ஓஷோவிடம் எழுபது வயதான வயோதிகர் ஒருவர் வந்து கீழ்வருமாறு முறையிட்டார்,
"அன்பான குருவே, எனக்கு இப்போது எழுபது வயதாகிறது, ஆனால் மனதில் காமஉணர்வுகள் அதிகரித்தவண்ணமே உள்ளது, நான் என்ன செய்யட்டும் என்றார்?
நல்ல கேள்விதானே!
அதற்கு ஒஷோ அளித்த பதிலும் விளக்கமும் பின்வருமாறு;
"அன்பரே அப்படியாயின் அதனை பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளூங்கள், அதனை மறுக்காதீர்கள், அதனை பெரிதாக கவலைப்பட்டு அடக்க முற்படாதீர்கள், இந்த நிலமை ஏன் ஏற்படுகிறது என்றால் இளமைக்காலத்தில் அதீதமாக காமத்தினை அடக்கியதால் இப்போது வயோதிகத்தில் அவை வலிமை பெற்று உங்களை ஆட்டிப்படைக்கிறது,
இதேபோல் முன்னொரு சம்பவம் ஏற்பட்டது, நான் டெல்லியில் இருக்கும் போது என்னைக்காண முப்பத்திஐந்து வயது மதிக்கத்தக்க இளவயது துறவி ஒருவர் வந்திருந்தார்.அவர் பூரணமான பிரம்மச்சரியத்தினை ஏற்றிருந்தார். அவர் என்னிடம் கேட்க விரும்பியது, " என்னுடைய ஒரே பிரச்சனை கடந்த சில வருடங்களாக நான் எனது மனதில் எழும் காம எண்ணங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறேன், இது ஏன் என உங்களால் கூற முடியுமா? இன்னும் எவ்வளவு காலத்தில் காம எண்ணம் அடங்கும்? இப்போது நான் 35 வயதுகளில் உள்ளேன். இப்படியான மனப்போராட்டத்தில் ஈடுபட்டு சோர்வடைவதை தவிர வேறு எதுவும் எனக்கு ஏற்படவில்லை, இன்று வரை நான் வெற்றியடையவில்லை. இன்னும் எவ்வளவு வருடம் உள்ளது?
அதற்கு ஓஷோ அமமைதியாக " இதனை என்னிடம் கேட்காமல் இருப்பது மிக நல்லது, ஏனெனில் இன்னும் உண்மையான பிரச்சனை கட்டத்திற்கு நீங்கள் வரவில்லை, உங்களுடைய உண்மையான பிரச்சனை இன்னும் ஆரம்பமாகவில்லை, அது 42 வயதளவில் ஆரம்பமாகும்" என்றார்.
அதற்கு அவர் "நீங்கள் என்ன சொல்லவருகிரீர்கள்?" என்றார்.
ஒஷோ, "இப்போது நீங்கள் இளமையாக உள்ளீர்கள், முழுமையாக சக்தி உடையவராக இருக்கிறீர்கள், உங்களால் உங்கள் காம உணர்வினை வலிந்து அடக்க முடியும், ஆனால் 42 வயதளவில் உங்கள் உடல் பலம் குறையத்தொடங்கும், மெது மெதுவாக வலிமையினை இழப்பீர்கள், பலமற்றுப் போவீர்கள். ஆனால் உங்கள் அடக்கப்பட்ட காமஉணர்வு மெது மெதுவாக சேர்ந்து வலிமை பெற ஆரம்பிக்கும், அந்த நிலையிலேயே உங்களது உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கும்" என்றேன்.
அதற்கு அவர்" இப்படி யாரும் எனக்கு கூறவில்லை, அனேகர் நாற்பத்து ஐந்து வயதை அடையும் போது காமஉணர்வினை கட்டுப்படுத்தும் ஆற்றல் வந்து விடும் என்றல்லவா கூறுகின்றனர், அப்போது இந்தப் பிரச்சனை தீர்ந்து விடும்" என்றார்.
