குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 16, 2011

போதிதர்மரின் மறக்கப்பட்ட பக்கங்கள்



போதிதர்மர் பற்றிய மறக்கப்பட்ட பக்கங்களை பற்றிய ஒரு சிறு பகிர்தல், ஏனெனில் பதிவுலகமும் சரி, சினிமா உலகமும் சரி தமது வியாபார மசாலாவைத்தான் குறிவைக்கின்றனவே தவிர மக்கள் எவ்வளவு நல்ல விடயங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி கவனம் செலுத்துவதில்லை. இதனால் உண்மையான விடயமும் அறியப்படாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பபட்ட பொருட்கள் போல ஆகிவிடுகின்றன.
இன்றைய தமிழ் சினிமாவின் பாதிப்பால் இன்று தமிழ் உலகில் போதிதர்மர் பற்றிய கருத்து "அவர் ஒரு தமிழர்" ஆம் நிச்சயமாக மறுக்கப்படமுடியாத அளவு சீன வரலாற்று ஆதாரங்களில் அவரது பிறப்பிடம் "தென்னிந்தியாவின் காஞ்சி" என பதியப்பட்டுள்ளது. (According to Chinese records, Bodhidharma was born in a kingdom of South India. Documents published just after Tang dynasty (ending in 907) describe that the name of the Kingdom is expressed with two Chinese characters 香至. The Chinese name 香至 means “fragrance extreme”. At the time of Tang dynasty, it is likely that 香至 is pronounced as Kang-zhi.)

அடுத்தது அவரது போர்க்கலை, அதற்கான ஆதாரங்களும் உள்ளன, ஷாவாலின் குங்பூ, டிம் மாக் இரண்டும் சத்திரிய வம்சத்தவரான அவரிற்கு பயிற்சி இருந்திருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. இவை இரண்டும் களரியிற்கும் வர்ம சாஸ்திரத்திற்கும் பொருந்தி வரக்கூடியவை.
மற்றய இரு விடயங்கள்; மருத்துவமும் அவரது தியான யோகமும்
இந்தப்பதிவில் போதிதர்மரின் தியான யோகம் பற்றியே சுருக்கமாக  பார்க்கப்போகிறோம்.
போதிதர்மரின் அடிப்படை போதனை; (Reason) காரணத்தை அறி, பின் பயற்சி (Practice) மூலம் அனுபவி என்பதாகும். அதாவது ஆரம்பத்தில் எந்தவொரு காரியத்தை தொடங்குவதற்கு ஒரு காரணம் தேவை, ஆனால் இறுதியில் பயிற்சியின் மூலம் புத்தா தன்மையை அடைதலாகும். இதன் பின்பே காரணம் என்பது மனம் தனக்காக கற்பித்துக் கொண்டது என்பதனை அறிகிறோம்.
துன்பங்களை இழப்பதற்கு ஒரே வழி புத்தா தன்மையினை அடைதலாகும். அதாவது ஒருவன் தனது மனதின் மூலம் தனது புத்தா தன்மையையிலிருந்து அதிக தூரம் விலகிப் போயிருக்கிறான்இதைப்பற்றி இந்தப்பதிவில் விளக்கப்பட்டுள்ளது. மீளத்திரும்பலே புத்தா ன்மையினை அடைதலாகும்இதற்குரிய ழி தியானம் ஆகும்.
தியானம் என்பது விழிப்புணர்வுடன் கூடிய அனுபவித்தலாகும். அதாவது எமது து ற்றி விழிப்புணர்வுடன் அதன் செய்கைகள் அனைத்தையும் அறிதலாகும். இந்த செயன் முறை போதிதர்மர் மிக அழகாக செயன்முறையுடன் கூறியுள்ளார்.
முதலாவது இருப்பு ற்றிய ருத்து; சுயமும் ற்றையவையும் உண்மையில் இல்லதிருத்தல் என்பதாகும். அதாவது சுயம் என்று ஒன்றுமில்லை. இதுவே நாம் ற்றைய அனைத்தினையும் விரும்புவற்கான காரம், அடிப்படையில் அனைத்தும் ஒன்றாக இருப்பதால்தான் ஒன்று ற்றொன்றை விரும்புகிறது என்பது போதிதர்மரின் முதலாவது த்துவமாகும்.
ஆக ஒரு காரியத்தை நாம் செய்வதற்கான காரணம் ஒன்றுதான், நாமே அதுவாக இருப்பதால் அதை விரும்புகிறோம். அதனால் அதனைச் செய்கிறோம். இதுவே அனைத்து செய்கைகளுக்கும் காரமாகிறதுஅப்படியாயின் பயிற்சி எப்படி? பயிற்சி நான்கு அங்கங்களைக் கொண்டது.
  1. மனதிற்கு பிடிகாதபோதும் அந்த சந்தர்பங்களை நடு நிலையாக ஏற்றுக்கொள்வது
  2. அனைத்து சூழ் நிலைகளையும் ஏற்றுக்கொள்வது
  3. எதையும் தேடாமல் இருப்பது
  4. தர்மத்தினை பயிற்சிப்பது
இதில் முதலாவது பயிற்சியினைச் செய்வதற்கு எல்லா இருப்புகளும் துன்பமயமானவை என்பதனை அறிதல், எல்லா துன்பங்களுக்கும் காரணம் உள்ளது என்பதனை அறிதல், அந்த காரணத்தினை முடிவுக்கு கொண்டு வரலாம், அதற்கான வழிகள் சரியான பார்வை, சரியான எண்ணம், சரியான வார்த்தை, சரியான செயல், சரியான வாழ்க்கை முறை, சரியான முயற்சி, சரியான விழிப்புணர்வு, சரியான ஜென்(மனமற்ற நிலை)  ஆகிய எட்டையும் கடைப்பிடித்தல்.
உண்மையின் போதிதர்மர் மருத்துவர், போர்க்கலை ஆசான் என்பதெல்லாவற்றையும் விட ஒரு ஆன்மீக குரு, மனிதனது மனதில் உள்ள மாயைகள் அழிய கற்பித்த ஞானி என்பதே அவரது இறுதி உபதேசமாகும். ஆகவே அவரது உயர்ந்த ஞானத்தினையும் சற்று அறிந்து வைத்தல் அவரைப் பற்றிய புரிதலை அதிகரிக்கும்.

அடுத்த பதிவில் நோக்கு வர்மம், மெய்தீண்டாக்கால வர்மம் பற்றிய போதிதர்மரின் போதனைகளையும், தமிழ் சித்தர்களது குறிப்புகள், மற்றும் அது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய முழுமையான ஒரு விஞ்ஞான புரிதலுடன் விளக்கத்தினை பார்ப்போம்!

5 comments:

  1. போதி தர்மதின் போதனைகள் பற்றிய விளக்கங்கள் அற்புதம்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. Mikka nandrigal Sumanan avargaley. Idu poandra pala TAMILAR - galin perumaigal visayangal maraikkapattu ullana. Avatrai araivadil ennai pondra palarukkum thangal oru valigatiyaga iruka vendum enbadu en ava. Melum pala vibarangal ariya asai padukiren. Ungal sevai paratukkuriadu. Vaalthukkal. Valga TAMIL. Vetri namadey

    ReplyDelete
  3. ithu unmaileye nalla saithi than ithupola pala tamilargalai pattry naam anaivarum therinthukolvom

    ReplyDelete
  4. ithu unmaileye nalla saithi than ithupola pala tamilargalai pattry naam anaivarum therinthukolvom

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...