குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Monday, October 31, 2011

காயத்ரி மந்திரத்தின் இரகசியம் - பிராண மாதாஸ்ரீ காயத்ரி சித்தர், ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரிடம் கற்ற உபதேசத்தின்படி....

காயத்ரியின் இரகசிய சக்தியை அறிந்த ஒரு சாரார் அதனை தம் சமூகம் மட்டுமே பாவிக்கும் படி கையகப்பபடுத்திக் கொண்டனர். ஆம் பிராமணர்கள் தான், இன்று பிராமண எதிர்ப்பு, பார்ப்பணிய எதிர்ப்பு என போர்க்கொடி தூக்கி குழப்பம் செய்பவர்கள் அவர்கள் ஏன் சிறப்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பதனை ஆராயத்தவறிவிட்டார்கள் மிகச்சிறுபான்மையினரான வகுப்பினர் இந்திய தேசத்தில் செல்வாக்கு செலுத்தும் ஒரு குழுவினர்களாக முக்கிய தீர்மானத்தினை எடுப்பவர்களாக இருக்கின்றனர் என்றால் அதற்கு என்ன காரணம்? வேறு எதுவுமில்லலை "காயத்ரி - சந்தியாவந்தனம்" தான். 

காயத்ரி வெறும் மந்திரம் மட்டுமல்ல; அதன் அதிர்வுகள் பிராணசக்தியினை ஆகர்ஷிக்க கூடியது. சாதாரணமாக பிராண சக்தியின் அளவினைப் பொறுத்தே ஒருவருடைய உடல், மனம், புத்தி என்பவற்றின் ஆற்றல் வேறுபடும். காயத்ரியினை ஜெபிப்பவர்கள் பிராணசக்தியினை அதிகமாக ஆகர்ஷிக்கின்றனர். காயத்ரி "பிராண மாதா". 

அதுசரி காயத்ரி பிராமணர் மட்டும்தான் ஜெபிக்கலாமா? இந்த கேள்விக்கான பதில் பலரால் சொல்லப்பட்டுவிட்டது! அனைவரும் ஜெபிக்கலாம். பிரபஞ்ச தாயிற்கு அனைவரும் சமமே! உச்சரிப்பு சரியாக இருப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் you tube, MP 3 இருக்கிறது. ஆகவே சரியான உச்சரிப்புபினை தெரிந்து கொண்டு உச்சரியுங்கள். எதும் பிழை வந்துவிட்டால் பாதிப்பு ஏற்பட்டுவிடாதே? உங்களுடைய உள்நோக்கம்தான் (intention) விளைவுகளுக்கு பொறுப்பே அன்றி! கடவுள் அல்ல, மின்சாரத்தினை நேரடியாக கையில் பிடித்தால் ஆபத்து! ஆனால் சரியான முறையில் உபயோகித்தால் பயன்பாடு, அதுபோல் மந்திர சாதனையின், தெய்வ வழிபாட்டில் ஒருவருடைய உள்ளார்ந்த நோக்கம்தான் அவரது பலனை நிர்ணயிக்கும். ஒருவர்மேல் வயிற்றெரிச்சலுடன் ஜெபித்தோமென்றால அவரையும் பாதித்து இறுதியில் பலமடங்காக எம்மையும் பாதிக்கும்.

உலகம் சுபீட்சமுற அனைவரும் காயத்ரி ஜெபிப்போமாக!

ஓம் ஸத்குரவே நமஹ!

2 comments:

  1. இந்த மந்திரங்களை குரு உபதேசம் மூலம் கற்றுக் கொள்வதற்கும் நாமாக கற்றுக் கொள்வதற்கும் இருக்கும் வித்தியாசங்களை விளக்கினால் நலம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. ஆம் நிச்சயமாக வித்தியாசம் உண்டு, தானாக ஜெபிப்பதை விட குருபரம்பரையினரிடம் தீட்சை பெற்று ஜெபிக்கும் போது பலன் அதிகம். ஏனெனில் காயத்ரியிற்கு பிரம்மா, வஷிஷ்டர், விஸ்வாமித்ர மகரிஷிகள் சாபமிட்டிருக்கின்றனர். இந்த சாபம் காயத்ரி சாதனைமூலம் அரிய சித்திகள் கிடைக்ககூடாது என்பதற்காகவேயன்றி முற்றாக யாரும் ஜெபிக்ககூடாது என்பதற்கில்லை. தீட்சையில்லாமல் குருவை எண்ணி ஜெபிக்கும் போது தீட்சை பெருவதற்கான பக்குவம் கிடைக்கும். தீட்சை என்பது கூட எமது மனப்பக்குவத்தினை அதிகரிப்பதன் மூலம் கிடைப்பதுதான். நீங்கள் உபதேசம் பெறும் குரு சித்தபரம்பரையினை சேர்ந்தவராக இருந்தால் நிச்சயம் சாபவிமோசனம் செய்வித்து உபதேசிப்பார். இந்த சாபவிமோசனம் என்பது கூட வெறுமனே சாபவிமோசன மந்திரத்தினை ஜெபிப்பதல்ல! சந்தர்ப்பம் வரும் போது இது பற்றி பகிர்வோம்!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...