குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 10, 2023

மலையகம்

மலையகத்திற்கு மட்ராஸ் பிரசிடென்ஸியில் (தற்காலத்து தமிழ் நாட்டில்) இருந்து சிலோனுக்கு ( இலங்கை) மக்கள் தமது வாழ்வாதார முன்னேற்றம் வேண்டி இடம் பெயர்ந்த 200 வருடத்தைக் கொண்டாடுவோம் என்று ஒரு ஏற்பாடு நடைபெறுகிறதுஇது கொண்டாட வேண்டியதா? அல்லது இரு நூறு வருடங்களாக ஒரு சமூகம் எத்தகைய முன்னேற்றத்தினை அடைந்தது என்பதற்கான சிந்தனை, ஆய்வுக்கான தூண்டலைத் தரும் வருடமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு சமூகம் ஏழ்மை - poverty இல் இருப்பது என்பது பற்றி பேர்னாட் ஷா தனது Major Barbara நாடகத்தில் இப்படிச் சொல்கிறார். வறுமை என்பது சமூகத்திற்கு ஏற்படுத்தபடும் மிகப் பெரிய தீமையும், மோசமான குற்றமும் ஆகும்.

ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனத்தின் தலைமை ஆய்வு ஆலோசகராக இருந்த Duncan Green எழுதிய From Poverty to Power: How Active Citizens and Effective States Can Change the World என்ற நூல் தனது சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒவ்வொரு மலையக இளைஞனும் இந்த 200வது வருடத்தில் படிக்க வேண்டிய நூல்.

இரு நூறு வருடங்களும் மக்களும், அரசும் வறுமையில் இருந்து வெளிவர எதைச் செய்யத் தவறியது என்ற தெளிவைத் தரும் நூல் இது.

200 வருடங்களாக நாம் ஏன் ஏழ்மையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துக் கொள்ளாமல் அடுத்து என்ன செய்யாலாம் என்று திட்டமிடமுடியாது; வெறுமனே விழாக் கொண்டாடுவதால் சமூகம் முன்னேறிவிடாது; ஆழமான சிந்தனைக் கலாச்சாரம் உருவாக வேண்டும்இந்த நூலில் வறுமை என்பதை நோபல் பரிசு பெற்ற பொருளியல் மேதை அமர்தியா சென் தனது முகவுரையில் இப்படிப் பார்க்கும் படி கூறுகிறார்:

வறுமை என்பது வருமானப் பற்றாக்குறை தான் என்ற பழைய பார்வை நம் மனதில் நன்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் இறுதியில் வறுமையை பல்வேறு வகையான சுதந்திரத்தை நாம் அனுபவிக்க முடியாமல் செய்யும் நிலை என்று நாம் பார்க்க வேண்டும்:

குறைந்தபட்ச திருப்திகரமான வாழ்க்கை நிலைமைகளை அடைய சுதந்திரமின்மை என்று வரையறுக்கலாம். குறைந்த வருமானம் நிச்சயமாக அதற்கு பங்களிக்கும், ஆனால் பள்ளிகள் இல்லாமை, சுகாதார வசதிகள் இல்லாமை, மருந்துகள் கிடைக்காமை, பெண்களை அடிமைப்படுத்துதல், அபாயகரமான சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் வேலையின்மை (பாதிக்கும் ஒன்று போன்ற பல தாக்கங்கள்) வருமானத்தை விட அதிகம். இந்த வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் வறுமையை குறைக்க முடியும். ஆனால் அதற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக, வசதிகள் விரிவுபடுத்தப்படுவதையும், குறைபாடுகள் நீக்கப்படுவதையும் உறுதிசெய்ய, மக்களின், குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றலை மேம்படுத்துவது அவசியம்.

இந்த ஆற்றல் என்பது கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கான சிந்தனை, செயல் திறன்களுக்கான முதலீடு!

உதாரணமாக மலையகத்தில் high end IT business company இனை திறம்பட நடாத்துவதற்கான மனிதவள விருத்திக்கான முதலீடுகள் இருக்கின்றனவா?

இந்த நூல் குடிமக்களும் - அரசும் ஏழ்மையை இல்லாதாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான, நம்பகமான அறிவுரைகளை முன்வைக்க வேண்டும்ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூல் இன்னும் தமிழ் படுத்தப்படவில்லை என்பதால் எப்படி வாசிப்பது என்று கவலை கொள்ள வேண்டாம்.

அண்ணன் சுந்தர்பிச்சை உலகில் ஒரு மனிதன் எந்த மொழியில் உள்ள அறிவையும் தனது தாய்மொழியில் கற்கும் வாய்ப்பினை உருவாக்கியிருக்கிறார்.

google lense ஐயும் translator இனையும் பயன்படுத்தில் நாம் படிக்கலாம்.

மலையக கல்வி அறிஞர்கள் இந்த நூலை தமிழ்படுத்தி கலந்துரையாடல்களை ஆரம்பித்து யோசனைகளை உரையாடி சிந்தனையைத் தூண்டலாம்.

குறிப்பாக சம்பள உயர்வு தான் தீர்வு என்று போர்க் கொடி பிடிக்கும் அரசியல் தலைவர்கள் இந்த நூலை வாசிப்பதன் மூலம் அதற்கு மேலும் சென்று உண்மையான சமூக முன்னேற்றத்திற்கு நாம் உழைக்க முடியும் என்ற சிந்தனையைப் பெறலாம்.

இந்த நூலைப் படிக்க ஆர்வம் உள்ளவர்கள் +94776271292 இற்கு வாட்ஸப் மூலம் அறியத் தாருங்கள் அனுப்பி வைக்கிறேன்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...