குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 20, 2018

உலகசேவகன் - 02


பூஜ்ய குருதேவர் ஸ்ரீ ராம்சர்மா ஆச்சார்யா அவர்கள் உலகசேவகனிற்கு இருக்க வேண்டிய உண்மைப்பண்புகளும், பழக்கவழக்கங்களும் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய இலஞ்சமும், சுய நலமும், தன்னைப்பற்றிய சிந்தனை மட்டுமே நிறைந்த சமூக நிலைமையில் சமூக சேவையை விட தன்னுடைய நலம் மிக முக்கியமானது. இப்படியான காலகட்டத்தில் குருதேவரின் சிந்தனைகள் அடித்தூண்களாக இருந்து உதவக்கூடியவை. இவை ஒருவனை ஆன்ம முன்னேற்றத்துடன், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கருணையுடன் சமூகத்தில் வாழ உதவி செய்யும். இந்த ஒழுங்கு விதிகள் எந்தவொரு சமூக சேவை நிறுவனத்திற்கும் பொருத்தமானது.

குருதேவர் எந்தவொரு சமூக சேவகனும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். இந்தக் கொள்கைகளை, சிந்தனைகளை தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவன் சுய திருப்தியையும், சமூகத்தின் மரியாதையையும், தெய்வ ஆற்றலையும் பெறமுடியும். இந்த வழிகாட்டலை ஒருவன் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவன் சமூகத்தையும், தேசத்தையும், இந்த யுகத்தையும் கட்டமைப்பதில் பெரும் பங்கு வழங்கமுடியும்.

புத்தி விழிப்படையச் செய்த சாதகர்களுக்கு,

பூஜ்ய குருதேவர் தனது சாந்திகுஞ்ச் ஆசிரமம் மனிதன் ஆளுமை வளர்ச்சிக்கான ஒரு மையமாக இருக்கவேண்டும்  என சங்கல்பித்து தனது சமூக சேவகர்களை பண்படுத்துவதற்காக கீழ்வரும் ஏழு ஒழுகங்களை வகுத்தார். இதனால் புதிய யுகத்திற்கான மாற்றம் வினைத்திறனாகனவும், ஆற்றலுடனும் நடைபெறும் என நம்பினார். அதற்காக கீழ்வரும் வழிகாட்டலை வழங்கியுள்ளார்.

புத்தி விழிப்படைந்த சாதகர்கள் எப்போதும் தமது வாழ்க்கையில் அவர்களின் முன்னேற்றத்திற்கான முயற்சி, மற்றது சமூகத்திற்கான முயற்சி ஆகிய இருவித பொறுப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். அவர்கள் தமது ஆளுமையை அதிக ஒழுங்கமைக்கப்பட்ட, ஆற்றல் உள்ள, அனைவரும் விரும்பக்கூடிய வகையில் கொண்டிருத்தல் அவசியம். இதைப்பெறுவதற்கு நீண்ட, தொடர்ச்சியான முயற்சியும், சில விஷேட திறமைகளும் அவசியமாகும்.

ஒவ்வொரு சாதகனும் கீழ்வரும் விதிகளை மீண்டும் மீண்டும் படித்து தனது தினசரி பயிற்சியில் கொண்டு வரவேண்டும்.

உலக சேவகனுக்கான விதி 01: ஆர்வமும் சிந்தனையும்: 

