குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 31, 2020

தலைப்பு இல்லை

நேற்றுப் பகிர்ந்த கருத்தில் அதிகமாகச் சேர்த்த ஒரு வார்த்தை சிலரை சங்கடப்படுத்தும் என்று நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டினார்; நானும் மிகைப்படுத்தி எழுதிவிட்டேனோ என்று எண்ணி குருநாதர் கூறியதை அப்படியே சரியாகப் பதியவேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்க காலையில் கண்ணில் கிடைத்த அங்கீகாரம்! 
எதற்கு தேவையற்ற வார்த்தைகளைப் பாவித்து சிக்கலை ஏற்படுத்துகிறாய்; நான் எழுதி வைத்ததை அப்படி பகிர் என்கிறார் போலும்!    
So பொறுப்பை குருநாதரின் தலையில் கட்டியாயிற்று! 
குரு எப்போதும் வழி நடாத்துவார்!

Saturday, May 30, 2020

தலைப்பு இல்லை

நேற்று ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் பிறந்த நாள் பதிவு போட்டதில் அவரது வாழ்வின் அடிப்படைச் செய்தியை வாசகர்களுக்குக் கூறாமல் போனால் அது முறையாகாது அல்லவா?

ஆகவே இந்தப் பதிவு

அவர் ஜாதி, இனம், மதம், ஆண்/பெண் வித்தியாசம் பாராமல் கற்பித்த ஒன்று என்னவென்றால் 

"காயத்ரி உபாசனை"

காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது, அனைவருக்கும் அதிகாரம் இல்லை என்ற கருத்தை உடைத்து பரதேவதை தாய் அனைவருக்கும் உரியவள், அனைவரும் உபாசிக்கலாம்! அதை முறைப்படி உபாசிக்கவேண்டும் என்று தமிழில் பத்ததி எழுதி கற்பித்தார்! தகுதியை வளர்த்துக் கொள்ளும் எவரும் தேவியை உபாசிக்கலாம், அகத்தகுதி மாத்திரமே அளவுகோல் என்று உபாசனை கற்பித்தார். 

பல்லாண்டு காலம் வாழும் வழி என்று நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்று பாடங்கள் எழுதிக் கற்பித்து அதே போல் நூறாண்டுகள் வாழ்ந்தும் காண்பித்த யோகி! 

அவர் காயத்ரி உபாசனை பற்றி எழுதிய ஒரு சிறு கட்டுரை இங்கு பகிரப்பட்டுள்ளது.

இங்கு பகிரப்பட்டுள்ள படம் முருகேசு சுவாமிகள் அவரைக் காண கடைசியாகச் சென்ற போது, கமெராக்காரனைக் கூட்டி வா என்று சொல்லி, சாமி கொண்டு சென்ற வேட்டியை கட்டிக் கொண்டு கைகளை உயர்த்தி ஆசி கூறி இந்தப் படத்தை வைத்துக்கொள் என்று கூறி, அந்த வேட்டியை மீண்டும் சாமியிடம் கொடுத்து விட்டார்; அதன் பின்னர் சிறிது காலத்தில் உடல் நீத்துவிட்டார்!


தலைப்பு இல்லை

வலைத்தளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குரு பணியாக எழுதப்பட்ட எழுத்துக்களை விடய தானங்களுக்கு ஏற்ற வகையில் தொகுத்து மின்னூலாக்கும் பணியை தம்பி விமலாதித்தன் முன்னின்று செயற்படுத்த தம்பி ஜெயசீலன் உதவி புரிகிறார். 

வரும் வைகாசிப் பௌர்ணமிக்கு மின்னூலாக வெளிவருகிறது. 

ஆர்வமுள்ளவர்கள் தரவிறக்கி பயன் பெறுக!


Friday, May 29, 2020

தலைப்பு இல்லை

இன்று எனது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகீஷ்வரரின் ஜெனன திகதி!  திதிப்படி பார்த்தால் வைகாசிப் பௌர்ணமி! இன்னும் நாள் இருக்கிறது! 

தனது மாணவர்களுக்கு 70 வருடங்களுக்கு முன்னர் 03 - 04 கார்பன் வைத்து கையெழுத்தில் பாடங்கள் எழுதி நேர்முக யோகப் பயிற்சி கொடுத்த பெருந்தகை! 

தமிழ் சமஸ்கிருத பண்டிதர்; படிக்க வசதியில்லாத நிலையில் பச்சையப்பா கல்லூரி பண்டிதரின் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கம்பராமாயண வகுப்புகளை செவிமடுத்து தனது ஞாபக சக்தியால் பாடல்களையும் அதன் பொருளையும் ஒப்பிவித்து அவரின் அன்பைப் பெற்று பண்டிதர் பரீட்சை எழுதி சித்திபெற்றார். 

அவர் எழுதிய ஆத்ம யோக ஞான எழுத்துக்களை அவரது மாணவர்களான எனது குருநாதர் ஆர். கே. முருகேசு சுவாமிகளும், சென்னை ராஜயோகி ராஜமோகன் ஐயா அவர்களுமாக பதிப்பித்துள்ளார்கள்! இவர்கள் இருவரும் ஸ்ரீ கண்ணைய யோகியாராலேயே தனது பணியை முன்னெடுத்துச் செல்ல பணிக்கப்பட்ட அவரது முதன்மை மாணவர்கள்! 

அவரது கைப்பட எழுதிய பாடங்களை படியெடுத்துப் படிக்கும் பாக்கியம் பெற்றவன் என்ற வகையில் நான் புண்ணியசாலி! 

அகத்தியமகரிஷியால் தமிழ் பேசும் மக்கள் தற்கால நிலைக்குத் தகுந்தவாறு உபாசனை ரகசியங்களை எளிமைப்படுத்தி கற்பிக்கும் படியும், அன்னை காயத்ரியின் உபாசனையை தமிழ் பத்ததி (பூஜை முறை) செய்யும் படி பணிக்கப்பட்டு அதற்காக அனேக விஷயங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார். 

ரிஷி தயானந்தரின் சத்தியர்த்த பிரகாசம் நூலை 1935 இல் தமிழில் மொழி பெயர்த்தவர்! 

இலங்கைக்கு 1963 இல் சேர். பொன். அருணாச்சலம் அவர்களின் மகள் சிவானந்தம் தம்பையா அவர்களின் அழைப்பில் விஜயம் செய்தார். கொச்சிக்கடை தம்பையா சத்திரத்தில் உள்ள அனந்த பத்மநாதர் கண்ணைய யோகியார் பிரதிஷ்டை செய்தது. 

இலங்கையில் 1961 ம் ஆண்டு ஆத்ம யோக ஞான சபாவினை திருமதி தம்பையாவை தலைவராகவும், ஆர். கே. முருகேசு சுவாமிகளை செயலாளராகவும் கொண்டு ஸ்தாபித்து, ஆத்ம ஜோதி இதழில் பல ஆன்மீக கட்டுரைகள் ஸ்ரீ கண்ணைய யோகியாரால் எழுதப்பட்டது. பின்னர் ஆத்ம யோக ஞான சபை நுவரெலியா காயத்ரி பீடமாக சுவாமிகளால் தனது குருநாதரின் ஆசியும் விரிவு பெற்றது.

ஸ்ரீ கண்ணைய யோகியார் தான் வாழும் காலத்தில் வெறுமனே ஒரு ஜோதிடராக அறியப்பட்டவர். ஒரு சிறிய மாணவர் குழுவிற்கு மாத்திரமே குருநாதரின் ஆணையின் படி யோகவித்தையை கற்பித்தவர். தனது மாணவனாக இருப்பதற்கு தகுதி என்னவென்பதை வரையறுத்தவர்;

இன்றைய நாளில் ஒருவன் யோக சாதனையில் தனது மாணவனாக இருக்க வேண்டும் என்றால் என்ன தகுதி இருக்க வேண்டும் என்று அவர் கூறியதை இங்கு பகிர்கிறேன்;

என் மாணவன்.

நான் இன்ன சாதி என்று நினையாதவன்.

மனைவி, மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன்.

ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்.

கோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவன்.

பண்டிகை, விரதம், நோன்பு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்காதவன். 

எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவன்.

தனக்கு இன்பம் தரும் காரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவன்.

மாமன், மைத்துனன், தங்கை, அண்ணன் என்ற உறவுகளுக்கு உதவி செய்வதற்காகத் தன் இறை சாதனையினை விட்டுக் கொடுக்காதவன்.

வாழ்க்கையில் மற்றைய எல்லா காரியங்களை விடச் சாதனை மிக முக்கியமானது எனக் கருதி எக்காரணத்தாலும் சாதனையினைத் தவற விடாதவன்.

கண்ட புத்தகங்களைப் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதவன்.

எத்தொழிலைச் செய்தாலும் தன் செயல்களின் மறைவில் ஓர் சக்தி இருக்கிறது என்பதனை உணர முயற்சி செய்த வண்ணமிருப்பவன்.

சமயச் சழக்கெனும் (மதம் எனும்) சேற்றிலிருந்து துணிகரமாக மீள முயற்சிப்பவன்.

ரிஷி மரபின் உண்மைகளைத் தெரிந்து அதன் வழி நடப்பவன்.

அவனே என் மாணவன். அவனுக்குத் தான் என்னில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக ரத்தினங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

- யோகி கண்ணையா -


Wednesday, May 27, 2020

மரணம்

யக்ஷ ரூபத்தின் வந்த யமதர்மன் தர்மனிடம் கேட்ட கேள்விகளில் கடைசியும் முக்கியமானதுமான கேள்வி என்னவென்றால்,  உலகில் மிக ஆச்சரியமானது எது?

அதற்கு தர்மர், ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பு என்பது மிக நிச்சயமானது என்று தெரிந்தும் நாமும் இறப்போம் என்று யோசிக்காமல் நாம் என்றும் உயிரோடு இருப்போம் என்ற போக்கில் சிந்திக்கும் மனிதனின் எண்ணம் என்றார்! 

நேற்று மாலை மூன்று மணிக்கு உயர்ஸ்தானிகருடன் உரையாடி, ஐந்து மணிக்கு பிரதம மந்திரியுடன் உரையாடிச் சென்ற அமைச்சர் ஒன்பது மணிக்கு உயிருடன் இல்லை! அவர் ஆத்மா சாந்தியடையட்டும்! 

உலகமும் மரணமும் ஆச்சரியமானது!


Monday, May 25, 2020

மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் - 08

கர்மச்சக்கரம் என்றால் என்ன என்று சிலர் கேட்டிருந்தார்கள். 

எம்முடைய ஒவ்வொரு எண்ணமும் எமது ஆழ் மனதில் - சித்தத்தில் பதிவினை ஏற்படுத்துகிறது. இந்தப் பதிவுகள் மீண்டும் மீண்டும் செயற்பட இரண்டு காரணிகள் இருக்கிறது. 

முதலாவது எமது இச்சை; இச்சையினூடாக எமது சித்தத்திலுள்ள பதிவுகள் தட்டி எழுப்பப்படுகிறது. இச்சையின் வடிவங்கள் பல

விருப்பு - வெறுப்பு 

பற்று - எரிசல்

அன்பு - வெறுப்பு

குரோதம் - அதிபற்று

அகங்கரம் - ஆணவம் 

இப்படி எல்லா வித உணர்ச்சிகளும் எமது சித்தப் பதிவுகளைத் தூண்டி எம்மை மீண்டும் செயலில் தள்ளிக் கொண்டிருக்கும். 

இரண்டாவது காரணி சூழல்; எமக்கு குறித்த ஒரு அனுபவம் ஏற்பட்ட சூழலிற்குள் நாம் மீண்டும் போகும் போது எவ்வளவு தான் எம்மைக்கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் சித்தப் பதிவுகள் தூண்டப்பட்டு நாம் அந்தச் செயலைச் செய்து விடுவோம். போதைக்கு அடிமையானவன் எவ்வளவு தான் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் குடிக்கும் சூழல் உருவாகியவுடன் சித்தம் தூண்டப்பட்டு மீண்டும் குடிகாரனாகிவிடுவான். 

ஆக எமது சித்தப் பதிவுகள் தூண்டப்படுவது; 

முதலாவது இச்சையும் அதனூடாக எழும் உணர்ச்சிகளும்,

இரண்டாவது எமக்கு ஆழமான அனுபவத்தைத் தந்த அதே சூழல் மீண்டும் எம்மைச் சூழ உருவாகினால் அது எமது சித்தத்தை தூண்டி எண்ணங்கள் எழுந்து அதற்குள் சிக்கிக் கொள்வோம். 

இப்படி மீண்டும் மீண்டும் அவை நடக்கும் போது மிக நுண்மையாக இருந்த பதிவு வலுப் பெற்று வலிமையான பதிவாக மாறி எம்மை ஆட்டிவைக்கத் தொடங்குகிறது. எமது பழக்கவழக்கங்கள் ஆகிறது. 

எமது தொடர்ச்சியான செயல்கள், பழக்கவழக்கங்கள் ஆக மாறுகிறது. எமது பழக்கவழக்கங்கள் எமது நடத்தையைத் தீர்மானிக்கிறது. இந்த நடத்தை எமது ஆளுமையாகிறது. இப்படி தொடர்ச்சியாக வலிமை பெற்ற பதிவுகளை யோக மொழியில் சம்ஸ்காரங்கள் என்று கூறுவோம். 

இப்படி எமது அனுபவம் - சித்தப்பதிவு - மீண்டும் மீண்டும் ஒரே அனுபவம் - வலிமையான சித்தப்பதிவு - பழக்க வழக்கம் - நடத்தை - ஆளுமை என்று எமது அக உலகம் கட்டியமைக்கப்படுகிறது. 

அடுத்த பதிவில் சம்ஸ்காரம் என்பதைப் பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்! அதன் பிறகு கர்மச்சக்கரம் எப்படி நடைபெறுகிறது என்பது புரியும்.


Sunday, May 24, 2020

மனதின் தன்மை பற்றி யோக அறிவியல் - 07

மனம் எப்படி ஆக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஐம்பூதங்களின் நுண்மை இயல்பினால் அடிப்படையில் ஆக்கப்பட்டும் பின்னர் உண்ணும் உணவினால் மனம் உருவாகிறது என்று யோகிகள் கூறுகிறார்கள். 

