குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Sunday, August 03, 2025
திரிகுணங்களும் சினிமாப்பாடல்களும்
Friday, August 01, 2025
திரிகுணங்களும் தந்திர சாஸ்திரமும்
திரிகுணங்களும் தந்திர சாஸ்திரமும்
******************************************திரிகுண தத்துவம் சாங்கிய தத்துவத்தில் முதல் முதலில் விளக்கப்பட்டிருந்தாலும், தந்திர சாஸ்திரத்திற்குள் ஆழமான மனோதத்துவ, சடங்கு மற்றும் தெய்வ உருமாற்ற சாதனையின் அடிப்படைத் தத்துவமாகப் பயன்படுகிறது.
தந்திரத்தில், இந்த குணங்கள் வெறும் பொருள் இயற்கையின் (பிரகிருதி) தன்மைகள் மட்டுமல்ல, தெய்வீகத்தின் இயக்க சக்தியான சக்தியின் அடிப்படை செயற்படு ஆற்றல்களாக கொள்ளப்படுகிறது.
காயத்ரி தந்திரம், காளி தந்திரம் மற்றும் பல்வேறு ஸ்ரீவித்யா தந்திரங்களில் முக்குணங்குணங்கள் மூல சக்தியாக தேவியின் அம்சங்களாக அண்டத்தின் சிருஷ்டி - படைப்பு, பிணைப்பு (பந்தம்) மற்றும் மோக்ஷத்திற்கான அடிப்படைகளாக கொள்ளப்படுகிறது.
தந்திரம் அடிப்படை சாங்கிய கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் ஒரு சாக்த மற்றும் அத்வைத கண்ணோட்டத்தை சேர்க்கிறது:
திரிகுணங்கள் மஹாசக்தி அல்லது மஹாமாயாவின் விபூதிகள் (வெளிப்படையான சக்திகள்), சுயாதீனமான உண்மைகள் அல்ல.
ஒவ்வொரு குணமும் தீயதாகவோ அல்லது பிணைப்பதாகவோ இல்லை, ஆனால் சாதகரின் ஆன்மீக மாற்றத்தில் (பரிவர்த்தனம்) ஒரு கருவியாக மாறுகிறது.
சத்வத்தை வளர்ப்பது மட்டுமல்ல, சாதனையின் மூலம் மூன்று குணங்களையும் (குணாதித-ஸ்திதி) கடப்பதே தந்திர சாஸ்திரத்தின் குறிக்கோள்.
“கு³ணத்ரயம் இத³ம்ʼ மாயா, யத்ர தே³வீ ரமதே ஸதா³”
"இந்த மூன்று குணங்களும் மாயயை உருவாக்குகின்றன, அதன் மூலம் தேவி எப்போதும் விளையாடுகிறாள்."
- திரிபுரராஹஸ்ய, ஞானகண்டம்
முக்குணங்கள் - திரிகுணங்கள் ஒரு புரிதல்.
Friday, July 11, 2025
மந்திர ஸாதனை துரிதமாக பலனளிக்க வழி
நீங்கள் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்த விரும்புகிறீர்கள், இதற்கு ஒரு தொழில் சார்ந்த நிபுணரை அழைக்கிறீர்கள். அவரிடம் உங்கள் வீட்டைப் பற்றியோ, அதன் அமைப்பற்றியோ, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியோ எதையும் சொல்லாமல் வெறுமனே வீட்டை அழகுபடுத்தித் தரும் படி கேட்கிறீர்கள். இப்போது அந்த நிபுணர் அதிக நேரம் செலவிட்டு உங்கள் வீட்டை முழுமையாக படித்து அதன்படி திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இதற்கு அதிக நேரமும் கட்டணமும் செலவாகும்.
நீங்கள் உங்கள் வீட்டை முழுமையாகக் கற்று, எதைத் திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் பட்டியலிட்டு அதில் நீங்களே திருத்தக்கூடியவற்றை நீங்கள் செய்துகொண்டு மிகுதியை நிபுணரிடம் கையளித்தால் வேலை வேகமாகவும், செலவும் குறைவாகவும் இருக்கும்.
இதே தத்துவம்தான் நாம் மந்திர சாதனையில் எமது கர்மங்கள் நீங்க, விருப்பங்கள் நிறைவேறவும் பயன்படுகிறது. எம்மிடம் சங்கல்பமும், சுய ஆய்வும் அதன் மூலம் எமது பலகீனங்களை நீக்குவதற்கு உறுதியும் இல்லாத போது பலன் பெற அதிக மந்திர ஜெபமும், நீண்ட சாதனையும் தேவை. அதேவேளை உறுதியான சங்கல்பமும், தொடர்ச்சியான சாதனையும், எமது பலவீனங்களை ஆராய்ந்து அவை நீங்கவேண்டும் என்ற இச்சாசக்தியையும் செலுத்தும் போது சாதனை துரிதமாகப் பலனளிக்கும் !
ஆகவே துரிதமாகப் பலன் பெற நீங்கள் உறுதியாக உங்கள் சங்கல்பசக்தியை பிரயோகிப்பதும், அது நடைபெறுவதற்கு உங்களில் தடையாக இருக்கும் பண்புகளை நீக்குவதும் அவசியம்! இல்லாவிடில் நீண்டகாலம் தொடர்ச்சியாகச் சாதனை செய்ய வேண்டியிருக்கும். அடிப்படையில் தமாஸீக புத்தியில் இருப்பவர்கள் நீண்டகாலம் சாதனை செய்து பலன் கிடைக்கவில்லை என்றவுடன் ஸாதனையில் சோர்ந்து விலகிவிடுவார்கள்.
Saturday, July 05, 2025
பக்தியுடன் செய்யப்படும் மந்திர சாதனை ஏன் துரிதமாகப் பலனளிக்கும்?
