குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, June 18, 2018

ஸ்ரீ காயத்ரி தேவியின் அருள் பெற்ற யுக ரிஷி


வேதங்கள், உபநிஷதங்கள் போன்ற ஆன்ம இலக்கியங்கள் வாழ்க்கைக்கு பயன்படுமா? வேதகாலத்தில் வாழ்ந்த தபஸ் எனப்படும் தவத்துடன் கூடிய வாழ்க்கையை ஒருவன் ன்றைய காலத்தில் வாழத்தான் முடியுமா? இவை எல்லாம் விளங்காதவைகளாக மாறிவிட்ட என நாம் எண்ணிக்கொண்டிருகும் வேளையில், இல்லை! வேதம், உப நிஷதம், புராணங்கள், மந்திரம், ஜெபம், சாதனை ஆகிய இவற்றை எமது அன்றாட வாழ்விற்கு உபயோகிக்க முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் இருபதாம் நூற்றாண்டின் ரிஷி, சிந்தனையாளர், தத்துவவாதி மற்றும் சமூக சீர்த்திருத்தவாதி, வேதமூர்த்தி பண்டிட் ராம்சர்மா ஆச்சார்யா.

1911ம் ஆண்டு செம்டெம்பர் இருபதாம் திகதி, வட இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் - ஆக்ரா மாவட்டத்தில் உள்ள அன்வல்கேதா என்ற குக்கிராமத்தில் ஒரு செல்வந்த குடும்பத்தில் அவர் பிறந்தார்.

தனது நான்காவது வயதில் இவரது தந்தையின் நெருங்கிய நண்பரும் வழிகாட்டியுமான மதன் மோகன் மாளவியாஜியால் காயத்திரி மந்திர உபதேசம் அளிக்கப்பட்டு, உபநயனம் செய்விக்கப்பட்டார்.

இடைவிடாத காயத்ரி உபாசனையால் பெற்ற தபோ பலத்தால் வாரணாசி (காசி) இந்து பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்த, மதன் மோகன் மாளவியாஜியிடமிருந்து பெற்ற காயத்ரி மந்திரம் என்ற விதையை, ராம்சர்மா ஆச்சார்யா தனக்குள் விதைத்துக் கொண்டார்.

 தனது சிறுவயதிலிருந்து சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரி ஜெபத்தினை அவர் தொடர்ச்சியாக செய்து வந்தார். அதன் பயனாக, தனது 15வது வயதில் ஹிமாலயத்தில் சூக்ஷ்ம சரீரத்தில் வசிக்கும் குருவொருவரினால் ஆட்கொள்ளப்பட்டார் ராம்சர்மா ஆச்சார்யா.

காயத்ரி மகாபுரச்சரணம் என்பது ஒரு ஆண்டுக்கு 24 லட்சம் தடவை காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதாகும். தாம் பெற்ற குருவருளின் துணையுடன், ராம்சர்மா ஆச்சார்யா 24 ஆண்டுகளாக காயத்ரி மகாபுரச்சரணங்கள் 24 இனை வெற்றிகரமாக நிறைவு செய்து தனது வத்தைப் பூர்த்தி செய்தார் ராம்சர்மா ஆச்சார்யா.

தனது காயத்ரி தபஸ் புரச்சரணத்தின் பின்னர் சமூகமாற்றத்திற்கான முன்மொழிவாக 100 ஆலோசனைகளைக் கொண்ட யுக நிர்மாண யோஜனை என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்தார். அதன் மூலம் சமூக, அறிவு, ஆன்ம பரிணாம முன்னேற்றத்திற்காக ராம்சர்மா ஆச்சார்யா பாடுபட்டார். மிக எளிமையான, ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையையும், சமூகத்தை ஆன்ம ரீதியாக முன்னேற்றுவது எப்படி என்ற  சிந்தனையிலும் அவர் பங்களிப்பு  வழங்கினார்.

அக்காலத்தைய உயர்குல வழக்கத்தை மீறி, தனது சிறுவயதிலேயே ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அன்பையும், சேவையையும் ராம்சர்மா ஆச்சார்யா பகிர்ந்தார். ஏழையும் (அக்கால வழக்கப்படி) தாழ்த்தப்பட்டவராக கருதப்பட்டவருமான ஒரு ஹரிஜன பெண் நோயால் வாடியபோது, தானாகச் சென்று அவருக்கு பணிசெய்ததன் காரணமாக, சொந்தக் குடுப்ப உறுப்பினர்களால், ராம்சர்மா குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்.