உணவின் ஸ்தூல பாகம் ஸ்தூல உடலை வளர்க்கவும் சூக்ஷ்ம பாகம் மனதை வளர்க்கவும் பயன்படுகிறது. இதை நாம் சைவ உணவு, அசைவ உணவுடன் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. உணவுகளின் சுவை, விரிய, விபாக அடிப்படையில் அது என்ன குணத்தை மனதிற்கு தரும் என்பதிலேயே இது நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு மேல் உணவைத் தயாரிப்பவரின் மனதின் நுண்மையான பாகமும் உணவில் சேர்ந்து கொண்டு எமது மனதில் நுண்மையாக தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. அன்புடன் பரிமாறப்படும் உணவு மனதை ஊட்டம் பெறச் செய்கிறது, மனதில் கவலையும், எரிச்சலுடன் செய்யப்படும் உணவு மனதை வலிமை குன்றச் செய்கிறது. அதனால் தான் மனதின் வழி செயல் புரிபவர்கள் உணவில், உணவுத் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் வைத்தார்கள். இதை பின்னர் ஆச்சாரம், ஏற்றத் தாழ்வு என்று பின்னர் நாம் குழப்பிக் கொண்டோம். 

ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட மனம் பின்னர் சத்துவ, ரஜோ, தமோ குணங்களான முக்குணங்களுடன் சேர்ந்து கொள்ள செயல் புரிய ஆரம்பிக்கிறது. 

ஐம்பூதங்கள் மனதின் structural elements என்றால், முக்குணங்கள் அதை இயக்கும் Gear! ரஜோகுணம் உச்ச கட்ட வேகத்தில் சென்று முட்டிக் கொள்ளும், தமோ குணம் சோம்பித்திருந்து எந்த வேலையையும் செய்ய விடாது! சத்துவம் சமநிலையில் வைத்திருக்கும். 

யோகம் என்பது தமோகுணத்திலிருக்கும் மனதை ரஜோகுணத்தால் தட்டி எழுப்பி பின்னர் சத்துவகுணத்தால் சம நிலையடையச் செய்யும் செயல் முறையே!


மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் - 06

மனதின் இயல்பு விருத்திகள் என்று என்று முன்னைய பதிவில் பார்த்தோம். மனம் தொடர்ச்சியாக எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கும். இப்படி உருவாக்கிக் கொண்டு இருக்கும் எண்ணங்கள் ஒருவனை சூழச் சூழ அவன் அதற்குள் அகப்பட்டுக் கொள்கிறான். 

மகாபாரதத்தின் அபிமன்யு தாயின் வயிற்றில் இருக்கும் போது நாரதரின் உபதேசப் பிரகாரம் சக்கர வியூகத்திற்குள் செல்வதற்கு மட்டும் கேட்டுக் கொண்டதால் வெளியே வரும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டு இறப்பதைப் படிக்கிறோம். இதே போல் எல்லோருக்கும் எண்ணங்களை விருத்திகளாக - அலைகளாக எழுப்பி கற்பனை மாத்திரமே காணும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படி தாம் படைத்த எண்ணச் சுழல்களான கற்பனை ஆற்றலில் சிக்கிக் கொண்டு மீண்டு வரத் தெரியாமல் மாட்டிக் கொண்ட அபிமன்யுக்களே அனேகர். 

மனம் எண்ணத்தை உருவாக்கி கற்பனை காணும் ஆற்றலை விகல்பம் என்று யோக மொழியில் கூறுவர். இந்த விகல்ப ஆற்றலே மனதின் ஆராய்ந்து அறிவினை உருவாக்கும் ஆற்றல்; ஆனால் அளவிற்கு மிஞ்சிச் செல்லும் போது அதுவே மனிதனை ஒரு சக்கர வியூகமாக சிக்க வைத்து விடும். இதிலிருந்து மீள அவன் மனதின் மற்றைய ஆற்றலான சங்கல்ப சக்தியைப் பயன்படுத்த வேண்டும். சங்கல்ப சக்தி என்பது விகல்பத்திற்கு எதிரானது. மனதை ஒரு முகப்படுத்தும் ஆற்றல். 

மனமானது எதிர் எதிரான இரண்டு ஆற்றல்களை தன்னிடம் வைத்திருக்கிறது. எப்படி அதிக விகல்பம் கூடாதோ அதே போல் அதிக சங்கல்ப சக்தியுடன் செயற்பட்டாலும் அது நன்மையைத் தராது. 

ஒரு விஷயத்தை ஆழமாக அவதானிக்க, செய்ய நீண்ட சங்கல்ப சக்தி தேவை. இப்படி நீண்ட நேரம் ஒரே எண்ணத்தில் இயங்கினாலும் மனம் சோர்வடைந்து விடும். ஆனால் இப்படி இயங்கும் போது அந்த மனம் பலமுடையதாக இருக்கும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போன்றது சங்கல்ப சக்தியுடைய மனம்.


Saturday, May 23, 2020

தலைப்பு இல்லை

மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் என்ற தலைப்பில் ஐந்து பதிவுகள் இட்டுள்ளேன். 

இவற்றைப் படித்து விட்டு அதைப் படிப்பது உங்களுக்குப் பயனுள்ளதா என்று இங்கு கருத்துப்பகிருங்கள். 

உங்கள் ஆர்வம் கண்டு மேலும் எழுதலாமா இல்லையா என்று யோசிப்போம்!


மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் - 05

கர்ம விதியின் இயக்கம் மனதின் இயக்கத்துடன் தொடர்புடையது. நாம் செய்த கர்மங்களின் ஞாபகங்கள் பதிவுகள் சித்தம் என்ற ஆழ்மனத்தில் பதிவாக அழியாமல் எப்போதும் இருக்கின்றது. 

இந்தப்பதிவுகளின் அடிப்படையிலேயே நாம் எமது அகவுலகத்தை அமைத்துக் கொள்கிறோம். இந்தப் பதிவுகள் எம்மை மீண்டும் மீண்டும் அதே செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும். எமது பழக்கவழக்கங்கள் என்பது சித்தத்தில் பதிவுற்ற ஆழமான பதிவினை நாம் மீண்டும் மீண்டும் எம்மால் கட்டுப்படுத்த முடியாமல் செய்து கொண்டிருக்கும் நிலை! இதனாலேயே பலர் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். 

உள்ளொளியை உணராத மனம் இந்த ஆழமான சித்தப் பதிவுகளில் சிக்கிக் கொண்டு அடிமையாக வாழ்ந்து வருவதில் சந்தோஷம் கொள்ளும். 

ஒரு எண்ணம் தோன்றி அது எம்மைச் செயலில் தள்ளுக்கிறது; முடிவுற்ற செயல் பதிவாக சித்தத்தில் பதிகிறது, இதை யோக மொழியில் சம்ஸ்காரம் என்போம். அடுத்த முறை இந்தப் பதிவு எம்மை குறித்த செயலில் தள்ளும்! 

இதை உதாரணம் மூலம் விளக்குவதானால் சாராயம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவனை அவனது நண்பன் வலிந்து குடி என்று எண்ணத்தைப் புகுத்துகிறான். அதை ஏற்றுக் குடித்தவன் மனதில் இப்போது அது நல்லது என்ற சம்ஸ்காரம் ஆழமாகப் பதிந்தால் அடுத்த முறை நண்பன் அழைக்காமல் தானே சென்று ஊத்திக் கொள்வான்! 

இப்படி எண்ணம் தோன்றுதல், பின்னர் ஆழமாகப் பதிதல், அந்த ஆழமாகப் பதிந்த பதிவு மீண்டும் எமது மனத்தைத் தூண்டி செயலில் ஈடுபடுத்தல், அது இன்னும் ஆழமாக பதிவினை ஏற்படுத்தல், மீண்டும் எண்ணம் தோன்றுதல் என்று வட்டமாகச் சென்று கொண்டிருப்பதை யோக மொழியில் வ்ருத்தி சம்ஸ்கார சக்ரம் என்பார்கள். 

இந்த வ்ருத்தி சமஸ்கார சக்கரமே கர்மவிதியின் அடிப்படைக் கோட்பாடும் ஆகும். 

இதை தடைப்படுத்தி செயல் முறையாக உள் நோக்கிச் சென்று உள்ளொளியை அடைவதையே யோக மார்க்கமும், தெய்வ உபாசனை மார்க்கங்களும் கூறுகின்றன.


மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் - 04

புலன்கள் வழி சென்று தறிகெட்ட மனம் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும், அழித்துக் கொள்ளும் வேலையை தனது நண்பர்களான உணர்ச்சிகள் மூலம் செய்யத் தொடங்கும். 
இப்போது தன்னைத் தானே தாழ்த்திக் கொண்ட வலிமை குன்றிய மனம் உடைய மனிதனாக மாறிவிடும். 
மனதின் செய்து முடிந்த செயல்கள் அனைத்தின் தொகுப்பினைக் குறிக்க "கர்மா" அல்லது கர்மம் என்று சொல்கிறோம். மனதின் சக்தியை அறிந்து கொண்டவன் கர்ம விதியையும் புரிந்துக் கொள்ள ஆரம்பிக்கிறான். 
வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதித்தவன் தினை அறுப்பான் என்ற பழமொழி கர்மவிதியின் சாரத்தைச் சொல்லும் பழமொழி! 
வாழ்க்கை பல்வேறு அனுபவங்களினூடாகச் செல்கிறது; நல்ல அனுபவம் வாய்க்கும் போது அதை அதிஷ்டம் என்றும் தீய அனுபவமாக இருக்கும் போது துரதிஷ்டம் என்றும் கூறுகிறோம். 
உள்ளொளியுடன் தொடர்புபட்ட மனம் கர்மத்தினை ஆற்றும் போது எது சரி எது பிழை என்ற அறத்தின் வழி செயற்பட ஆரம்பிக்கிறது. புலன்கள் வழி மயங்கிய மனம் தாம் செய்யும் செயலே அறம் என்பதாக எண்ணி தன்னை இறுதியில் அழித்துக் கொள்கிறது. 
அறத்தினை அறிந்தமனம் தனக்கு துன்பம் வரும்போது தான் முன்னர் செய்த செயலின் விளைவு தான் இந்தத் துன்பம் என்று காரணம் தெரியும் போது குழம்பாமல் அதை ஏற்று அனுபவித்துக் கடந்து போய்விடுகிறது. அறம் என்னவென்று தெரியாத மனம் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறது. 
கர்ம விதியைப் புரிந்து கொள்ள மனதின் செயல் புரியவேண்டும். அதை அடுத்த பதிவில் பார்ப்போம்!

மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் - 03

பலரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேடியலைகிறார்கள். மகிழ்ச்சி என்பது என்ன என்பதற்கு பலவாறாக வரைவிலக்கணப்படுத்துகிறார்கள். 

மனம் விரும்புவதை அடைதல் மகிழ்ச்சி என்று பொதுவாக வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. ஆனால் மனம் விரும்புவதை அடைந்த பின்னர் எப்போதும் மகிழ்வாக இருப்பதில்லை. மீண்டும் ஏதாவது கவலை தொற்றிக்கொள்ளும். 

மனதின் விருப்பம் எல்லோருக்கும் புலன் வழியான இன்பமாகவே இருக்கும். பலரும் புலன்கள் வழி சென்று தமது ஆற்றலை வீணடிப்பதையே மகிழ்ச்சி என்று நம்புகிறார்கள். கண்கள் வழி காணும் அழகை, காது வழி கேட்கும் இசையை, மூக்கு வழி நுகரும் வாசனையை, நாவின் வழி உணரும் சுவையை என புலன் கள் வழி அனுபவிப்பதையே மகிழ்ச்சி என்று நம்புகிறார்கள். 

ஆனால் புலன்கள் வழியாக அனுபவித்துக் கொண்டிருப்பது யார் என்றால் மனம். வேற்று நாட்டுக்குச் சுற்றுலாப் போனவன் அங்கிருக்கும் அழகைக் கண்டு மயங்கி அது தான் தனது சொந்த நாடு என்று தனது பணத்தை வீணாக்கி நடுத் தெருவில் போவதைப் போன்ற நிலையை மனம் புலன் வழி செல்வதால் அடைகிறது. தனது சொந்த வீடாகிய உள்ளொளியில் இன்பம் காணத் தெரியாததால் புலன்வழி அலைவதை இன்பம் என்று நம்புகிறது. 

தனது சொந்த இயல்பாகிய உள்ளொளி என்ற சுயப் பிரகாசத்தை புலன் வழி இழந்த மனம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கட்டிக் கொள்ளும் கோட்டைகள் தான் பயம், குழப்பம், சந்தேகம், தன்னைத் தானே உயர்வாக எண்ணிக்கொள்ளுதல் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் (emotions); மனம் தனது சொந்த இயல்பினை அறியாததால் தனக்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் பாதுகாப்புக் கவசங்கள் இவை.

மனம் குழம்பியவுடன் உணர்ச்சி வசப்படுவோம். தன்னொளி இழந்த மனம் கட்டிய கோட்டைகள் உணர்ச்சிகள் எனலாம்.


மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் - 02

சென்ற பதிவில் மனதிற்கு சுயப்பிரகாசம் - தன்னொளி இருக்கிறது என்று கூறினோம். இந்தப் பிரகாசமே மனதின் பகுத்தறியும் பாகமாகிய புத்தியை உருவாக்குகிறது என்று யோக சாத்திரம் கூறுகிறது. இந்தப் பிரகாசத்திலிருந்து தோன்றிய மனம் மெதுவாக கள்ளப் புலன்கள் ஐந்துடனும் சேர்ந்து ஆட்டம் போடத் தொடங்கியவுடன் தனது உண்மை ஒளியை இழக்கத் தொடங்குகிறது. தனது உண்மை இயல்பான ஒளித்தன்மையை இழந்து பற்று, வெறுப்பு, குரோதம், பயம் போன்ற உணர்ச்சிகளுடன் சிக்கிக் கொள்கிறது. தற்போது மனம் இவற்றையே தனது இயல்பு என்று நம்பத்தொடங்குகிறது. தனது உண்மையான ஒளி இயல்பினை மறந்து குழம்பி விடுகிறது. 

அதிகமாக புலன்கள் வழி வெளியே சென்று கொண்டிருப்பதால் வெளியிலேதான் மனதின் உண்மைத்தன்மை இருக்கிறது என்று மயங்கி ஓடத் தொடங்குகிறது. இந்தப் போராட்டம் இறுதியில் ஒன்றையும் தராது என்ற உண்மை அறியும் போது அகவயப் பயணம் ஆரம்பமாகிறது. 

