புத்தக அட்டைப் படச் சவாலில் 04 வது நாள்
சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற இந்தச் சிறிய நூல்! இந்தப் புத்தகம் சிறுவயதில் நான் ஒரு விவாதப் போட்டியில் பங்குபற்றி வென்றதற்காக கிடைத்த பரிசு! (விவாதிகளே கேளுங்கள், நானும் ஒரு விவாதிதான் - Archaren Kirubaanand Srirangaraja & Vimalathithan Vimalanathan)
இந்த நூலில் கல்வி என்றால் என்ன என்று விவேகானந்தர் கூறிய கருத்து எனது படிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது!
மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவது தான் கல்வி!
எத்தகைய பயிற்சி மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு பயன் தரும் வகையில் பயிற்சியைத் தருகிறதோ அதுவே கல்வியாகும்
மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வி
கல்வி என்பது எமது அறிவால் பிறருக்கு உதவுவதும், சிங்கம் போன்ற உறுதியான மனவுறுதியைத் தருவது.
வெறும் புள்ளி விபரங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டிருப்பதல்ல கல்வி!
இந்த நூல் என்னில் ஏற்படுத்திய தாக்கம் மனதை செம்மைப்படுத்தும் யோக சாத்திரப்படிப்பிற்கு என்னை உந்தியது.
இன்றைய சவாலிற்கு தினசரி தனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தின் அட்டையைப் பகிர Archaren Kirubaanand Srirangaraja அவர்களை அழைக்கிறேன்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.