குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 16, 2011

போதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்


நோக்கு வர்மம் என்ன என்பது பற்றி தெரியாதவர்கள் இன்றைய திகதியில் இருக்க முடியாது, எனினும் நோக்கு வர்மம் என்பது தனது பார்வையினால் எதிரிகளைத் தாக்கும் ஒரு போர்க்கலையாக அறியப்பட்டுள்ளது. அதில் பல உபபிரிவுகளும் பயன்பாடுகளும் இருக்கின்றது. அதன் இரகசியம் என்ன? எவ்வாறு வேலைசெய்கிறது என்பது பற்றித்தான் இனிவரும் பதிவுகளில் பார்க்கப்போகிறோம்.

நோக்குவர்மத்தின் திறவுகோல் எங்கு உள்ளது? போதிதர்மரின் வரலாற்றுக் குறிப்புகளிலும் சித்தர்களது யோகவித்தையினையும் இணைத்து ஒப்பீட்டு நோக்குவதன் மூலம் அறிய முடியும்.
முதலில் போதிதர்மரது கதையில் அவரது சாதனை பற்றிய குறிப்பு:
போதிதர்மர் தென்னிந்தியாவிலிருந்து முதலாவதாக தென் சீனபகுதியை அடைகிறார். அங்கு அவரது போதனைகள் வரவேற்பு அற்றுப் போகிறது. அதனால் அங்கிருந்து அவர் வட சீனப்பகுதி இரசதானியான "வேயி" இனை அடைந்து அங்குள்ள ஷவலின் ஆசிரமத்தினை அடைகிறார். ஆனால் வேற்று நாட்டவரான இவரை அந்த ஆலயத்தினுள் செல்ல விடாமல் தடுக்கின்றனர். அதனால் அருகில் உள்ள குகையினுள் சென்று அந்த குகையின் சுவரினை கண்ணினால் உற்று நோக்கியவண்ணம் ஒன்பது வருடம் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிறார். இந்த பயிற்சியின் போது கண்மூடுவதனைத் தவிர்ப்பதற்காக தனது கண்ணிமைகளை வெட்டி எறிந்ததாகவும் அதன் அது நிலத்தின் விழுந்தபோது உருவான தாவரம் தான "தேயிலை" எனவும் அவரது வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இதன் உண்மைத்தன்மை தேயிலை மனதை விழிப்புணர்வில் வைத்திருக்கும் என்பதுதான். அதனால் தான் ஜென் புத்த கலாச்சாரத்தில் தேனீர் விருந்து ஒரு முக்கியமான ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதன் பின் அவர் ஷாவலின் ஆலயத்தினரால் வரவேற்கப்பட்டார், அங்கு சென்ற அவர் ஷாவலின் ஆலயத் துறவிகளில் உடல் வலுவற்று இருப்பது கண்டு அவர்களுக்கு உடலிற்கான புறப்பயிற்சிகளும், மனதிற்கான அகப்பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தார்
சரி நோக்கு வர்மத்திற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்?
நல்ல கேள்வி, போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார் என்பது பற்றிய குறிப்புத்தான் இந்தக்கதை. அதாவது குகை சுவரை உற்று நோக்கியவண்ணம் ஒன்பது ஆண்டுகள் இருந்தார் என்பதுதில் அது குறிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பயிற்சியின் இரகசியம் என்ன வென்பது பற்றி அறிய வேண்டுமானால் நாம் திரும்பவும் இந்திய ரிஷிகளிடம் வரவேண்டும். ஆம் யோகக்கலையின் அடிப்படை தெரியவேண்டும்.
அஷ்டாங்க யோகத்தின் ஆறாவது படியான "தாரணை" தெரியவேண்டும்அட்டாங்க யோகத்தின் இறுதி நிலையான சமாதியினை அடைவதற்கு தாரணைப்பயிற்சி மூலம் சாதனை பயின்று புத்த நிலையினை அடைந்தார் என்பது தான் இந்தக்கதையின் உண்மை விளக்கம். சமாதி எனும் இந்த புத்த நிலை சித்தியினைப் பெறுவதற்காகத்தான் ஒன்பது வருடங்கள் போதிதர்மர் குகைச் சுவரினை உற்றுப்பார்த்த வண்ணம் சாதனையிலிருந்தார் திருமூலரது திருமந்திரம், போகர் 7000, அகஸ்தியர் பாடல்கள், பதஞ்சலி முனிவரது யோக சூத்திரம், ஔவையாரின் ஞானக்குறள் என்பவற்றில் தாரணையைப் பற்றி குறிப்புகள் உள்ள.
தாரணை என்பது பதஞ்சலியாரின் உபதேசப்படி "கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்று இருக்கும் சித்தம் (மனம் அல்ல) தாரணை" எனப்படும், அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளுக்கு மூலமான சித்த விருத்திகளை உருவாக்கும் சித்தத்தினை கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் செயல் முறைதான் தாரணை எனப்படும்.
நோக்கு வர்மத்தின் அடிப்படை யோகத்தின் ஆறாவது பகுதியான "தாரணை", தாரணா சித்தியின் ஒரு பிரயோகம்தான் நோக்குவர்மமே ஒழிய அது ஒரு தனியாக பயிலவேண்டிய கலை அல்ல, யோகத்தின் படி நிலையில் அடையப்படுகின்ற ஒரு உப அன்பளிப்புதான் (compliment) நோக்குவர்மம். ஆனால் பொதுவாக யோகம் பழகுபவர்கள் இயமம், நியமம், பிரத்தியாகாரம் பழகுவதால் இந்த சித்தியினை மற்றவரை தாக்குவதற்கு உபயோகிப்பதில்லை. ஆனால் சித்தர்கள் ஸத்திரியர்கள், அரசர்கள், போர்வீரர்கள் போன்ற‌ யோகம் பயின்று சமாதியாகிய இறுதி நிலையினை அடைய விரும்பாமல் இந்த கலையினை பயன்படுத்தி மற்றவர்களை காப்பாற்றவேண்டும் என்பவர்கட்கு அதனை ஒரு தனிக்கலையாக உருவாக்கி மருத்துவத்துடனும் போர்க்கலையுடனும் கற்பித்துள்ளார்கள்.
சித்தர்கள் யோகக்கலையினையும் அதனை கற்பவர்கள் பெறும் சித்திகளை மறந்தும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் அழகாக வடிவமைத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே நல்ல சான்று!
எப்படி இந்த தாரணையினைச் செய்வது? இந்த தாரணா சித்தி எப்படி நோக்குவர்மத்தில் பயன்படுகிறது என்பது பற்றி இன்னும் ஆழமாக அடுத்த பதிவில் பார்ப்போம்!