மனம் தனது சுயப்பிரகாச ஒளித் தன்மையை இழப்பதற்கு அடிப்படைக் காரணம் புலன்கள் வழி அதிகமாக மனம் செல்வதே!


மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல்

எமது மனம் சுயப்பிரகாசம் உடையது; அதனால் தானே விஷயங்களைப் பிரித்தறிந்து, முடிவெடுத்து, செயலில் தள்ளும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. 

இந்த ஆற்றலால் மனம் பல விஷயங்களை தானே அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதனாலேயே மனிதன் தன் மீது நம்பிக்கை வைக்கக் கூடியதாக இருக்கிறான். புத்தாக்க உணர்வுடன் இருக்கிறான். 

மனம் இப்படி சுயப்பிரகாசமாக இருப்பதால் அதனால் புறவிஷயங்களில் புலன்கள் வழி கவனத்தைச் செலுத்தும் அதே நேரம் அகவழி தன்னைத் தானே அறிந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. 

புறத்தே மனதின் இந்த சுயப்பிரகாசத் தன்மையைச் செலுத்தி அறிவைப் பெறுபவனை விஞ்ஞானி என்றும் அகத்தே செலுத்தி அறிவைப் பெறுபவனை மெய்ஞ்ஞானி என்றும் சொல்லுகிறோம்.


Friday, May 22, 2020

தலைப்பு இல்லை

இன்றைய நாளை சனி மகாத்மியத்தின் சுருக்கத்தைக் கூறி நிறைவு செய்வோம்!
விக்கிரம மகாராஜாவின் சபையிலே நவக்கிரகங்களை உபாசிக்கும் எட்டுப் பண்டிதர்கள் இருந்தார்கள். இவர்களிடையே எந்தக் கிரகம் உயர்ந்தது என்று "விவாதம்" வைத்தான் விக்கிரம மகாராஜன். யார் உயர்ந்தவர் என்ற வாதமே அகம் பாவத்தின் தன்மை தானே! 
அந்த விவாத முடிவில் சனியே உயர்ந்தவர் என்று வாதிட்ட பண்டிதரை விக்கிரம மகாராஜா அவமானப்படுத்துகிறார். இந்த விவாதம் முடியும் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது. அப்போது சனிபகவான் ஒரு அந்தணனாக வந்து எப்படி சனியின் பார்வையிலிருந்து தப்புவது என்று கூற அதையும் அகம் பாவத்துடன் கர்மத்தின் வழி எல்லாம் நடக்கும் எனக்கு இப்படி திருப்திப்படுத்த எல்லாம் இயலாது என்று மீண்டும் அகம்பாவத்துடன் நடக்கிறான், பின்னர் இந்த அகம்பாவத்தின் விலையாக ஏழரை வருடங்கள் என்ன பாடுபட்டான் என்பது மீதிக் கதை! 
கதையின் இறுதியில் சனீச்சரன் தான் பாதிப்பவர்கள் யார் என்பதை தெளிவாகக் கூறுகிறார். 
அகம்பாவம், ஆணவம், அகந்தையுடன் செயற்படுபவர்கள் எவராக இருந்தாலும் தனது குருவாக இருந்தாலும் அதை உடைத் தெறிவது தான் தனது வேலை என்று கூறுகிறார். 
ஆனால் சிவன் தனது ஏழரைச் சனியிலிருந்து ஏழரை வருடங்கள் கங்கைக் கரையில் ஆழ்ந்த தியான சமாதியில் ஆழ்ந்து விடுவதன் மூலம் எந்தப் பாதிப்பும் இல்லாமல் தப்புகிறார் என்ற செய்தியைத் தருகிறது! 
இதன் மூலம் சனி ராசிக்கு முன், இராசியில், இராசிக்கு அடுத்து வரும் ஏழரை வருடங்கள் ஒருவன் தனது ஆணவம், அகந்தை, அகங்காரம் ஆகியவற்றை நீக்கி சாதனைக்கு உகந்த காலம் என்பதை இந்த நூல் கோடிட்டுக் காட்டுகிறது. 
மனமது செம்மையானால் நாளும் கோளும் நன்மையே செய்யும் என்ற உண்மை அறிந்தால் என்றும் நலமே!

தலைப்பு இல்லை

இன்றைய நூல் அறிமுகம்! 

இன்று சனீஸ்வர ஜெயந்தி! வைகாசி அமாவாசை

சனியைகண்டு பயப்படாதவர்கள் இல்லை! 

ஆகவே சனி மகாத்மியம் 

மேற்கத்தேய முதலாவது ஆயுர்வேதப்பட்டதாரியும் விமலானந்தா என்ற தாந்திரீக யோகியிடம் குருமுறையாக பயின்ற ராபர்ட் ஸ்வபோடா வின் சனி மகாத்மியம் என்ற இந்த நூல் அருமையான நூல்!

கதைகளை எப்படி உளவியல் மருந்தாகப் பயன்படுத்தலாம் என்ற அவரது விளக்கம் அருமையானது! 

கதைகள் மூலம் உணர்ச்சித் தூய்மையடைகிறோம். இது எம்முள் ஆழமாக இருக்கும் உணர்ச்சிச் சிக்கல்களை நீக்கி எம்மை மேன்மைப்படுத்துகிறது என்ற நுட்பத்தை விளக்குகிறது. 

அவர் ஒரு சாதகராக இருந்து கொண்டு ஜோதிடத்தை விளக்கும் விதம் அருமையானது! சனீச்சரனைப் பற்றி இட்டுக்கட்டி பயமுறுத்தியதை கிரகங்களின் வேலை ஜோதிடத்தில் என்ன என்பதைப் பற்றி விளக்குகிறது. 

இந்தக்கதை விக்கிரமாதித்திய மன்னனின் அவையிலுள்ள பண்டிதர்களிடம் நடைபெற்ற "எந்தக்கிரகம் உயர்ந்தது?" என்ற வாதத்தினைக் கூறுகிறது. 

ஏழரைச் சனிகாலத்தில் படிப்பதற்கு உகந்த நூல் எனக்கூறுகிறார். 

இந்த நூலை கண்ணதாசன் பதிப்பகம் தமிழில் சனிபகவானின் பெருமை என்று மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறது.


Thursday, May 21, 2020

தலைப்பு இல்லை

நேற்றைய நாள் முழுவதும் முக நூலில், வாட்ஸப்பில், தொலைபேசியில், குறுஞ் செய்தியில் என பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த அன்புள்ளங்கள் அனைவரிற்கும் எனது இதயப் பூர்வமான நன்றிகளும் அன்பும்!    
வாழ்வில் கொண்டாடுவதும், திண்டாடுவதும் ஆக இரண்டும் மாறிக்கொண்டிருப்பது! கொண்டாட்டம் என்று வந்தால் பிறகு திண்டாட்டமும் வரும் என்பது உலக சுழற்சியின் நியதி! 
மனதைச் சமநிலையாக வைத்துக் கொண்டு எம்மைச் சூழ உள்ளவர்கள் மனதை மகிழ்விக்கும் செயலாக கொண்டாட்டம் இருக்கலாம் என்பது சரியாக இருக்கலாம்! 
விளையாட்டாக விமலாதித்தனிடம் உங்கள் பிறந்த நாள் வெகுமதியாக எனக்குத் தரவேண்டியதற்கும், நீங்கள் எனக்குத் தரவேண்டிய பிறந்த நாள் பரிசிற்காகவும் இல்லற யோகம் நூலை மெய்ப்பு பார்த்து நூலாக்குங்கள் என்று கேட்க அதை ஏதோ ஒரு உத்வேகம் வைத்துக் கொண்டு செய்து தந்துவிட்டார்! 
எமது எழுத்துக்களும் செயலும் மற்றவர்களுக்கு ஆனந்தமும், அமைதியும் முக்கியமாக தெளிவும் தரவேண்டும்! எழுதுவது என்னிடமுள்ள அறிவினை பகிர்ந்து கொள்வதற்காகவே! அறிவு ஒளி மிகுந்தது! தன்னைச் சூழ உள்ளவர்களுக்கும் வழிகாட்டும்! 
எனது குருநாதர் "Share the knowledge with All" என்று கூறினார்; இதை எப்படிச் செய்வது என்று தெரிவில்லை ஒன்பது பத்து வருடங்களுக்கு முன்னர் வலைத் தளமாகத் தொடங்கி, தெரிந்தவற்றை எழுதினேன்! நூலாக உருப்பெற்று எழுத்து அனேக சொந்தங்களைப் பெற்றுத்தந்தது! 
பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு "குறைவாகப் பெறு; அதிகமாகக் கொடு" என்று கூறியபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாழ்க்கை இனிமையானது! எம்மிடம் உபரியாக இருக்கும் எதுவும் எமக்கானதல்ல! மற்றவர்களுக்கு கொடுக்க நம்மிடம் தரப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் வேண்டும் என்றார்! 
அனேகர் வழிகாட்டல் பெற்றார்கள்; பயன் பெற்றார்கள்; அதனால் அன்பு மிகுதியால் என்னை குரு என்கிறார்கள்; அதற்குரிய தகுதி என்னிடம் இருக்கிறாதா என்பதை நான் தினமும் ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறேன்! நான் எவருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை! எனது குருவிற்கு நல்ல சீடனாக எப்போதும் இருக்கவே விரும்புகிறேன்! அது இலகுவானது! இன்பமானது! குரு என்ற தத்துவம் அறியாது ஒருவரைப் பார்த்து குரு என்று விளிப்பதும், தகுதி அற்றவர் மற்றவர்களுக்கு நான் குரு என்று எண்ணுவதும் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழி விழுமாறே என்ற நிலை வந்து விடக்கூடாது; இந்த எண்ணங்கள் வீண் அகங்காரத்தையும், ஜம்பத்தையும் கூட்டி குழிபறிக்கும். எவருக்காவது குருவாக நான் தெரிந்தால், அவர்களை அந்த எண்ணம் முன்னேற்றுகிறது என்றால் அது அவர்களுக்கு நல்லது! ஆனால் அதை என் தலையில் ஏற்றிக் கனமாகக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்! 
வாழ்க்கையில் எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற உத்வேகத்தில் செயலாற்றுவதால் அனேகர் என்னைத் தொடர்பு கொண்டாலும், கொள்ள விரும்பினாலும் தட்டச்சு செய்திகளை தவிர அனேகரிடம் உரையாட முடியாத தொழில் வாழ்க்கைச் சூழலில் வாழ்கிறேன்! என்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் செலவழிக்கக்கூடிய நேரத்தினை நான் பெற்றிருக்கவில்லை என்பதைத் தவிர வேறு எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது! 
மீண்டும் அனைவருக்கும் உளப்பூர்வ அன்பும் நன்றிகளும்!

Wednesday, May 20, 2020

தலைப்பு இல்லை

இன்று எனது உடல் பிறந்த நாள்! 

நான் மொத்தமாக 50 - 70 ட்ரில்லியன் கலங்களால் ஆக்கப்பட்ட உடலைக் கொண்டவன்! 

உடல் ஆக்கப்பட்ட கலங்கள் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு ஆயுள் காலத்தைக் கொண்டது.

எனது செங்குறுதி சிறுதுணிக்கை நான்கு மாத வயதைக் கொண்டிருக்கிறது! 

வெண்குறுதி சிறுதுணிக்கைக்கு ஒரு வயது! 

தோற்கலங்கள் ஒரிரு வாரங்கள்

எனது உடலின் அனைத்துப் பாகங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் எனது வயது என்னவென்று புரியவில்லை! 

இன்னும் ஆழமாகச் சென்றால் நான் அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறேன்! இந்த ஒவ்வொரு அணுவும் பிரபஞ்சம் பெருவெடிப்பில் தோன்றிய ஆதி வஸ்து! 

ஆக நான் பிரபஞ்சத்தின் ஆதியிலிருந்த அணுக்கள் சேர்ந்த புதுவடிவம்? 

ஆக எனது வயது உண்மையில் என்ன? 

வாழ்க்கை என்பது என்ன?

அசத்தியத்தில் இருந்து உண்மை நோக்கிய பயணம்!

இருளிலிருந்து ஒளியை நோக்கிய பயணம்!

மரணத்திலிருந்து அமரத்துவம் நோக்கிய பயணம்! 

பயணத்தின் நடுவே சிறுவிளையாட்டு இந்த உலகம்! 


Tuesday, May 19, 2020

இல்லற யோகம்

இல்லற வாழ்க்கையினை  இனிமையாக வாழ எப்படி யோகம் துணை புரியும் என்ற அரிய உளவியல் நூல்! 

மனப்பாங்கினை கட்டமைத்தல், மற்றவர்களை எப்படிப் புரிந்து கொள்ளுதல், பிரச்சனைகளை எப்படிக் கையாளுவது போன்ற அறிவுரைகளைத் தருகிறது. 

திருமணம் முடித்தவர்களுக்கு மட்டும் அல்ல! மனதினை நல்லாரோக்கியமாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கானது! 

நவீன உளவியல், மற்றும் பண்டைய யோக விஞ்ஞான அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் சிறிய அரிய நூல்! 

ஒரு தடவை படித்தால் வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதலைப் பெறுவீர்கள்! 

இந்தப் பணியில் தமிழிற்குக் கொண்டு வருவதற்கு நான் வெறும் கருவி மாத்திரமே! 

கீழ்வரும் தளத்தில் இலவசமாக PDF ஆக தரவிறக்கிக் கொள்ளலாம். 

https://www.instamojo.com/SVVSPublications/--687a4/


Monday, May 18, 2020

தலைப்பு இல்லை

Ashoka the Great, was an Indian emperor of the Maurya Dynasty, who ruled almost all of the Indian subcontinent from c. 268 to 232 BCE. Ashoka promoted the spread of Buddhism across ancient Asia. We Sri Lanka received Great Nobel truths from his son Arahath Mahinda Thero. 
Edict 13 on the Edicts of Ashoka Rock Inscriptions says; 
"His Majesty felt remorse on account of the conquest of Kalinga because, during the subjugation of a previously unconquered country, slaughter, death, and taking away captive of the people necessarily occur, whereas His Majesty feels profound sorrow and regret." 
After the Kalinga War and Ashoka’s conversion to Buddhism, the Empire experienced nearly half a century of peace and security. Mauryan India also enjoyed an era of social harmony, religious transformation, and expansion of the sciences and of knowledge.
Because of the noble truths of Buddhism; 
Will Sri Lanka become similar as post Kalinga war Ashoka's empire; as era of social harmony, religious transformation, and expansion of the sciences and of knowledge?
This is our hope His Excellency!

