- கி.பி 500 போதிதர்மரின் காலம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
- அவர் தியானமுறையினை போதித்துவரும் போது துறவிகள் உடல் அளவில் வலிமை இன்றி இருந்ததால் தொடங்க்கப்பட்டதே உடல் அசைவு முறைகள், பின்பு அவை போர்க்கலையாக வடிவமைக்கப்பட்டது.
- போதிதர்மரைப்பற்றிய விபரங்கள் Michael Spiesbach என்பவரால் Journal of Asian Martial Arts, 1992, vol. 1, no. 4, இல் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதன் படி;
- போதிதர்மரின் போர்க்கலைக்கான உள்ளீடுகள் எவ்வளவு என்பது பற்றி விவாதம் பல உள்ளதாக குறிப்பிடுகிறார்.
- போதிதர்மரைப்பற்றிய முதலாவது சரித்திர குறிப்பு Luoyang jia lan ji, (“The History of the Monasteries of Luoyang”) கி.பி 574 இல் Yang Xuanzhi என்பாரால் எழுதப்பட்டுள்ளது. இவர் கி.பி 574 இல யொங் நிங் ஆலயதிற்கு சென்ற போது 150 வருடங்கள் முதுமையான வேற்று நாட்டவரான Sramana Bodhidharma என்பவரை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்
- அடுத்த குறிப்பு Guifeng Zongni (780-841) என்ற புத்த சமய அறிஞர் தனது நுலான Dao Zuan's Xu gao seng zhuan (“Biographies of Eminent Tang Monks”) இல் ஒரு இடத்தில் "மேற்கிலிருந்து போதிதர்மர் ஏன் வந்தால்" என்று ஒரு வசனத்தினை பதிந்துள்ளார்.
- அடுத்த முக்கியமான ஆதாரம் Dao Yuan's Jing de zhuan deng lu (“The Records of Transmission of the Lamp”) கி.பி 1001 இல் எழுதப்பட்டது.
- சீனாவின் புத்த விகாரைகளின் குறிப்புகளின் படி அவர் சீனாவுக்கும் வந்த காலப்பகுதி கி. பி 520, கி.பி 470, கி.பி 420 எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
- அவரது பயண வழிதொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
- சென்னை, குவாங்க்சோஉ, கடல்வழியாக, பின்பு நிலதினூடு நன்சிங்க் (படம் - ௦௧).
- சென்னை, பாமிர் பீடபூமி, மஞ்சள் நதி ஓரமாக லூஓயாங் (படம் - 02)
சென்னை, குவாங்க்சோஉ, கடல்வழியாக, பின்பு நிலதினூடு நன்சிங்க் |
சென்னை, பாமிர் பீடபூமி, மஞ்சள் நதி ஓரமாக லூஓயாங் |
- போதிதர்மர் காஞ்சிபுரத்தில் மன்னனது 3வது மகனாக பிறந்தார், ஆகவே போர்க்கலையில் வல்லமை மிகுந்த அரச குடும்பத்தில் பிறந்தார்.
- தனது ஏழாவது வயதில் மனமே மாணிக்கம் (ஜென் கோட்பாடு) என்பதனை உணர்ந்தார்.
- அவரது ஆசிரியர் பிரஞ்னதாரா, பெண் குரு.
- இதன் பின் சரித்திரக்குறிப்புகளின் படி பல்லவ மன்னன் சிம்மவர்மன் இவரை குருவாக கற்பிக்க அழைத்ததாகவும். இவர் அரிய சித்திகள் நிறைந்த யோகினியாவார்.
- இவர் ஞானமடைந்த போதிதாரா என்ற இளவரசனை போதிதர்மன் என பெயர் மாற்றம் செயதார்.
- குருவான பிரஞ்னதாராவின் மறைவிற்கு பின் போதிதர்மர் அவரது ஆணையின் பெயரில் சீனதேசம் பயணிக்கிறார்.