8 comments:

  1. மிக சிறப்பாக நோக்குவர்மத்தின் சூட்சுமங்களை விளக்கி இருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. அன்பார்ந்த சுமனன்,
    தங்களின் இந்த பதிவு மிகச்சிறப்பாக உள்ளது.
    நமது இந்திய மரபியலில், சித்தர்கள் பல்வேறு கலைகளை நமக்கு பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள். அதனை நாம் நம்மால் இயன்றவரை, காப்பதற்குண்டான முயற்சியில் இறைவன் அருளால் ஈடுபட்டு வருவோம்.
    நோக்கு வர்மம் குறித்தான உபரி செய்தி இது. நோக்கு வர்மம் குறித்து பலர் பலவிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். நோக்கு வர்மத்தைக் ‍கைக்கொள்ளும் வழிகளில் அடிப்படை வழியாக நான் கையாண்டது இவை.
    1. சுவற்றின் மையத்தில் கரும்புள்ளி ஒன்றைவைத்து, அதனை கண் இமைக்காமல் உற்று நோக்குவது.
    2. தீபச் சுடரை கண் இமைக்காமல் உற்று நோக்குவது.
    3. சூரிய உதயத்தின்போது ஒரு அரை மணி நேரம் கண் இமைக்காமல் உற்று பார்த்து வருவது.
    4. முழுநிலவின்போது சந்திர பிம்பத்தை கண் இமைக்காமல் உற்று பார்த்து வருவது.
    இந்த பயிற்சியினால் நான் முழுப்பலனை அடையாவிட்டாலும், செய்த பயிற்சிக்குரிய பலனை ‍அடைந்துள்ளேன். இன்னும் சில பல பயிற்சிகளை சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    அன்புடன், பா. முருகையன், வடலூர்.
    www.siddharkal.blogspot.com

    ReplyDelete
  3. இந்த உலகில் இந்துக்களின் பங்களிப்பு அதிகம் ஆனால் அதை இந்தியர்களுக்கே தெரியாததுதான் ஒரு பாவமான நிலமை. உதாரணம். புத்தர்,பாபா,போதீதரமர்,அகத்தியர்,திருமூலர்,,,...

    ReplyDelete
  4. இந்த உலகில் இந்துக்களின் பங்களிப்பு அதிகம் ஆனால்,

    ReplyDelete
  5. dear sumanan thanks for you.

    ReplyDelete
  6. DEAR SUMANAN THANKS FOR YOU

    ReplyDelete
  7. dear sumanan thanks for you.

    ReplyDelete
  8. நண்பர்களே நோக்கு வர்மம் புத்தகம் எங்கு கிடைக்கும்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...