பலருக்கு உபாசனை, அனுஷ்டானம், ஸாதனை எப்படி தமது
சங்கல்பங்களை நிறைவேற்றுகிறது என்பது பற்ற்றிச் சரியான புரிதல் இல்லை. தாம் மந்திரம்
ஜெபித்தவுடன் உடனே கடவுள் தமது வேலைக்காரன் போல் எல்லாவற்றையும் காலடியில் கொண்டு வந்து
வைத்துவிடுவார் என்று நினைக்கிறார்கள்.
நாம் உபாசிக்கும் தெய்வம் எம்மை விட கணக்கிலடங்கா
ஆற்றலும், அறிவுசக்தியும் நிறைந்த உயர்ந்த சக்தி, ஆகவே சாதாரணமாக அதிகாரம் படைத்த ஒரு
அதிகாரியிடம் சென்று நாம் விரும்பியவாறு லஞ்சம் கொடுத்து அவரை விலைக்கு வாங்கி எமது
காரியம் சாதித்துக்கொள்ளலாம் என்பது போன்ற முட்டாள் சிந்தனை இருக்கக்கூடாது.
எல்லா தெய்வ சக்திகளும் பிரபஞ்ச நியதியை ஒட்டியே
தமது ஆற்றலையும், அறிவு சக்தியையும் வழங்கும். அதை நாம் பெற்று எமது செயல் சக்திமூலம்
எமது காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.
ஒரு காரியத்தை சங்கல்பித்து நாம் அனுஷ்டானம் செய்தால்
முதலில் அந்த தெய்வ சக்தி எமது அறிவில் தெளிவையும், பின்னர் உடல், மனதில் அந்தக்காரியத்தை
ஆற்றுவதற்குரிய சக்தியையும் வழங்கும். இந்த இரண்டும் நடைபெற்றவுடன் அந்த சாதகன் தான்
சங்கல்பம் செய்த காரியத்திற்குரிய செயலில் இறங்கி முயற்சிக்க காரியம் சிறப்பாக நடைபெறும்.
சாதகன் தனது சோம்பேறித்தனத்தால் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் செய்த அனுஷ்டானத்தின்
சக்தி வீணாகலாம்.
ஆகவே நீங்கள் செய்த சங்கல்பத்திற்குரிய செயலை முயற்சிப்பது
கட்டாயமாகும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.