பக்தியுடன் செய்யப்படும் மந்திர சாதனை ஏன் துரிதமாகப்
பலனளிக்கும்?
பக்தி என்பது தனது அனுஷ்டான தெய்வத்திடம் முழுமையாக
மனம், புத்தி, சித்த, அங்காரங்களைச் சரணாகதி அடையச் செய்வது. இப்படியான நிலையில் மந்திர
ஜெபத்தைத் தவிர வேறு எதுவும் சித்தத்தில் விருத்தியாகாது. ஆகவே குறைந்தளவு ஜெபத்தில்
நாம் சங்கல்பித்த காரியம் ஜெயமாகும்.
அதீத ஆராய்ச்சி புத்தியுடையவர்கள், கேள்வி கேட்டு
தமது மனதைப் பழக்கியவர்கள், சந்தேகபுத்தியுள்ளவர்களுக்கு பக்தி இலகுவில் வாய்க்காது.
இவர்களது புத்தி எப்போது தர்க்கத்தையை நம்புவதால் தாழ் மனதின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட
நுண்மையான உயர் தெய்வீக ஒளி மனதின் செயல்களை இவர்களால் புரிந்துகொள்ள முடியாததால் மந்திர
சாதனையில் வெற்றிபெற கஷ்டப்படுவார்கள்.
சிலர் தமது சித்த விருத்திகளால் விபரீத எண்ணங்களை
உருவாக்கிக் கொள்வதும் உண்டு! ஆகவே உங்கள் தர்க்க புத்தியை சற்று அடக்கி பூரண சரணாகதியுடன்
பக்தியுடன் மந்திர சாதனை செய்வீர்களாக இருந்தால் துரிதமாகப் பலன் காணலாம்!
நாம் நினைக்கும் காரியங்கள் எமக்கு நடக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?
நாம் நினைக்கும் காரியங்கள் எமக்கு நடக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?
குறித்த காரியம் நடைபெறுவதற்கான தகுந்த சித்த சம்ஸ்காரங்கள்
எம்மில் இல்லாதது,
சம்ஸ்காரம் இருந்தாலும் அதை எப்படிச் செய்வது என்ற
தெளிவு புத்தியில் இல்லாமல் இருப்பது,
அப்படியிருந்த்தாலும் நாம் செய்த சில பாப வினைகள்
அந்த சித்த சம்ஸ்காரங்களை செயற்படவிடாமல் தடுப்பதாலும்,
தகுந்த சித்த சம்ஸ்காரங்கள் இருந்தாலும் அதைச்
செயற்படுத்த தகுந்த சக்தி இல்லாமல் இருப்பதாலும்,
சித்தத்தில் சம்ஸ்காரம் இருந்தாலும் தகுந்த ஆங்காரம்
இல்லமையால் அந்தச் செயலைச் செய்வதற்குரிய உத்வேகம் எம்மில் இல்லாமலும் இருப்பதால் எம்மால்
நாம் நினைக்கும் காரியங்களில் வெற்றியடைய முடிவதில்லை.
மந்திரம் என்பது மனனம் செய்யும் போது எமது மனதைக்
காப்பது என்று அர்த்தம்; மந்திர சாதனை மூலம் நாம் எமது மனதின் சலனத்தைக் குறைத்து சித்தம்,
புத்தி, ஆங்காரம் ஆகியவற்றை நமது காரிய சாதகத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கலாம்.
நாம் செய்யும் சங்கல்பம் சித்தத்திற்கு தகுந்த சமஸ்காரத்தையும், புத்தியிற்கு அதை எப்படிச்
செய்ய வேண்டும் என்ற தெளிவையும், ஆங்காரத்திற்கு அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற
உறுதியையும் தரும். பின்னர் மந்திர ஜெபத்தின் மூலம் இதற்குரிய தெய்வீக ஆற்றல் எமது
அந்தக்கரணங்களுக்குப் பெறப்படும்.
ஒருவனுக்கு காரிய சாதகமாகுவதற்குரிய ஜெபக்கணக்கு
அவனது சித்த சமஸ்காரத்தின் தன்மையைப் பொறுத்து இருக்கிறது. அழுக்கு நிறைந்த, பாப சம்ஸ்காரங்கள்
நிறைந்த சித்தமாக இருந்தால் அதிக மந்திர ஜெபமும், தூய்மையனா, பாப சம்ஸ்காரங்கள் அற்ற
சித்தமாக இருந்தால் குறைந்தளவு ஜெபத்திலும் காரியம் சாதகமாகும்.
Friday, July 04, 2025
அனுஷ்டானம் மந்திர சாதனை எப்படிப் பலனளிக்கிறது?
பலருக்கு உபாசனை, அனுஷ்டானம், ஸாதனை எப்படி தமது
சங்கல்பங்களை நிறைவேற்றுகிறது என்பது பற்ற்றிச் சரியான புரிதல் இல்லை. தாம் மந்திரம்
ஜெபித்தவுடன் உடனே கடவுள் தமது வேலைக்காரன் போல் எல்லாவற்றையும் காலடியில் கொண்டு வந்து
வைத்துவிடுவார் என்று நினைக்கிறார்கள்.
நாம் உபாசிக்கும் தெய்வம் எம்மை விட கணக்கிலடங்கா
ஆற்றலும், அறிவுசக்தியும் நிறைந்த உயர்ந்த சக்தி, ஆகவே சாதாரணமாக அதிகாரம் படைத்த ஒரு
அதிகாரியிடம் சென்று நாம் விரும்பியவாறு லஞ்சம் கொடுத்து அவரை விலைக்கு வாங்கி எமது
காரியம் சாதித்துக்கொள்ளலாம் என்பது போன்ற முட்டாள் சிந்தனை இருக்கக்கூடாது.
எல்லா தெய்வ சக்திகளும் பிரபஞ்ச நியதியை ஒட்டியே
தமது ஆற்றலையும், அறிவு சக்தியையும் வழங்கும். அதை நாம் பெற்று எமது செயல் சக்திமூலம்
எமது காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.
ஒரு காரியத்தை சங்கல்பித்து நாம் அனுஷ்டானம் செய்தால்
முதலில் அந்த தெய்வ சக்தி எமது அறிவில் தெளிவையும், பின்னர் உடல், மனதில் அந்தக்காரியத்தை
ஆற்றுவதற்குரிய சக்தியையும் வழங்கும். இந்த இரண்டும் நடைபெற்றவுடன் அந்த சாதகன் தான்
சங்கல்பம் செய்த காரியத்திற்குரிய செயலில் இறங்கி முயற்சிக்க காரியம் சிறப்பாக நடைபெறும்.
சாதகன் தனது சோம்பேறித்தனத்தால் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் செய்த அனுஷ்டானத்தின்
சக்தி வீணாகலாம்.
ஆகவே நீங்கள் செய்த சங்கல்பத்திற்குரிய செயலை முயற்சிப்பது
கட்டாயமாகும்.
Sunday, June 29, 2025
பூஜை - உபாஸனை என்றால் என்ன?
பூஜை
என்பது என்ன நாம் சிறந்த ஒருவரின் அருகில் செல்வதன் மூலம் சிறப்பினைப் பெறுவது. நாம்
ஒரு அமைச்சரின் நட்பினைப் பெற்றால் அந்த நட்பின் பலனாக நாம் விரும்பியோ விரும்பாமலோ
எமக்கு சில செல்வாக்கு, நன்மை அதிகாரம் வந்து சேரும். அதைப்போல நாம் ஏதாவது ஒரு பிரபஞ்ச
மகாசக்தியை பூஜிப்பதன் மூலம் அந்த மகாசக்திக்கு அண்மையில் நாம் இருப்பதால் எமக்கு அறிந்தோ
அறியாமலோ சில சிறப்பியல்புகள் வந்து சேரும்.
உபாசனை
என்பது நாம் சிறப்பான ஒருவரின் அருகில் இருந்து பழகும் போது அவரது பண்புகளாலும், ஆற்றலாலும்
நாம் உருமாறி அவரைப்போன்ற சிறப்பான குணவியல்புகளைப் பெறுதல். எப்படி தீயிற்கு அருகில்
செல்லும் போது எமது உடலில் சூடு உருவாகுவதுபோல், பனிக்கட்டிக்கு அருகில் செல்லும் போது
உடல் குளிச்சியடைவது போல் உயர்ந்த தெய்வசக்தியிற்கு அருகில் செல்லும் போது எம்மிக்
அந்த தெய்வசக்தியின் பண்புகள் உருவாகி நாம் தெய்வ குணமுடியவர்களாக மாறுதல் உபாசனை எனப்படும்.
ஆகவே
நீங்கள் எந்தத் தெய்வத்தை பூஜை செய்தாலோ, உபாசனை செய்தாலோ இந்த மாற்றம் உங்களில் வரவேண்டும்.
இப்படி மாற்றம் வரும் போது மனம் சுத்தியாகி ஏகாக்கிரம் அடைந்து தியான சமாதி நிலையை
அடைவதன் மூலம் உண்மையான் பூஜை, உபாசனையின் இலக்கு அடையப்படுகிறது.
நாம்
ஒரு இலட்சியமாக தெய்வீக சக்தியை உபாசிப்பதன் மூலம் அந்த இலட்சிய தெய்வீக சக்திகளின்
பண்புகளை பெறுவதே இந்த இறைசாதனையின் நோக்கமாகும்.
காயத்ரி
உபாஸனை செய்தால் காயத்ரி சித்த சாதனையில் கூறப்பட்டுள்ள பண்புகள் உங்களில் விழிப்படைந்துள்ளதா
என்பதை ஆராயுங்கள், எந்தப் பண்பு விழிப்படையவில்லை என்பதை அறிந்த அதற்காக உங்களில்
இருக்கும் அசுத்த நிலைப் பண்புகள் எவை என்பதைக் கண்டுபிடியுங்கள்.
காயத்ரி
உபாஸனையின் பயனாக பிரபஞ்ச ஒழுங்குடன் ஒன்றி புத்தி செயற்படும் நிலை வாய்க்கிறது
மகாகணபதி
உபாஸனையினூடாக புலங்கள், தத்துவங்களைக் கட்டுப்படுத்தி அன்னையின் பேராற்றலைத் தாங்கும்
உடலும் மனமும் வாய்க்கிறது.
மகாலக்ஷ்மி
உபாசனையினூடாக இலட்சியமுடைய செல்வம், அருள் நிறைந்த வாழ்க்கை வாய்க்கிறது. ஸாதகன் இலட்சியமுடையவனாகிறான்.
இராஜசியாமளை
உபாசனையால் மனதின் எவ்வகை விருத்திகளிலும் தோயாத புத்தியோக வாழ்க்கையும், அனைத்தையும்
வசப்படுத்திய வாழ்வும் அமைகிறது.
புத்தியோக
வாழ்வில் வெற்றிபெற்றவனுக்கு மகாவாராஹி உபாசனை புலன் கள் அடங்கிய ஆத்ம சைதன்ய அனுபவம்
கிடைக்கிறது.
இவ்வளவும்
சாதித்தவனுக்கு அன்னையின் உண்மைச் ஸ்வரூபமான ஸ்ரீ லலிதையின் உபாஸ்னை கிட்டுகிறது.'
