குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, March 10, 2013

சித்தர்களின் சர்வரோகங்கள் நீக்கும் புருவமத்திசாதனை முறை விளக்கம்(4448 நோய்களும் குணமாக‌)))))))


இன்று எங்குபார்த்தாலும் நோய், நோயின்றி வாழதலே வாழ்வின் பெரும் சிறப்பு, சித்தர்கள் கூறிய மருத்துவத்திலிருந்து இன்று நாம் பல லட்சம் செலவு செய்யும் ஆங்கில மருத்துவத்திற்கு சென்று விட்டோம். இன்று மருத்துவத்துறை பெரும் வியாபாரத்துறை ஆகிவிட்டது. இன்றைய நிலையில் உலகின் அதிகூடிய வருமானம் தரும் வியாபாரத்துறை மருந்துகளும் ஆயுதங்களும் என ஆய்வுகள் சொல்லிகின்றன. சாதாரணமாக நகர்புறத்தில் சிறு சளி, காய்ச்சம் என்றால் மருந்தெடுக்கச் சென்றால் 5000.00 ரூபாய் இன்றி திரும்பி வர இயலாது. வருமானம், அதற்கு மேற்பட்ட பொருளாதரச் சுமை இத்துடன் நோயும் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அதிலிருந்து மீள்வது குதிரைக்கொம்புதான்! இந்த நிலை தமிழ் - இந்திய பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு வரக்கூடாதா நிலை! ஏனென்றால் வருமுன் காக்கும் நிலையினையும் சொல்லி, வந்தாலும் எல்லோரும் இலகுவாக குணமாக்கிக் கொள்ளக்கூடிய வழிமுறைகளை சித்தர்கள் வகுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றை படித்து பயன்படுத்துபவர்களோ எவருமிலர்! 

சித்தர்களது மருத்துவம் எளிமையானது, எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று சொல்லிவைத்தார்கள், எம்மவர்களுக்குத்தான் எளிமையானவுடன் ஏளனமாகவும் நினைக்கும் பண்பு வந்துவிடுமே! இன்று எம்மை தொடர்பு கொள்பவர்கள் எல்லாரும் நாம் சித்தர் நூற்களை எல்லாம் படிக்க முயற்சித்தோம் ஆனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என புலம்புகிறார்கள்! ஏன் நாம் எளிமையாக சிந்திக்கும் பழக்கத்தினை இழந்து விட்டோம்! மேற்கத்தைய மனதுடன் தான் சித்தர் நூற்களை அணுகப்பார்க்கிறோம். அவை தர்க்க ரீதியாக எழுதப்பட்ட நூற்கள் இல்லை! இயற்கையுடன் இயைந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுதிவைத்துள்ளார்கள். நீங்கள் இந்த இயற்கையும் ஒன்றிய மனம், பண்பு இல்லாவிட்டால் உங்க்களுக்கு அவர்கள் கூறீய பொருள் விளங்காது. வேண்டுமென்றால் அப்படிக் கூறியுள்ளார்கள், இப்படிக்கூறியுள்ளார்கள் என அறிவினை காட்டலாமேயன்றி பயன் பெற இயலாது. இது வெறுமனே நாம் கூறவில்லை, அனுபவத்தில் கூறுகிறோம். சிறுவயதுமுதல் சித்தர் இலக்கியமும் குருவிடமும் இருந்தபோது எம்மை குரு நாதர் வலிந்து சூழலியல் விஞ்ஞானம் கற்க செய்தார், அப்போது எனக்கு வேறு சில துறைகளில் ஆர்வம் இருந்தாலும் "இல்லையப்பா, இதைப்படியுங்கள்" என்று வலியுறுத்திக்கூறினார்கள். அந்ததுறை எனது இயல்புக்கு ஏற்றவாறு இருந்ததோடு ஆர்வத்துடன் முதுமாணி பட்டம் வரை படித்தேன், அப்போதுதான் விளங்கியது அடபாவிகளா நமது முன்னோர்கள், சித்தர்கள் கூறியதையெல்லாம் பொருட்படுத்தாமல் தலைக்கு மேல் போகும் வரை இருந்து விட்டு இன்று விஞ்ஞானத்தால் அதானை சரிப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று. 

