நோக்கு வர்மமும் பிராண சக்தியும் (நோக்கு வர்மத்தின் செயல்முறை இரகசியம்)


இதனுடன் தொடர்புடைய பிற பதிவுகள்


சென்ற பதிவில் நோக்குவர்மத்திற்கும் சித்த, மன சக்திகளிற்கும் அதனை தாரணைப் பயிற்சியின் மூலம் ஒருங்கு படுத்துவதனால் செயற்படுகிறது என்பது பற்றி அறிந்தோம். இதனை செய்ற்படுத்துவதற்கு சக்தி அவசியம் அல்லவா? அந்த சக்திதான் "பிராண சக்தி", தமிழில் "வாசி" சீன மொழியி "Chi- சீ" ஜப்பனிய மொழிவில் "Ki-கீ" என்றேல்லாம் அழைக்கப்படுகிறது. இது சுவாசத்தினால் பெறப்படும் ஒட்சிசன் வாயுவல்ல! பிராணன் என்பது பிரபஞ்ச மஹா சக்தி, அதனது ஓட்டம் மூச்சுடன் தொடர்புபட்டதேவொளிய உட்சுவாசிக்கும் மூச்சல்ல பிராணன், பிராணனை கட்டுப்படுத்தும் இலகுவான வழி மூச்சுப்பயிற்சியாகிய பிராணாயாமம், அதே வேளை பிராணனை கட்டுப்படுத்தும் மற்றைய சாதனங்கள் மந்திரம், மனம், மூலிகை மருந்துகள் என்பனவாகும்.

இந்த பிராணன் தலை உச்சிக்குழியினூடாக (fontanelle) ஈர்க்கப்பட்டு பின் ஆறாதாரங்களில் சேமிக்கப்பட்டு, பின் எழுபத்தீராயிரம் நாடிகளினூடாக தச வாயுக்களாக உடல் முழுவதும் பரவுகிறது. இந்த பிராண ஓட்டம் குறிந்த நாழிகைகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடிகளில் மாறி ஓடும். அந்த ஓட்டத்தின் படியே உடலியக்கம், மனவியக்கம் என்பன ஆளப்படுகின்றன என்பதுவே சித்தர்களது யோக மருத்துவ சாஸ்திர அடிப்படை, சீன மருத்துவத்தின் அக்குபிரசர், அக்குபஞ்சர் என்பவற்றினதும் அடிப்படை. 

இங்கு எடுத்துக்கொண்ட விடயம் நோக்கு வர்மத்திற்கும் பிராணசக்திக்கும் உள்ள தொடர்பினை ஆராய்தலாகும். இந்த நாடிகளில் ஓடும் பிராணணை மூன்று விதங்களில் கட்டுப்படுத்தலாம். 
1. அதிக பிராணனை உட் செலுத்துதல்.
2. பிராண ஓட்டத்தினை தடைப்படுத்துதல்
3. பிராணணை உறிஞ்சுதல்

அதிக பிராணனை உட் செலுத்துதல்.
இந்த முறை பாதிப்பில்லாது, இதனால் செலுத்துபவரிடம் இருந்து வாங்குபவர் அதிக பிராணனை பெற்று அதனை தாங்க முடியாமல் மயங்கி அல்லது நிலை குலைந்து போவர். ஆனால் செலுத்துவரது நோக்கத்தினைப் பொறுத்து பாதிப்பு வேறுபடும். 

பிராண ஓட்டத்தினை தடைப்படுத்துதல்
இது ஆபத்தானது, மரணத்தினை அல்லது உறுப்புகளை செயலிளக்க வல்லது. சரியான நேரத்தில் பிராணன் திரும்பவும் பெறாவிட்டால் பாதிப்பு அதிகமாகும்

பிராணனை உறிஞ்சுல்
அதி ஆபத்தான முறை, இதனைதான் மெய்தீண்டாகாலம் என்பர், அதாவது மெய் (உடலினை) தீண்டாமல் காலனினை வரவைக்கும் முறை. 

இந்த வித்தையில் சித்த சக்தியினையும் பிராணசக்தியினையும் செலுத்தும் சாதனமாக கண் விளங்குகிறது.

இவைதான் நோக்கு வர்மத்தின் அடிப்படை, இவை குருவில்லமல் கற்பது கற்பவர்களுக்கே ஆபத்தினை விளைவிக்க வல்லது, ஏனெனில் தமது உடலிலுள்ள பிராண ஓட்டத்தின் மூலம் மற்றவரை கட்டுப்படுத்தும் போது சரியான முறையில் அணுகவில்லையானால் தாக்க விளைபவரையே பாதிப்புற செய்யும்.

எமது சித்த வித்யா விஞ்ஞான பதிவுகளின் நோக்கம் சித்தர்களின் வித்தைகளில் உள்ளவற்றை தற்கால நடைமுறைக்கேற்றவாறு புரிந்து கொள்ளுதலாகும். ஆர்வமுடையவர்கள் தகுந்த குருவை அண்டி கற்றுக்கொள்ள விளையுங்கள். 

அடுத்த பதிவில் பிராண சக்தி எப்படி உடலில் பரவுகிறது என்பது பற்றி பார்ப்போம்!

Comments

 1. பிராணன் பற்றி சிறப்பாக பகிர்ந்திருகிறீர்கள்.. சிறந்த தகவல்கள். தாங்கள் கூறுவதுபோல இவற்றை ஒரு தகுந்த குரு மூலம் கற்பதே சிறந்தது.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 3. //Sankar Gurusamy// திண்டுக்கல் தனபாலன் //நண்பர்களே தங்கள் கருத்து தெரிவிப்பிற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 4. பிராணன் எந்தருனத்தில் ஆறு ஆதாரங்களில் செயல் படுகிறது கணக்கிட்டு முறை யாக சொல்லுங்கள் ஐயா ..வாழ்க வளமுடன்

  ReplyDelete
 5. Thaangal ippadi thelivura vidayangalai pagirvathan nokkam enna? Mikka nandri.

  ReplyDelete
 6. My Dear Suman,

  I need learn manonmani gland,
  How to pratice...!

  Can you expalin pls.

  send my mail gandhir@adintl.com

  Regards,
  VGR

  ReplyDelete
 7. ஆத்ம நமஸ்காரம்

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு