குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 30, 2011

சித்தர்கள் கூறும் சுழுமுனை நாடி பற்றிய குறிப்புகளும் காயகற்பத்தின் யோக இரகசியமும்

சித்தர் இலக்கியங்கள் படிப்பவர்கள், குண்டலினி யோகம் செய்பவர்கள், வாசி யோகம் செய்பவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை யோக சித்தியிற்கு குண்டலினியை சுழுமுனை வழியாக ஏற்ற வேண்டும் என்பது. இன்றைய பதிவில் அந்த சுழுமுனை அல்லது சுஷும்னா நாடி பற்றிய குறிப்புகளை பார்ப்போம்.
மனித சூஷ்ம சரீரம் சூஷ்ம பஞ்ச பூதங்களினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சூஷ்ம சரீரத்தில் பிராணன் செல்லும் பாதைகள் நாடிகள் எனப்படும்.
இந்த நாடிகள் உருவாகும் இடமான காண்டம் எனும் பகுதி மேலாக சூஷ்ம சரீரத்தின் அமைந்துள்ளது. ஸ்தூல உடலில் முள்ளந்தண்டின் அடியிலிருந்து உருவாகுவதாக ஒப்பிடலாம்.
இந்த காண்டத்திலிருந்து  நார் போன்ற நாடிகள் உருவாகி உடல் பூராகவும் பரவுகின்றன. இவற்றில்  மூலாதாரத்திலிருந்து பிரம்மாந்திரம் வரை நேரான குழாய் வடிவில் ஆறாதாரங்கள் ஊடாக செல்லும்  யோக நாடியே சுழுமுனை எனப்படும்..
அதாவது இது பிராணனின் மத்திய கால்வாய் (Cantral canal) இந்த‌ சுழுமுனை, சக்கரங்கள் இதன் இடையின் உள்ள சேமிப்பு கிடங்குகள். அதாவது ஒரு நாட்டின் மின்சார உற்பத்தியினை ஒப்பிடுவோமானால் பிரதான இணைப்பினையின் அதனை குறைத்து கூட்டும் ட்ரான்ஸ்போமர்களையும் (Transformers) ஒப்பிடலாம். யோக நாடிகள் அந்த ட்ரான்ஸ்போமர்களில் இருந்து செல்லும் சிறு மின்சாரகம்பிகளாகவும், காண்டம் இந்த வலையமைப்பின் ஆரம்ப புள்ளியாகவும் (Network generation point) கருதலாம், ஜப்பானிய அய்கிடோ, நிஞ்சா போர்க்கலையில் ஹாரா (Hara) எனப்படும் இடமே    யோகசாத்திரத்தில் காண்டம் எனப்படுகிறது.
சுழுமுனை என்பது வஜ்ர நாடி, சித்திர நாடி எனும் மூன்று கால்வாய்களால் ஆனது. சுழுமுனை எனும் கால்வாயினுள் உள்ள நாடி வஜ்ர நாடி, வஜ்ர நாடியினுள் உள்ளது சித்திர நாடி பொதுவாக சுழுமுனை என்பது இந்த மூன்றையும் சேர்த்தே குறிக்கப்படுகிறது.
வஜ்ர நாடி சூரிய பிரகாசமும் ரஜோகுணமும் உடையது, சித்தர்களது பாடலில் சோதிவிருட்சம் எனக்குறிப்பிடப்பட்டிருக்கும்.
வஜ்ர நாடியின் உள்ளே காணப்படும் நாடி சித்திர நாடி, சித்திர நாடி வெண்ணிறமானது, சத்துவ குணமுடையது. சித்தர் பாடல்களில் வெண்சாரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இதையே பிரம்ம நாடி எனவு குறிப்பிடுவர்.இதுவே யோகிகது இலக்கு, யோகசாதனையில் உண்மையில் இந்தபிரம்மநாடி மூலம் குண்டலியானஹா பிராணக்தியினை எடுத்துச் சென்று பிரம்மாந்திரத்தில் சேர்ப்பன் மூலம் காயத்தினை அழியாதநிலை உடையதாக்கலாம் என்பதுவே சித்தர்கது யோகஇரசியமாகும்.
இந்தசித்திரநாடியானது நேரடியாகஆறு ஆதாரங்களுடனும் எந்தவிதடையுமின்றி இணைந்துள்ளஒரேயொரு நாடியாகும். இதனூடாக நிரந்தரமாக பிராணக்தி செலுத்தப்பட்டால் சூஷ்மரீரத்தின் முழுமையானட்டுப்பாடும், அழிவற்றக்தியும், காய கற்ப நிலையும் கிடைக்கிறது.
இந்தஇரசியத்தை சித்தர்கள் அண்டத்திலுள்ளது பிண்டத்திலுண்டு என்ற சித்தர் மொழிக்கேற்ப பொதுவாகபொதிகை மலை, மேருமலை, தாமிரபரணி, சோதி விருட்சம் எனபுவியியல் அமைப்புகளுடன் உதாரம் கூறி, மூலிகைகள் ஆகஉவமானித்து பாடலில் கூறிச் சென்றுள்ளார்கள்.
இந்த காயகற்பத்தின் யோக இரகசியங்கள்  எப்படி சித்தர் பாடல்களில் எப்படி விளக்கப்பட்டுள்ளது என்பதனை நாளைய பதிவில் விரிவாக பார்ப்போம்.


Tuesday, November 29, 2011

நாடிகளூடான பிராண சுற்றோட்டம் (இந்திய யோகசாத்திர அடிப்படையில்)


இதனுடன் தொடர்புடைய பிற பதிவுகள்

  1. மனித உடலில் பிராண ஓட்டம் (சீன பிராண சாத்திர அடிப்படையில்)
  2. பிராண சாத்திர விளக்கம் (சீன அடிப்படையில்)
  3. பிராண சக்தியின் தன்மைகள் - 01
  4. பிராண சக்தியின் தன்மைகள் - 02
  5. போதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்
  6. நோக்குவர்மமும் தாரணா சக்தியும்: http://yogicpsychology-research.blogspot.com/2011/11/blog-post_18.html
  7. நோக்கு வர்மமும் பிராண சக்தியும் (நோக்கு வர்மத்தின் செயல்முறை இரகசியம்)

=========================================================================================

நேற்றைய பதிவில் சீன பிராண சாத்திரத்தின்படி பிராணனது ஓட்டம் எப்படி என்பதனைப் பார்த்தோம். இன்று இந்திய யோக சாத்திரத்தின் பிராண சுற்றோட்ட அடிப்படைகளான நாடிகள் பற்றிய  விளக்கத்தினைப் பார்ப்போம். 

பிராணன் ஸ்துல சூட்சும உடலில் செல்லும் கண்ணுக்கு தெரியாத இழைகள் நாடிகள் எனப்படும். இவை உடலில் காணப்படும் இரத்தம் செல்லும் குழாய்களோ, நரம்புகளோ இல்லை, சூஷ்ம உடலில் காணப்படும் பிராண ஓட்டப்பாதைகளாகும். சரீரத்தில் பல்லாயிரக்கணக்கான நாடிகள் அடங்கியுள்ளன, சித்தர்களின் கணக்குப்படி அவை 72000 ஆகும். இவை வாய்க்கால்கள் என்றால் பிராணனின் சேமிப்பிடம் சக்கரங்கள், இவை பிரதானமாக  ஆறாக (௦6) குறிப்பிடப்பட்டபோதும் இன்னும் பல உபசக்கரங்கள் உண்டு. யோக சாதனைக்கு பயன்படுபவை இந்த ஆறதரங்களே! இந்த நாடிகளின் பிராண ஓட்டத்திற்கும் மனம், உடல் ஆகியவற்றின் நிலைகளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. 

எல்லா நாடிகளும் உற்பத்தியாகும் இடம் காண்டம் எனப்படும். இது ஆசன வாய்க்கும் பிறப்பு உறுப்பின் அடிப்பாகத்திற்கும் இடையே மூலாதார சக்கரத்திற்கு மேலே அமைந்துள்ளது. யோக நுல்களில்  இதன் வடிவம் முட்டை வடிவானதாக குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து பல நாடிகள் உண்டானாலும் முக்கியமானவை 14 நாடிகள் முக்கியமானவை. அவை
  1. சுழுமுனை
  2. இடை
  3. பிங்கலை
  4. காந்தாரி
  5. ஹஸ்தஜிஹ்வை
  6. குஹு
  7. சரஸ்வதி
  8. பூசை
  9. சங்கினி
  10. பயஸ்வினி
  11. வாருணி
  12. அலம்பூசை
  13. விச்வோதரை
  14. யசஸ்வினி ஆகியனவாகும்.
இவற்றில் யோகப்பயிற்சிக்கு சுழுமுனையே ஆதாரமாகும். மேலே கூறப்பட்ட காண்டத்திலிருந்து உருவாகும் சுழுமுனை மூலாதார சக்கரத்தின் நடுமையத்துடன் இணைக்கப்படுகிறது. இது தற்கால உடற்கூற்றியலுடன்(Anatomy) ஒப்பிடுவதானால் மூள்ளந்தண்டு முடிவுறும் பகுதியில் குதிரை வால் எனப்படும் நரம்புபின்னல்கள் காணப்படும இடத்துடன் ஒப்பிடலாம். படம் பார்க்கவும். 


 
சூட்சும சரீரத்தின் கேந்திர ஸ்தானம் இந்த காண்டம் எனும் பகுதியாகும். இதிலிருந்து முள்ளந்தண்டுக்கு இணையாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி என்ற ஐந்து ஆதாரங்களும் ஆக்ஞா, துவாதசாந்தம் என்பன மூளையை சார்ந்தும் உள்ளன. இவற்றின் செயற்பாடு பிராணசக்தியினை சேமிபதாகும். இந்த சேமிப்பிலிருந்து நாடிகள் வழியாக உடலின் மேற்பரப்புவரை பிராண சக்தி கடத்தப்படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் பிராண சக்திகள் தங்கும் புள்ளிகள்தான் (Staying nodes) வர்மம் எனப்படும். 

இந்த புள்ளிகள் 108, அவற்றை கீழ்வருமாறு குருதேவர் அகத்தியர் கூறியபடி சக்கரங்களுடன் தொடர்புபடுத்தி பிரிக்கலாம்.
  1. தலை முதல் கழுத்துவரையுள்ள வர்மம் 25 இவை ஆக்ஞா, துவாதசாந்த சக்கரங்களை அடிப்படையாக கொண்டவை.
  2. இருகரங்களிலிமுள்ள வர்மங்க்கள் 14, இவை விசுத்தி சக்கரத்தினை அடிப்படையாக கொண்டவை. 
  3. கழுத்து முதல் நாபிவரையுள்ள வர்ம புள்ளிகள் 45 இவை விசுத்தி, அனாகத சக்கரங்களை அடிப்படையாக கொண்டவை.
  4. நாபியிலிருந்து குதம் வரையிலான வர்ம புள்ளிகள் 9, இவை மணிப்பூரகம், சுவாதிஷ்டானத்தினை அடைப்படையாக கொண்டவை.
  5. கால்களில் உள்ள வர்மங்கள் 15, இவை மூலாதாரத்தை அடிப்படையாக கொண்டவை. 


இந்த புள்ளிகள் மூலம் உடலிலுள்ள பிராணசக்தியின் அளவினை கூட்டலாம், குறைக்கலாம், தடுக்கலாம். சித்தர்கள் இந்த பிராண சுழற்சியின் பயன்பாட்டினை மூன்று கலைகளாக பிரித்து தந்திருக்கிறார்கள். 
  1. யோகம்
  2. மருத்துவம்
  3. போர்க்கலை
யோக கலையினை பின்பற்றவேண்டியவர்கள் கவனிக்க வேண்டியது  சுழுமுனை, இடகலை, பிங்கலை முதலான மூல நாடிகளுடான பிராண சுற்றோட்டத்தினை கட்டுப்படுத்துவதாகவும், மருத்துவம், போர்க்கலை அதனை வர்மசாத்திரமாகவும் பயன்படுத்துகிறது. உண்மையில் இந்த இடைத்தொடர்புகளை நன்கு கற்றறிவது இக்கலைகளில் தேர்ச்சி பெற உதவும். யோக சாதனை முக்கியமான பகுதி நாடிகளில் செயற்பாட்டை முழுமையாக அறிவதும் ஆகும். 

அடுத்த பதிவில் இது பற்றிய மேலதிக விபரங்களை பற்றி பார்ப்போம்! 

Monday, November 28, 2011

மனித உடலில் பிராண ஓட்டம் (சீன பிராண சாத்திர அடிப்படையில்)

இதனுடன் தொடர்புடைய பிற பதிவுகள்

  1. பிராண சாத்திர விளக்கம் (சீன அடிப்படையில்)
  2. பிராண சக்தியின் தன்மைகள் - 01
  3. பிராண சக்தியின் தன்மைகள் - 02
  4. போதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்
  5. நோக்குவர்மமும் தாரணா சக்தியும்: http://yogicpsychology-research.blogspot.com/2011/11/blog-post_18.html
  6. நோக்கு வர்மமும் பிராண சக்தியும் (நோக்கு வர்மத்தின் செயல்முறை இரகசியம்)

=========================================================================================
சீன பிராண சாத்திர அடிப்படையில் பிராண சக்தி உடலினுள் பாயும் பாதைகள் மெரிடியன்கள் எனப்படும், சித்தர்கள் இதனை நாடி என்பார்கள், எமது சித்தர்களின் கணக்குப்படி இந்த நாடிகள் 72000 ஆகும்.  சீன பிராண சாத்திரத்தின் படி பிரதான மெரிடியன்கள் 12 ஆகும், இவை குருதி சுற்றோட்டத்தொகுதி போன்றவை ஆனால் ஸ்தூல உடலில் இருப்பவை அல்ல. சூஷ்ம உடலில் காணப்படுபவை. ஒவ்வொரு மெரிடியனும் ஒவ்வொரு உள்ளுறுப்புடன் ஆரம்பித்து உடலின் மேற்பரப்பினூடாக பரவி உடலின் வெளிப்புறத்தில் முடிவுறுகின்றன. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கொருமுறை ஒரு மெரிடியனில் பிராண சக்தி அதிகமாகவும் மற்றவற்றில் குறைவாகவும் காணப்படும்.
அதேவேளை இந்த பிராணசக்தியில் யிங் (Ying) யங் (Yang) என இரண்டு தன்மை உண்டு என முன்னர் பார்த்துள்ளோம். இந்த தன்மை ஒவ்வொரு நான்கு மணித்தியாலத்திற்கு ஒருமுறை இந்த மெரிடியன்களில் மாறும். இந்த சமநிலை ஒரு நாள் முழுவதும் சரியாக நடக்கும் போது உடல் ஆரோக்கியமாக காணப்படும். இந்த பிராண சக்தியின் மாற்றம் பற்றிய அறிவு போர்க்கலையில், டிம் மாக் எனப்படும் வர்ம சாஸ்திரத்தில் தாக்குவதற்கு தேவையானதாகும்.
இந்த பன்னிரெண்டு மெரிடியன்களைவிடவும் மேலும் எட்டு மெரிடியன்கள் உள்ளன அவை "அபூர்வ மெரிடியன்கள்" என அழைக்கப்படும். இவை கிட்டத்தட்ட ஒரு சேமிப்பு கிடங்கு போன்றவை. அதாவது பிரதான மெரிடியன்களில் பிராண சக்தி அதிகமாகும் போது இந்த அபுர்வ மெரிடியன்களினுள் செலுத்தப்படும். இந்த அபூர்வ மெரிடியன்களில் நான்கு யிங் தன்மையுடையவை, நான்கு யங் தன்மையுடையவை. இந்த மெரிடியன்களின் பிராண ஓட்ட சமநிலையே ஒரு மனிதனது மன, உணர்ச்சி சமநிலைகளை பாதிக்கின்றது என்பது சீன மருத்துவ, யோக, போர்க்கலை இரகசியமாகும்.
உடலில் உள்ள 12 மெரிடியன்களது பட விளக்கம் கீழே காட்டப்பட்டுள்ளது.

சீன வைத்திய சாஸ்திரமறிந்த வைத்தியர் நோயாளி ஒருவரை இந்த மெரிடியன்களில் பிராணனது ஓட்டம் அதிகமாகவா அல்லது குறைவாகவா உள்ளது என்பதனை அறிந்து அதனை குறைக்கவோ, கூட்டவோ மூலிகை ஊடாக அல்லது அக்யுபஞ்சர் ஊடாகம் சரி செய்வார்.
இந்த அடிப்படையிலேயே சீன போர்க்கலையின் தந்திரங்கள் அடங்கியுள்ளது. அவை பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.
அடுத்த பதிவில் இந்த சீன பிராண சாத்திரத்திற்கீடாக இந்திய யோகசாத்திரத்தில் இவை எப்படி  விளங்கப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம்.

Saturday, November 26, 2011

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -08


----------------------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
  1. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -01
  2. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -02
  3. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -03
  4. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -04
  5. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -05
  6. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -06
  7. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -07

----------------------------------------------------------------------------------------------------------------------------------


ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

முக்கிய குறிப்பு: இந்த பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது,  படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------


76. கோரக்கர்: மனம் எப்படி விருத்திகளை அடைகிறது? எப்படி பிராணன் வந்து செல்கிறது? சந்திரன் எப்படி பிரவாகிக்கிறது? எப்படி காலம் நித்திரைக்கு செல்கிறது?

