சுவாரசியமான வருட இறுதி வாசிப்பு!
நியுட்டனின் தத்துவ உலகம்: இரசவாதம், எதிர்காலக் கணிப்பு, இழந்த ஞானத்தைப் பற்றிய தேடல் {The Metaphysical World of Isaac Newton: Alchemy, Prophecy, and the Search for Lost Knowledge}
ஆப்பிள் பழம் கீழே விழுந்ததால் புவியீர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டுபிடித்தவர் என்று எல்லோராலும் அறியப்பட்டவரும், மேற்கத்தேய பௌதீகவியலின் தந்தை எனப்படுபவரும், நுண்கணிதத்தை வகுத்தவருமான ஐசாக் நியுட்டனைப் பற்றிய சுவாரசியமான மறுபக்கம்!
அவரது Principa Mathematica என்ற நூலின் மூலம் கணிதவியலாளராகவும், இயற்பியலாளராகவும் அறியப்பட்ட நியுட்டனின் அதிகமான எழுத்துக்கள் இறையியல் சார்ந்து இருந்திருக்கிறது என்ற சுவாரசியத்தைக் கூறுகிறது.
நியுட்டனினால் எழுதப்பட்ட அறிவியல் சாராத எழுத்துக்களை உள்ளடக்கிய இரண்டு பெரிய இரும்புப் பெட்டியில் பூட்டப்பட்டு இருந்த ஆவணங்கள் அவரது குடும்பத்தின் வழித்தோன்றல்களால் 1936ல் ஏலத்தில் விடப்படுகிறது. பின்னர் 1998 ம் ஆண்டு அவை கேம்பிரிட்ஜ் நியுட்டன் திட்டம் என ஆவணப்படுத்தி பின்னர் Oxford University ஆல் ஆவணப்படுத்தப்படுகிறது. 2016ம் ஆண்டளவில் தரவேற்றப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை 6.4 மில்லியன் சொற்கள். இது அவர் அறிவியலில் எழுதியதை விட மிக அதிகமானது.
இதை ஆய்வு செய்த ஆய்வாளர் ஒருவரின் கூற்று " நியுட்டன் இறையியலையும் இயற்கைத் தத்துவத்தையும் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார், மனித குலத்தின் அறிவிற்கு உலகைப் பற்றியது, கடவுளைப் பற்றியதுமான அறிவினை தொகுக்க முயன்றிருக்கிறார். அறிவியலற்ற விஷயங்கள் என்று இவை வெளிவரவில்லை" என்கிறார்.
ஆர்வமுள்ளவர்களுக்கான பரிந்துரை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.