ம்ருயுஞ்ஜெய உபாஸனை ஒருவனுக்கு அம்ருதீகரண உடலையும், ஆரோக்கியத்தையும், பிராப்த கர்மத்தால் ஏற்படும் அகால மரணத்தைத் தடுத்து இறைத் தன்மையை உணரும் வாழ்வின் இலட்சியத்திற்கு தேவையான ஆயுள் ஆரோக்கியத்தைத் தருக்கிறது. எப்படி வெள்ளரிப்பழம் பழுத்தவுடன் கொடி தானாக விடுகிறதோ, அதுபோல் ஒருவன் ஞானம் பெற்றவுடன் பற்றுக்கள் தானாக அறும் என்ற ஞானத்தையும், ஆன்மீகம் என்ற போர்வையில் வாழ்க்கையின் கடமையிலிருந்து ஓடாமல் சாதிக்கும் உடல் உறுதியைத் தருகிறது.
ஸாதனையின் நிலைகள்
சாஸ்திரங்கள் கடவுளையும் தெய்வீகக் கொள்கையையும் (பகவத்-தத்வா) நித்தியமாகப் பரிபூரணமாகவும், தன்னை வெளிப்படுத்துவதாகவும் விவரிக்கின்றன. ஆகவே சாதனை மற்றும் பக்தி செலுத்துதல் என்பவை நாம் கடவுளை "படைப்பதற்காக" அல்ல, மாறாக அவரை உணர்வதற்கான தடைகளை நீக்குவதற்காக மட்டுமே.
சைதன்ய சரிதாமிர்தத்தில் கூறப்பட்டுள்ளபடி:
"நித்ய-சித்த கிருஷ்ண-பிரேம சாத்ய கபூ நயா,
ஷ்ரவணாதி சுத்த-சித்தே கரயே உதய"
"கிருஷ்ணர் மீதான நித்திய தெய்வீக அன்பு ஒருபோதும் முயற்சியின் விளைவாகாது; அது கேட்கும் மற்றும் அது போன்ற பயிற்சிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட இதயத்தில் தன்னிச்சையாக விழித்தெழுகிறது."
பதஞ்சலியும் இதை எதிரொலிக்கிறார்:
"நிமித்தம் அப்ரயோஜகம் ப்ரக்ருதிநாம் ஆவரண-பேதஸ் து ததஹ் க்ஷேத்ரிகவத்"
"வெளிப்புற பயிற்சி காரணம் அல்ல, ஆனால் தடைகளை நீக்குவது மட்டுமே - ஒரு விவசாயி தடைகளை அகற்றி தண்ணீர் பாயச் செய்வது போல."
எம்முள் இருக்கும் இறைத்தன்மையை அறியமுடியாமல் கீழ்வரும் இந்த மறைப்புகள் அல்லது திரைகள் (ஆவரணங்கள்) பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
- தூய்மையின்மை
- அறியாமை
- ஆசை
- ஏக்கம்
- பற்று
- ஈகோ
- தனிப்பட்ட இன்பத்திற்கான பேராசை
- கௌரவத்திற்கான மாயை
அனைத்து ஆன்மீக மரபுகளும் இந்தத் தடைகளை நீக்குவதற்கான வழிகளையே ஸாதனை முறைகளாகப் பரிந்துரைக்கின்றன.
மூடிகளை அகற்றுவது மட்டுமே ஆன்மாவின் வேலை. அவை அகற்றப்பட்டவுடன், கடவுளின் தன்னை வெளிப்படுத்தும் ஒளி தானாகவே பிரகாசிக்கிறது.
எனவே, ஆன்மீக துறைகள் பின்வருமாறு:
தீர்த்த யாத்திரை
சுய கட்டுப்பாடு
மந்திர உச்சாடனங்கள்
ஞானிகளின் சங்கம் (சத்சங்கம்)
பரிகார செயல்கள்
மற்ற உயிரினங்களுக்கு சேவை
போன்ற சுத்திகரிப்பு செயல் முறையைப் பரிந்துரைக்கிறது. இப்படி சுத்தி நிகழ்ந்தவுடன் மனம் ஒருமைப்பட்டு தாரணை, தியான, சமாதி நிலை வாய்க்கும். இப்படி சமாதி நிலை வாய்க்கும் போது எமக்குள்ளிருக்கும் தெய்வீகத்தன்மை வெளிப்பட ஆரம்பிக்கும்.
Friday, June 27, 2025
ஸாதனா என்றால் என்ன?
ஒருவன் தன்னை செம்மையுறுத்திக்கொள்ள இலகுவான, அழகான இயற்கையான வழி ஸாதனை எனப்படும். ஒருவன் தன்னை செம்மையுறுத்திக்கொள்வது என்பதன் இலக்கணம் இருவன் தெய்வீகத் தன்மை பற்றி உணர்ந்து தன்னில் அந்த தெய்வீகத் தன்மையை வளர்த்தலாகும்.
எது உடலை, மனதை, ஆன்மாவை
வளர்ச்சியுறச் செய்து பரிணாமத்தில் உயரச் செய்கிறதோ அதை ஸாதனை என்கிறோம்.
உடல் ஆரோக்கியமாகவும்,
உறுதியாகவும், பக்குவமுடையதாகவும் மாறும் போது,
மனம் அறிவும், அன்பும்,
ஆனந்தமும் நிறைந்ததாகும் போது,
இந்தப் பிரபஞ்சத்தின்
படைப்புகளை அனைத்தையும் தெய்வீகமாகக் காணும் ஆற்றல் வாய்க்கும் போது நாம் எல்லோருடைய
நன்மைக்காகவும் பாடுபட ஆரம்பிக்கிறோம்.
இத்தகைய தன்மையை உங்களில்
உருவாக்குவதுதான் ஸாதனை.