76. மச்சேந்திர நாதர்: மனம் இருதயத்தில் விருத்திகளைப் பெறுகிறது. பிராணன் நாபியிலிருந்து ஆரம்பித்து சென்று வருகிறது, தன்னில் நிலைப்பதால் சந்திரபிரவாகம் ஏற்படும். அதுவாகவே ஆவதால் காலம் நித்திரைக்கு செல்கிறது.

77. கோரக்கர்: எந்த சூன்யத்தில் ஒளி திருப்பமடையும்? எந்த சூன்யத்தில் வாக்கு எழும்? எந்த சூன்யம் மூவுலகிற்கும் சாரமாகும்? எந்த சூன்யத்தினால் ஒருவன் அனைத்தையும் கடப்பான்?

78. மச்சேந்திர நாதர்: ஆசை எனும் சூன்யம், பயமற்ற சூன்யம், சுய சித்தி எனும் சூன்யம், பற்று அற்ற சூன்யம்.

79. கோரக்கர்:எங்கே பசி எழுகிறது? எங்கே உணவு?எங்கே நித்திரை உதிக்கிறது? எங்கே மரணம்?

80. மச்சேந்திர நாதர்: ஆசைகளில் இருந்து பசி எழுகிறது, பசியிலிருந்து உணவு வருகிறது, உணவிலிருந்து நித்திரை, நித்திரையிலிருந்து ,மரணம்!

81. கோரக்கர்: எந்த தாமரை உட் சுவாசிக்கும் போதும் வெளி சுவாசிக்கும் போதும் ஹம்ஸத்தினை உண்டாக்குகிறது? எந்த தாமரையில் ஹம்ஸம் ஓய்வெடுக்கிறது? எந்த தாமரையில் பூஜிக்க வேண்டும்? எந்த தாமரையில் காணமுடியாததை காணவேண்டும்?

82. மச்சேந்திர நாதர்: நாபிக்கமலத்தில், ஹிருதய கமலத்தில், நடுக்கமலத்தில், தாமரகளுக்கு அப்பால்!

83. கோரக்கர்: எது சத்தியம்? குரு நாதா தயை கூர்ந்து கூறுவீர்களா? அதனை அடைவதற்கு மனதையும் சுவாசத்தையும் என்ன நிலையில் வைத்திருக்க வேண்டும்? ஒருவன் சம்ஸார ஸாகரத்தினை எப்படிக் கடப்பது?

84. மச்சேந்திர நாதர்: சாதாரண பார்வையில் இருந்து ஆன்ம பார்வையாகிய திவ்ய திருஷ்டியினை அடைவது சத்தியம், ஆன்ம விடுதலைக்கான ஞானத்தினை அடைவதை நோக்கி மனதை வைத்திருத்தல் வேண்டும், குருவும் சீடனும் ஒரே (சூஷ்ம) உடலை உடையவர்கள், ஆன்ம விடிதலை அடைந்தால் பின்பு வருகையிம் போதலும் நடைபெறாது.

85. கோரக்கர்: எங்கிருந்து உட்சுவாசம் வெளிசுவாசம் ஆரம்பிக்கிறது? எங்கே பரம ஹம்ஸம் வசிக்கிறது? எந்த இடத்தில் மனம் நிரந்தரமாக நிற்கும்?

86. மச்சேந்திர நாதர்: கீழிருந்து ஆரம்பிக்கிறது, உச்சியில் பரம ஹம்ஸம் வசிக்கிறது, சஹஜ சூன்யத்தில் மனம் சமமாயிருக்கும், நிலைத்திருக்கிறது, சப்தத்தினை உணரும்போது மனம் நிலையடையும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு:
நேற்றைய பதிவின் தொடர்ச்சியான சீன பிராண சாத்திரத்தின் அடிப்படை, நாடிகளைப்பற்றியும் அதனூடான பிராணனின் ஓட்டத்தினையும் பற்றிய பதிவு 28/11/11 திங்கட்கிழமை பதியப்படும். 

