*****************
கர்ப்பம் அழியாதிருக்க - குழந்தைப் பேறு பெற
*******************************
இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட பிரயோகத் தலைப்பு "கர்ப்பம் அழியாதிருக்க"
தற்காலத்தில் திருமணமான தம்பதிகளுக்கு கர்ப்பம் தரிப்பது, தரித்த கர்ப்பம் அழியாது தங்குவதும் மிக அரிய ஒரு விஷயமாக இருக்கிறது. முற்காலத்தில் பெண்கள் எட்டு, பத்துக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய உடல் வலுவுடன் இருந்தாலும் தற்காலத்தில் ஒரு பிள்ளை பெறுவதற்கே பெரும் பிராயத்தனப் படவேண்டி இருப்பதைக் காண்கிறோம்.
கர்ப்பம் தரித்தல் என்பது வெறுமனே உடலியல் சார்ந்த ஒரு செயல் அல்ல! உண்மையில் ஒரு ஆணும் பெண்ணும் இன்பம் காணும் போது அவர்களுடைய கர்ம வினைக்கு அமைய அலைக்கழிந்துகொண்டிருக்கும் ஆன்மா தனது உடலைத் தேர்ந்தெடுத்து கர்ப்பத்தை உண்டாக்குகிறது.
ஆணும் பெண்ணும் இன்பம் தூய்ப்பது என்பதும், சந்ததியை உருவாக்குவதற்கு உடலுறவு கொள்வது என்பது வெவ்வேறானது. சந்ததியை உருவாக்க விரும்பும் தம்பதியினர் கர்ப்பக்கிரியை என்று வழிபாடு போன்று தகுந்த சங்கல்பம், உபாசனையுடன் செய்யும் போது மாத்திரமே குறைபாடு அற்ற குழந்தை பிறக்கும். வெறுமனே எந்த சங்கல்பமும், தம்மைத் தயார்படுத்தாமல் இன்பம் தூய்க்கும் நோக்கில் விபத்தாகப் பிறக்கு குழந்தைகளின் சூக்ஷ்ம உடல் தாயின் உடலுடன் சரியாகப் பொருந்தாததால் குழந்தைகள் மன, உடல் ஊனத்துடன் பிறக்கும் சாத்தியம் அதிகரிக்கிறது.
ஆகவே நற்சந்ததி வேண்டுபவர்கள் முறையாக கர்ப்பக்கிரியையைச் செய்து தமது உபாஸனை தெய்வத்திடம் வேண்டிப் பிறக்கும் குழந்தைகள் கல்வி, கேள்வி, ஞானம், தர்ம, ஆயுள், ஆரோக்கியம், செல்வத்துடன் வாழும் வகையில் பிறக்கும். இப்படி எந்த சங்கல்பமும் இல்லாமல் ஏதேச்சையான ஆண் பெண் இன்பம் தூய்ப்பில் பிறப்பவை வலுவற்ற குழந்தைகளாக இருக்கும்.
இந்தப்பாடல் இப்படியான சற்புத்திரப் பேற்றினைத் தருவதற்கான பிரயோகமாகச் சொல்லப்படுகிறது. எந்தத் தம்பதியினருக்காவது கர்ப்பம் தரிக்காமை, தரித்த கர்ப்பம் இல்லாமல் போதல் போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ, அல்லது நல்ல ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன் அறிவும், ஞானமும் உள்ள குழந்தைகள் வேண்டின் இந்தப் பிரயோகத்தினைச் செய்யலாம்!
தெய்வானை அம்மன் சஷ்டி தேவி என்று சொல்லப்படுகிறாள். பிறந்த குழந்தையை ஆறாவது நாள் தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்தின் முன்னால் தாயும் தந்தையும் அமர்ந்து தேவியின் கரங்களில் பிள்ளையைக் கொடுத்து பாதுகாப்பு வேண்டிக்கொண்டால் 12 வயது வரை அந்தக் குழந்தையை அன்னை தெய்வானை - சஷ்டி தேவி எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்வாள் என்பது முருக உபாசனையின் இரகசியங்களில் ஒன்றாகும்.
இந்தப்பாடலின் மந்திர யந்திரப் பிரயோகம் இந்தப் பலன் கள் அனைத்தையும் தரக்கூடியது:
உதியா, மரியா, உணரா, மறவா,விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.