சித்தர்கள் மனித உடலுக்கும் அவனைச் சூழ உள்ள இயற்கையிற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். உடலில் வரும் பாதிப்புகள் பஞ்சபூத சம நிலை இன்மையினால் வருவது, இந்த பஞ்ச பூதங்கள் ஸ்தூல வடிவாக உடலாக பரிணமிக்கும் அதே வேளை, சூஷ்ம உடலிலும் ஆறாதாரங்களாக பரிணமித்துள்ளது. அவற்றின் இயல்பு வருமாறு;
 • பிருதிவி பூதம் - மூலாதாரம்
 • அப்பு (நீர்) பூதம் - சுவாதிஷ்டானம்
 • தேயு (தீ) பூதம் - மணிப்பூரகம்
 • வாயு பூதம் - அநாகதம்
 • ஆகாய பூதம் - விசுத்தி
 • மனம் - ஆக்ஞா 

இதில் ஒவ்வொரு பூதத்தின் குறைபாடுகள் அந்த ஆதாரங்களின் சக்தி குறையும் போது சூஷ்ம உடலில் உருவாகி நீண்டகாலத்திற்கு பின்னர் ஸ்தூல உடலிற்கு வரும். இந்த அடிப்படையிலேயே ஒரு சித்தவைத்தியர் தனது சிகிச்சையினை செய்யவேண்டும் என்பது நாம் குருமுகமாய் அறிந்த ஒன்று. சரி வைத்தியர் இவற்றையெல்லாம் அறிந்திருக்கவேண்டும், சாதாரண பொதுமகனான நான் எப்படி இதையெல்லாம் அறிந்து பயன்படுத்துவது! ஏற்கனவே மேல்பகுதியில் கூறிவிட்டீர்கள் இயற்கையுடன் இயைந்து வாழவில்லையென்றால் சித்தர் நூற்களில் உள்ளவை விளங்காது என்று பயமுறுத்துகிறீர்கள்! சித்தர்கள் எப்போதும் இரங்கிய மனம் உடையவர்கள், தாமறிந்தவற்றை இந்த உலகம் பயன்படவேண்டும் என்ற உன்னத நோக்கம் உடையவர்கள். அதனாலேயே இவ்வளவு நேரம் செலவளித்து இலட்சக்கணக்கில் பாடலாக பாடிவைத்துவிட்டு போயிருக்கிறார்கள். அவர்கள் பாடிய பாடல்களில் துலாவினால் அரிய இரத்தினங்களைப் பெறலாம். இனி விடயத்திற்கு வருவோம். 

மேலே கூறிய ஐம்பூதங்களுக்கும் சூஷ்ம உடலில் உள்ள ஆதாரத்திற்கும் உள்ள தொடர்பினை பார்த்தீர்களானால் ஆறாவதான ஆக்ஞா மனத்துடன் தொடர்பு பட்டுள்ளது. மனம் என்பதே மனிதன் இந்த பிரபஞ்சத்துடன், ஐம்பூதங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சாதனம். இது பற்றி எமது குரு நாதர் எழுதியுள்ள மானசயோகம் பகுதி 1 & 02 வாங்கி படிக்கவும். பல அரிய சாதனாமுறைகள், சித்திகள் பெறும் முறைகள் விளக்கப்பட்டுள்ளது. இங்கு பலகாலம் நோய்களால் அவதிப்படுபவர்களுக்கும் உதவக்கூடிய ஒரு முறையினை கூறுகிறோம். 

இந்தமுறையினை பயிற்சிப்பதற்கு உங்களுக்கு எந்தவிதமான தெய்வ நம்பிக்கையும் இருக்கத்தேவையில்லை, எதுவித கட்டுப்படும் இல்லை, மனதில் எந்தவித கேள்விக்கும் இடம் கொடுக்காமல் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வரவேண்டும். அவ்வளவே. 