அதற்கு ஓஷோ " அவர்களுக்கு சக்தி செயற்படும் விதம் தெரியவில்லை, ஒரு சக்தியினை அழுத்த அழுத்த அது அந்த அழுத்தங்களை சேர்த்து வலிமையாகிறது, இப்படி நடக்கும் போது அழுத்துபவர் சக்தியினை இழக்கின்றார், அழுத்தப்படுவது சக்தியினை பெற்று வலிமையடைகிறது, பின்னர் அழுத்தியவர் வலிமையினை இழக்கும் போது அது தன் முழு வலிமையுடன் தாக்க ஆரம்பிக்கும், இந்த விதத்திலேயே காம உணர்வு செயற்படும்"
அதன்பின்னர் அவர் சென்று விட்டார், பத்து வருடங்களின் பின்னர் நான் வேறொரு இடத்தில் இருக்கும்போது என்னைக்காண வந்தார், வந்தவர் என்னுடைய பாதங்களை தொட்டு வணங்கி கண்ணீர் மல்க கூறினார்;
" நீங்கள் அன்று கூறியது மிகச்சரி! இப்போது நான் எனது உடல் வலிமை குறைந்து விட்டது, ஆனால் மனதில் அதிக காமஉணர்வு என்னை ஆட்டிப்படைக்கிறது. இப்போது முன்னரைப்போல் என்னால் சண்டை பிடிக்கமுடியவில்லை. நான் வலிமை இழந்து விட்டேன், அன்று நான் உங்களுடைய கருத்தினை கேட்கவில்லை, எல்லோரும் சொன்னார்கள் நாற்பத்து வயதிற்கு மேல் காம எண்ணம் முற்றாக குறைந்து விடும் என்று அவர்கள் எவ்வளவு அறிவிலிகள், காம உணர்வு எப்படி செயற்படுகிறது என்பதனைப்பற்றி தெரியவில்லை! என்று வருத்தப்பட்டார்.
ஆகவே அன்பரே, உங்களுடைய காம உணர்வும் பலமாக அடக்கப்பட்டுள்ளது, ஆதலால்தான் இந்த பிரச்சனை வருகிறது, இவ்வாறுதான் மதங்கள் போதிக்கின்றன. மதத்தினை பின்பற்றவேண்டுமானால் நீங்கள் உங்கள் இயற்கையான இச்சைகள் எல்லாவற்றையும் அடக்க வேண்டும். பாருங்கள் இந்த எழுபது வயதில் எப்படியான சிறுப்பிள்ளைத்தனமான ஆசை உங்களில் எழுகின்றது என்று! அடக்கப்பட்ட உணர்வுகள் வயது கூட கூட அதிகமாக வர ஆர்ம்பிக்கும். இந்த நிலை அதிகரித்தால் 24 மணிநேரமும் உங்களை காம உணர்வு ஆட்டிப்படைக்க ஆரம்பிக்கும். இதைத்தான் தற்போதைய சமூகம் உங்களுக்கு செய்துள்ளது. சமூகம் உங்களுடைய இயல்பான உணர்ச்சிகளில் இருந்து உங்களை பிரித்து இயல்புக்குமாறாக்கி உள்ளது.
இந்த வயதிற் கூட இந்த நிலையில் இருந்து மீள்வது கடினமானதல்ல! அதற்கான முதற்படி அதனைப்பற்றி கவலைப்படுவதை நிறுத்துவதும், அதனைப்பற்றி வெட்கப்படுவதனை தவிர்ப்பதுமே!ஏன் காமம் இறைவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒன்று, நீங்களாக உருவாக்கிகொண்ட உணர்ச்சியல்ல! ஆகவே அது முற்றிலும் சரியானது!ஆகவே அதனைப்பற்றி ஏன் வெட்கப்படுகிரீர்கள், அது உங்களின் இயல்பான ஒரு பகுதியே!
நீங்கள் வெட்கப்படவேண்டுமானால், உங்களை காமத்தினைப்பற்றி வெட்கப்படவைத்த உங்கள் மதகுருவைப்பற்றியும்,போலியான மதக்கோட்பாடு பற்றியும், அவர்களது அறியாமை பற்றியும், அதனை வைத்து அவர்கள் உங்களை எப்படி ஆளூகின்றார்கள் என்பதனை, இதனை விட்டு வெளிவர இயாலாமையினால் அவர்கள் செய்யும் மூடத்தனம் பற்றியும் நினைத்து வெட்கப்படுங்கள், ஆனால் உங்களில் காம உணர்வு இருக்கிறது என்பதனை நினைத்து வெட்கப்படாதீர்கள், அது இயற்கைதன்மை உடையது, ஆனால் நீங்கள் ஒரு மதத்துடன் இணைத்துக்கொண்டு இப்படி சிந்திப்பது இயற்கைக்கு மாறானாது. இப்படி மதத்தின் காரணமாக எழுபது வருடங்களாக உங்களது இயல்புக்கு மாறாக நடக்கும் தன்மையினை எண்ணி வெட்கப்படுங்கள்!