இந்த ஸாதனையின் உண்மையான
அர்த்தம் புரியும் போது கடவுளை நம்பமாட்டேன் என்பவர்களும் மனித குலத்திற்கு இப்படியொரு
நன்மையினைத் தரும் ஸாதனை மார்க்கத்தினை ஏற்றுக்கொள்வார்கள்.
எவருக்கு ஆரோக்கியமான
உடலும், ஆனந்தமான மனமும் தேவையில்லை என்று சொல்வார்கள்.
இயற்கையின் தெய்வீக விதிகளைப்
புரிந்துகொண்டு அதன் படி வாழ்வதன் மூலம் எமது வாழ்க்கை வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
இப்படி இயற்கையின் தெய்வீக விதிகலைப் புரிந்து அதன் படி நடப்பதற்கே ஸாதனை மார்க்கம்
வகுக்கப்பட்டுள்ளது.
யார் வாழ்க்கையில் அமைதியும்,
வளர்ச்சியையும் வேண்டுகிறார்களோ அவர்கள் உண்மையில் தம்மையறியாமல் ஸாதனை மார்க்கத்தில்
இருக்கிறார்கள். அவர்கள் விதிகளைச் சரியாகப் புரிந்துகொள்லும் போது இன்னும் வேகமாக
முன்னேறி பேரமைதியையும், இயற்கையின் விதிகளைப் புரிந்த ஞானத்தினையும் அடைவார்கள்.
நாம் சாஸ்திரங்களினதும்,
குருவினதும், தெளிந்த விவேகத்தினதும் உதவி மூலம் கீழ்வரும் கேள்விகளுக்கு பதிலைப் பெற்று
எம்மைச் சாதனை மார்க்கத்தில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்:
எனது வாழ்க்கையின் உண்மை
இலட்ச்சியம் என்ன?
நான் எங்கிருந்து வந்தேன்?
எனது வாழ்க்கையின் மிக
உயர்ந்த இலட்சியம் என்ன?
எப்படி வாழ்க்கையில்
மேன்மையையும், செம்மையையும் அடைந்து அமைதியுடைய வாழ்க்கையை வாழ முடியும்?
விவேகமுள்ளவனுக்கு தனது
ஆராய்ச்சிமூலம் செல்வம், உற்றார் உறவினர்கள், இன்பங்கள், பட்டம், பதவி இவையெல்லம் தற்காலிக
சந்தோஷத்தினை மாத்திரமே தருகீறது என்பதை அறிந்து கொள்வான். இவையெல்லாம் எமது இதயத்தில்
ஆழத்திலிருந்து வரும் அமைதியின் தேடலுக்கு பதிலளிக்க முடியாது.
எமது முனிவர்களும் ரிஷிகளும்
தமது சுய அனுபவத்தின் மூலம் இறைவனை எம்முள் அறிதலே மிக உயர்ந்த இன்பம் என்பதை அனுபவித்து
எமக்கு பகிர்ந்துள்ளனர்.
தன்னை அறிந்து தலைவனாகிய
இறைவனை அறிதலே வாழ்வின் மேலான இலட்சியம்.
இந்த இலட்சியத்திற்கு
எமது உடல், மனம், உயிர் ஆகியவற்றை ஒருங்கிணைத்தலே சாதனை.
நாம் உண்மையறிவுடனும்,
குருவின் துணையுடனும்,
இந்தப் பிரபஞ்சம் இயங்கும்
பரம தத்துவத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அதை அடைவதற்கான வழிகளைக்
கற்க வேண்டும்,
அதை வாழ்வில் கடைப்பிடிக்க
வேண்டும்.
அதன் மூலம் வாழ்வின்
உண்மையான இலட்சியத்தை அடைய வேண்டும்.
Saturday, June 21, 2025
தந்திர சார வகுப்பு பாடங்கள்
1) தந்திராச்சாரம் என்றால் தந்திர சாஸ்திரத்தை எமது வாழ்வில் கடைப்பிடிக்கும் வாழ்வியல் முறை எனப்படும். இது ஒவ்வொரு ஆன்மாவின் பரிணாமத்திற்கு தக்க ஏழு அல்லது ஒன்பது படிகள் இருப்பதாக மஹா நிர்வாண தந்திரம் கூறுகிறது.
2) வேதாச்சாரம் - இது கிரியைகள் மூலம் ஒரு சாதகன் தனது வாழ்வில் ஒரு சீரான ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்கும் வழி. இது புறச்சுத்தம், ஒழுங்கு, வர்ணம் இவற்றை முதன்மையாகக் கொண்டு ஆன்மா தன்னை ஒழுக்கத்திற்கு உட்படுத்திக்கொள்வது. அனைத்து ஆன்மாக்களும் வேதாச்சாரம் கடைப்பிடிப்பதன் மூலம் பரிணாமத்தில் தெய்வீகத்தன்மையை அடைவதற்குரிய அடிப்படைத் தகுதியை அடைகிறது. இதுவே அத்திவாரம். இது சரியான கடமைகளைச் செய்து தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆன்மா ப்ரவிருத்தி மார்க்கமாக நன்மைகளை அடையும் வழியைக் காட்டுகிறது.
3) வைஷ்ணவாச்சாரம் அல்லது பக்தி மார்க்கம்: ஒழுங்கினை, ஒழுக்கத்தினை வேதாச்சாரம் மூலம் பெற்றாலும் உணர்ச்சிகளைத் தூய்மைப்படுத்தி இறை ஆற்றலுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் உணர்ச்சித் தூய்மையை இதன் மூலம் ஆன்மா இரண்டாவது நிலையில் பெறுகிறது. உணர்ச்சித் தூய்மை பெறாமல் எவரும் ஆன்மீகத்தில், சாதனையில் முன்னேற முடியாது.
