குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 07, 2011

காயத்ரி பிராமணர்களுக்கு உரியது


ஆம் பிராமணர்களுக்கு உரியதே காயத்ரி! ஆனால் பிராமணர்கள் என்பதன் பொருள் என்ன? பிரம்மத்தை அறிய முனைபவன் பிராமணன் அன்றி பிறப்பால் வருவதல்ல பிராம்மணத்துவம். ஞானம் பெற்றபின் வருவது பிராமணத்துவம் அன்றி மந்திரம் ஜெபிப்பதால் வருவதல்ல பிராம்மணத்துவம். அதாவது மனம், சித்தத்தில் குறித்த தெய்வ சம்ஸ்காரங்களை பெற்று வளர்த்து தெய்வ குணங்களை விழிப்பித்தபின் வருவது தான் பிராமணத்துவம். யார் காயத்ரி அட்சர சக்தியில் குறித்த குணங்களின் விழிப்பு பெற்றவர்களோ அவர்களே பிராமணர் அன்றி மற்றவர் அன்று! இதில் யாருக்கும் தடையில்லை! முயற்சியுடைய சாதனை புரிய முயலும் எவரும் பிராமணன் எனும் நிலையை அடையலாம். அந்த முயற்சியில் உலகுக்கு கிடைத்தது தான் காயத்ரி மந்திரம், சத்திரியரான (ரஜோ குணம் மிகுந்த) மன்னன் கௌசிகன் பிராமணத்துவம் பெற முயற்சியில் கிடைத்ததுதான் காயத்ரி - உலகத்தின் நண்பராகிய - விஸ்வாமித்திர மகரிஷி அருளியது காயத்ரி!.

இன்று சிலர் காயத்ரி தமது ஜாதிக்கு மட்டுமானது என்கின்றனர்! ஒருசிலர் அது சமஸ்கிருதம் தமிழருக்கு ஒவ்வாதது என்கின்றனர், இன்னும் சிலர் தமிழ் சித்தர்களுக்கும் சமஸ்கிருத காயத்ரிக்கும் என்ன தொடர்பு எங்கின்றனர்? அனைத்துக்கும் ஒரேபதில் தான் காயத்ரி குறியத்த யாருக்கும் சொந்தமானதல்ல! அனைவருக்கும் சொந்தமானது! இந்த விஸ்வத்திற்கே மித்திரமானது! அதனை தம் மனதில் மேற்கூறிய காழ்ப்புணர்ச்சியுடன் அறிய முற்பட்டால் எதுவும் கிட்டாது! 

தேன் உலகில் பூக்கும் பூக்கள் அனைத்திலும் இருந்தாலும் தேனி என்ற ஒரு ஜந்து சேகரித்து அதனை அருந்தும் போதுதான் அதன் சுவை தெரியும்! அதுபோல் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் விஸ்வ சக்தியை விஸ்வாமித்திர மகரிஷி எனும் ராஜதேனி காயத்ரி மந்திரம் எனும் கூட்டில் அடைத்து தந்திருக்கிறார். 

ஜாதி, மதம், இனம், மொழி கல்வி, செல்வம், அறிவு என்பவற்றை ஆணவமாக்கிடாமல் கையில் கிட்டிய தேனை சுவைப்போமாக!

3 comments:

  1. நல்ல பதிவு நண்பரே.

    ReplyDelete
  2. யார் பிராம்மணன் என்று கூறி இருக்கிறீர்கள்... இது கால ஓட்டத்தில் பல சர்ச்சைகளை சந்தித்த ஒரு சமாசாரம் என்பதால் இதை இன்றைய சூழலில் அணுகுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    இன்றைய சூழலில் பிறப்பால் பிராம்மணர்கள் மட்டுமே பிராம்மணர்கள் என அறியப்படுகிறார்கள். மற்றவர்களும் தாங்கள் பிராம்மணர்கள் என்று சொல்லிக்கொள்ளவோ அல்லது அறியப்படவோ பிரியப்படுவதில்லை. இதுதான் நிதர்சனம்...

    எனவே காயத்திரி மந்திரம் பிராம்மணர்களுக்கு உரியது என பிரிக்க வேண்டாம் என தோன்றுகிறது. இது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உரித்தானது என்பதே உண்மையாக இருக்க முடியும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  3. gaayathri manthiram arbuthamaana manthiram. athai manithargal ovvoruvarum unccharikka vendum. athu manitha kulatthinai valamadayaccheivathu.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...