உங்களில் உள்ள காமத்தினை ஆம் என ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் அதனை ஆம் என ஏற்றுக்கொள்வது மட்டுமே அதனைக்கடந்து செல்வதற்கான ஒரேயொரு சாத்தியமாகும். அதுவே அதனைக்கடக்க எடுக்கும் முதலாவது படிக்கல்லாகும். அந்தக்கல்லில் கால்வைக்காமல் கடந்து அடுத்த கரைக்கு செல்லமுடியாது. காமத்தினை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் அதனை கடப்பதற்கான படகில் காலடி எடுத்து வைக்கிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் உங்கள் மதத்தினால் ஏற்படுத்தப்பட்ட பயங்களினை குறையுங்கள், உங்களுடைய வீணாண நம்பிக்கைகளை குறையுங்கள், உண்மைத்தன்மையினை ஏற்றுக்கொள்ளூம் தன்மை உடையவராக மட்டும் இருங்கள்.
உங்கள் உடம்பிற்கு எழுபது வயதானாலும் உங்களுடைய காமம் எழுபது வயது இளமையாக இருக்கிறது. இந்த நிலையில் அது வலிமையாகவும் நீங்கள் வலிமையற்றும் இருக்கிறீர்கள், அவ்வாறு இருக்கும் போது அதனை இயல்புடன் ஏற்றுக்கொள்வது மட்டுமே அதனைக்கடந்து செல்வதற்கான ஒரு வழிமுறையாகும். அதனை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு நேரம் கடந்து விட்டது என்று வருத்தப்படவேண்டியதில்லை. இதன் அர்த்தம் கட்டாயம் அந்த இச்சையினை பூர்த்தி செய்ய உடல் ரீதியாக பூர்த்தி செய்யவேண்டும் என்பதல்ல! உங்கள் மனதளவில் முழுமையாக அதனை ஏற்றுக்கொண்டு அதனைப்பற்றி கவலைப்படாமல் இருப்பது. இப்படி நீங்கள் ஏற்றுக்கொள்ளூம் போது இதுவரை இப்படி அடக்கப்பட்ட காமத்தினால் ஏற்பட்ட காயங்களும் குணப்படுத்தப்படும். இதனை தவறாக புரிந்து கொண்டு இந்த இச்சையினை உடல்ரீதியாக பூர்த்தி செய்ய முயலும் போது உங்கள் சிக்கல்களை மேலும் அதிகரிக்குமே அன்றி குறைக்காது, மேலும் ஆபத்து நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
இந்தக்கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், காமத்தினை இயல்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் எனபதன் அர்த்தம், உங்கள் மனதில் அது எழும்போது அதனை தவறாக, பாவமாக எண்ணாமல் சாட்சிபாவமாக பார்த்து வருதலே அன்றி அதனை உடனடியாக தீர்க்கும் வழியில் இறங்குவதல்ல, அது உங்களை மேலும் மோசமான நிலைக்கே இட்டுச் செல்லும், சொல்லவருவதன் சுருக்கம், உங்களில் இயல்பாக ஏற்படும் எண்ணத்தினைப்பற்றி வெட்கம், வெறுப்பு போன்ற எதிர் எண்ணங்களை கொள்ளாமல் மதித்து ஏற்றுக்கொள்ளுதலே!
பொதுவாக இயற்கையின் நியதியில் சக்திகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் எம்மை பலப்படுத்திக்கொள்ளலாம், அப்படி ஏற்றுக்கொள்ளும் போது உங்களுடைய சக்தியில் துரித அதிகரிப்பினை ஏற்படுத்தலாம், காமம் என்பது உங்களிடமே உள்ள இயல்பான அதீத சக்தி, அதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் அதீதமாக பலம் பெறலாம். உங்களுடைய சக்தியினுடனேயே சண்டை பிடிப்பது உங்களை மேலும் பலவீனமாக்கும், இப்படி சண்டை பிடித்தே பல வருடங்கள், பல பிறப்புகள் சென்று விட்டபின்னர் எப்போது இறைவனை அடையப்போகிறீர்கள்!
முதலாவதாக காமத்தினை பாவம், பிழை எனப் புலம்புவதை நிறுத்துங்கள்.அதனுடன் வீணாக சண்டை பிடித்து உங்கள் சக்தியினை விரையப்படுத்துவதை நிறுத்தி அதனை மதிக்கத்தொடங்குங்கள்.
