குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 24, 2023

விஞ்ஞானம்

விஞ்ஞான ரீதியில் நிருபிக்க பட்டதா?

____________________________________________________

தமிழில் எடுத்ததற்கெல்லாம் அறிவியல் ரீதியாகப் பேசுகிறோம் என்று கேள்வியை மட்டும் கேட்பதைச் செய்துகொண்டு தம்மை அறிவியலாளராக காட்டும் நபர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். 

அறிவியல் முறை (scientific method) என்பது "பௌதீக" அறிவினைப் பெறுவதற்கு எமக்கு இருக்கும் ஒரு நம்பகமான முறை. 

எது அறிவியல் என்பதைப் பற்றி அறிவியலின் மெய்யியல் (scientific philosophy) இனது மிக முக்கியமான மெய்யியலாளர் கார்ல் பொப்பர் demarcation problem எனக் குறிப்பிடுகிறார்; 

ஒரு பிரச்சனையை எடுத்தால் அதில் பரிசோதனைகள் மூலம் நேரடி அனுபவமாக அறியக்கூடிய அறிவியல் (empirical sciences), தர்க்கம் (Logic), கணிதம் (mathamatics), அதிபௌதீகம் (meta physical) ஆகிய நான்கு விதத்தில் அதைப் புரிந்துகொள்ளலாம். 

கார்ல் பாப்பர் அறிவியல் எல்லை நிர்ணய சிக்கலை (problem of demarcation) இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஒருபுறம் அனுபவ அறிவியலையும், கணிதம் மற்றும் தர்க்கவியல் மற்றும் 'மெட்டாபிசிக்கல்' அமைப்புகளையும் வேறுபடுத்தி அறிய உதவும் அளவுகோலைக் கண்டுபிடிப்பதில் உள்ள  சிக்கலை, எல்லை நிர்ணயத்தின் சிக்கலை நான் அழைக்கிறேன்" உண்மையிம் எம்மிடம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் empirical sciences மூலம் அளக்க முடியாத நிலையில் தான் இருக்கிறோம். இதனால் தான் மனிதனுக்கு தர்க்கமும், கணிதமும், mete physical believes உம் தேவைப்படுகிறது. 

உலகத்தில் உள்ள அனைத்தையும் empirical sciences இற்குள் கொண்டுவரமுடியாது. இது ஸ்திரமான பௌதீக உலகத்தின் விதிகளை மாத்திரமே ஆதாரமாகக் கொண்டது. இந்த empirical sciences இனது பல கண்டுபிடிப்புகள் தர்க்கத்திலிருந்தும், கணிதச் சமன்பாடுகளிலுந்தும் அனுமானிக்கப்பட்டு பிறகு தகுந்த பரிசோதனைகள் மூலம் அறிவியலுக்குள் உள்வாங்கப்பட்டது. 

அண்மையில் நண்பர் ஒருவர் ஜோதிடம் பரிகாரம் இவை அறிவியல் பூர்வமானதா என்ற ஒரு கேள்வியைக் கேட்டார்?

ஜோதிடம் meta physical இல் தொடங்கி சரியான தர்க்கத்தையும், கணிதவியலையும் (Logic and Mathematics) வைத்திருக்கீறது. ஆனால் empirical sciences இற்குள் முழுமையாகக் கொண்டுவருவதற்கு அதை நாம் ஆய்வு செய்யவில்லை என்பதே நியாயமான பதில். கே. பி முறைபோன்றவை கணிதத்தைச் செம்மைப் படுத்துவதன் மூலம் ஜோதிடத்தை விஞ்ஞானப் பூர்வமாக்க முயற்சித்திருக்க்கின்றன. இவற்றைப் உண்மையாகப் புரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆழமாகப் படியுங்கள். 

empirical sciences இனது நோக்கம் உண்மையைத் தேடுவதல்ல; ஒரு விடயத்தில் அதன் நிபந்தனைகள் சரியாகப் பின்பற்றப்பட்டால் அது குறித்த விளைவினைத் தொடர்ச்சியாகத் தருகிறதா? அல்லது எந்த நிபந்தனையில் குறித்த விளைவினைத் தருகிறது என்பதை அறிவதை நோக்கமாகக் கொண்டது.

பரிகாரங்கள், தலங்களுக்கு போவதற்கெல்லாம் அறிவியல் விளக்கம் கொடுத்துக்கொண்டிருப்பது ஒருவித முட்டாள்தனம். அது எமது உணர்ச்சி, மனம் இவற்றின் திருப்திக்காக மனிதர்கள் செய்துகொள்வது. இப்படிச் செய்யும் போது மனதிற்குள் உருவாகும் புத்துணர்ச்சி எம்மை கவலையை மறந்து ஆற்றலுள்ளவர்களாக்கும். இந்த விடயங்கள் meta-physical aspect சார்ந்தவை. 

எமக்கு வாசிப்பு இல்லாத, சிந்தனையில்லாத, உழைக்க விரும்பாத துறையில் இருக்கும் விடயங்களை தனது துறை சார்ந்த அறிவுடன் ஒருவன் நோண்டப் போவது அறமன்று! 

அண்மையில் ஒரு வைத்தியர் தான் Physics உம் Chemistry ம் A எடுத்துத்தான் medicine சென்றதால் தனக்கு இரசாயனவியலில் எல்லாம் தனக்குத் தெரியும் என்றார்; நான் திருப்பிக் கேட்டேன் அப்படியென்றால் Biology A எடுத்து B.Sc படித்தவர் நோய்ற்கு மருந்து கொடுக்கலாமா என்று? 

இவை வீண் மமதைத்துவம்! எமக்கு சற்றுப்புகழ், சொல்லுவதை ஆமோதிக்க ஒரு கூட்டம், அதற்கு சில லைக் வந்தவுடன் நாம் அறிவியல் சிந்தனையை மறந்து எல்லாவற்றையும் கொண்டுவந்து அறிவியலுக்குள் கொட்டலாம் என்பதும் அவற்றை நம்புவர்களை ஏளனப்படுத்துவதும் செய்யத்தொடங்குகிறோம். 

அறிவைத் தேடுபவன் எல்லாவற்றையும் திறந்த மனதுடன் அணுகக் கூடிய எளிமையானவனாக கற்றுக் கொள்ளும் ஆற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும். அறிவியல் பௌதிக உலகைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கான ஒரு நம்பகமான முறை என்பதும் பௌதீக உலகைத் தாண்டிய விடயங்களுக்கு நாம் தர்க்கம், கணிதம், meta physical நம்பிக்கைகளையும் பாவிக்க வேண்டும் என்று எமக்குத் தெரியவேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...