Sunday, May 17, 2020

தலைப்பு இல்லை

Facebook இன் நினைவுபடுத்தலில் இருந்து!
Shambala - Oasis of light இந்த நூலை எழுதிய ஆண்ட்ரூ தோமஸ் கண்ணைய யோகியாரிடமும் ஆன்ம வித்தை பயின்றவர்!
இவர் கண்ணைய யோகியாரை சந்தித்த நாளும், எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் கண்ணைய யோகியாரைச் சந்தித்ததும் ஒரே நாளில்! இதுபற்றிய சுவாரசிய சம்பவத்தை பிறகொரு நாளில் எழுதுவேன்.
சம்பளா என்பது புவிக்குப் பேருணர்வு தரும் ஒளி நிறைந்த ஆன்மாக்களின் இடம். திபேத்திய மொழியில் சம்பளா, இந்திய ரிஷிகளின் இதனை சித்தாஸ்ரமம் என்றும், சீன ஞானிகள் ஷங்கிரிலா என்றும் குறிப்பிடுவார்கள்.
எமது பூமி தோன்றிய நாள் முதற் கொண்டு உருவாக்கப்பட்ட எண்ணங்கள் அனைத்தும் ஒன்றுகூட அழியாமல் பூமியைச் சூழ ஒரு காந்தப்புலம் போல் நிறைந்திருக்கிறது. இந்த எண்ணங்களை நல்லவை, கெட்டவை என்று பிரித்தால் இவற்றின் விகித சமனிற்கு ஏற்ப பூமியின் பரிணாமம் இருக்கும் என்பது சம்பளாவின் அடிப்படை விதி. 
தீய அழிவு எண்ணங்களை சமப்படுத்தும் நல்லெண்ணங்களை உருவாக்குவதன் மூலமே பூமியையும் மனித குலத்தையும் காப்பாற்ற முடியும் என்பது சம்பளா யோகிகளின் கருத்து.
மனித குலத்தின் நன்மை தீமைகள் என்பது மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து எண்ணும் ஒட்டு மொத்த எண்ணங்களின் கூட்டு விளைவு.
எண்ணத்தை உயர்த்தும் செயலால் மட்டுமே மனித குலம் உய்ய முடியும்!

அண்டவெளி தந்த COVID-19

அண்ட உயிரியலில் (Astro-biology) ஒரு கருதுகோள் (Hypothesis) இருக்கிறது, இதை Panspermia என்று கூறுவார்கள். Pan என்றால் "எல்லாம்" Spermia என்றால் விதை என்று கிரேக்க மொழியில் பொருள். இந்த பிரபஞ்சத்தின் அனைத்து மூலைகளுக்கும் அண்டத்துகள்கள் மூலம் உயிரினத்தின் கூறுகள் (மூலங்கள்/விதைகள்) கடத்தப்படுகிறது என்பதுதான் அது! 
இந்தக் கருதுகோளை சந்திரா விக்கிரமசிங்க என்ற இலங்கை விஞ்ஞானி Fred Hoyle விஞ்ஞானியுடன் 1974 இல் முன்வைத்தனர்!
அண்டவெளியில் பரவும் இந்தத் துணிக்கைகள் விண்கற்களின் மூலம் பூமிக்கு வருவதாகவும் பூமியின் கொள்ளை நோய்கள் இத்தகைய விண்கற்கள் விழுந்த பின்னர் உருவாகுவதாகவும் ஆராய்ந்து அனேக நூல்களை எழுதியிருக்கிறார். 
COVID-19 என்பது 11 October 2019 அன்று சீனாவின் Jilin Province இல் உள்ள Sonjyan City இல் விழுந்த விண்கல்லில் வந்த உயிர்கொல்லி வைரசு என்று கூறுகிறார். இந்த விண்கல் வான மண்டலத்தில் பரவியதால் ஏற்பட்ட வைரசு நச்சுத்தான் உலகெங்கும் இவ்வளவு துரிதமாக இது பரவ காரணம் என்கிறார். இந்த விண்கல்லின் தாக்கம் நிறைந்த நகரங்களே அதிக மரணத்தைச் சந்தித்தது என்கிறார். 
Panspermia என்பது சோக்கிரடீஸுக்கு முன்னைய அநக்ஸகோரஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி (கி.மு 05) அண்டவெளியில் இருந்துதான் உயிர்களுக்கான மூலம் பூமியையும், அண்டத்தின் மற்றைய பகுதிகளையும் வந்தடைகிறது என்று கூறிய கருதுகோள் விக்கிரமசிங்கவும் அவருடைய ஆய்வு மேற்பார்வையாளராலும் 1972 இல் விண்கற்களில் காணப்பட்ட சேதனப்பதார்த்தங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. 
புராணங்கள் இத்தகைய நூற்றுக்கணக்கான அண்டங்கள், அவற்றிலுள்ள மனிதர்களை விட மேம்பட்ட தேவர்களின் பூமியின் வருகை பற்றிக்குறிப்பிடுகிறது. 
நவீன Panspermia நுண்ணியிரிகளையும், வைரசுகளையும் பற்றி ஆராய்கிறது. ஆனால் புராணங்கள் அனேக higher intelligence உயிரினங்களைப் பற்றிப் பேசுகிறது. 
ஆகவே எல்லாவற்றையும் ஏளனமாகவும், கேலியாகவும் அறிவிலிகள் பார்த்துக்கொண்டிருக்க, உண்மை அறிவியல் பயின்றவர்கள் பழைய கதைகளில் சாத்தியங்கள் இருக்கலாம் என்று அறிவைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Saturday, May 16, 2020

தலைப்பு இல்லை

ஒவ்வொரு வாரமும் தினகரனில் மொழி பெயர்த்து எழுதிய தொடரை தொகுத்து நூலாக தம்பி Vimalathithan Vimalanathan வரும் மே 20ம் திகதி மின்னூலாக வெளியிடுகிறார். 

இந்தத் தொடர் முழுமை பெற பிரசுரித்த தினகரன் சைவ மஞ்சரிப் பொறுப்பாசிரியர் Easwara Lingam ஐயா அவர்களுக்கு நன்றிகள்! 

நூல் படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி அனுப்புங்கள்: svvspublications@gmail.com

PDF பிரதி அனுப்பி வைக்கப்படும்! 

இந்த நூலை மொழி பெயர்த்து தனக்குத் தரும்படி ஆரம்பத்திலிருந்து விடாது துரத்திய தம்பி Jayaseelan Matheswaran அவர்களையும் இந்த நூல் வெளியிடும் சந்தர்ப்பத்தில் நினைவுகொள்ள வேண்டும்.


இன்று உலக இல்லற தினம் - International Day of Families

குடும்பம் என்பதை விட இல்லறம் என்பது சரியான சொல்! இல்லத்தில் அறம் இருந்தால் இல்லறம்! 
இல்வாழ்க்கை என்பது என்னவென்று வள்ளுவர் கூறுகிறார். 
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
இல்வாழ்வான் என்பவன் அறத்தின் வழி நிற்கும் இயல்புடைய அந்த மூவருக்கும் நல்ல செயல்களைச் செய்யத் துணை நிற்பவன் என்று வரையறுக்கிறார். இல்லறத்தான் துணை நிற்க வேண்டிய அந்த மூவர் யார்? 
மணக்குடவர், பரிமேலழகர் ஆகிய பழைய உரையாசிரியர்கள் அந்தக் காலத்து சமூக நிலையில் தனிமனித வாழ்க்கை நிலை வீடுபேற்றை இலக்காகக் கொண்ட நான்காக இருப்பதால்;
1)   பிரம்மச்சரியம் - அறவழியில் நின்று கல்வி கற்பவன்
2) இல்லறம் - மனைவி பிள்ளைகளுடன் அறவழியில் பொருளீட்டி அந்தப் பொருளை அறவழியில் செலவழிப்பவன், 
3) வானப்பிரஸ்தம் - இல்லறப்பொறுப்பிலிருந்து வெளிவந்து அறவழியில் தன்னை வீடு பேற்றினை நோக்கிச் செல்ல தயார்படுத்தலில் உள்ளவர்கள்.
4) துறவு - உலகப்பொறுப்புகள், பற்றுகளிலிருந்து விடுபட்டு அகவாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள். இவர்கள் அகத்தினை முன்னேற்றுவது சமூகத்தினை வழி நடத்துவதற்கான சமூகப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு! இதை வெறுமனே பொறுப்புகளை விட்டு விட்டு ஓடுவது என்று எண்ணக்கூடாது. தனது குடும்பத்திற்காக உழைத்தவன் உலகமே தன் குடும்பம் என்ற பார்வையை விரித்துகொண்டு தனது அகத்தில் இருந்து நிலைபெற்று சமூகத்தை வழி நடாத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுதல் என்று கொள்ளலாம்.
இதில் இல்லறத்திலுள்ளவர்களே மற்றைய மூன்று நிலைகளிலும் அறங்களை பாதுகாத்து வாழ்பவர்களுக்குரிய வசதிகளைச் செய்ய வேண்டியது என்பதை இந்தக் குறள் குறிக்கிறது என்று உரை கொள்ளுகிறார்கள்! 
ஆனால் சமூகம் நாற்புருடார்த்தங்களில் இறுதி இலக்காக வீடுபேறு இருக்கும் சமூகத்திற்கு பங்களிக்கும் அலகாக குடும்பம் இருக்கும் போது இது சரியான வியாக்கியானம் தான்! ஆனால் குடும்பம் என்பது தானும், தன் குடும்பத்தவர்களும் நலமாக வாழ இருக்கும் ஒரு தொகுதி என்ற என்ற சிறிய வட்டமாக இருந்தால் கருணாநிதி முதலானவர்கள் உரை கண்டது போல் பெற்றோர், துணைவி, மக்கள் என்ற சிறிய வட்டமாக இருக்கும்! 
இந்த பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என்ற சிறிய வட்டத்தில் தனது மனதைப் விரித்து தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதைத் தாண்டி மற்றவர்களுக்காகவும் தனது வாழ்க்கை என்று மனதைப் பயிற்றுவித்து அனுபவம் பெற்றவன் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவனையும் தனது குடும்பத்தவர்கள் என்று உலகமே ஒரு குடும்பம் என்ற உணர்வு பெறுதலே வாழ்க்கை! துறத்தல் என்பது மேலானதைப் பெறுவதற்கு கீழான பொறுப்புகளை விட்டுவிடுதல் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். 
ஆகவே வள்ளுவர் எல்லாக்காலத்திற்கும் வழிகாட்டக் கூடிய செழுமையான ஞானி என்பதற்கு இந்தக் குறளின் பொருள் கோடலே நற்சான்று! 
{காலையில் இந்தக்குறளை சிந்திக்கத் தூண்டிய Reshzan Thayaparan & Hari Arul ஆகிய இருவருக்கும் நன்றி}

Thursday, May 14, 2020

மகாபாரதமும் வாழ்க்கையும்

கதைகள் மனதிற்கு எம்மைச் சூழ நடப்பவற்றைப் புரிந்து கொள்ள இருக்கும் மாதிரியுருக்கள் (Metaphors). 
கதை சொல்லுதலும், கேட்டலும் ஒரு இன்பமான அனுபவம்! கொரோனா தொடக்கிய நற்செயல்களில் ஒன்று வீட்டில் மகளிற்கு கதை சொல்லுதல்! இது சித்தப்பாவிற்கு தினசரி சிறப்புக் கடமை! சித்தப்பா இல்லையென்றால் எமது கடமையாக்கப்படும்! 
மகாபாரதத்தை விஞ்சிய கதை எதுவும் இருக்க முடியாது; நடந்து முடிந்தது, நடக்கப்போவது அனைத்தையும் தொகுத்து எழுதப்பட்டது தான் மகாபாரதம்!
இது இப்படி நடந்தது என்று கூறுவது இதிகாசம்! மகாபாரதம் இதிகாசம்! 
அம்ருதவர்ஷினியின் கதை கேட்கும் படலத்திற்கு தேர்ந்தெடுத்த நூல் மகாபாரதம்! இதில் நான் சொல்ல வேண்டி வந்த கதை யுதிஷ்ரரின் துயரம், இந்திர லோகத்திற்குச் சென்ற அர்ஜுனனை எண்ணி யுதிஷ்டிரர் வீணாக கவலைப்பட்டுக் கொண்டிருக்க தௌம்ய முனிவர் வந்து அவரைத் தேற்றி வீணாக கவலைப்படாமல் இந்தக் காலப்பகுதியை அர்ஜுனன் பல்வேறு கலைகளை பயில பயன்படுத்துகிறான், நீங்கள் புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று தபஸ் செய்யுங்கள் என்று வழிகாட்டுகிறார். அதன் படி யுதிஷ்டிரர் 12 நாட்கள் தபஸ் செய்து கிருஷ்ணனின் தரிசனம் பெறுகிறார். 
இந்தக்கதை முடிந்தவுடன் கதைக்குரிய நீதி என்னவென்பதை விளக்க வேண்டுமல்லவா? 
எமது அன்புக்குரியவர்கள் எம்மை விட்டுப்பிரிந்து சென்றால் அவர்களை எண்ணிக் கவலைப்படுவதை விடுத்து அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் அதேவேளை நாம் எம்மை முன்னேற்றிக்கொள்ளத் தேவையான பயிற்சிகளை, முயற்சிகளை செய்துகொண்டிருக்க வேண்டும், வீணாக கவலைப்படுவது சக்தியை விரயம் செய்யும் பயனற்ற செயல் என்பதுதான்! 
மகாபாரதம் பாரதத்தின் சமூக மனதைக் கட்டமைக்கும் கதைக்களஞ்சியம்!