Friday, November 25, 2011

பிராண சாத்திர விளக்கம் (சீன அடிப்படையில்)

சீன போர்க்கலை, தியான யோகங்கள், மருத்துவம் என்பன இந்திய மரபினை அடிப்படியாக கொண்டு வளர்ந்தது என்பது இன்று வரலாற்று ஆசிரியர்கள்  பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோள், இவை ஆதாரத்துடனும் நிருபிக்கப்பட்டும உள்ளனஅதேவேளை  தமிழ் சித்தர்களது யோக விளக்கத்தினை நேரடியாக சித்தர் பாடல்களில் இருந்து விளங்க முற்படும் போது பல கருத்துவிவாதங்கள், எது சரி எது பிழை என்ற முரண்பாடுகள் ஆகியன பெரும் பிரச்சனையாகும், இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக எமது முன்னோரிடம் இருந்து சென்ற வித்தைகள் மற்றைய கலாச்சாரத்தில் எப்படி வளர்ந்தது என்ற மூலங்களை அறியும் போது எமது கேள்விக்கு சில விடைகள் கிடைக்கலாம். இந்த அடிப்படையில் பிராண சக்தி பற்றி விளங்கிகொள்வதற்கு சீன யோக அடிப்படைகள் இங்கு பகிரப்படுகிறது. இது பற்றிய தங்கள் மேலான கருத்துக்களை கூறவும்.
சீன மொழியில் பிராணனைக் குறிக்கும் சொல் "சீ - Chi" என்பதாகும். சீனர்கள் பிரபஞ்சத்தின் மூன்று சக்திகள் மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர், சொர்க்கம், பூமி, மனிதன் என்பனவே அவையாகும். இந்த முன்றும் இயங்குவதற்கு அவசியமானது "சீ" எனப்படும் பிராண சக்தியாகும். இவற்றுள் சொர்க்கப் பிராணசக்தி எல்லாவற்றிலும் உயர்ந்தது. இதுவே  சூரியன், சந்திரன்,நட்சத்திரங்கள் என்பவற்றிலிருந்து பூமிக்கும், மனிதனுக்கும் கிடைக்கும் சக்தியாகும். இந்த சொர்க்க பிராணசக்தியினாலேயே பூமியின் இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் பிராணசக்தி எப்போதும் சமனிலையில் இருக்க முற்படும். இந்த சமநிலை பாதிக்கப்படும் போது அதனை சீர் செய்வதற்காக ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றங்கள், நில நடுக்கங்கள் என்பனவாகும். சொர்க்கப் பிராணசக்தியிலிருந்து பூமி தனது பிராண சக்தியினைப் பெற்று சமநிலையடைகிறது. இந்த சொர்க்கப் பிராண சக்தியிலும் பூமிப் பிராணனிலிருந்தும  உயிர்கள் பிராண சக்தியினை பெறுகிறது. இவற்றுக் கிடையிலான சமநிலையே எல்லவற்றிற்குமிடையிலான வாழ்க்கை, இந்த பிராணனை இழக்கும் போது அழிவு, குழப்பம்   அல்லது மரணம் உண்டாகிறதுஅடுத்து இந்த "சீ" எனப்படும் சக்தி எல்லவற்றறுடனும் கலந்து காணப்படுவது, அதாவது வெப்பசக்தியை எடுத்தால் அதனுடன் உள்ள பிராணன்  "ரீசீ" எனப்படும். இதுபோல் ஒவ்வொரு பௌதீக சக்திகளுடனும் கலந்துள்ள மூல சக்திதான் பிராண சக்தி எனது சீனபிராண சக்தியினுடைய அடிப்படை  விளக்கமாகும்.
சீன யோக அடிப்படையில் பிராணக்தியினை ப்படுத்த முனைபர் இந்தப் ந்தகொள்கையினை விளங்கிக்கொள்வது என்பது அவசியமானது.
மனித உடலில் இந்த பிராண சக்தியின் பயன்பாடு என்னவென்பதே அனைவரது ஆர்வமும் உண்மையான் நோக்கமும் கூட. ஆதலால்  மனித உடலில் இந்த பிராண சக்தி எப்படி செயல்படுகிறது என்பதனை இந்தப் பதிவுகளில் அறிந்து கொள்வோம்.