3) சைவாச்சாரம் அல்லது ஞான மார்க்கம்: சைவம் அறிவே சிவம் என்று சொல்கிறது. வைஷ்ணவாச்சாரம் அல்லது பக்தி மார்க்கத்தில் இரஜோ, தமோ குணத்தாக்கத்தால் பக்தி தவறான உணர்ச்சி வசப்படும் ஒரு பலவீனமாக அறிவுத்தெளிவின்மையால் ஏற்படலாம். இதனால் சைவாச்சாரம் அறிவினைப் பலப்படுத்தும் ஞானத்தினை முன்னிறுத்துகிறது. சைவசித்தாந்தம் ஞான மார்க்கம்.
இவை மூன்றையும் சுவாமி விவேகானந்தம் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் வேதாச்சாரத்தை கர்ம யோகமாகவும், வைஷ்ணவாச்சாரத்தை பக்தி யோகமாகவும், சைவாச்சாரத்தை ஞான யோகமாகவும் விளக்கியுள்ளார்.
5) கர்மத்தில் சுத்தி, உணர்ச்சியில் பக்தி, அறிவில் தெளிவு அடைந்த ஆன்மா தன்னூள் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க அகமுகமான சாதனையிற்கு தந்திர சாஸ்திரம் தக்ஷிணாச்சாரம் அல்லது சமயாச்சாரத்தைப் பரிந்துரைக்கிறது. இப்போது சாதகன் வெளிமுகமாக இருந்து உள்முகமாக திரும்புகிறான். மந்திர ஜெபம், தியானம், ஆறாதார தியானம் இவை எல்லாம் சமயாச்சாரத்திற்குள் வரும்.
6) மேலேயுள்ள ஆச்சாரங்களைக் கடைப்பிடிப்பதால் சாதகன் தனது ஒழுக்கத்தினால், அறிவினால் அகங்காரத்தையும் சமூகத்தினால் கட்டுப்பட்ட பசுத்தன்மையினையும் அடைக்கிறான். ஆகவே அஷ்ட பாசங்களிலிருந்து வெளிவருவதற்கு தந்திர சாஸ்திரம் வாமாச்சர தந்திர முறையைப் பயிற்சிக்கச் சொல்கிறது. இதில் மது, மாம்ஸம், மச்சம், மைதுனம், சம்ஸான சாதனை இவைகள் அடங்கும். இதன் நோக்கம் அஷ்ட பாசங்களிலிருந்து வெளிவருவதாகும்.
7) அஷ்ட பாசங்களிலிருந்து வெளிவந்த ஒருவன் தன்னை அறியும் ஆற்றலும், சித்திகளைப் பெறும் தகுதியையும் பெறுகிறான். இந்தப் பண்பு உள்ளவன் சித்தாச்சாரத்தில் சாதனை பயிலச் சொல்கிறது. தமிழ் சித்தர்களுடைய சாதனை மார்க்கம் எல்லாம் சித்தாச்சார முறைகளே. இங்கு 96 தத்துவங்களையும் சித்தி (mastery) சித்தி செய்யும் சாதனை பயிற்றுவிக்கப்படுகிறது.
8) கௌலாச்சாரம் - The Supreme and Universal Path - எல்லா ஆச்சாரங்களும் அடங்கிய உயர் நிலை. இது பாகுபாடு, மதம், இனம், குலம் எல்லாவற்றையும் தாண்டிய ஒருங்கிணைந்த நிலை.
எமது குருபரம்பரை எல்லா ஆச்சார முறைகளையும் கற்பிக்கும் அதிகாரமும், அனைத்துவித சாதனைகளையும் குருமுகமாகப் பயின்ற சிறப்புடையது. இங்கு பயிலும் எவரும் தமது சாதனையை ஒழுங்காகச் செய்வார்களேயானால் வேறு எங்கும் அலையத்தேவையில்லை.
ஆனால் buffer lunch போல் நீங்கள் விரும்புபவற்றைப் பயில முடியாது, உங்கள் பரிணாமத்திற்குத் தக்க சாதனை கற்பிக்கப்படும்.
ஒரு சாதகன் வேதாச்சாரம் தொடங்கி தக்ஷிணாச்சாரம் வரை தனது வெளிமுகமான வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி, வாமாச்சாரம் தொடக்கம் கௌலாச்சாரம் வரை அகமுகமாக ஆன்ம பரிணாமத்தில் பயணிக்கிறான்.
எந்தவொரு ஆன்மாவும் அனைத்து ஆச்சாரங்களையும் ஒரே பிறப்பில் கடைப்பிடித்து சித்தியுறுவதில்லை. சிலபிறப்புகள் சில ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து ஆன்மா தன்னைப் பக்குவப்படுத்தி முன்னேறுகிறது.
தனக்கு வழங்கப்பட்ட சாதனையை ஆச்சாரத்தை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதன் பலனாக அது அடுத்த நிலையைப் பெறுகிறது. ஆகவே வீண் ஆராய்ச்சிகளையும், கற்பனைகளையும், அதியாசைகளையும் விட்டுவிட்டு கிடைத்த சாதனையை ஒழுங்காகச் செய்வது அவசியமானது.
ஆச்சாரம் என்பது ஒரு பிரிவினை அடையாளம் அல்ல, மாறாக ஆன்மீக வெளிப்பாடாகும்.
இந்தப் பாதை வெளிப்புற சடங்கிலிருந்து உள் சுய உணர்தலுக்கு செல்கிறது.
வாமாச்சாரமும் கௌலாச்சாரமும் அகங்காரத்திலிருந்து விடுதலைக்கு உணர்வுபூர்வமாகத் திரும்புவதைக் குறிக்கின்றன.