இது திருமூலர் கூறிய ஒரு எளிய முறை தியானப்பயிற்சி; சித்தர்களின் பாகுபாட்டி மனிதனுக்கு தோன்றக்கூடிய வியாதிகள் 4448, இதற்குமேல் எந்த வியாதியும் இல்லை, இன்று ஆங்கிலப் பெயரிட்டு அழைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வியாதிகளும் இவற்றுக்குள் அடங்கிவிடும். இந்தப்பயிற்சியால் 4448 வியாதிகளும் இல்லாது போய்விடும் என்பது திருமூலே வாக்கு, இந்த சாதனை பற்றிக் கூறும் பாடம் வருமாறு; (திருமூலர் ஞானக்குறி 30, பாடல் 14) 

நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு
மாலாம் வியாதியும் மாத மடிந்திடும்
பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின்
மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே

இதன் பொருள் வருமாறு: மனதினை கண்ணும் மூக்கும் சந்திக்கும் மூட்டில் (மூட்டு கண் மூக்கிலே) அதாவது புருவமத்தியில் வைத்து தியானித்து வர 4448 வியாதிகளும் மடிந்து குழந்தையைப்போன்ற இளமை தோன்றும் என்கிறார். 

இதனை எப்படி பயிற்சிப்பது?
 • அதிகாலை காலை 04.00 - 06.30 வரை மிக உகந்த நேரம், அல்லது மாலை 06.00 - 07.00 மணிவரை
 • முதலில் அமைதியாக ஓரிடத்தில் முதுகலும்பு வளையாதவாறு நேராக நாற்காலி ஒன்றிலோ, அல்லது நிலத்தில் கால்மடித்து உட்காரமுடியுமானால் அவ்வாறோ இருக்கவும். அல்லது சாய்வு நாற்காலியில் முதுகினை நேராக சாய்த்தவாறும் செய்யலாம். படுத்திருந்து செய்யும் போது தூக்கம் வருவதற்கான வா
 • பின்பு கண்களை மூடி புருவமத்தியினை நோக்கி செலுத்தவும், இது பொதுவாக நீங்கள் ஏதாவதொன்றினை ஆழமாக யோசிக்கும் போதோ கண்கள் செல்லும் நிலையினை அவதானித்தால் செய்வதற்கு இலகுவாக இருக்கும். கண்கள் வலிக்காமல் இருக்கும் நிலையே சரியான நிலை, கண்கள் வலியெடுத்தால் நீங்கள் உங்கள் நிலைக்கு மீறி முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம். இப்படி செய்யும் போது ஆரம்பத்தில் நீங்கள் மனத்திரையில் இருளாகவும், சிறிது நாட்களுக்கு பின்னர் ஒளியு தோன்ற ஆரம்பிக்கும். அந்த ஒளிதெரியும் நிலையிலிருந்து உங்கள் நோய் படிப்படியாக குணமாக ஆரம்பிக்கும். 
 • இதற்கு முன்னர் கீழ்வரும் வாசகத்தினை எழுதி மனப்பாடம் செய்துகொள்ளவும், ஆரம்ப நாட்களில் மறந்தால் கண்களைத்திறந்து வாசித்து மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும். 
 • எனது நோய் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலால் குணமாகப் போகிறது, குணமாகிக்கொண்டு வருகிறது, குணமாகி விட்டது, இந்த வாசகங்களை உச்சரிக்கும் போது அது நடக்கும் போது சூழல், உடல் எப்படி இருக்குமோ அதனை மனக்கண்ணில் பார்த்து வரவும். 
 • நாட்பட்ட புற்று நோய், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு தொடர்ச்சியான 40 நாட்கள் பயிற்சியின் பின்னர் நிச்சயமாக உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காண ஆரம்பிக்கும். 
 • சளி போன்ற வியாதிகள் அனுபவத்தில் அடுத்த நாளே குணமாகும் என்பது அனுபவ உண்மை. 


இதனை விடாமல் செய்து பலனினை எமக்கு அறியத்தாருங்கள், சந்தேகங்கள் இருப்பின் ஈமெயிலிற்கு எழுதுங்கள் அதன் பின்னர் தொலைபேசியில் உரையாடி தெளிவுபெறலாம்.

ஸத்குரு பாதம் போற்றி!

10 comments:

 1. உங்கள் பதிவு க்கு நன்றி

  ReplyDelete
 2. நல்ல தகவல்

  ReplyDelete
 3. நல்ல தகவல்

  ReplyDelete
 4. நல்ல தகவல்

  ReplyDelete
 5. இதனை செய்யும் போது உடலே சுற்றுவது போல் உள்ளது. ஒளி எவ்வடிவில் தெரிய ஆரம்பிக்கும்? இதை நீங்கள் செய்யும் போது பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 6. மிகவும் சிறப்பு !!

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...