குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, November 15, 2011

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 04

பகுதி -03 


ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

முக்கிய குறிப்பு: இந்த பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது, படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.

31. கோரக்கர்: எங்கு மனம், பிராணன், சப்தம், சந்திரன் உறைகின்றன?

மச்சேந்திர நாதர்: மனம் இதயத்திலும், பிராணன் நாபியிலும், சப்தம் ஒருவனது மனோதிடத்திலும் உறைகின்றது.

32. கோரக்கர்: அப்படியாயின் இதயம் இல்லையெனில் மனம் எங்கு இருக்கும் அல்லது உறங்கும்? நாபியில்லவிட்டால் பிராணன் எங்கு இருக்கும்? ரூபம் இல்லாவிட்டால்  சப்தம் எங்கு இருக்கும்? சொர்க்கம் இல்லாமல் சந்திரன் எங்கு இருக்கும்? நாபி அற்ற பிராணன் தன்மையற்றதாகிறது, மனோதிடமற்ற சப்தம் ஆதாரமற்றதாகிறது, சொர்க்கமற்ற சந்திரன் ஆசையில் உறைகிறது. அப்படியாயின் இரவு இல்லையெனில் எப்படி பகல் வருகிறது? பகல் இல்லையெனில் இரவு எங்கே இணைகிறது? எப்போது ஒளியேற்றுவது? எங்கே ஒளியேற்றுவது?

33. மச்சேந்திர நாதர்: இரவில்லாமல் பகல் இயற்கையுடன் சங்கமமாகிறது, அப்போது அங்கு நாள் என்பது இல்லாமல் போகிறது, இவ்வாறு இரவும் பகலும் ஒன்றாகி இயற்கையாகும் போது ஒளியேற்ற வேண்டும், அந்த ஒளி எங்கும் நிறைந்த நிராதாரத்துடன் இணைகிறது; அந்த நிலையில் பிராணனும் இல்லாததாகின்றது, அங்கே பிராண சரீரம் சூன்யத்தில் உறைகின்றது. 

34. கோரக்கர்: யார் இந்த உடலைப் படைத்தவர்? எங்கிருந்து ஒளி உருவாகியது? பிரம்ம ஞானத்தின் வாய் எது? எப்படி பார்க்க முடியாதவற்றைப் பார்ப்பது?

35. மச்சேந்திர நாதர்: சார்பில்லாத பிரம்மமே உடலைப்படைத்தவர், சத் ஆகிய உண்மையில் இருந்து ஒளி உருவாகியது, சூன்யமே பிரம்ம ஞானத்தின் வாய், சத்குரு சிஷ்ய அனுபூதியால் காணமுடியாதவற்றைக் காணலாம்.

36. கோரக்கர்: எத்தனை இலட்சம் சந்திரர்கள் இந்த உடலில் உள்ளது? எப்படி பூக்களில் வாசனை உண்டாகிறது? பாலில் எங்கே நெய் உள்ளது? எப்படி ஆன்மா உடலில் அடைபடுகிறது?

மச்சேந்திர நாதர்: இரண்டு இலட்சம் சந்திரர்கள் இந்த உடலில் உள்ளது, சேதனமான உணர்வே பூக்களில் உள்ள வாசனை, நெய்யானது பாலில் பரவியுள்ளது, ஆன்மாவே உடலில் அடைபடுவதற்கு காரணமாகிறது.

37. கோரக்கர்: உடல் எதுவுமில்லாத இடத்து சூரியனும் சந்திரனும் எங்கு இருக்கும்? மலர்கள் ஏதும் இல்லாதவிடத்து வாசனை எங்கிருக்கும்? வால் இல்லையெனின் நெய் எங்கு இருக்கும்? உடல் இல்லையெனில் ஆன்மா எங்க்கிருக்கும்?

மச்சேந்திர நாதர்: உடலற்ற போது சூரியனும் சந்திரனும் எங்கும் பரவியிருக்கும், மலரற்ற போது வாசனை எல்லையற்று பரவியிருக்கும், பாலற்ற போது நெய் சூன்யத்தில் இருக்கும். உடலற்றபோது ஆன்மா பரம சூன்யத்தில் இருக்கும்.

3 comments:

  1. இவைகளை புரிஞ்சுக்கிறதுக்கு தனி தகுதி வேணும்னு நினைக்கிறேன். ரொம்ப சூட்சுமமா சொல்லி இருக்காங்க..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. vanakkam! 32aam ilakkaththil keelvi,pathil kalantullathu.இதயம் இல்லையெனில் மனம் எங்கு இருக்கும்? Ithatkkaana pathil vidupaddu ullathena ninaikireen. siththarkalin paripoorana aasi ullavarkkee ippathivukal kidaikkum. unkal seevai thodara kuruvarul veendukireen. nandri

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...