குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 15, 2011

எளிய யோகப்பயிற்சிகள் - பயிற்சி 02


கீழ் வரும் இணைப்புகளை வாசித்து விளங்கிய பின் இந்த பதிவினை வாசிக்கவும்.
============================================================================


தாந்திரீகம், யோகம், ஜென், தியானம் என்பவற்றின் உண்மையான நோக்கம் விழிப்புணர்வினை அடைதலாகும். எமது புலணுணர்வின் அறியும் ஆற்றல் சாதாரணமாக‌ மட்டுப்படுத்தப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட புலணுணர்வுடன் நாம் ஒரு செயலை எதிர் கொள்ளும் போது அதன் அறியாத பக்கங்களை நாம் எதிகொள்ள நேரும் போது எமது சமனிலையினை இழக்கிறோம். இந்த சமநிலை இழப்பே பின்னர் துன்பத்திற்கு மூலகாரணமாகிறது. ஆக விழிப்புணர்வின் மூலம் புலணுணர்வு தாண்டிய அறிவினைப் பெறுவதனால் நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை மகிழ்வுடன் எதிர்கொண்டு அதிலிருந்து ஞானத்தினை பெறும் பயிற்சியினைப் பெறுவதுதான் எந்த அகப்பயிற்சியினதும் உண்மையான குறிக்கோளாக இருக்க முடியும். இதற்கு முதலாவது விழிப்புணர்வுடன் இருக்கும் நிலையினைப் பெறவேண்டும். இதற்கு எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும் ஒன்றுடன் எம்மை நாம் தொடர்புபடுத்திக் கொள்ளவேண்டும். நல்ல நட்புடன் சேர்ந்தால் நல்லது நடக்குமல்லவா! அது போல்! முதலாவது நாம் ஆகிய ஆன்மா எப்போதும் சேர்ந்திருக்கும் ஒரு கூடு "உடல்", அந்த உடலில் சதாகாலமும் நடைபெறும் செயற்பாடுகள் ஏராளம், இரத்த ஓட்டம், மூச்சு, இதயதுடிப்பு என்பன எம்மால் சாதாரணமாக உணரக்கூடியவை.இவற்றுள் மிக‌மிக‌ எளிதாக‌ உண‌ர‌க்கூடிய‌து "மூச்சு" ஏனெனில் இதில் அக‌ம், புற‌ம் இர‌ண்டும் காண‌ப்ப‌டுகிற‌து. விழிப்புண‌ர்விற்கு ஆதார‌மான‌ ம‌ன‌ம் எப்போதும் புறவயப்பட்டு மட்டும் இருக்காது, அகவயப்பட்டு மட்டும்  இருக்காது, மாறி மாறி தனது இச்சிப்படி இருக்கும்.  அதனால் இரண்டுதன்மையுடைய மூச்சில் மனதை செலுத்தி விழிப்புணர்வினைப் பெறுதல் இல‌குவானது. இதனால் தான் எல்லா யோகப்பயிற்சிகளும் மூச்சினை கட்டுப்படுத்தும் பயிற்சிகளை ஆரம்ப பயிற்சிகளாக கூறூகின்றன.இதனையே "அஜபா ஜெபம்" "ஆனா பான ச‌தி" என்ற‌ ப‌யிற்சிக‌ளாக‌ போதிக்க‌ப்ப‌டுகிற‌து.

முத‌லாவ‌து ப‌யிற்சியில் மூச்சினை ம‌ட்டும் க‌வ‌னிக்க‌ச் சொல்லி கூறியிருந்தோம். உண்மையில் மூச்சினையின் விழிப்புண‌ர்வினையும் தொட‌ர்புப‌டுத்துவ‌தே இத‌ன் நோக்க‌ம். அத‌ற்கு ஆர‌ம்ப‌ப‌டி அவ‌தானித்தல் அல்லவா. ஒரு ஓட்ட‌ப் பாதையில் ஓட‌வேண்டுமானால் முத‌லாவ‌து ஓடுபாதையினை ந‌ன்கு க‌வ‌னித்து ம‌ன‌தில் பழ‌க்க‌ப்ப‌டுத்திக் கொள்ள‌வேண்டும‌ல்ல‌வா, அதுபோல், முத‌ற்ப‌யிற்சி ஒரு ஆர‌ம்ப‌ நிலை!
அந்த பயிற்சியினை முயற்சித்தவர்கள் மூச்சு ஆழமாக செல்வதினை அனுபவித்திருப்பார்கள், அவ்வாறு மூச்சினை அவதானித்தவண்ணம் கீழ் வரும் பயிற்சியினை முயற்சித்துப்பாருங்கள்.

பயிற்சிமூச்சினை உள்ளிளுக்கும் போது, அந்த மூச்சுக் காற்று உடலில் முதலாவது உட்புகும் இடமான நாசித்துவாரத்தின் ஆரம்பபுள்ளியான மூக்கு நுனியிலிருந்து பின் மூக்கு துவாரத்தின்  ஊடாக, பின் தொண்டையினுள் சென்று மூச்சுக்குழாயினுடாக சுவாசப்பையினை அடைவதை உணரமுயலுங்கள். இறுதியாக மூச்சு நுரையீரலை அடைந்தவுடன் பிரிமென்றகடு விரிந்து வயிறு விரிவதை உணருங்கள். இது உள்மூச்சினை உணருவதற்கான முயற்சி. இதைப்போல் இப்போது வெளிமூச்சினை வெளியேற்றும் போது படிப்படியாக இவ்வாறு மேற்கூறிய பகுதிகளை படிப்படியாக அவதானித்து வெளியேற்றுங்கள். இப்படி ஒவ்வொரு மூச்சினையும் இப்படி அவதானத்துடன் சில நிமிடங்கள் செய்யுங்கள். கண்ணை மூடினால் அவதானம் சிறிது அதிகமாகும். இந்த பயிற்சியினை விளங்கி செய்வதற்கு கீழுள்ள படம் உதவியாக இருக்கும்.