சிந்தனைப்புரட்சியும், சிந்தனை மாற்றமுமே ஆச்சார்யாஜியின் முதன்மைக் கொள்கைகள்!  மனித  சமுதாயத்திற்கு சரியான சிந்தனை முறையினை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற பணியை, தனது எழுத்துக்கள் மூலம் அவர் செயற்படுத்தினார்.

வன்முறை நிறைந்த மனங்கள் உருவாவதன் மூலம் சமூகம் சீர்கேட்டிற்கு உள்ளாகிறது. இந்த சீர்க்கேட்டினை நீக்குவதற்காக காலத்திற்கு காலம் சிந்தனையாளர்கள் தோன்றி, மக்களின் சிந்தனையை சீர்படுத்திச் செல்கிறார்கள்.

இந்த நோக்கத்திற்கா சிந்தனைப்புரட்சியொன்றை ஏற்படுத்துவதற்காக 1937ம் ஆண்டு அகண்ட ஜோதி என்ற ஹிந்தி மாத இதழை  தொடங்கினார். வாழ்க்கையின் அனைத்து ம்சங்கள் பற்றியும் 3000 சிறு மற்றும் பெரும் பிரசுரங்களை எழுதி, தனது வாழ் நாள் இலக்காக எண்ணி வெளியிட்டார். நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்கள், 108 உப நிஷதங்கள், ஷட்தரிசனங்கள் ஆகியவற்றிற்கு ஶ்ரீ ராம்ஷர்மா ஆச்சார்யா மீளவும் உரை எழுதியுள்ளமை குறிப்பித் தக்கது.

தனது பிறப்பிடத்தில் வாழ்ந்த ஏழைமக்களின் கல்வி வளர்ச்சிக்காக, கல்லூரியொன்றைக் கட்டுவதற்கு தனது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் நன் கொடையாக அவர் வழங்கினார். தனது,  24 காயத்ரி மகா புரச்சரணங்களின் பின்னர், மதுராவில் காயத்ரி தபோபூமியும், காயத்ரி பரிவார் (குடும்பம்) என்ற இரு அமைப்புகளையும் ராம்ஷர்மா ஆச்சார்யா ஸ்தாபித்தார்.

ன்றைய காலத்தில் அனைவரும் பின்பற்றக்கூடிய வகையில் ரிஷிபரம்பரை ஞானத்தை எளிமைப்படுத்தி வழங்கியதில், குருதேவர் ஸ்ரீ ராம்சர்மா ஆச்சார்யாவிற்கு அதிக பங்கு உள்ளது.

எட்டு கோடிக்கு மேற்பட்தான அவருடைய காயத்ரி மந்திர ஜெபம் மற்றும், யக்ஞத்தினால், இன்று காயத்ரி மந்திரமானது ஜாதி, மதம், இனம், பால் வேறுபாடு இன்றி அனைவரும் ஜெபிக்கக்கூடிய பொதுவுடமை மந்திரமாக்கப் பட்டிருக்கிறது.

அவரது வாழ்வின் இறுதி ஐந்து வருடங்களில், குருவின் ஆணைக்கு அமைய உலக தொடர்புகளை துண்டித்து விட்டார் அவர். தனது சூக்ஷ்மகரண சாதனையின் பின்னர் தான் இறக்க விரும்பிய 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 02ம் திகதி காயத்ரி ஜெயந்தி அன்று ராம் ஷர்மா ஆச்சார்யா தனது பௌதிக உடலை உகுத்தார்.

இந்த உலகில் எவருக்காவது காயத்ரி சாதனை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருப்பின், அவர்களது ஆன்ம சாதனைக்கு சூக்ஷ்மமாக உதவுவதற்காக, தனது பஞ்சகோசங்களையும் மகாகாரண சரீரமாக்கி, ஒளி நிலையில் இருந்து உதவி வருகிறார் குருதேவர் ராம் ஷர்மா ஆச்சார்யா. 

16/07/2017 அன்று இலங்கை வீரகேசரி பத்திரிகையின் சங்கமம் பகுதியில் பிரசுரமாகிய கட்டுரை. 



No automatic alt text available.

Image may contain: one or more people

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...