குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Wednesday, November 16, 2011

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 06

பகுதி - 06 

ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

முக்கிய குறிப்பு: இந்த பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது,  படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

   46. கோரக்கர்: எப்போது ரூபங்கள் எல்லாம் கரைந்து அரூபம் மட்டும்       மிஞ்சும் போது, நீர் வாயுவாகும் போது, சூரியனோ சந்திரனோ அற்றபோது, ஹம்ஸம் எங்கு இருக்கும்?


47. மச்சேந்திர நாதர்: இயற்கையான ஹம்ஸம் ஒருவன் சூனியத்தை அறிந்தபின் அதில் இருக்கின்றது, ரூபங்கள் எல்லாம் கரைந்து அரூபம் மட்டும் மிஞ்சும் போது ஆன்மா பரம் ஜோதியான ஒளியில் கலக்கின்றது.

48. கோரக்கர்: எது அமூலத்திற்கு மூலமானது/ மூலம் எங்கே உள்ளது? யார் குருவின் இலட்சியம்?

49. மச்சேந்திர நாதர்: சூன்யமே அமூலத்திற்கு மூலமானது, மூலம் எங்கும் வியாபித்து பரம்பியுள்ளது, விடுதலையாகிய நிர்வாணமே குருவின் இலட்சியம்.

50. கோரக்கர்: எங்கிருந்து பிராணன் எழும்புகிறது? எங்கிருந்து மனம் வருகிறது? எப்படி பேச்சு உருவாகி கரைகிறது?

51. மச்சேந்திர நாதர்: மனதின் பிறப்பு தோற்றமற்றது, பிராணன் மனதிலிருந்து உருவாகிறது, பேச்சு பிராணனிலிருந்து உருவாகிறது, மீண்டும் பேச்சு மனதில் கரகிறது.

52. கோரக்கர்: எது தடாகம்? எது தாமரை? எப்படி நாம் காலத்தை வெல்லலாம், எப்படி கண்களுக்குதெரியாத, அடையமுடியாத உலகங்களை அடையலாம்?

53. மச்சேந்திர நாதர்: மனமே தடாகம், ஆகாயமே தாமரை; ஊர்த்துவமுகமாய் மேலேற்றுபவர்கள் காலத்தை/ மரணத்தை வெல்லலாம், கீழுள்ளதையும் மேலுள்ளதையும் அறிவதன் மூலம் அறியமுடியாததை அறியலாம்.

54. கோரக்கர்: எது கடினமான வழி? எது இலகுவான வழி? எது சங்கமம்? எந்த சக்கரத்தினூடாக (நரம்பு மையத்தினூடாக) சந்திரனை நிரந்திரமாக தங்க வைக்க முடியும்? எப்படி உணர்வுள்ள மனம் பேரின்ப நிலையை அடைவது?

55. மச்சேந்திர நாதர்:  தூய வாயு மார்க்கம் கடினமான வழி, காப்பாற்றுபவரை (குருவை) சரணடைதல் இலகுவான வழி! இவையிரணும் சங்கமமாவதற்குரிய இலகுவான வழி, சந்திரனை கட்டுப்படுத்த சாகி சக்கரத்திற்கு மேல் அணையிடல் வேண்டும், விழிப்புணர்வே பேரின்பம் அடைவதர்குரிய வழி!

56. கோரக்கர்: பிறப்பு எவ்வாறு வருகிறது? எப்போது முதல் உணர்வு வருகிறது? நான் எப்படி பிறந்தேன்?


57. மச்சேந்திர நாதர்: எள்ளில் எண்ணெய் உள்ளது போல், விறகில் நெருப்பு உள்ளது போல், வாசனை மலரில் உள்ளது போல், ஆன்மா உடலில் இருக்கிறது.

2 comments:

  1. மிகவும் அற்புதமான மறைபொருளான கருத்துக்கள். இதற்கு யாராவது விளக்கம் எழுதி இருக்கிறார்களா? இருந்தால் பகிரவும்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  2. ஹம்-உள் இழுக்கும் காற்றின் ஒலி அலைகளின் சத்தம் -நுணுக்கமாக கவனித்து அறியலாம் ,சம் - வெளி விடப் படும் காற்றின் ஒலி

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...