ஒரு ஆணை இயல்பாக இயற்கைக்குமாறாக அன்றி வளரவிட்டால் அவன் தனது பதின்நான்காவது வயதில் பாலியல் முதிர்ச்சி அடைகிறான். ஆனால் இன்று இயற்கைக்கு மாறான சமூகம் மனிதனி பிஞ்சில் பழுக்க வைக்கின்றன. இன்று மேலை நாடுகளில் மட்டுமன்றி கீழைத்தேய நாடுகளிலும் ஆண்பிள்ளைகளும், பெண்களும் தமது வயதுக்கு முன்னரே பாலியல் முதிர்ச்சியினை அடைகின்றனர். இந்தக் காரியத்தினை இன்றை திரைப்படங்களும், இன்டர்நெட் என்பன தாராளமாகச் செய்கின்றன.
இந்த தாராளமயமாக்கப்பட்ட பாலியல் படங்கள், ஊடகங்களினால் இன்றைய இளைய சமூகம் இயற்கைக்கு மாறான பாலியல் வளர்ச்சியினை பெறுகிறார்கள். இயற்கை உடலினை பதின்நான்கு வயதில் தயார்படுத்து முன்னர் இந்த செயற்கை ஊடகங்கள் மனதில் பாலியல் எண்ணங்களை விதைக்கின்றன, இதனால் உடலிற்கும் மனதிற்குமான போராட்டம் ஆரம்பமாகிறது. இதனால் தனது சக்தி முழுவதையும் வெகுவாக இழந்து எதற்கு பயன்படமுடியாத உடலினையும் மனதினையும் பெற்றவர்களாக ஆகின்றனர்.
சற்று பழமைவாத போக்குடைய மதவாதிகள் இதற்கு நேர்மாறான மதத்தின் பெயரால் பாலியல் முதிர்ச்சியினை அடைந்த இளைஞர்களையும் காமத்தினையும் அதன் செயற்பாட்டினையும் பாவம் என பயமுறுத்தி அவர்கள் உடல் மனப்போராட்டத்தினை ஏற்படுத்து விடுகின்றனர். அதனால் இருவித மனப்போராட்டத்தில் சக்தியினை இழந்து தம்மை அறியும் தகமையினை அடையாது போகின்றனர்.
இயல்பான சமூகம் ஒருவனுடைய பதின்நான்காவது மனதில் அவன் உடல் தயாராகும் போது மனதினையின் தயார்படுத்தும் நிலையில் அமைந்திருக்கவேண்டும். காமத்தினை பயமுறுத்தல் இன்று அதன் செயற்பாடுகள் எப்படி என்பதினை கற்பிக்க வேண்டும். இந்த பயமுறுத்தும் மதவாதிகளின் தலையீடு இன்றியும், காமத்தினை தலையில் ஏற்றி தம்மை காயப்படுத்திக்கொள்ளாமலும் இயல்பாக வாழ்த்தொடங்கும் ஒருவன், வாழ்வில் இன்பத்தினையும் அனுபவித்து, ஆழமான அனுபவத்துடன் தனது உடலின் சக்தி நாற்பத்து ஐந்து வயதுகளில் குறையத்தொடங்கும் போது தியானத்தில் ஆழமாக சென்று சமாதி எனும் பேரானந்த நிலையினை அடையும் தகுதியினைப்பெறுகிறான். அந்த வயதில் நீங்கள் மிகவும் ஆழமாகவும், முதிர்ச்சி அடைந்தும், மையம் கொண்டவராகவும்,மனக்குழப்பம் அற்றவராகவும் இருப்பீர்கள்.
ஆகவே பயமற்று உங்கள் நிலையினை ஏற்றுக்கொள்ளூங்கள்! இப்படி ஏற்றுக்கொள்ளும் போது உங்களை பயமுறுத்தும் எதுவும் தன் சக்தியினை இழந்து உங்களுக்கு வசமாகும்!
அடக்க அடக்க தான் வலிமை பெறுகிறது பல விடயங்கள்..அதில் காமமும் ஒன்று!!சிறப்பான பதிவு சகோ!
ReplyDeleteகருத்துக்கள் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டு எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்.ஏராளமானோர் தவறாமல் வாசித்து பயனடையும் பதிவுகள் இவை.
Please be good enough to share from your guru tradition how transfer the sexual energy positive and creative energy. This will very useful for us.
ReplyDeleteThanks
Kumaraguru
Nice information. Thank you.
ReplyDeleteநன்றி
ReplyDelete