எதிராளி அல்லது வாதம் செய்பவரின் Ego இனை மதித்து, ஆனால் ஏற்றுக் கொள்ளாமல் தன் கருத்தை நுண்ணறிவு கொண்டு வாதம் செய்வது எப்படி என்பது தான் பலருக்குப் பிரச்சனை!
வாதம் மற்றவரைத் தாக்கி குரோதம் வளர்ப்பதல்ல!
தெளிவை நோக்கிய தாம் ஏற்றுக் கொண்ட விஷயத்தின் மீது விட்டுக் கொடுக்காத நுண்ணறிவுச் சமர்! வாதத்தின் இறுதியில் இருசாராரமும் தெளிவினை எட்டியிருக்க வேண்டும். எதிராளியின் கருத்தைத் தாக்குதல் என்பது எதிராளிக்கு தெளிவைக் கொடுத்து எமக்கு வெற்றியைத் தரவேண்டும்.
எதிராளியின் Ego இனை மதிக்காவிட்டால் அவர் தனது கருத்தை சரியாக முன் வைக்காமல் உணர்ச்சிவசப்பட்டு கூப்பாடு இட்டு தனது கருத்தை நிறுவ முயல்வார்!
ஆகவே எதிர்த்துக் கருத்துச் சொல்பவர்கள் கருத்தை எக் காரணம் கொண்டும் அவர்கள் மனது நோகும்படி ஏளனமாக, தாழ்த்தி நகையாடக் கூடாது.
இத்தகைய வாதங்களே கடந்த நூற்றாண்டின் புலவர் அறிஞர் மரபு என்பது இப்படித் தான் இருந்திருக்கிறது. தம்மை அந்த மரபினைக் காக்க வந்த இரட்சகர்களாக எண்ணிக் கொண்டு மற்றவர்களை தாக்கி எள்ளி நகையாடும் மரபு! இது அக்காலத்து சமூகத்தின் அறிவு மட்டத்திற்கு தேவையான ஒன்றாக இருந்திருக்கலாம்.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று
நுண்ணறிவு இல்லாமல் நாம் அடைந்த அதிகாரங்கள், பதவிகள், சமூக அந்தஸ்து போன்ற புற எழில்களை வைத்துகொண்டு அறிவுச் செருக்கு காட்டுவோமானால் அது மண்பாவையின் அழகு போன்றது என்கிறார் வள்ளுவர்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.