Tuesday, May 12, 2020

ஆவிகளும் பூர்வ ஜென்மங்களும்

இன்றைய நூல் அறிமுகம் ஒரு சுவாரசியமான விஷயம். நான் இளைமைக்காலத்தில் (தற்போதும் இளமைதான்  ) யோக சாதனைக்காக ஆர்வம் கொண்ட பொழுது தொற்றிக் கொண்ட ஒரு ஆர்வம் தான் ஆவிகள், ஆவியுலகம், பூர்வஜென்மம் என்பவை! 
கரம்போர்ட் ஒன்றினை எடுத்து அதில் A,B,C, D.............Z வரை எழுதி எண்களையும் எழுதி கொண்டு  நடுவில் அசையக் கூடிய குவளையை வைத்து அதில் கை விரலை வைத்து ஆவிகளை அழைத்துப் பேசும் முறையினை கைக்கொண்டு முயற்சித்து, அந்தக் குவளை அசைந்த அனுபவம் இருக்கிறது. 
பின்னர் குருநாதரின் சித்த யோகப் பயிற்சிப் பாடங்கள் படிக்கும் போது ஆவியுலகத் தொடர்பு என்று படிக்கும் போது நான் அதீத ஆர்வம் காட்ட "சாதனையின் இலக்கு பரம்பொருளை நோக்கி இருக்க வேண்டும், ஆவியுலகத்தில் எல்லாம் சென்று மாட்டிக் கொள்ளக் கூடாதப்பா!" என்று சொன்ன வார்த்தையுடன் வெட்டென மறந்ததுதான்! இன்று வரை ஆவிகள் இருக்கிறதா என்ற சிந்தனை வந்ததும் இல்லை! 
இப்போது தெரிந்தது அம்மா புட்டுப் பானை வைக்கும் போது வரும் ஆவி தான்! 
இந்த நூல் வாசிப்புக்கு எனக்குப் பிடித்திருந்த காரணம்; சுவாரசியமான எழுத்து நடையும்; பூர்வ ஜென்மத்தின் கர்ம பலன்கள் அடுத்த பிறப்பில் என்ன செய்விக்கிறது என்ற தொடர்பினை விளக்கும் உதாரணங்கள்! 
ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல பரிந்துரை 
{புத்தகம் எங்கு வாங்கலாம் என்பதை Google இடம் கேளுங்கள், PDF என்னிடம் இல்லை}

Monday, May 11, 2020

மனமும் மந்திரமும்

காயத்ரி மந்திரம் என்பது பல இலட்சம் மக்களின் பிரார்த்தனையாக பல்லாயிரம் வருடங்களாக இருக்கிறது. 

இந்த மந்திரம் தன்னுள் ஒவ்வொரு அக்ஷரத்திற்கும், ஒவ்வொரு பதத்திற்கும், ஒவ்வொரு சப்தமும் எப்படி எமது உணர்வில் (consciousnesses) இல் மாற்றத்தை உண்டுபண்ணும் என்ற விளக்கம் இருக்கிறது. 

சாதகன் தனது சாதனையின் ஆழத்தில் செல்லச் செல்ல பெறும் அனுபவங்கள், குணமாற்றங்கள் ஸ்ம்ருதி, ஹ்ருத்யம் போன்றவற்றில் விளக்கப்பட்டிருக்கிறது! 

மந்திர சாதனையின் அடிப்படை மூளையில் ஏற்படும் பிராணனை வீணாக்கும் தேவையற்ற எண்ணங்களை நீக்கி பிராணனை ஈர்க்கும் மந்திர எண்ண அலைகளாக மாற்றீடு செய்விப்பதாகும்!

இப்படி எமது தேவையில்லாத எண்ணங்கள் குறைக்கப்படுவதால் மனம் தனது இயல்பினால் அடிக்கடி அலைவதன் மூலம் வீணாகும் பிராண சக்தி சேமிக்கப்படுவதால் மந்திரங்கள் மனதைக் காக்கின்றன! 

நம் குருநாதரின் காயத்ரி உபாசனை பாடத்திட்டம்!! 


Sunday, May 10, 2020

மனதின் ஆற்றலை வெளிப்படுத்தும் சிவசங்கல்ப சூக்தம்

இன்றைய நூல் அறிமுகம்  : சிவசங்கல்ப சூக்தம் 
சிவசங்கல்ப சூக்தம் என்பது சுக்ல யஜுர் வேதத்தில் காணப்படும் ஆறு மந்திரங்கள்!
இந்த ஆறு மந்திரங்களின் பொருள் மனம் பற்றிய மிகப்பெரிய உளவியவியல் மனவியல் உண்மைகளைக் கூறுவது.
"மனமே சிவமான மங்களகர எண்ணத்தைக் கொண்டிரு" என்று மனதிற்கு உறுதி சங்கல்பம் கூறும் மந்திரங்கள் இவை.
மனமானது அதீத சக்தியுள்ளது. இது எல்லையற்ற சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் அடைய வழிகாட்டுவது. இது தன்னை உறுதியாக ஒன்றில் ஈடுபடுத்திக்கொள்ள சங்கல்ப சக்தி இருக்க வேண்டும். அந்த சங்கல்ப சக்தி மங்களகரமானதின் மேல் இருக்க வேண்டும்.
சுவாமி தேஜோமயாந்தரின் உரையுடன் கூடிய சிறிய புத்தகம்; மனதின் இயல்புகள் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல வாசிப்பு!
தன்மே மனஹ சிவசங்கல்ப மஸ்து

Saturday, May 09, 2020

தலைப்பு இல்லை

சங்ககாலத்து மலர் வெட்சி!

ஔவையார் அதியமானைப் பார்த்துப் பாடுகிறார்;

கையது வேலே காலன புனைகழல்; மெய்யது வியரே, மிடற்றது பசும்புண், வட்கர் போகிய வளரிளம் போந்தை உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு, வெட்சி மாமலர், வேங்கையொடு விரைஇச் 

சுரி இரும் பித்தை பொலியச் சூடி, வரி வயம் பொருத வயக்களிறு போல, இன்னும் மாறாது சினனே, அன்னோ! உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றி யோரே, செறுவர் நோக்கிய கண், தன் 

சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே!

வெட்சி மாமலர் சூடியவனாக!

சங்க காலத்தில் எதிரி நாட்டுடன் போர் புரிய விரும்புவதை சூசகமாக தெரிவிக்க அந்த நாட்டு பசுக்களை கவர்ந்து வருவர், அப்போது வெட்சி பூவை சூடிச்செல்வர்.

நான் முக நூலில் வெட்சிப் பூ சூடுவதால் எந்த ஆ நிரையையும் கவருவதற்கான சூசகம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது!  


Friday, May 08, 2020

தலைப்பு இல்லை

இயற்கை வேளாண் தத்துவவியலாளர் Masanobu Fukuoka இப்படிக் கூறுகிறார்! 
"There is nothing in this world. No matter what humans try to do, they can never achieve anything. Every thought we have and every action we take is unnecessary." This was the birth of Fukuoka's philosophy, "the theory of uselessness of human knowledge," or the theory of "mu" (nothingness).
இயற்கையை சீரமைக்க எவரும் திட்டங்கள் போட்டு ஆணிகள் பிடுங்கத் தேவையில்லை, வெறுமனே வீட்டில் ஒரு மாதம் ஒடுங்கி இருந்தால் போதும் என்பதற்கு இந்த காலி முகத்திடலே சாட்சி! 
மனிதன் கால் பட்டால் புல்லும் வளராத விஷத்தன்மை உள்ளவன் என்பதை அறிய இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்! 
கொழும்பு பல்கலைக்கழக சூழலியலாளர்கள் இந்த ecological succession இனை ஆராய்ந்தால் இந்த ஒரு மாதத்தில் எவ்வளவு உயிர்ப்பல்வகைமை உருவாகியிருக்கிறது என்பதை அறியலாம்! 
பாலைவனமாக இருக்கும் ஒரு கல், மண்தொகுதி தான் ஒரு உயிர்ச் சூழலாக மாறுவதற்குரிய முதல் படி (Primary succession) இந்த புற்றரை உருவாக்கம்! 
இதுவே சூழல் உயிருடன் தன்னைப் புதுப்பித்தல்!
Thank you very much Giritharan Sooriyan FM and Vaamalosanan Loshan Ragupathy Balasridharan for sharing wonderful images to us!

தலைப்பு இல்லை

மலர் கொஞ்சும் மாத்தளையின் அழகு!

இன்று காலை!


சாதனை முன்னேற்றம்

அன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம்.
காயத்ரி சாதனா குரு அகத்தியர் சாதனா தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது பயணங்கள் தொடர்கிறது. ஆரம்பத்தில் நீங்கள் 27 தடவைகள் செய்ய சொன்னீர்கள் ஆரம்பத்தில் 27ம் மிக கஷ்டமாக இருந்தது அடுத்து மாலையை அதாவது 108 செய்ய சொன்னீர்கள் அப்போது 108 செய்யத் துவங்கும்போது அந்த 27 மிக இலகுவாக இருந்தது நவராத்திரி நாட்களில் 10 மாலை சொன்னீர்கள் பத்துமாலை செய்யும்போது இந்த 108 மாலை வந்து இலகுவாக இருந்தது லகு அனுஷ்டானம் என்று 27 மாலை சொன்னீர்கள் 10மிக மிக இலகுவாக இருந்து. ஆரம்பத்தில் சாதனை செய்யும் போது குறிப்பிட்ட நேரத்தில் செய்வதற்கு என்னுடைய நேரமும்,மனமும், வேலைப்பளுவின் காரணமாக மிக சிரமத்தில் இருந்தோம் மீண்டும் ஒரு மூன்று மாதம் செய்யத் தொடங்கும்போது இயற்கையாகவே எங்களுக்கு ஒரு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது இவற்றுக்கான காரணம் என்ன அண்ணா காயத்ரி தேவியின் அருளா சாதனையின் ஒரு படிநிலை உயர்வா அவ்வாறு இது நிகழ்ந்தது தயவு செய்து சொல்லவும்!

இதற்குரிய அறிவியல் காரணம் நாம் புதிதாக ஒரு விஷயத்தைச் செய்யும் போது அந்த அனுபவம் மூளையில் தனக்குரிய பாதையை புதிதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு குறித்தளவு காலம் மனம் குறித்த விஷயத்தில் பழகியிருக்க வேண்டும். இந்தக்காலப்பகுதியில் மூளைக்கு அழுத்தம் கொடுக்காமல் மெதுவாகத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
உதாரணமாக 27 தடவை தினசரி 45 நாட்கள் ஜெபம் செய்வதை முதலாவது வாகனம் ஓட்டும் வகுப்பிற்குச் செல்வதை உதாரணமாகக் கொள்ளுனகள், இப்போது உங்களுக்கு steering, break, clutch balance, mirror ஆகியவற்றுடன் பரிட்சையமான நிலை உருவாகியிருக்கும், இதுவே முதலில் 45 நாட்கள் தொடர்ச்சியாகச் செய்யுங்கள் என்று சொல்வதன் காரணம்! இந்த நாற்பத்து ஐந்து நாட்களுக்குள் மனம் ஒன்றி உங்கள் மூளை சாதனையின் அங்கங்களை விரும்பினால் இனி நீங்கள் வேகத்தை அதிகரிக்க accelerator இனை அழுத்தலாம். ஆகவே அடுத்த 45 நாட்கள் 54 எண்ணிக்கை செய்து வாருங்கள் என்று சொல்லுகிறோம். ஆரம்பத்தில் 10 km வேகத்தில் ஓட்டிப்பழகிய உங்களில் இப்போது 20 Km வேகத்தில் ஓடப் பழக்குவது போன்றது. இப்படி உங்களுக்கு தைரியம் வரும் வரை செய்யசொல்லி தைரியம் வந்தபின்னர் 108 இல் ஓடச் சொல்லுகிறோம்.
தினசரி 108 செய்யச் சொல்லுவது என்பது இப்போது நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து அலுவலகம் வரை தைரியமாக சென்று வரலாம், சற்று வேகமாகவும் ஓட்டலாம் என்பதற்குரிய பயிற்சி! ஆனால் தேர்ந்த ட்ரைவர் போல் 10 மணித்தியால் தொடர்ச்சியாக நீண்டதூரப் பயணம் செய்யக்கூடாது!
இப்படி சிறுதூரம் நீண்ட நாட்கள் ஓட்டப் பழகிய பின்னர் நீண்ட பயணத்திற்கு பழக்குவதற்காக லகு அனுஷ்டானம் செய்யச் சொல்லுகிறோம். இப்போது நீங்கள் சிறிது அதிக தூரம் ஓடப்பழகி இருப்பீர்கள், நன்கு வாகனம் ஓட்டக்கூடிய அனுபவஸ்தர் என்று அர்த்தம், அதுபோல் லகு அனுஷ்டானம் செய்யும் ஆற்றல் வந்தால் உண்மையில் சற்று அனுபவமான சாதகர் என்ற அளவில் உங்கள் மூளை, உடல், அந்தக்கரணங்கள் தயாராகியிருக்கும்.
சாதனை என்பது உடல் என்ற வாகனத்தில் குண்டலினி எனும் சக்தியை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்திற்கு கொண்டு செல்லும் பயணம். இதிற்கு உடலை, மனதை, அந்தக்கரணங்களை, நாடிகளை சரியாக சுத்தி செய்வதற்கு நீண்டகால, பலமான அத்திவாரத்துடன் பொறுமையாகக் கட்டியெழுப்ப்பும் முறையையே சாதனை என்று சொல்லுகிறோம்.
லகு அனுஷ்டானம் முடித்து பின்னர் 45 நாட்களில் 125,000 செய்யும் பண்பினைப் பெற்றால் இந்தப்பயணத்தை இன்னும் துரிதப்படுத்தலாம்.
இப்படி மனதையும், உடலையும், குறிப்பாக உங்கள் மூளையையும் மெதுவாக கெடுத்துவிடாமல் அத்திவாரத்திலிருந்து கட்டமைக்கும் முறையையே சாதனையாகச் சொல்லித்தருகிறோம்.
மூன்று மாதங்கள் சென்றபின்னர் இயற்கையாகவே உங்களுக்கு நேரம் இருப்பதற்குக் காரணம் உங்கள் மூளையில் - மனதில் இருந்த தேவையற்ற எண்ணங்களுக்கு செலவாகும் நேரம் தற்போது மிச்சமாகி இருக்கும். தேவையற்ற எண்ணங்களில் மனம் ஆர்வம் கொண்டு நேரத்தை வீணாகாமல் மனம், மூளை மீள் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
10 மாலைகள் செய்ய முடிகிறது என்பது நிச்சயமாக ஒரு சிறந்த முன்னேற்றமே! ஆனால் சாதனையில் நாம் முன்னேறிவிட்டோம் என்று பூரிப்படைவது அகத்தியர் யோக ஞானத்திறவுகோலின் முதல் உபதேசத்தில் வரும் "மதிகெட்டு விள்ளாதே மனமிக மகிழ்ந்திடாதே" என்ற வரிகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!
ஏனென்றால் சாதனை மிக நீண்ட பயணம், பல பிறப்புக்கள் பொறுமையாக முயற்சித்து பயிற்சியுடன் முன்னேறவேண்டியது!
ஆகவே நீங்கள் அடைந்திருப்பது மிக நல்ல முன்னேற்றம், ஆனால் பயணம் இன்னும் இருக்கிறது என்பதை ஞாபகத்திலிருத்தி சாதனையைத் தொடருங்கள்
இறுதியாக இது காயத்ரி தேவியின் அருளா என்ற கேள்விக்குப் பதில்; அன்னையின் அருள் எறும்பு முதலான சாதனை செய்பவர், செய்யாதவர்கள் அனைத்தின் மீதும் படர்ந்து கொண்டிருக்கிறது; நாம் சாதனையினால் எமது பரிணாமத்தை உயர்த்தும் செயலில் பக்குவப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம்! எங்களுக்கு மாத்திரம் அன்னையின் அருள் கிடைக்கவில்லை! நாம் குருவின் அருளால் சாதனையால் பரிணாம உயர்விற்கு பயன்படுத்தும் அளவிற்கு தகுதியடைந்திருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்!

