******************************************************************
அன்பின் அண்ணா
- காலை எழுவது மிகவும் சிரமமாக இருக்கும். இந்த லகு அனுஷ்டானம் ஆரம்பித்தது முதல் காலை 3.30 மணிக்கு எழுந்துவிடுகிறேன். மேலும் நாம் ஒரு தீர்மானத்தை எடுத்து செயல்படுத்தும் தீர்மானம் இருக்கையில் அனைத்துதும் அனுகூலமாக அமைகிறது என்பதை உணர்ந்தேன்.
- மனதில் எந்நேரமும் திருப்தியற்ற நிலை இருந்தது. அதனால் கோபம் எரிச்சல் போன்ற குணங்கள் வெளிப்பட்டன இதனிலிருந்து எவ்வாறு வெளிவருவது என யோசித்தேன். அப்பொழுது என்னில் ஒரு குரல் மறு நாள் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்து செயல்படு என அறிவுறுத்தியது. அவ்வாறு செய்தவுடன் கோபம் எரிச்சல் குறைந்ததுடன் உற்சாகமாகவும் வேலை செய்ய முடிந்தது. அத்துடன் கோபம் எரிச்சலின் காரணமாக தவறு செய்ய நேரிட்டால் அதற்கு முன்னரே ஒரு குரல் என்னை தடுத்து மனதை திசை திருப்பிவிடுகிறது.
- நான் காலை மாலை என பிரித்து லகு அனுஷ்டானம் செய்தேன். இம்முறை காயத்ரி அனுஷ்டானம் மாலை செய்கையில் வீட்டில் சத்தமாக பட்டு கேட்பது, பேசுவதுமாக இருந்தார்கள். எனக்கு சாதனை செய்ய சிரமாக இருந்தது. அப்போது எழுந்து அவர்களை நன்றாக திட்ட தோன்றியது. எனினும் சாதனை முடியும் வரை எழுவது இல்லை என சங்கல்பம் கொண்டிருந்தேன். ஆகையால் தேவியிடம் "அம்மா நான் இந்த சத்தத்தை தாண்டி மனம் ஒருமித்து சாதனை பக்குவத்தை இன்னும் அடையவில்லை தயவு கூர்ந்து என்னை வழிநட த்துவாயாக" என வேண்டினேன். சிறிது நேரத்தில் என் தாயார் அங்கு வந்து வீட்டில் உள்ளோர் எனக்கு சிரமம் தருவதை உணர்த்தினார். அன்றில் இருந்து சாதனை செய்யும்போது அமைதியாக இருக்கும்
- தேவைக்கு அதிகமாக இணைய தளத்தில் இருப்பது, you tube பார்ப்பது என தேவையற்று நேரம் விரயம் செய்தேன். சில நாட்களாக என்னுள் ஒரு குரல் நீ இந்த நேரத்தை பலனுள்ளதாக செயல்படுத்தலாம் என கூறி செய்ய வேண்டிய காரியத்தையும் அறிவுறுத்துகிறது. இதனால் எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் பயன் தரும் செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கிறது.
- செய்யும் காரியங்களில் ஈடுபாடு அதிகம் ஆகிறது. ஈடுபாட்டுடன் செய்வதால் திருப்தி அதிகரிக்கிறது. இதனால் நேர விரயமும் தவிர்க்கப்படுகிறது.
- தீய எண்ணங்கள் ஏற்படுகையில், நான் எப்போதும் நல்லவற்றை எண்ணும் கல்யாண குணம் உடையவள் என்று ஒரு குரல் எதிரொலிக்கும், அதை தொடர்ந்து அத்தகைய எண்ணங்களில் இருந்து மனதை ஒருவர் திருப்பிவிடுவதை உணர்ந்துள்ளேன். அத்துடன் தீய எண்ணத்தை நீக்கும் விதமாக நல்ல எண்ணம் ஒன்று பதிவிட்டது.
- ஒரு காரியத்தை செய்யவேண்டும் என திட்டமிட்டபடி செய்து முடித்துவிடுகிறேன். தடைகள் இருப்பின் அதனை எவ்வாறு செய்வது என அறிந்து அதனை நீக்கும் வழிகளை கண்டறிந்து செயல்படும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது.
- பிறர்க்கு உதவி செய்யும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது. காயத்ரி சாதனைக்கு பின் நான் செய்யும் உதவிகள் அதிகரித்துள்ளது. அதுவும் தேடிச் சென்று உதவும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது.
- செயல், பேச்சு மற்றும் எண்ணங்கள் யாரையும் பாதிக்கும் விதமாக இல்லாமல் நன்மை பயக்கும் விதமாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொ ள்கிறேன். என்னையும் மீறி ஒருவரை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் அது எனக்கு உணர்த்தப்படுவதுடன் மீண்டும் அவ்வாறு நடக்காமல் இருக்க வழியையும் காட்டுகிறது….
- முன்பு ஒரு காரியத்தை செய்வதனால் அந்த காரியத்தை செய்வதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சிந்தித்து அதில் உள்ள சிரமங்களை காரணமாக கொண்டு அதை செய்வதை தள்ளிப்போட்டுவிடுவேன். இப்போது ஆராய்ந்து அந்த செயலில் ஈடுபடுவதால் தவறு இல்லை எனில் முயற்சி செய்து பார்க்கும் தைரியம் அதிகரித்ததுள்ளது.
- முந்தைய லகு அனுஷ்டானகளின் போது உடல் உபாதைகள் இருந்தது இம்முறை அவ்வாறு எதுவும் ஏற்படவில்லை மனம் இலகுவாகவும் அமைதியாகவும் உள்ளது .
- என்னுள் ஒரு வழிகாட்டி இருந்து என்னை வழிநடத்துவது போல் உணர்கிறேன்.
- என்னை யாரேனும் நினைத்து தகவல் சொல்ல நினைத்தால் அது முன்னரே எனக்கு உணரத்தப்பட்டுவிடும். அன்று நீங்கள் கல்ப சாதனை செய்வதற்கு அனுப்பிய மெசேஜ் அப்படியே எனக்கு உணத்தப்பட்டது. சிறிது நேரத்தில் உங்களது மெசேஜ் வந்தது. அது போல் பல முறை நடந்து உள்ளது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.