நீல உடல் உடையவர் - இது தர்மகாயத்தின் குறியீடு -
தலையில் ஐந்து மண்டையோடுகளை கீரீடமாக அணிந்தவர் - இதன் அர்த்தம் மனதின் ஐந்து விஷங்களான - கோபம், அதியாசை, அறியாமை, பொறாமை, தற்பெருமை ஆகியவற்றை ஐந்து ஞானங்களாக உருமாற்றும் ஆற்றல் உடையவர் -
ஆறு கரங்களில் தான, சீல, சாந்தி, வீர்ய, சமாதி, ப்ரஜ்ஜா { தானம் தரும் மனம், சீலம் என்ற ஒழுக்கம், சாந்தி என்ற மன அமைதி, வீரியம் என்ற சக்தி, சமாதி என்ற ஏகாக்கிர மனம், பிரஜ்ஜா என்ற ஞானம்} என்ற ஆறு செம்மைகளை தனது ஆயுதங்கள் மூலம் தருபவராக கட்கம், கபாலம், அக்ஷரமாலை, உடுக்கை, திரிசூலம் ஆகிய ஆறு ஆயுதங்களை உடைய அவலோகதீசுவரரின் அவதாரமாக வணங்கப்படுகிறார்.
அவரது திரிசூலம் - சாதகன் அடையும் திரிகாயத்தின் {தர்ம காயம், சபோக காயம், நிர்மன காயம்} குறியீடாகக் குறிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.