Thursday, May 07, 2020

புத்த பூர்ணிமா ஆனா பானா ஸதி எனும் சுவாச தியான நூல் வெளியீடு

இன்றைய புத்தப் பூர்ணிமையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆனாபானா ஸதி எனும் சிறு நூலை நான் எனது கற்கைக்காக மொழி பெயர்க்கத் தொடங்கினேன். பின்னர் ஆனாபானா ஸதியையே தனது சாதனையாக எடுத்து கொண்டு பயிற்சிக்கும் தம்பி Thava Sajitharan தானே மொழிபெயர்க்கப்போகிறேன் என்று எடுத்துக்கொண்டு மொழி பெயர்த்தார்! 

இன்றைய நன்நாளில் இதை தமிழ் பேசும் சாதகர்களுக்காக PDF கோப்பாக வெளியிடுகிறோம்! 

நூல் தேவைப்படுபவர்கள் கீழ்வரும் இணைப்பில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்! 

**************************************

Here is the Tamil translation of Anapana Sati - Meditation on Breathing byVen. Mahathera Nauyane Ariyadhamma. I feel humbled to have jointly carried out this lofty task and happy to release this as a PDF for everyone's benefit on this Buddha Poornima. Homage to the Blessed One, the Worthy One, the Supremely Enlightened One

******************************************

https://drive.google.com/.../1OhP21c6EYwsHlBp.../view...


தலைப்பு இல்லை

மாத்தளை இன்று!!!

இன்று புத்தப் பூர்ணிமா

சித்தார்த்த கௌதம புத்தர் பிறந்த நாள், பரி நிர்வாணம் அடைந்த நாள், உடலை உகுத்த நாள்! 

ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் பாடலில் ஒன்று;

புத்தன் ஞானம் எதில் பெற்றான் புசிக்க உணவு இல்லாமலா? பட்டாடை உடுத்தும் மணி மகுடம் பல்லக்கில் ஏறும்படைபலம் துறந்தான்!

புத்தரின் ஞானம் என்ன? 

மூச்சினை அறிதல்! 

உள் மூச்சு - ஆனா என்று பாலியில் சொல்லப்படும்

வெளி மூச்சு – பானா என்று பாலியில் சொல்லப்படும்

ஸதி - என்றால் விழிப்புணர்வு என்று அர்த்தம்

உள்மூச்சு வெளிமூச்சினை கவனித்திரு என்பது தான் புத்தரின் ஞானம்!

இந்தக் கவனிப்பு என்னவெல்லாம் செய்யும் என்பதை இந்த ஆனாபானா ஸதி சூத்திரம் கூறுகிறது. 

புத்தர் வாய் மொழி கூறிய உபதேசங்களை தொகுத்து சூத்திரங்களாக பின்வந்தவர்கள் எழுதி வைத்தார்கள்!

இந்த உள்மூச்சு, வெளிமூச்சு விழிப்புணர்வினை 16 படிகளில் எப்படிப் பெறுவது என்பதைப் பற்றி இந்த நூல் விபரிக்கிறது. 

சித்தர்களின் வாசியோகம் என்பது இது தான், வாசியோகம் அந்தகூத்து, இந்தக்கூத்து என்று வாசியோகம் செய்பவர்களுக்கு ஆனாப்பான ஸதியின் மூலம் உண்மையை அறிந்து கொள்ளலாம். 

பஞ்சசீலம், அட்டசீலம் இல்லாமல் மூச்சைக் கவனிக்கிறேன், காற்றை அடக்குகிறேன் என்றால் எந்தப் பயனும் வராது! யோக சாத்திரத்தில் இவை இயம நியமங்கள் என்று சொல்லப்படுகின்றன! 

ஆக புத்தன் ஞானம் எதில் பெற்றான்? மூச்சைக் கவனித்து மனதை சீலத்தால் கட்டி! 

இந்தப் புத்த பூர்ணிமாவில் அனைவருக்கும் புத்தரின் ஞானம் பெற பிரார்த்தனைகள்!


தலைப்பு இல்லை

புத்தக அட்டைப் படச் சவாலின் ஏழாவது அட்டைப்படம்!
இன்று ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள்! தாகூரை எல்லோருக்கும் நோபல் பரிசுபெற்ற கவியாகத் தான் தெரியும். 
ஆனால் ரவீந்திரநாத் தாகூர் ஒரு நல்ல கல்வியாளர். அதற்கும் மேல் உபநிஷதங்களை கற்று ஆன்ம பயிற்சி பெற்ற ஒரு சாதகர்!
அவரது நூற்களில் ஒன்று : Sadhana - The Realization of Life 
இந்த நூலில் எட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன;
1) தனியொரு மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்குமான தொடர்பு
2) ஆத்ம உணர்வு
3) தீமையின் பிரச்சனை
4) நான் என்பதன் பிரச்சனை
5) அன்பின் உணர்தல்
6) செயலின் உணர்தல்
7) அழகின் உணர்தல்
 பரம்பொருளை உணர்தல் 
இந்த நூலின் முகவுரையில் இதை ஒரு தத்துவ நூல் அல்ல; வாழ்வைப் பற்றிய இந்திய ஞானிகளின் புரிதலின் அடிப்படையை மேற்கத்தேய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகவே தாகூர் குறிப்பிடுகிறார். 
முதலாவது அத்தியாயத்தில் மேற்கின் நாகரீகம் கிரேக்கத்திலிருந்து ஆரம்பித்தது; கிரேக்கம் சுவர்களுக்கு மத்தியில் இருந்ததால் அந்தச் சுவர்கள் அவர்கள் மனதில் ஏற்படுத்திய ஆழமான வடுக்கள் எப்போதும் அவர்களை divide and rule மன நிலையிலேயே வைத்திருந்தது, ஆனால் பாரதீக கலாச்சாரம் ஆரண்ய கலாச்சாரம், இயற்கையுடன் இணைந்த பாகமான காடுகளின் இயக்கவியல் புரிந்து உருவான மனம். இந்த மனத்தினாலேயே இயற்கையின் பேருண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும் எனும் மனதின் தோற்றுவாயை எடுத்துரைக்கிறார். 
இரவீந்திரநாத் தாகூர் ஒரு சாதகர் என்பதை புரிந்துகொள்ள இது நல்ல நூல்!

Tuesday, May 05, 2020

தலைப்பு இல்லை

இன்று காருக்கு டயர் மாற்ற வேண்டி வந்து விட்டது! கடைக்குக் கொண்டு செல்ல மெக்கானிக் சில்லைப் பார்த்துவிட்டு "சேர், Wheel alignment போய்விட்டது, பாருங்கள் டயர் ஒருபக்கத்தால் முழுமையாகத் தேய்ந்து விட்டது, Wheel alignment - சில்லுச் சமநிலை சரிசெய்ய வெறும் 900/= ரூபாய்தான், ஒவ்வொரு 5000 Km இற்கு ஒருக்கால் செய்தீர்கள் என்றால் கிட்டத்தட்ட்ட 40 ஆயிரம் கிலோ மீற்றர் ஓடலாம்" என்றார்! 
ஆக வாகனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் காலத்துக்குக் காலம் சில்லினை சம நிலைப் படுத்துவது முக்கியம்! 
இது ஒரு அதி முக்கியமான தத்துவமே! உடல் என்ற வாகனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய சில்லுகள் எவை? 
உடல், மனம், பிராணன்!
சில நாட்களுக்கு முன்னர் தம்பி ஒருவர் கடுமையான உழைப்பாளி, எண்ணிய காரியம் கண்துஞ்சாமல் செய்து வெற்றிகாண வேண்டும் என்ற துடிப்பான இளைஞர், ஆனால் அடிக்கடி அளவுக்கதிகமான மன உழைப்பால் சோர்ந்து நோய் வாய்ப்பட்டு விடுவார்! 
அவருடன் உரையாடும் போது, வாழ்க்கை என்பது படிப்பும், வேலை, பணம், குடும்பம் என்பவை சம அளவில் கலந்த ஒரு சம நிலை, இந்த சம நிலையைக் கெடுத்தால் மனச் சமநிலை கெடும், மனச் சமநிலை கெட்டால் பிராணச் சம நிலை கெடும், பிராணச் சமநிலை கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் வாழ்க்கை கெடும். 
அடிக்கடி எம்மை நாமே நிறுத்தி மனம், உடல், பிராணன் ஆகிய மூன்று சில்லுகளும் ஒழுங்காக சமநிலையில் இருக்கிறதா என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும்!

தலைப்பு இல்லை

புத்தக அட்டைப்படச் சவாலில் ஆறாவது நாள், 

தேவியும் குருவும் (The Goddess and the Guru: A Spiritual Biography of Sri Amritananda Natha Saraswati) 

இந்த நூல் எனது குருநாதரின் வாழ்க்கை வரலாறு! 

இந்திய அணுத் திட்டத்தின் தந்தை எனக் கூறப்பட்டும் ஹோமி பாபாவினால் உருவாக்கப்பட்ட Tata Institute of Fundamental Research ஆய்வுமையத்தின் ஆரம்பகால அணுவிஞ்ஞானி (Nuclear scientist) எப்படி தனது அக அனுபவத்தின் பின்னர் ஒரு தேவி உபாசகர் ஆனார் என்ற வாழ்க்கை வரலாறு! 

ஒரு தடவை என்னை வந்து சந்தியுங்கள் என்று 1000 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து கொண்டு எனக்கு மின்னஞ்சலில் செய்தி அனுப்பினார், வேலை செய்யும் கம்பனி லீவு தரமாட்டோம் என்று கூற வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவரைச் சந்திக்கச் சென்றது தான் எனது முதல் இந்தியப்பயணம்! 

குரு நாதரின் பௌதீகவியல் பேராசிரியர் (Physics Professor) குண்டலினி யோகம் புரிந்த ஞானானந்தர் என்ற சாது! 

சித்தர் இலக்கியத்தில் இருக்கும் ஸ்ரீ வித்யா குண்டலினி யோக நுணுக்கங்களைப் பற்றி ஆராயுங்கள், தேவி உள்ளிருந்து வழிகாட்டுவாள் என்று அவர் கூறிய ஆசி எனது முதல் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் வெளிவரக் காரணமாகியது. 

எனது நூலிற்குத்தான் அவர் தனது ஸ்தூல உடலை விடுவதற்கு முன்னர் கடைசியாக எழுதிய ஆசிச் செய்தி!

ஜாதி, மதம், ஆண், பெண் என்று எவருக்கும் ஸ்ரீ வித்யா உபதேசம் தேவி உபாசனை செய்யத் தகுதியானவர்கள் என்ற கொள்கை உடையவர்கள்; எவர் கேட்டாலும் உபதேசம் அளித்த பெருந்தகை! பல பாரம்பரிய குருமார்களிலிருந்து மாறுபட்டவர்! 

கட்டாயம் படித்துப்பாருங்கள்!


தலைப்பு இல்லை

புத்தக அட்டைப்படச் சவாலில் ஆறாவது நாள், 

தேவியும் குருவும் (The Goddess and the Guru: A Spiritual Biography of Sri Amritananda Natha Saraswati) 

இந்த நூல் எனது குருநாதரின் வாழ்க்கை வரலாறு! 

இந்திய அணுத் திட்டத்தின் தந்தை எனக் கூறப்பட்டும் ஹோமி பாபாவினால் உருவாக்கப்பட்ட Tata Institute of Fundamental Research ஆய்வுமையத்தின் ஆரம்பகால அணுவிஞ்ஞானி (Nuclear scientist) எப்படி தனது அக அனுபவத்தின் பின்னர் ஒரு தேவி உபாசகர் ஆனார் என்ற வாழ்க்கை வரலாறு! 

ஒரு தடவை என்னை வந்து சந்தியுங்கள் என்று 1000 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து கொண்டு எனக்கு மின்னஞ்சலில் செய்தி அனுப்பினார், வேலை செய்யும் கம்பனி லீவு தரமாட்டோம் என்று கூற வேலையை ராஜினாமா செய்து விட்டு அவரைச் சந்திக்கச் சென்றது தான் எனது முதல் இந்தியப் பயணம்! 

குரு நாதரின் பௌதீகவியல் பேராசிரியர் (Physics Professor) குண்டலினி யோகம் புரிந்த ஞானானந்தர் என்ற சாது! 

சித்தர் இலக்கியத்தில் இருக்கும் ஸ்ரீ வித்யா குண்டலினி யோக நுணுக்கங்களைப் பற்றி ஆராயுங்கள், தேவி உள்ளிருந்து வழிகாட்டுவாள் என்று அவர் கூறிய ஆசி எனது முதல் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் வெளிவரக்காரணமாகியது. 

எனது நூலிற்குத் தான் அவர் தனது ஸ்தூல உடலை விடுவதற்கு முன்னர் கடைசியாக எழுதிய ஆசிச் செய்தி!

ஜாதி, மதம், ஆண், பெண் என்று எவருக்கும் ஸ்ரீ வித்யா உபதேசம் தேவி உபாசனை செய்யத் தகுதியானவர்கள் என்ற கொள்கை உடைவர்கள்; எவர் கேட்டாலும் உபதேசம் அளித்த பெருந்தகை! பல பாரம்பரிய குருமார்களிலிருந்து மாறுபட்டவர்! 

