற்றிய தங்கள் விளக்கம் அருமை.

  இன்னும் ஆழமாக சிந்திக்கும்போது பாவனை கூட தேவையில்லாத ஒன்றாக ஆகி விடுகிறது.. ஆரம்ப சாதனைக்கு பாவனை உதவி செய்தாலும், மேலதிக ஆழ்நிலை சாதனைகளுக்கு பாவனை எதிராகவே இருக்கும்.

  நம் ஆழ்மனதில் இந்த ஒலிகளுக்கான எதிர்வினைகளின் பதிவுகள் இருக்கின்றன. அவை சரியாக தூண்டப்படும்போது நல் விளைவுகள் தானே ஏற்படுகின்றன.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. ஆம் நண்பரே நிச்சயமாக நீங்கள் குறிப்பிடுவது போல் இது ஆரம்ப நிலைக்குத்தான்! ஒரு பரிசோதனை போல் நம்பிக்கை அற்றவர்கள் தொடங்குவதற்கு மட்டுமே, அதன் பின் ஒவ்வொருவரும் தமது சாதனையினை சுய அனுபவத்துடனும், குருவின் வழிகாட்டலுடனும் தொடர வேண்டும்.

  இந்த பதிவுகள் தகவலுக்கும், சாதனை மார்க்கத்தில் உள்ளவர்களை மனதில் வைத்து எழுதுவதால் அதை வலியுறுத்த தவறிவிட்டேன்! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

  அன்புடன்

  ReplyDelete
 3. பாவனை/கற்பனை பற்றிய தங்கள் கருத்துக்கள் மிக அருமை ஆழமானவை. ஒவ்வொரு ஆரம்ப நிலை சதகர்களும் விளங்கி அதன்படி நடக்ககூடிய கருத்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01

குவாண்டம் இயற்பியல் குவாண்டம் இயற்பியல் 1800ம் ஆண்டளவில் அணுக்களின் உபதுணிக்கைகள் பற்றிய கருதுகோளுடன் வளர்ச்சி பெற்றது. இதை குவாண்டம் ...