நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்
-----------------------
நாள் - 01
----------------------------------------
இந்த சவாலிற்கு என்னை இழுத்துவிட்ட புண்ணியவான் Vimalathithan Vimalanathan, நல்ல விஷயம் ஆகவே கட்டாயம் பதிவோம் என்றால் வேலைப் பளுவிற்குள் நேரம் கிடைக்க வேண்டும்.
ஆகவே சவாலில் நாளிற்கு ஒன்று என்பதை ஏற்றுக் கொண்டு, ஏற்கனவே சில குறள்களிற்கு எனக்கிருந்த புரிதலைப் பகிரலாம் என்று எண்ணுகிறேன்.
ஒவ்வொரு நாளும் ஒருவர் வீதம் இழுத்துவிட வேண்டுமாம்! இதைப் பார்த்து விட்டு ஆர்வமுள்ளவர்கள் எவரும் எனது அழைப்பாக எடுத்துக் கொண்டு பகிருங்கள்!
*******************************************
அரசியல்
இறைமாட்சி – Good governance!
******************************************
இங்கு எனது முயற்சி, திருக்குறளை நவீன தொழில், வியாபார நிர்வாகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்ற பார்வையில் வாசகர்களுக்கு கூறுதல். அரசியல் என்பதை நிர்வாகம் – Administration எனக் கொண்டால், இறைமாட்சி – Good governance என்றவாறு கொள்ளலாம். ஆக இந்த உரையில் பண்டைய அரசு என்ற கோட்பாட்டை கம்பனி நிர்வாகம் என்ற அடிப்படையில் எடுத்துக் கொண்டு இங்கு உரையாடப்படுகிறது.
குறள் 381:
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
Translation:
An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings.
சிங்கம் காட்டின் அரசன் என்பது உவமை, நாடு என்றும், அதற்கு ஒரு அரசு – நிர்வாகம் இருக்க வேண்டும் என்று கருதுபவன், சிறந்த அரசாக இருக்க ஆறு பண்புகள் அரசனுக்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவையாவன: படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவை ஆறும் உள்ள அரசன் சிங்கம் போன்ற அரசன் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
இந்த அறிவுரையை எப்படி ஒரு வியாபார ஸ்தலத்தை நிர்வகிப்பதற்கு பயன்படுத்த முடியும். அரசன் – பிரதம நிறைவேற்று அதிகாரி (Cheif Excutive Officer), குடி – அவர்கள் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் (Customer), கூழ் – வளங்கள் (resource), அமைச்சு – நிர்வாக இயக்குனர்களும் அவர்கள் துறைகளும் (Directors & Departments), நட்பு – வியாபார உறவு (business relations), அரண் – பாதுகாப்பு (Securtity) தற்காலத்தில் financial security, information security, assets security என விரியும்.
ஆக ஒரு வியாபார ஸ்தலத்தின் நிறைவேற்று அதிகாரி அரசன், அவனது நிர்வாகம் வெற்றிகரமாக சிங்கம் போன்று இருக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளர்கள், தனது கம்பனிக்கான வளங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த வியாபார உறவு, வளங்கள், தகவல்கள், சொத்துக்களுக்கான பாதுகாப்பு என்ற ஆறு காரணிகளையும் சிறப்பாக வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆறும் ஒரு வியாபார நிர்வாகி கவனிக்க வேண்டிய ஆறு புறக்காரணிகள். இவற்றை எப்படி சிறப்பாக பாவிப்பது என்ற அறிவு இருந்தால் மட்டுமே ஒருவன் சிறந்த நிர்வாகியாக வர முடியும்.
ஸ்ரீ ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.