கட்டாயம் படித்துப்பாருங்கள்!


Monday, May 04, 2020

தலைப்பு இல்லை

நாம் பூமியிற்கு வந்திருப்பதோ சிறு விஜயம், ஆகவே நேரத்தை விரயம் செய்யாமல் எம்மையும் எம்மைச் சூழ உள்ளவர்களையும், சூழலையும் இருப்பதை விட மேம்படுத்தப் பாடுபட்டு விட்டு மீளச் செல்வோம்!

Let us strive to make this earth a better place by living in alignment with nature, improving us and empowering those who around us – We visited earth for short time, we'd be gone when the time is ripe so let's not squander even a single minute


தலைப்பு இல்லை

Logesh Waran இனின் புத்தக அட்டைப் பட சவாலில் இன்று ஐந்தாவது நூல்! 

குருதி மலை 

கதைகள், நாவல்கள் என்பது என்னைப் பொறுத்த வரையில் சாண்டில்யனைத் தவிர வேறு எந்த நாவலும் ஆர்வமாக வாசித்ததில்லை! மிகச் சொற்பமான மற்றைய நாவல்கள் இருக்கலாம்! 

இந்த நாவல் நான் பாடசாலைக் காலத்தில் கீழே வைக்காமல் வாசித்த நூற்களில் ஒன்று! இந்த நூலை வெறுமனே ஒரு நாவலாக கடந்து போக முடியவில்லை! ஒரு சமூக வரலாற்றுப் பதிவு தான்! 

மலையகத்தின் பெருந்தோட்ட மக்கள் ஒவ்வொரு படி நிலையிலும் யார் யாரால் எல்லாம் சுரண்டப்பட்டார்கள் என்பதை படிமுறையாக விளக்கும் ஒரு சமூக நாவல்! பெரும்பான்மைச் சமூகம், அரசியல்வாதிகள், பதவியில் இருக்கும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருத்தரும் எப்படி மற்றவர்களைச் சுரண்டுகிறார்கள் என்பதைப் படம் போட்டுக் காட்டும் நாவல்! 

மலையகத்தில் சுய சார்புள்ள விவசாயப் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ச்சியாக இருப்பதற்கு இந்த நூலின் தாக்கமும் காரணமாக இருக்கலாம்! 

நூலகத்தில் PDF ஆகக் கிடைக்கிறது; http://www.noolaham.net/project/03/224/224.pdf


குரு அகத்திய காயத்ரி சாதனியும் நவக்கிரக தோஷங்களும்

வணக்கம் ஐயா,
நான் தங்களின் blog ஐ தொடர்ந்து படித்து வருகிறேன். நான் நவகிரக காயத்ரி சாதனை - சந்திர காயத்திர மந்திர சாதனை துவங்க ஆவலாய் உள்ளேன். தினமும் சந்திர ஓரையில் சாதனை பண்ண இயலாவிட்டால் வேறு உகந்த நேரத்தில் பண்ணலாமா ? அல்லது சந்திர ஹோரையில்தான் கட்டாயம் சாதனை புரியவேண்டும் ?

அன்பரே,
சாதனை மூலம் எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்பது உண்மை! ஆனால் அது நாமாக பொதுவாக நம்பிவரும் நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்ட ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒழுக்க முறை. இதன் அடிப்படை குறித்த சில காலத்திற்கு (மாதங்களுக்கு, வருடங்களுக்கு) சிரத்தையாக தினசரி சாதனை செய்யும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.
தற்போதைய fast food யுகத்தில் இருக்கும் எமக்கு அதைப்போன்ற துரித பரிகாரங்கள் போன்று எமது மனம் விரும்பிய விஷயங்களை நம்பிச் செய்யும் முறை அல்ல சாதனை.
சாதனைக்கு என்று ஒரு ஒழுங்கு இருக்கிறது, அதன்படி எமது அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், ஆங்காரம்) கட்டியமைக்கப்படும் போது நாம் அந்த பரம்பொருளின் பேரோளியை ஏற்றுக்கொள்ளும் பண்பும், ஆற்றலும், வலுவும் உள்ளவர்களாக இருப்போம்.
இந்தப்பரம்பொருளின் பேரோளி எம்மில் சேரத்தொடங்க நாம் முதலில் எமது மனதின் பிடியிலிருந்து வெளிவருவோம். பிறகு புத்தி தெய்வ உருமாற்றம் பேறுவதால் சித்த விருத்தியின் பிடியிலிருந்து வெளிவருவோம். இந்த இரண்டும் சரியாக நடைபெறும்போது எமது பிராண சக்தி இழப்புக் குறைந்து விடுவதால் உடல் அதிக உயிர்ப்புடன் நோய்கள் குணமாகும்.
இப்படி நடைபெறுவதற்கு ஒவ்வொருவருடைய அந்தக்கரணத்தின் அமைப்புக்கு ஏற்றவகையில் சாதனையின் காலம் வேறுபடும். பலரும் அதிக ஜெபத்தின் மூலம் துரிதமாக தமது அந்தக்கரணங்களை மீளமைத்துக்கொள்ள முடியும், பிரச்சனைகளில் இருந்து மீண்டு விட முடியும் என்று நம்புகிறார்கள். இது முழுமையான உண்மை அல்ல!
எமது மனம்-புத்தி-சித்தம் உடனடியாக சாதனையினை ஏற்றுக்கொள்ளாது; அதிக சந்தேகங்கள், குழப்பங்கள், அதிஆவல், அதிஆசை, பயங்கள், உணர்ச்சிகளும் சாதனயுடன் போராடத்தொடங்கும். இந்தப்போராட்டத்தில் வெற்றிபெற சீரான நீண்டகால தினசரி சாதனை அவசியம்! இப்படி நீண்டகால தினசரி சாதனையினூடாக எம்மை நிலை நிறுத்திக்கொண்டு குறித்தளவு ஜெப எண்ணிக்கையையும் பூர்த்தி செய்யும் போது எமது வாழ்கைப் பிரச்சனைகளுக்கு சாதனை தீர்வினைத் தரும்.
இது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை!
இனி அந்தக்கரணங்களை சமப்படுத்தினால் எமது 90% பிரச்சனை தீர்ந்தாலும் எமக்கு வெளிச்சூழல் சில பாதிப்புக்களைத் தரும், இவற்றுள் முக்கியமானவை நவக்கிரக தோஷங்கள் எனப்படுபவை. கிரங்கள் எமக்கு எந்தப்பலனையும் தாமாகத் தருவதில்லை; நாம் செய்த கர்மத்தை கணக்கு வைத்துக்கொண்டு அதற்குரிய பலனைச் சரியாகச் செய்யும் பணியைத்தான் அவை செய்கிறது.
காயத்ரி உபாசனையில் நவக்கிரகங்கள் நவக்கிரகங்கள் எட்டாவது ஆவரணத்திலிருப்பவை! காயத்ரியின் சவிதாவின் பேரோளி மத்தியில் இருக்க நவக்கிரகங்கள் எட்டாவது ஆவரண சக்தியாக இருக்கிறது.
ஆகவே ஒரு சாதகன் காயத்ரி மந்த்ரித்தை முதலில் சாதகம் செய்து பின்னரே ஆவரண தேவதைகளுக்கு வரவேண்டும். எனவே நவக்கிரக காயத்ரி சாதனை என்பது ஒரு சாதகன் குறித்தளவு குரு அகத்திய காயத்ரி சாதனையின் பின்னர் கிரக பிரபாவங்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் நவக்கிரக சாதனை செய்யலாம்!
ஆனால் ஜனாதிபதியின் ஆணையைப் பெற்ற ஒருவன் கிராம அலுவலகரின் உதவியை உடனடியாகப் பெறுவதைப் போன்றதே இது!

ஆகவே சிரத்தையாக காயத்ரி சாதனையில் கவனம் வையுங்கள்! அதன் பிறகு நவக்கிரக சாதனை தேவையா இல்லையா என்பது பற்றி வழிகாட்டல் கிடைக்கும்!

Sunday, May 03, 2020

தலைப்பு இல்லை

புத்தக அட்டைப் படச் சவாலில் 04 வது நாள் 

சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற இந்தச் சிறிய நூல்! இந்தப் புத்தகம் சிறுவயதில் நான் ஒரு விவாதப் போட்டியில் பங்குபற்றி வென்றதற்காக கிடைத்த பரிசு! (விவாதிகளே கேளுங்கள், நானும் ஒரு விவாதிதான்   - Archaren Kirubaanand Srirangaraja & Vimalathithan Vimalanathan) 

இந்த நூலில் கல்வி என்றால் என்ன என்று விவேகானந்தர் கூறிய கருத்து எனது படிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது! 

மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவது தான் கல்வி!

எத்தகைய பயிற்சி மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு பயன் தரும் வகையில் பயிற்சியைத் தருகிறதோ அதுவே கல்வியாகும்

மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வி 

கல்வி என்பது எமது அறிவால் பிறருக்கு உதவுவதும், சிங்கம் போன்ற உறுதியான மனவுறுதியைத் தருவது. 

வெறும் புள்ளி விபரங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டிருப்பதல்ல கல்வி! 

இந்த நூல் என்னில் ஏற்படுத்திய தாக்கம் மனதை செம்மைப்படுத்தும் யோக சாத்திரப்படிப்பிற்கு என்னை உந்தியது. 

இன்றைய சவாலிற்கு தினசரி தனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தின் அட்டையைப் பகிர Archaren Kirubaanand Srirangaraja அவர்களை அழைக்கிறேன்!


தலைப்பு இல்லை

புத்தக அட்டைப்படச் சவாலில் 04 வது நாள் 

சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற இந்தச் சிறிய நூல்! இந்தப் புத்தகம் சிறு வயதில் நான் ஒரு விவாதப் போட்டியில் பங்கு பற்றி வென்றதற்காக கிடைத்த பரிசு! (விவாதிகளே கேளுங்கள், நானும் ஒரு விவாதிதான்   - Archaren Kirubaanand Srirangaraja & Vimalathithan Vimalanathan) 

இந்த நூலில் கல்வி என்றால் என்ன என்று விவேகானந்தர் கூறிய கருத்து எனது படிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது! 

மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவது தான் கல்வி!

எத்தகைய பயிற்சி மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு பயன் தரும் வகையில் பயிற்சியைத் தருகிறதோ அதுவே கல்வியாகும்

மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வி 

கல்வி என்பது எமது அறிவால் பிறருக்கு உதவுவதும், சிங்கம் போன்ற உறுதியான மனவுறுதியைத் தருவது. 

வெறும் புள்ளி விபரங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதல்ல கல்வி! 

இந்த நூல் என்னில் ஏற்படுத்திய தாக்கம் மனதை செம்மைப்படுத்தும் யோக சாத்திரப்படிப்பிற்கு என்னை உந்தியது. 

இன்றைய சவாலிற்கு தினசரி தனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தின் அட்டையைப் பகிர Archaren Kirubaanand Srirangaraja அவர்களை அழைக்கிறேன்!


Saturday, May 02, 2020

தலைப்பு இல்லை

Logesh Waran இன் புத்தக அட்டைப்படச் சவாலில் 03 வது புத்தகம்!

இந்த நூல் வாழ்க்கையை வேறு ஒரு பாதைக்கு சிறுவயதில் அழைத்துச் சென்ற நூல். 

மிகச் சிறுவயதில் எனக்கு எனது தந்தையாருடன் ஏற்பட்ட அனுபவத்திற்கு பாடசாலை நூலகத்தில் இருந்த இந்த நூல் விடையளித்தது. அதனால் தூண்டப்பட்டு 12 வயதில் நூலாசிரியர் எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளுக்கு பெரிய மனிதன் மாதிரி எனது அனுபவத்தை விபரித்து கடிதம் எழுதினேன். அதற்கு அவரும் அந்தக் கடிதத்தை ஒரு பொருட்டாக மதித்து எனக்குப் பதிலும் எழுதி என்னை காயத்ரி மந்திரம் தினசரி கூறிவரச் சொன்னார். அன்று அவர் எனக்கு எழுதிய உபதேசக் குறிப்பு இன்று வரை பின்பற்றுகிறேன், இனியும் பின்பற்றுவேன்! அதைச் செய்வதில் விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை! எந்தத் தேவைக்காகவோ, வேண்டுதல்களுக்காவோ அல்ல! ஒரு கடமையாக சிரத்தையாகச் செய்வது என்பது மட்டுமே!

அதன் பிறகு அவரை நேரில் கண்ட பொழுது என்னை தன்னுடன் இருக்குமாறு அழைத்துக் கொண்டு யோக வித்தை பயிற்றுவித்தார். அதற்கு சமமாக பல்கலைக்கழத்தில் பட்டமும் முடித்து அறிவியல் கல்வியையும் பூர்த்தி செய்ய உற்சாகப்படுத்தினார்!! 

சூழல் அறிவியலை முறைசார் கல்வியிலும், யோக அறிவியலை குருகுலக் கல்வியிலும் பயிலும் வாய்ப்புக்கு இந்த நூல் அடித்தளம் இட்டது! 

நூல்கள் வாழ்க்கையை மாற்ற முடியுமா என்றால் நிச்சயம் என்பது எனது அனுபவம்! 

இந்த 07 நாட்கள் ஏழு புத்தக அட்டைகளைப் பகிரும் சவாலுக்கு தம்பி ThuvaraGan VelumMylum அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.


Friday, May 01, 2020

சாதனையின் ஒழுங்கு முறையின் பயன் என்ன?

சாதகர்களின் கேள்விகள்;

எனக்கு காயத்ரி மந்திரம் மாத்திரம் பிடித்திருக்கிறது, நீங்கள் கூறும் ஒழுங்கில் இல்லாமல் தனியே காயத்ரி மந்திரம் மாத்திரம் சொல்ல விரும்புகிறேன்? பலன் கிடைக்குமா? அல்லது நீங்கள் கூறிய சித்த வித்யா குருமண்டல நாமாவளி, அகத்திய மூல குரு மந்திரம், ஜெப சங்கல்பம், காயத்ரி மந்த்ர ஜெபம், சித்த சாதனை, துதி என்ற இந்த ஒழுங்கை கட்டாயம் பின்பற்றவேண்டுமா?

