குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 30, 2018

என் மாணவன்: சாதனா உரையாடல் - 11

எமது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகியார் தமது குறிப்புகளில் "என் மாணவன்" என்று தலைப்பிட்டு எழுதப்பட்டது இது:
என் மாணவன்
***********************************************************
நான் இன்ன சாதி என்று நினையாதவன்.
***********************************************************
மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன்
***********************************************************
ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்
**********************************************************
கோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவன்
************************************************************
பண்டிகை, விரதம், நோன்பு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்காதவன்.
***************************************************************
எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவன்
*****************************************************************
தனக்கு இன்பம் தரும் கரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவன்
********************************************************************
மாமன், மைத்துனன், தங்கை, அண்ணன் என்ற உறவுகளுக்கு உதவி செய்வதற்காகத் தன் இறை சாதனையினை விட்டுக்கொடுக்காதவன்.
****************************************************************
வாழ்க்கையில் மற்றைய எல்லா காரியங்களை விடச் சாதனை மிக முக்கியமானது எனக் கருதி எக்காரணத்தாலும் சாதனையினைத் தவற விடாதவன்.
*************************************************************
கண்ட புத்தகங்களைப் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதவன்
******************************************************************
எத்தொழிலைச் செய்தாலும் தன் செயல்களின் மறைவில் ஓர் சக்தி இருக்கிறது என்பதனை உணர முயற்சி செய்த வண்ணமிருப்பவன்.
********************************************************************
சமயச் சழக்கெனும் சேற்றிலிருந்து துணிகரமாக மீள முயற்சிப்பவன்
********************************************************************
ரிஷி மரபின் உண்மைகளைத் தெரிந்து அதன் வழி நடப்பவன்
********************************************************************
அவனே என் மாணவன். அவனுக்குத்தான் என்னில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக ரத்தினங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
- யோகி கண்ணையா -
******************************************************************
மேலே உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளுக்குரிய உரையாடலாக எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
இங்கு மாணவன் என்பது தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகனையும் குறிக்கும்.
இனி முதலாவது உரையாடல்:
ஏன் தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்ற நினைப்பு இருக்க கூடாது என்று கூறப்படுகிறது?

இனி முதலாவது உரையாடல்:

ஏன் தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்ற நினைப்பு இருக்க கூடாது என்று கூறப்படுகிறது

எந்தவொரு மனிதனும் தனித்து இயங்க முடியாது, ஏன் இந்தப்பிரபஞ்சமே தனித்து இயங்க முடியாது, ஒன்றுடன் ஒன்று சார்ந்தே இந்த உலக, பிரபஞ்ச இயக்கம் நடைபெறுகிறது.

இந்த சார்பிற்காக மனிதன் காலத்திற்கு காலம் ஒவ்வொரு கட்டமைப்பினை ஏற்படுத்திவருகிறான். இந்தக்கட்டமைப்பில் அடிப்படை நான்கு வர்ணங்கள்.

இந்த வர்ணாசிரம ஏற்பாடு மனிதன் தனது பரிணாம முன்னேற்றத்தில் துரிதமாக முன்னேறுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் ஈர்க்கும் எண்ணகளிற்கு ஏற்ப அடுத்த பிறப்பை ஈர்க்கிறான். அப்படி ஈர்த்த மனிதன் பிறப்பிற்கு பின்னர் தனது முற்பிறவிகளை மறந்து அடுத்த பிறவி எடுக்கும் போது தான் முன்பு செய்த சாதனை, முயற்சிகளை இந்தப்பிறப்பில் பயன்படுத்துவதற்கு வர்ணாச்சிரம முறை உதவியாக இருந்தது. எப்படி என்றால் ஒரு நிறுவனத்தில் எல்லா பதிவுகள் முறையாக ஒரு system இல் இருந்தால் பலகாலம் சென்று ஒருவன் வந்தாலும் அந்த system இன் துணையால் பழைய பதிவுகளைப் பார்த்து தனது வேலையை திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

அதுபோல் ஒருவன் பிராமணனாக இருந்து ஒருபிறப்பில் தனது ஆன்ம முன்னேற்றத்திற்கு சாதனை புரிந்து வரும் நிலையில் அடுத்த பிறப்பில் தான் முன்பிறப்பில் செய்த முயற்சிகளை தொடரமுடியாத குடும்பத்தில் பிறந்தால் முற்பிறப்பு கணக்க்குகளை சேர்க்க முடியாமல் முதலில் இருந்து முயற்சிக்க வேண்டும்.