சீன மொழியில் "சீ" என்பது இரு எழுத்துக்களால் குறிக்கப்படுகிறது, முதலாவது எழுத்து "வெறுமையினையும்" இரண்டாவது எழுத்து "அக்கினி" யினையும் குறிக்கிறது. அதாவது "யின் –Yin" "யங் - Yang" எனப்படு இருமைகளால் இந்த பிராண சக்தி ஆளப்படுகிறது. இவற்றைதான் இந்திய யோக மரபில் "இடகலை" "பிங்கலை" என்பர்.
"யின்" பெண்மை, சந்திரன், வெறுமை, குளுமையினையும், "யங்" ஆண், சூரியன், நெருப்பினையும் குறிக்கும்.
சீன மருத்துவ கோட்பாட்டுகளின் படி உள்ளுறுப்புகளில் "யங்" ஆகிய நெருப்புதன்மை அதிகரித்தோ, குறைந்தோ காணப்படக்கூடாது. இரண்டும் சமநிலையில் இருக்கும் போது ஆரோக்கியம், கூடிக் குறையும் போது நோய் ஏற்படும். இதனை அதிகரிப்பதோ குறைப்பதோதான் சீன மருத்துவமுறைகளின் அடிப்படை சிகிச்சை கோட்பாடு.
மனித உடலில் இந்த "சீ" பிராணசக்தியின் தொழிற்பாடு சொர்க்கப் பிராணசக்தியாலும், பூமிப்பிராணசக்தியாலும் ஆளப்படுகிறது. இதனது அளவே ஒருவனது விதியினை தீர்மானிக்கிறது. இந்த இடத்தில் சோதிடவியலில் கிரகங்களின் தாக்கத்தினை இந்த சொர்க்க பிராண சக்தியுடன் ஒப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒவ்வொரு கிரகத்தின் தாக்கமும் சீன பிராண சக்தி தத்துவத்தின் படி சொர்க்கப் பிராணனின் காரணியாககருதலாம்.
மனிதன், பூமி, பிரபஞ்சம் ஆகிய இந்த பிராண சக்திகளின் அடிப்படைத்தொடர்புகளை அறிவதன் மூலம் நடக்க இருப்பதை அறியும் கலைதான் " சிங் - I Ching" எனப்படும் சீன சோதிட முறை.
சீனர்கள் ஆயிரம் ஆயிரமாண்டு காலமாக தமது அனுபவங்களை எந்தவித திரிபுமின்றி பதிந்து வைத்துள்ளார்கள், அதே நேரம் தமது கலாச்சார அறிவினை யாரிடமும் விட்டுக்கொடுத்து மறக்கவுமில்லை என்பதற்கு இந்த பிராண வித்தை பற்றிய அவர்களது அறிவு ஒரு சான்றாகும்.
அத்துடன் ஆயிரம் வருடங்களாக சொர்க்கப்பிராணன், பூமி, இயற்கை, மனிதன் ஆகியவற்றின் தொடர்புகளை பதிந்து "மாற்றங்களின் புத்தகம் - Book of change - யீ சிங்" எனப்படும் நூலாக ஆக்கி வைத்துள்ளனர். இதன் படி பிராண சக்தியின் அளவினை கணிப்பிடும் முறையினையும் உருவாக்கு வைத்துள்ளனர். இதுவே பெங்சுயி போன்றவற்றில் பயன்படுகிறது. பெங் சுயி எனப்படும் சீனா வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை இதுவேயாகும்.
சீன யோக மரபு நிலைத்து நிற்பதற்கும , ஏற்றுக்கொள்ளக்கூடிய கலையாக இருப்பதற்கு அனைத்து இடைத்தொடர்புகளும் சரியாக கோர்க்கப்பட்டுள்ளமை  ஒரு மூலகாரணமாகும்.
இந்த "சீ" பிராண சக்தியினை கட்டுப்படுத்தும் முறை உடலசைவுகளுடன் கூடிய சுவாசப்பயிற்சி, ஆம் இது பிராணாயாமத்துடன் கூடிய ஆசனப்பயிற்சியின் இன்னுமொரு வடிவம்தான். ஆனால் சீனப் பயிற்சியில் இந்த பயிற்சிகளுக்கான தொடர்புகள் (Continuity) மிக அருமையாக இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்த பதிவில் சீன பிராண சாத்திரத்தின் அடிப்படையான நாடிகளைப்பற்றியும் அதனூடான பிராணனின் ஓட்டத்தினையும் பற்றி பார்ப்போம். இதுவே அக்யுபஞ்சர், அக்யுபிரசர், டிம் மாக் எனப்படு சீன வர்மம் ஆகியவற்றிற்கான அடிப்படையாகும்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...