- போதிதர்மர் அவரது போதனைகளில் அவர் சக்கரவர்த்தி Wu Dai (465-550) அவர்களின் அரச அவையில் இருந்ததாகவும், பின் அவரது ஆதரவின்மையால் Yangtze நதியினை கடந்து Luoyang சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவரது போதனைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் கேலி செய்யப்பட்டதாகவும், உணவுக்கு கூட வழியற்று கடைசியாக அந்த இடத்தினை விட்டு சென்றதாகவும் குறிப்புட்டுள்ளர்.
- இறுதியாக Henan மானிலத்தில் உள்ள Song மலையினை அடைந்து அங்கு Shaolin Temple அமைத்து தான் கற்ற போதனைகளை சீன மொழியில் மாற்றம் செய்யும் பணியில் ஆழ்ந்தர்.
- அவரது பிரதம சீடராக Shen Guang கற்றார்.
- இந்த வேளையில் அவர் மாணவர்கள் உடல் வலிமையற்று இருப்பதை கண்டு, இந்திய யோக முறைகளில் ஒன்றான பிராணணை (in Chinese Chi, Japanese Ki) வசப்படுத்தும் மூச்சுப்பயிற்சியும், உடற்பயிற்சி அசைவுகளையும் வடிவமைத்து பயிற்று வித்தார்.
லங்கவதாரா சூத்ரா (Lankavatara Sutra) - மனதினை பயிற்சிக்குள்ளாக்கி புத்த நிலையினை அடைவது பற்றியது. போதிதர்மரின் உபதேசப்படி முதலில் கற்கை (Theory), அதாவது புத்த நிலையினை எப்படி அடைவது என்பது பற்றி கற்றல் வேண்டும், பின் பயிற்சி! பயிற்சியின் முக்கிய நோக்கம் மனதின் காம, குரோத, மாச்சர்யங்களை அழித்தல், அதன் மூலம் புத்த நிலையினை அடைதல். அவரது உபதேசங்கள் மூன்று:
- Bao Yen Hsin: இன்ப துன்பங்களை, ஏற்ற இறக்கங்கங்களை, புகழ்ச்சி இகழ்ச்சிகளை எதுவித காரணமும் சொல்லாமல் உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளல்.
- Sui Yen Hsin: அனைத்து சூழல்களும் கர்ம விதியின் படி நடக்கின்றது என்பதனை உணர்ந்து, நம்மை சுற்றி நல்ல விடயங்கள் நடக்கும் போதும், கெட்ட விடயங்கள் நடக்கும் போதும் மனதின் சம நிலை இழந்து விடாமல் இருத்தல் வேண்டும்.
- Tsung Fa Hsin: பயிற்சியின் மூலம் மனசமனிலையே புத்த நிலை என்பதை உணர்தல், அனுபவித்தல்.
தொடர்புடைய மற்றைய பதிவுகள்
போதிதர்மரை வைத்து செய்த வியாபாரம் நன்றாகவே நடந்துள்ளது.. அதில் அவர் ஒரு மருத்துவர் மற்றும் போராளி என்பதே பிரதானமாக சொல்லப்படுகிறது.
ReplyDeleteஅதையும் மீறி அவர் சொன்ன ஞான மார்க்கத்தை விளக்கும் முதல் பதிவு தங்களுடையதுதான்.
வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி...
http://anubhudhi.blogspot.com/
தகவல்களின் தொகுப்பு அருமை. உங்கள் உழைப்பு இதில் தெரிகிறது.
ReplyDeletehttp://venpuravi.blogspot.com/2011/11/blog-post_14.html
சுமன்
ReplyDeleteஎனக்கொரு சந்தேகம். அதுவென்னவெனில் சித்தர் போகரும், போதி சத்துவரும் ஒன்றோ என்றுதான். ஏனெனில் சித்தர் போகரும் சீனதேசம் சென்றதாகக் கூறப்படுகிறது அல்லவா.
சந்தேசம் தீர்க்கவும்
-சாந்தண்ணா-
@ சாந்தன்
ReplyDeleteஇல்லை அவர் வேறு, போகரது போதனைகளின் சீன வடிவம் விரைவில் பதிவிடவுள்ளேன், அப்போது பார்க்கவும்!