எமது பதில்;
உங்கள் சித்தம் (ஆழ்மனம்) தூய்மையாக இருந்தால் உடனடியாக நிச்சயம் பலன் தரும்! ஆனால் இது யதார்த்தத்தில் சாத்தியமில்லை!
ஆகவே அனைவருக்கும் பயன் தரும் வகையில் சாதனை கட்டமைக்கப்பட வேண்டும்.
நாம் எமது தாழ் இயல்புகளில் இருந்து வெளியேறி உயர் தெய்வ குணங்களுக்கு செல்ல அதை அடைந்தவர்களுடைய உதவியும், பயணப்பாதையும் அவசியம். இதற்கு நாம் குருமண்டலத்துடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இதனால் சித்த வித்யா குருமண்டல் நாமாவளி சாதனை ஒழுங்கில் முதலாவதாக இணைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள அனைத்து குருமார்களும் ஒளி நிலை அடைந்த உயர் தெய்வ சக்திகள்! இது ஒரு மண்டலமாக பேரொளி நிலையில் வழிகாட்டும் சக்திகள்!
நீங்கள் சாதனை புரியும் குருபரம்பரையின் மூல குரு அகத்திய மாமகரிஷி! குருதேவர் அனைவரையும் உயர் நிலை அடைவிக்க ஆவல் கொண்ட தேவி ஸ்வரூபம் (அகஸ்தியமயி) அடைந்த தேவியின் ஆற்றல். ஆகவே அவரை மூலகுரு மந்திரத்தின் மூலம் தொடர்பு கொள்வது எமது பயணத்தின் இறுதி இலக்கில் இருந்து மாறாமல் இருக்க உதவி செய்யும்.
இவற்றை முடித்த பின்னர் அடுத்து வரும் சாதனையின் அங்கம் அந்தக்கரணங்களை சுத்தி செய்பவை.
எந்த ஒரு செயலும் நடைபெற ஒரு மையம் (center) அவசியம். அந்தக்கரணத்தில் அதை ஆங்காரம் என்று சொல்லுவோம். இந்த ஆங்காரத்தை கட்டமைத்தால்தால் மனம் இயங்கும். ஆகவே நாம் செய்யும் சாதனைக்கு ஏற்ற ஆங்காரம் கட்டமைக்கப்படுவதற்கு சங்கல்பம் அவசியம்.
அதன்பிறகு மனமும், புத்தியும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். சலனிக்கும் மனம் ஒழுகாக்க காயத்ரி மந்திர ஜெபம் செய்விக்கிறோம். தொடர்ச்சியான ஜெபம் மனதை ஒழுங்கு படுத்தும். அந்த ஜெபம் உருவாக்கும் ஒளி புத்தியைத் தூண்டி பரம்பொருளுடன் இணைக்கும்.
அடுத்த அந்தக்கரணத்தின் பாகம் சித்தம் கடைசியாக இருக்கும் சாதனையின் அங்கமான சித்த சாதனை இதை ஒழுங்குபடுத்தும்.
ஆக சாதனையின் முழு அங்கங்களையும் தரப்பட்ட ஒழுங்கு முறையில் செய்ய அந்தக்கரணங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு தெய்வ உருமாற்றம் நிகழும்.
இறுதியாக எமது வாழ்விற்கு தேவையான 16 செல்வங்களையும் துதியாக செய்து சாதனையைப் பூர்த்தி செய்கிறோம்.
ஆகவே அன்பரே இந்த சாதனையின் ஒழுங்கு ஆழமான யோக நுணுக்கத்தை அடைப்படையாகக் கொண்டது. ஆகவே உங்கள் மனப்போன போக்கில் சாதனை செய்யாமல் உபதேசிக்கப்பட்ட ஒழுங்கில் சாதனையைச் செய்து வாருங்கள்.
துரித பலனும் முன்னேற்றமும் காண்பீர்கள்!

சாதனா மூலம் எங்களுக்கு தேவையானதை வேண்டுவதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

ஒரு சாதகரின் கேள்வி:
அண்ணா, சாதனா மூலம் எங்களுக்கு தேவையானதை வேண்டுவதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

  1. எமக்கு தேவையானதைப் பெற இறைவன் எமது மனம், புத்தி, உடல் என்பவற்றைத் தந்திருக்கிறான்.
  2. இவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு எம்மைப் பயிற்சிப்பதே காயத்ரி சாதனையின் நோக்கம்.
  3. காயத்ரி சாதனையின் மூலம் மனம், புத்தி, பண்புகள் நுண்மையடைவதாலும் பிராண ஆற்றலும், அதிர்வும் அதிகரிப்பதால் எமக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்குரிய ஆற்றல் உள்ளவர்களாக நாம் சக்தி பெறுவோம்.
  4. எமது தேவை என்பது தர்மத்திற்கு உட்பட்டதாகவும், பேராசை அற்றதாகவும், அடிப்படையானதாகவும், வாழ்வில் இருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்வதற்கானதாகவும் இருக்க வேண்டும்.
  5. எமது அடிப்படைத்தேவைகளில் அதி முக்கியமான மூன்று தேவைகளை மாத்திரம் சாதனையின் முடிவில் வேண்டுதலாக வைக்கலாம். 
  6. இப்படி வைப்பதால் தேவியே செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்வாள் என்று நம்பிக்கொண்டு செயலற்று சோம்பேறியாக இருக்கக்கூடாது. இப்படிப் பிரார்த்திக்க அது நிறைவேறுவதற்குரிய சூழலை மெதுவாக உருவாக்கும், அதை நாம் புத்திக்கூர்மையால் உணர்ந்து செயலில் ஈடுபட வேண்டும். 
  7. நாம் வைக்கும் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அந்தக்கோரிக்கை உங்கள் முன்னேற்றத்திற்கானது இல்லை, தற்போதைய காலத்தில் சாத்தியமில்லை என்பதை அறிந்த பிரபஞ்ச ஞானசக்தி அவற்றைத் தடுக்கலாம்.
  8. இப்படி நடைபெறவில்லை என்பதால் மனம் சோர்ந்து சாதனையைத் தவறவிட்டால் நாம் வைரச்சுரங்கத்தில் கடைசி அடி மண்ணை வெட்டாமல் சென்றவர்களாவோம்.
  9. நாம் எங்கு தவறு விடுகிறோம் என்பதை எமது புத்தியால் கூர்ந்து கவனித்துத் தீர்க்க வேண்டும், மீண்டும் மீண்டு முயற்சி செய்யவேண்டும். அதற்குரிய காலம் சரியாகி எமது பக்குவமும் சரியாக இருக்கும் போது காரியம் நடைபெறும்.
  10. குரு-அகத்திய-காயத்ரி சாதனா முறை வாழ்வின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து எம்மை பரிணாமத்தில் படிப்படியாக உயர்த்தும்.

ஜெப சாதனைக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதே காரணம் என்ன?



ஒரு சிரேஷ்ட சாதகரின் கேள்வி;
ஐயா தங்கள் இரு தினங்களுக்கு முன் லகு அனுஷ்டானம் பற்றி ஒரு சாதகர் உடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் அதில் அவர் ஐந்து மணி நேரத்தில் 27 மாலை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் அப்படியென்றால் ஒரு மணி நேரத்திற்கு 5 மாலைக்கு மேல் செய்துள்ளார் இது இவ்வளவு விரைவாக காயத்ரி மந்திரத்தை சொல்லலாமா பலன் கிட்டுமா நான் பத்து மாலை செய்வதற்கு ஆறு மணிநேரம் ஆகிறது .மேலும் நான் வார அறிக்கை தவறாமல் அனுப்பி வருகிறேன் நீண்டநாட்களாக தாங்கள் அதற்கு எந்தவிதமான பதிலும் தரவில்லை.

எமது பதில்:
இனி உங்கள் பிரதான கேள்விக்கான பதிலுக்கு வருவோம்.
  1. ஜெபம் என்பது எமது மனதில் எழும் எண்ண அலைகளை மந்திரத்தின் சொல், ஓசைகளால் பிரதியீடு செய்யும் செயல் (replacing activity).
  2. இதன் நோக்கம் எமது மூளையில், மனதில் எழும் எண்ணங்களை தெய்வ சக்தியை ஈர்க்கும் மந்திர சொற்களால் பிரதியீடு செய்து எமது மனதில் எழும் எண்ண அலைகளை குறைப்பது.
  3. சாதாரணமாக நாம் கண்டவற்றைப் படித்து, மனதை அலை பாயவைத்து, வேண்டாத செய்கை செய்து மனதில் தேவையற்ற எண்ணங்கள் எழுந்த வண்ணமாக எமது ஆழ்மனமாகிய சித்தத்தில் விருத்திகளை உருவாக்கிக் கொண்டு இருப்போம். இத்தகைய நிலையில் நாம் ஜெப சாதனை செய்யத் தொடங்குவோம்.
  4. இந்த நிலையில் ஜெப சாதனை செய்யத் தொடங்கும் போது ஒரு தடவை மந்திரம் சொன்னவுடன் மனம் தனக்கு விரும்பிய எண்ணத்தின் பின்னால் சென்று சுற்றி விட்டு அடுத்த ஜெபத்திற்கு வரும். இப்படி ஒவ்வொரு மந்திரத்திற்கும் இடையில் மனம் தனக்கு விரும்பிய இடம் எல்லாம் சுற்றி 108 முடிக்கும் போது சராசரி ஆரம்ப சாதகனுக்கு ஒரு மாலை (108) செய்து முடிக்க 20 - 30 நிமிடங்கள் ஆகிவிடும்.
  5. காலம் செல்லச்செல்ல காயத்ரி மந்திரத்தின் பிராண ஆற்றலை ஏற்கும் பக்தியும், அகப்பண்பும் இருக்குமானால் அன்னையின் புத்தியைத் தூண்டும் ஒளி எங்கள் மனதில் பாயத் தொடங்க எமது மனதின் சலனம் குறையத் தொடங்கும். இதற்கு காயத்ரி சங்கல்பத்தில் கூறப்படும் நோக்கத்தையும், சித்த சாதனையில் கூறப்படும் பண்புகளும் எம்மில் வளர்க்கும் முயற்சியும் எமது அகங்காரத்தைக் குறைந்து சாதனை செய்ய வேண்டும்.
  6. இப்படி புத்தியைத் தூண்டும் அந்தப்பேரோளி எமது மனதில் பாயத்தொடங்க எமது மனம் எண்ணச்சலனங்கள் குறைந்து ஏகாக்கிரம் அடையத்தொடங்கும்.
  7. இப்படி ஏகாக்கிரமடைந்த மனம் தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து விட்டு மந்திர ஜெபத்தில் மாத்திரம் நிலைபெறத்தொடங்க எமது ஜெபத்திற்கான கால அளவு குறையும்.
  8. இப்படி தேர்ந்த கூர்மையடைந்த ஏகாக்கிரமுடைய சாதகன் 108 தடவை ஒரு மாலை ஜெபம் செய்ய 6 நிமிடங்கள் தேவைப்படும், ஒரு மணித்தியாலத்தில் 10 - 11 மாலை செய்ய முடியும். இந்த நிலை நீண்டகாலப்பயிற்சி, சிரத்தையான மனத்தூய்மை என்பவற்றை அடைந்திருந்தால் மாத்திரமே சாத்தியம்.
  9. சிலர் விழிப்புணர்வு நழுவி துரிதமாக ஜெபத்தை முடித்துவிட்டதாக நம்புவார்கள், இடையில் தூக்கம் வந்திருக்கும். இத்தகையவர்கள் உடல் அதிக பிராண சக்தியை ஏற்க பக்குவப்படாததால் ஏற்படும் நிலை; இத்தகையவர்கள் உடல்பயிற்சி, ஆசனம், உணவு ஒழுக்கங்கள் மூலம் தமது உடலைத் தயார்ப்படுத்த வேண்டும்.
  10. உங்களுக்கு அதிக நேரம் ஜெபம் செய்வதற்கு எடுக்கிறது என்றால் மேற்கூறியதைப்போல் சித்த விருத்திகள் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
  11. சாதனை அனுபவத்தை எழுதி அனுப்பிய சாதகர் மணித்தியாலத்திற்கு 05 மாலைகளே ஜெபிக்கிறார், ஆகவே அவரது மனமும் விகல்பத்தில் சஞ்சரிக்கிறது. இன்னும் முழுமையாக ஏகாக்கிரமடையவில்லை!
  12. ஆகவே உங்களுடைய கருத்தின் தொனியில் அவர் வேகமாக ஜெபிக்கிறார் அதனால் பலன் கிடைக்காது என்ற சாதனையின் நுணுக்கம், இலக்குத் தெரியாத சாதனை அனுபவம் இல்லாதாவர்களின் கூற்றை ஒப்பிக்காமல் சாதனை என்பது மனதின் சலனத்தைக் குறைக்கும் பயிற்சி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
  13. மனதின் எண்ணச்சலனம் குறைந்தால் சரியான உச்சரிப்புடன் ஒரு மாலை அளவு 06 நிமிடங்களில் முடிக்கலாம்!
  14. ஒரு மாலை அளவினை சொல்லுவதற்கு எடுக்கும் நேரம் என்பது வேகமாகச் சொல்லுவதில் இல்லை, உங்கள் மனதில் எழும் எண்ணங்கள் ஏற்படுத்தும் தடைகளில் இருக்கிறது என்று உணருங்கள்.
  15. உதாரணம் கூறுவதாக இருந்தால் மைலாப்பூரிலிருந்து மீனம்பாக்கம் போவதற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரம் என்றால் வெறும் 20 நிமிட பயணம் மாத்திரமே! ஆனால் peak hours இல் இரண்டு மணி நேரம் பிடிக்கும். தூரம் மாறவில்லை, நெரிசல் எமது வேகத்தைக் குறைக்கிறது. இதைப்போல் மந்திரங்களில் உள்ள அட்சரங்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரே அளவு நேரத்தில்தான் உச்சரிப்பார்கள், ஒரு சில மாத்திரைகள் (செக்கன்) கூடிக்குறையலாம். அதிக நேரம் எடுப்பதற்குக் காரணம் மனம் எங்காவது ஊர்வம்பு அளக்கப்போய்விடுவதே 😂🤣😁
  16. இந்தப்பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு சாதனையைத் தொடர்ச்சியாகச் செய்வதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை, தொடர்ச்சியாக்ச் செய்யும் போது எப்போதாவது அன்னையின் திருவருள் மனதில் ஒளி பாய்ச்சும் போது எமது மனச்சலனம் குறைந்து சாதனையில் முன்னேறுவோம்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...