வேத, சைவ, வைணவ ஆச்சாரங்களில் வெளிப்புற வேடங்களில் தெரியும், தக்ஷிண, வாம, சித்த, கௌலாச்சாரங்கள் வெளிவேடங்கள் அற்ற அகமுகச் சாதனைகள்
Friday, June 20, 2025
Srishti's yoga classes
Srishti's yoga classes start tomorrow;
Today Sahasra Gayatri prayer at Gurunathar Gayatri Peedam
as the promise of Agathi Maamakarishi who gave seed - Prayers and Sankalbam for
all students
·
ஆயுள் - ஆயுர்வேதம் - 03
உடன் மனம் உயிரினை ஒத்திசைவாய் ஒருங்கிணைத்தால் அது ஆயுள் என்றும், இதைச் சாதிக்கும் ஞானம், அறிவு ஆயுர்வேதம் என்றும், ஏன் எமக்கு ஆயுள் வேண்டும் என்றால் வாழ்வில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்புருடார்த்தங்களை அனுபவிப்பதற்காகவும் என்று பார்த்தோம். ஆயுள் வேதத்தினைக் கற்பதன் பலன் உடலை ஆக்கும் தாதுக்களின் சம நிலை உடலில் எப்படிச் செயற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலமே உடலை, உடலுக்கு ஆதாரமான மனதை, மனதிற்கு ஆதாரமான உயிரை ஒருங்கிணைக்க முடியும்,
ஆகவே உடலின் தாதுக்களை சம நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒருவன் மனதை சம நிலைப் படுத்தலாம். மனம் சம நிலையில் இருப்பதன் மூலம் உயிருடன் தொடர்பினை ஒருங்கிணைக்கலாம்.
நோய்கள் என்பவை தாதுக்களின் சம நிலையின்மையினை ஏற்படுத்தி இந்த உடல் மன உயிர் ஒருங்கிணைப்பினைக் குழப்புபவை. ஆகவே உடல் பாதிக்கப்பட்டால் அகவலிமை குன்றும். உடலில் நோய் இருந்தால் நாம் எமது வாழ்வில் சாதிக்க வேண்டியவை சாதிக்கப்படமால் உடல் அழிவை நோக்கிச் செல்லும்.
ஆகவே மனிதனின் முதல் இலட்சியம் தனது மனதையும், உடலையும் நோயற்று சம நிலையில் வைத்திருத்தல். இதைச் சாதிக்கும் போதே அவன் உயிரை அறியும் பக்குவம் பெறுகிறான்.
மனம் உயிரின் ஆற்றலை அறிய வேண்டும் என்றால் அதன் விருத்திகளைக் குறைக்க வேண்டும். சித்த விருத்திகள் அற்ற மனமே தூய்மையான ஆரோக்கியமான மனம். மனதின் விருத்திகளைக் குறைக்க தியானம் அவசியம்.
ஆகவே ஆயுர்வேதத்தின் படி ஆரோக்கியம் என்பது தாதுக்கள் சம நிலையான ஸ்தூல உடலும், விருத்திகள் குறைந்த/விருத்திகள் அற்ற சித்தமும் ஆகும்.
Thursday, June 19, 2025
பஞ்சாக்ஷர மந்திர ஸாதனை மகிமை
சிவரஹஸ்யத்தில், ஈஸ்வரர் கௌரிக்கு பஞ்சாக்ஷர மந்திரத்தின் உச்சபட்ச செயல்திறனை வெளிப்படுத்துகிறார், இது "ஓம் நமசிவாய", இது மிகவும் தூய்மைப்படுத்தும் மற்றும் ருத்ரத்வத்தை - தெய்வீக அச்சமின்மை மற்றும் ஆன்மீக இறையாண்மையை - வழங்கும் திறன் கொண்டது என்று விவரிக்கிறது.
இந்த புனிதமான ஐந்து
எழுத்துக்களைக் கொண்ட ஒலி, 26 ஆம் சுலோகத்தின் படி, இந்த மந்திரத்தைத் சாதனை செய்யும்
சாதகனை அனைத்து அசுத்தங்களிலிருந்தும் (விரஜ – ரஜோ குணத்திலிருந்து) விடுவிக்கிறது.
27 ஆம் சுலோகத்தில், வேத சடங்குகள், யக்ஞங்கள், விரதங்கள் மற்றும் புனித சங்கங்களின்
ஒருங்கிணைந்த தகுதி கூட இந்த மந்திரத்தில் தொடர்ந்து சாதனை செய்யாமல் முழுமையடையாது,
இது அதன் மறுபரிசீலனை மிக உயர்ந்த வழிபாட்டுச் செயலாக அமைகிறது என்று சிவபெருமான் அறிவிக்கிறார்.
பசுபதியை தியானித்து,
இதயத்தில் ஆழமாக மந்திரத்தை உள்வாங்கிக்கொள்பவர்கள், உள் மற்றும் வெளிப்புறமாக, புனித
இடங்களில் நிரந்தரமாக வசிக்கும் அமைதியான முனிவர்களாக மாறுகிறார்கள் என்று 30 ஆம் சுலோகம்
மேலும் கூறுகிறது.
மந்திரத்தின் உருமாற்ற
சக்தி 31வது சுலோகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது, இது பாவங்களைக் கரைக்கிறது, ஆன்மாவை
அழியக்கூடியவற்றிலிருந்து அழியாதவற்றுக்கு (க்ஷரத்திலிருந்து அக்ஷரத்திற்கு) இட்டுச்
செல்கிறது, மேலும் த்ரயக்ஷத்தின் (மூன்று கண்களைக் கொண்ட சிவனின்) அருளால் அசுர அல்லது
நுட்பமான துன்பங்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது, அழியாத பலன்களை வழங்குகிறது என்பதை
விளக்குகிறது.