இதை பயிற்சிக்கும் போது மனதில் எண்ணங்கள் உருவாகும் ஆனால் அவை உங்களை பாதிக்காதவண்ணம் அவற்றை அவதானித்தபடி நீங்கள் இந்த பயிற்சியினை செய்தவண்ணம் இருப்பீர்கள். இதன் மூலம் மனம் படிப்படியாக எண்ணங்களை அவதானிக்கும் தன்மையினை அடையும். அடுத்து மூச்சு மெதுவாகவும் ஆழமாகவும் செல்லத்தொடங்கும்.

இந்தப்பயிற்சி ஒரேநாளில் உடனடியாக முழுமையாக கைவராது, ஆரம்ப நாட்களில் மூக்கு நுனியில் மட்டும் உணரக்கூடிய தன்மை வரும், பின்பு மூக்கின் உள்ளே மட்டும் உணரக்கூடிய தன்மை வரும், இப்படி படிப்படியாக ஒவ்வொரு இடத்தில் மூச்சுசெல்வதனை உணர்ந்து வருவீர்கள். இப்படி பகுதி பகுதியாக உணரப்பட்ட மூச்சு குறித்தளவு பயிற்சியின் பின்பு முற்ச்சியில்லாமலே எல்ல இடங்களிலும் பரவுவதை உணர்ந்தறியலாம்.

இந்தப்பயிற்சியில் உள்ள சிறப்பம்சம் என்ன வென்றால் மனதுடன் நாம் போராடவேண்டியதில்லை, மனம் தனது செயலாகிய எண்ணங்களை உருவாக்கிகொண்டிருக்கும், நாம் அதன் வேகத்தற்கு இணையான ஒன்றான மூச்சுடன் தொடர்பு கொண்டு படிப்படியாக எண்ண விருத்திகளை கட்டுப்படுத்ததொடங்குகிறோம். இது எப்படியென்பதனை சிறிய உதாரணம் மூலம் விளக்குவோம்.

ஒரு க‌ள்வ‌ன் திருடிக்கொண்டு ர‌யிலில் ஏறி வேக‌மாக‌ சென்றுகொண்டிருக்கிறோம், ர‌யிலை நிறுத்த‌முடிய‌வில்லை, அது அவ‌ன‌து க‌ட்டுப்பாட்டில் இருக்கிற‌து, இது போன்ற‌ நிலைதான் எண்ண‌ம் வ‌ச‌ப்ப‌டாம‌ல், ம‌ன‌ம் குழ‌ம்பிய‌ நிலை, இத‌னை க‌ட்டுப்ப‌டுத்துவ‌த‌ற்கு ர‌யிலிற்கு ந‌டுவில் த‌டையை போட்டு நிறுத்த‌ முற்ப‌ட்டால் விப‌த்து ஏற்ப‌ட்டு அழிவுதான் ஏற்ப‌டும். அதுபோல் உத்வேக‌ங்க‌ளுக்கு ஆட்ப‌ட்டு வேக‌மாக‌ உள்ள‌ ம‌ன‌தை ஒருமைப்ப‌டுத்துகிறேன் என‌ ப‌யிற்சிக‌ள் ஆர‌ம்பித்தால் இறுதியில் ம‌ன‌க்குழ‌ப்ப‌ம் அதிக‌மாகி ம‌ன‌ அழுத்த‌ம் உண்டாகி யோக‌ம் ப‌ழ‌குகிறோம் என‌கூறி ம‌ன‌க்குழ‌ப்ப‌ம் அதிக‌மான‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் உள்ளார்க‌ள் என்பத‌னை அனுப‌வ‌மாக‌ உண‌ர‌லாம். எந்த பாதிப்பும் இல்லாமல், இழப்பு இல்லாமல் கள்வனாகிய மனதினை வசப்படுத்துதலிற்கு என்ன வழி, முதலாவது கள்வனிற்கு நாம் அவனை பிடிக்கப்போகிறோம் என்பது தெரியக்கூடாது. அவனை அவன்பாட்டிற்கு விட்டு விடவேண்டும். ஆனால் அவனது நடத்தைகளை கட்டுப்படுத்தும் உற்ற நண்பனைக் கொண்டு உளவு அறியவேண்டும், யோகத்தில் மனதாகிய கள்வனின் உற்ற நண்பன் மூச்சு, மூச்சு சொல்லும்படிதான் கள்வனாகிய மனம் செயற்படுவான். இதைபோல் மனதின் இயக்கங்களை மூச்சின் மூலம் அறிந்து, பின் மெதுமெதுவாக மனதினை ஆளுமைக்கும் கொண்டுவரும் நுண்ணறிவான முறைதான் (intelligence method) இந்த பயிற்சி. இதில் மனதுடன் போரிடும் தன்மை இல்லை, முழுக்க அவதானத்துடன் செயற்பட்டு எந்த இழப்பும் இல்லாமல் மனதின் உச்சதிறமுடையதாக்கும் செயள்முறையாகும்.

இதை பயிற்சிக முயற்சிக்கும் சாதகர்களிற்கு இந்த விளக்கம் போதுமானது என நினைக்கிறேன்.

2 comments:

  1. மூச்சு உள்ளிழுக்கும்போதும் வெளி விடும் போதும் சில மந்திர ஒலிகளை நினைவு படுத்துவதாலும் மூச்சை அவதானிக்கலாம் என படித்திருக்கிறேன்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...