இறைவன் தந்த அரிய கொடைகளில் வாழ்வு மிக உயர்ந்த கொடை. இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்தையும் பிரயோசனமுள்ளதாக மாற்றிக்கொண்டு உலகம் எனும் தோட்டத்தை அழகுபடுத்துவதில் எமது  நேரத்தை செலவழிக்க வேண்டும். வீணான உலக சிந்தனையில் எமது சக்தியை வீணாக்குவதை விட உண்மையான உயர்விற்கான உயர்ந்த சிந்தனையில் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு முயற்சியிலும் காமத்தையும், பேராசையையும், பற்றினையும் உடைப்பதற்குரிய பயிற்சியாக பார்க்க வேண்டும். எமது உள் நோக்கம் அல்லது அக எண்ணம் எப்போதும் தூயதாகவும், இலக்குகளை அடைவதற்குரிய முயற்சிகள் நேர்மையானதாகவும் இருத்தல் அவசியம். எப்போதும் பின்னோக்கி செல்வதற்கு சிந்திக்காதீர்கள். நிகழ்காலத்தை மட்டும் அனுபவியுங்கள். எதிர்காலத்தை மனதில் கொண்டு. நிகழ்காலத்தை மிக நுண்மையாக அவதானியுங்கள்.

எப்போதும் ஒரு ஞானயோகி போன்று சிந்தியுங்கள். ஒரு விஷயத்தை செயற்படுத்தி வெற்றி அடையும் போது ஒரு கர்மயோகி போன்று நடவுங்கள். மற்றவர்களை கையாளும் போது ஒரு பக்தி யோகி போன்று செயற்படுத்துங்கள். எப்போது தீய அழிவு சக்திகளின் செல்வாக்கினை அகற்றுவதில் மன ஒருமையுடன் சிந்தியுங்கள்.

ஒவ்வொரு காலைபொழுதும் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாக கருதுங்கள். ஒவ்வொரு இரவு உறங்கப்போகும் போதும் வாழ்வின் முடிவாக கருதுங்கள். ஒரு நாளை திட்டமிடும்போது நாளை என்பது இல்லை என்று எண்ணி திட்டமிடுங்கள். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஞானத்துடன் உபயோகியுங்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய தியானமும், குறைந்தது மூன்று மாலை காயத்ரி மந்திர ஜெபமும் தவறாமல் செய்யுங்கள்.

உலக சேவகனுக்கான விதி 02:  விடாமுயற்சி
காலமே வாழ்க்கை, இது எப்போதும் மனதில் இருக்க வேண்டியது. அதனால் ஒவ்வொரு நிமிஷமும் அர்த்தமுள்ளதாகவும், பிரயோசனமானதாகவும் பயன்படுத்தவேண்டும். சோம்பலும், கவலையீனமும் எமது வாழ்வின் மிகப்பெரிய எதிரிகளாக கருதப்பட்டு தவிர்க்கப்பட வேண்டும். உங்களது எல்லாப்பழக்க வழக்கங்களுக்கும் அவை நல்லதோ தீயதோ நீங்களே பொறுப்பாக வேண்டும்.  எப்போதும் சுயபரிசோதனையுடன், உங்கள் முயற்சியை பரிசோதித்து உங்கள் முயற்சிகள் எதுவும் உங்களை பின் நோக்கி செலுத்தவில்லை என்பதையும் தவறாக இல்லை என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

எந்த ஒரு வேலையையும் தாழ்வாக எடுக்கக்கூடாது. எந்த வேலையாக இருந்தாலும் இருக்கும் வளங்களுடனும், திறமையுடனும், தரப்பட்ட நேரத்திற்குள் பூர்த்தி செய்யவதிலேயே ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டும். எவரும் மற்றவர்கள் அனுமதி தரும் வரை காத்திருந்து வேலை செய்யவேண்டும் என்று நினைக்கக்கூடாது. எவ்வளவோ வேலைகள் பூர்த்தி செய்யப்பட காத்திருக்கின்றது. எம்மைச்சுழவே எவ்வளவோ வேலைகள் செய்வதற்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றது. ஒரு வேலையை மதிப்பிடுவதில் அவர் எவ்வளவு பணிகளை ஆரம்பித்துள்ளார் என்பதையும் அந்தப்பணியில் அந்த வேலைக்கு எவ்வளவு ஆர்வமுடன் செயற்படுகிறார் என்பதிலுமே அவை மதிப்பிடப்படவேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...