32வது சுலோகம் மந்திரத்தின்
முழு வடிவத்தையும் வலியுறுத்துகிறது - பிரணவத்தில் (ॐ) தொடங்கி சிவாயத்தில் முடிகிறது - அதன் வேத அதிகாரத்தையும் ஜபத்தின்
போது சக்தியை (உமாவின் பீஜம்) தியானிப்பதன் அவசியத்தையும் உறுதிப்படுத்துகிறது.
இறுதியாக, வழக்கமான,
நிலையான ஜபம் தகுதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கர்ம சுமைகளைக் கரைப்பது மட்டுமல்லாமல்,
அவிமுக்தத்தின் வசிப்பிடத்திற்கும் வழிவகுக்கிறது - இது உணர்வு முக்தி நிலையைக் குறிக்கிறது
- மேலும் சிவனால் வழங்கப்பட்ட உச்ச விடுதலை நிலையான பரம முக்தி பாதத்தை வழங்குவதில்
முடிவடைகிறது. காசியை நாம் அவிமுக்தி தலம் என்று கூறுகிறோம். பஞ்சாக்ஷர சாதனை செய்பவனது
அகம் காசி க்ஷேத்திரமாகிறது.
இந்தப் போதனைகள் சிவராஹஸ்யரின்
ஈஸ்வரப் பிரிவின் 38 ஆம் அத்தியாயத்தை முடிக்கின்றன, இது பஞ்சாக்ஷர மந்திரத்தின் ஆழ்ந்த
ஆன்மீக, பாதுகாப்பு மற்றும் முக்தி சக்தியை சிவனின் அருளின் மையமாகக் கொண்டுள்ளது.
ஆயுள் - ஆயுர்வேதம்-02
உடல் - மனம் - உயிர் இவற்றின் ஒன்றிணைவு ஒத்திசைவு ஆயுளைத் தரும் என்று முன்னைய உபதேசத்தில் பார்த்தோம். இதை எப்படிச் சாதிப்பது என்ற அறிவு ஆயுள்வேதம் என்று பார்த்தோம்.
இதனால் என்ன பிரயோசனம் - பலன்?
ஆயுள்வேதத்தின் பலன்/பிரயோசனம்தான் என்ன?
இந்த அறிவை/ஞானத்தைப் பெறுவதன் மூலம் ஒருவன் தனது உடல் ஆக்கப்பட்டிருக்கும் பஞ்சபூதங்கள் அவற்றிலிருந்து உருவான சப்த தாதுக்களினதும் சம நிலையைப் பேணமுடியும். இதுவே ஆயுள் வேதம் எனும் ஞானத்தைக் கற்பதால் நாம் பெறும் பிரயோசனம். இந்த சம நிலையைப் பேணுவதே ஆரோக்கியம்.
ஏன் நாம் உடல் தாதுக்களின் சம நிலையைச் சரியாகப் பேணவேண்டும்?
நாம் எமது வாழ்வின் இலட்சியங்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்புருடார்த்தங்களையும் நாம் எமது வாழ்வில் அடைவதற்கு நீண்ட ஆயுள் அவசியமாகும். ஆகவே ஒருவன் தனது தாதுக்களின் சம நிலையைப் பேணி ஆரோக்கியத்தையும், அதன் மூலம் உடல், மனம், உயிரினை இணைத்து நீண்ட ஆயுளையும் பெற்று தனது வாழ்க்கையின் இலட்சியமான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்புருடார்த்தங்களையும் அனுபவித்து பரிபூரணனாக வேண்டு,
இதுவே நீண்ட ஆயுளைப் பெறவேண்டிய ஆயுள்வேதத்தை நாம் கற்பதன் நோக்கமாகும்!
ஆயுள் - ஆயுர் வேதம்
இன்று பலரும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி பல உடற்பயிற்சிகள், சிகிச்சைகள் என்று ஆயுவேதத்தை நாடி வருகிறார்கள். உண்மையில் ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவம் அறியாமல் மருந்து உண்பதையும், மசாஜ் செய்வதையும், பஞ்ச கர்மசிகிச்சையையும் ஆயுர்வேதம் என்ற பெயரில் நம்புகிறார்கள்.
ஆரோக்கியமாக இருந்த பலர் அற்ப ஆயுளில் இறந்து போகக் காண்கிறோம். அப்படியென்றால் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் என்ன தொடர்பு!
ஒருவனின் ஆயுள் என்பது
. ஶரீராத்மமன꞉ ஸம்ʼயோக³ ஆயு꞉ .
சரீரம் - மனம் - ஆத்மா ஆகிய மூன்றினதும் ஸம்யோகம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஒருவன் நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமென்றால் அவனது உயிரும், மனமும், உடலும் ஒத்திசைந்து இணைந்து செயற்பட வேண்டும். இப்படிச் செயற்பட்டால் மாத்திரமே அவனுக்கு ஆயுள் வாய்க்கும்.
உடல், மனம், உயிர் இந்த மூன்றையும் எப்படி ஒன்றிணைத்து ஒத்திசைத்து செயற்பட வைப்பது என்ற ஞானத்திற்கு, அறிவிற்குப் பெயர்தான் ஆயுர்வேதம்.
ஆகவே அகத்திய குல மாணவர்களே ஆயுர்வேதம் என்பதன் உண்மைப் பொருள் அறிந்து குரு வழி நின்று ஆயுர்வேதம் கற்று மேன்மையடையுங்கள்! ஆயுவேதம் என்பதை மொழி, அரசியலில் பயன்படுத்து அர்த்தங்களைக் கண்டு குழம்பி அறியாமையில் வீழ்ந்து விடாதீர்கள்.
திரிகுணங்களும் சினிமாப்பாடல்களும்
தமிழ் சினிமா பாடல்களை திரிகுண கோட்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்துவது - ரஜஸ் (ரஜோ), தமஸ் (தமோ) மற்றும் சத்வ (சத்வ) - இசை மனித உணர்ச்சிகள்,...

-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...