குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, September 01, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -15

அஷ்டாவதானம் செய்ய 

******************************




பதினைந்தாவது பாடலிற்கு சித்தர் பிரான் ஏட்டுச்சுவடியில் இட்ட தலைப்பு "அஷ்டாவதானம் செய்ய" என்பதாகும்.  அவதானம் என்பது முற்காலத்தில் மனோசக்தி விருத்தியின் ஒரு அமிசமாக, மிக உயர்ந்த கற்கையாக தமிழ், பாரத சமூகத்தில் கருதப்பட்டது.  முற்காலத்தில் சமூகத்தில் அஷ்டாவதானம், சோடஷ அவதானம், ஸதாவதானம் பெற்றவர்கள் பெருமதிப்புடன் கௌரவிக்கப்பட்டார்கள். 

அவதானம் என்பது

  • ஞாபகசக்தி - Memory
  • தாரணா சக்தி - Concentration 
  • படைப்பாற்றல் சக்தி - Creativity 
  • மனதின் இருப்பு  - Presence of Mind
  • கவனச்சிதறலுக்கு மத்தியில் சமநிலை (சமாதி போன்ற நிலைத்தன்மை)

ஆகிய ஐந்து ஆற்றல்களையும் மனம் பெறும் நிலையாகு. இதன் மூலம் மனித மனம் ஒரு ஒழுக்கத்துடன் பயிற்றுவிக்கப்படும் போது எப்படி விரிந்து ஆற்றலுடையதாக அசாதாரண திறமைகளைப் பெறுகிறது என்பதை உணர்லாம். முற்காலத்தில் மனதின் திறனை வளர்ப்பதே உயர்ந்த கல்வியாக கருதப்பட்டது. இக்காலத்தில் வெறும் ஞாபகத்தில் பரீட்சை எழுதிப் பட்டம் வாங்குவதையே கல்வி என்று மனதின் மற்றைய பாகங்களை விருத்தி செய்பவற்றில் கவனம் செலுத்துவதில்லை. 

இந்த அவதானம்  1) அஷ்டாவதானம் 2) ஸதாவதானம் 3) ஸஹஸ்ர அவதானம் என மூன்று வகைப்படும். 

இதில் முதல் நிலை அஷ்டாவதானமாகும். இதில் ஒருவர் எட்டு விஷயங்களை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றல் உடையவராக இருக்க வேண்டும். 

  1. ஸ்லோகார்த்த-பிரதானம் – கேள்வி கேட்பவர் சமஸ்கிருதத்தில் அல்லது தமிழில் பாதி வசனத்தைக் கொடுக்கிறார்; அவதானி அதை சரியான இலக்கணம், உரைநடை மற்றும் அர்த்தத்துடன் முடிக்க வேண்டும். 
  2. தத்தபத-காவ்யம் – கேள்வி கேட்பவர் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை (பதம்) கொடுக்கிறார்; அவதானி அதை அர்த்தமுள்ள வகையில் இணைக்கும் ஒரு வசனத்தை எழுத வேண்டும். 
  3. சித்ர-காவ்யம் – கட்டுப்பாடுகளுடன் வசனங்களை எழுதுங்கள் (பாலிண்ட்ரோம், இணைச்சொல், சில எழுத்துக்களைப் பயன்படுத்தாமல், முதலியன).
  4. சமஸ்யா-பூர்த்தி – ஒரு வரி அல்லது புதிர் வசனம் கொடுக்கப்படுகிறது; அவதானி அதைச் சுற்றி ஒரு முழு வசனத்தை உருவாக்க வேண்டும். 
  5. ஆசு கவி– கொடுக்கப்பட்ட கருப்பொருளில் உடனடி கவிதை. 
  6. கணித பிரதானம் – கணித அல்லது தர்க்கரீதியான புதிர்களைத் தீர்க்கவும். 
  7. ஸ்மரண-சக்தி – தொடர்களை நினைவில் கொள்ளுங்கள் (எ.கா., நிகழ்ச்சி முழுவதும் சீரற்ற முறையில் கொடுக்கப்பட்ட தொடர்பில்லாத பொருள்கள், எண்கள் அல்லது சொற்களின் பட்டியலை ஞாபகத்தில் வைத்துக் கூறுவது). 
  8. ஆபாத-ப்ரத்யுத்தரம் - நகைச்சுவையான அல்லது தத்துவார்த்த கேள்விகளுக்கு, பெரும்பாலும் வேண்டுமென்றே கவனச்சிதறல்கள் (சத்தம், நகைச்சுவைகள், குறுக்கீடுகள்) மத்தியில் தன்னிச்சையாக பதிலளிக்கவும். 

இதைத் தமிழில் கவனகம் என்று கூறுவர். 

இந்தப் பாடலின் மந்திரப் பிரயோகம் அஷ்டாவதானத்தைத் தரும். இனிப்பாடலையும் அதன் பொருளையும் படித்து உணர்ந்து பிரயோக விளக்கத்திற்குச் செல்வோம். 

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.

போர்புரிய விரும்பும் தேவரும், புவியில் வாழும் மானிடரும் குருவெனப் போற்றும் தேவனே! தன் வயமுடைமை, தூய உடம்புடைமை, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, பாசங்களின் நீக்கம், பேரருள், முடிவில்லாற்றல், மற்றும் வரம்பில்லா இன்பம் என்ற எண்குணங்களையும் உடையவனே! உன்னை முருகா, குமரா, குகனே என்று அழைத்து, அன்புடன் உருகி பக்தியுணர்வில் என்றும் இருக்க அருள் புரிவாய்! 

இந்தப்பாடலின் தியானமும் மந்திர யந்திரப் பிரயோகமும் அஷ்டாவதானம் தரும் என்பதில் ஒரு யோக இரகசியம் இருக்கிறது. அஷ்டவதானம் பெறவேண்டும் என்றால் மனதின் ஆற்றல் விரிய வேண்டும். மனதின் ஆற்றலை எப்படி விரிப்பது எல்லையற்ற அந்தப் பரம்பொருளை குருவாக எண்ணி அந்தப் பரம்ம்பொருளின் எல்லையற்ற ஆற்றலிற்குக் காரணமான எட்டுக் குணங்களையும் தியானிப்பதன் மூலம் ஒருவனுடைய மனம் விரிந்து பேராற்றல் உள்ளதாகும். ஆகவே அஷ்டவதானம் ஆற்றல் பெற விரும்புவன் பரம்பொருளான முருகனை குருவாக எண்ணி எண்குணங்களை தியானிக்க வேண்டும். 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...