இனி வர்ணாச்சிரம் என்பது தற்போது உள்ள ஜாதி முறையா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. சமூகம் சரியாக செயற்பட நான்கு அடிப்படை சக்திகள் தேவை அறிவு, ஆளுமை அல்லது நிர்வாகம், செல்வம்/நிதி, உடலுழைப்பு இந்த நான் கினையும் செய்யு குழுவை பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று பிரித்து வைக்கப்பட்டார்கள்.

இன்று கம்பனிகளில் இருக்கும் Consultants, Directors, Manager, Worker எனும் அதே பாகுபாடுதான் வர்ணாச்சிரமம். இந்த வர்ணாச்சிரம பாகுபாட்டிற்கும் இறையை அறிந்து உணர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் அர்த்தம் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற உடலக கடமைகளை செய்து கொண்டு எவரும் அவரவர் மன நிலைக்கு தக்க யோகம் செய்து ஞானம் பெற முடியும்.

ஸ்ரீமத் பாகவதத்தில் அஸ்வத்தாமனை விளிக்கும் போது பிராமண பந்து என்றே க்ருஷ்ணன் குறிப்பிடுகிறார். இதன் பொருள் பிராமணனின் உறவினன் என்பதாகும். ஏன் இப்படிக்குறிப்பிடுகிறார் என்றால் தூக்கத்தில் இருந்த் பாணவர்கள் குழந்தைகளை அனைவரையும் கொன்று, கடைசியாக கருவில் இருக்கும் அபிமன்யுவின் மகனை கொல்ல பிரம்மாஸ்திரம் ஏவிய துர்செயலை செய்ததால் பிராமண துரோணருக்கு மகனுக்கு பிறந்தாலும் பிராமணன் என்று விளிக்கமல் பிராமண பந்து எனப்படுகிறார்.

ஆக வர்ணாச்சிரம் என்பது உலகத்தின் மனித குலத்தின் பௌதீக இயக்கத்திற்காக அறிவு, ஆளுமை அல்லது நிர்வாகம், செல்வம்/நிதி, உடலுழைப்பு என்பவை நடைபெற உருவாக்கப்பட்ட அமைப்பே அன்றி அவை ஜாதி அல்ல.

மேற்குறித்த அமைப்பில் தர்மம் தவறி, முரண்பாடுகள் உருவாகி தனித்தனிக் குழுவாக மாறியபின்னர் உருவாக்கி கொண்ட பெயர்கள்தான் ஜாத், நன் கு நுணுக்கமாக பார்த்தால் ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் வர்ணாச்சிரமம் {அறிவு, ஆளுமை அல்லது நிர்வாகம், செல்வம்/நிதி, உடலுழைப்பு } இந்த நான்கும் இருக்கும். ஒரு கம்பனியில் இருந்து இன்னொரு கம்பனி முரண்பாட்டால் பிரிந்து உருவாகுவது போன்ற செயல்.

வர்ணச்சிரம் என்பது உலக கடமைக்கு உருவாக்கப்பட்டது. வர்ணாச்சிரமத்த்தில் கடமையும் அந்தக்கடமையை செய்யும் தர்மம் அவசியம்.

ஜாதி மனிதர்களிடையே ஒரு குழு தனித்துவமாக தம்மை அடையாளம் காட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு. எப்படி இருந்தாலும் ஒவ்வொரு ஜாதிக்குள்ளும், குழுக்களுக்குளும் வர்ணாச்சிரம் அமைப்பு இருக்கும்.


இதுவே ஜாதியிற்கும் வர்ணாச்சிரமத்திற்கும் உள்ள வேறுபாடு....

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...