கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 03


கடுக்காய்  பற்றிய அறிவியல் தகவல்கள்!

திரிபலாவில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்பவற்றினைப்பற்றிய சித்தர்கள் கூறிய கருத்தினைப் பாத்தோம், இந்தப்பதிவில் இவை மூன்றினதும் விஞ்ஞான ஆய்வு முடிவுகளைப் பற்றிப் பார்ப்போம். 

முதலாவது கடுக்காய்

இது தாவரவியலில் combretaceae குடும்பத்தினை சேர்ந்தது. இது ஆயுர்வேத தத்துவத்தின்படி அறுசுவைகளில் ஐந்து சுவைகளை உள்ளடக்கியது. கசப்பு சுவை அதிகம் உடையது. நவீன விஞ்ஞான ஆய்வின்படி இது ஈரலின் செயற்பாட்டினை தூண்டி பாதுகாப்பதுடன், குடலில் உள்ள அழுக்குகள், பழைய மலங்களை வெளித்தள்ளுகிறது. அத்துடன் நரம்புகளை வலிமைப்படுத்தி நரம்புதளர்ச்சியினை குணப்படுத்துகிறது. அதனால் ஐந்து புலன் களினால் பெறும் உணர்வுகள் மேம்படுகின்றன. சிறு நீர்கல், சிறு நீரில் யூரியா, சிறு நீர் வெளியேறுவதில் உள்ள தடைகள், மற்றும் உடலில் உள்ள ஒட்டுண்ணிப்புழுக்களினை அழிக்கும் செயன்முறையினையும் அதிகரிக்கிறது. இரத்ததினை சுத்திகரிக்கிறது. தொண்டை கரகரப்பு, தசைப்பிடிப்பு போன்றவற்றினையும் நிவர்த்தி செய்கிறது. மன அழுத்ததினையும் குறைக்கும் தன்மை வாய்ந்தது. 

கடுக்காயினைப்பற்றி பல்வேறு மருந்தியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவற்றின் சாராம்சம் அட்டவணையாக கீழ்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. 


கடுக்காயில் காணப்படும் கீழ்வரும் பதார்த்தங்கள் அதன் எல்லையற்ற மருத்துவகுணங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 
  • Different types of chebulic acid,
  • Gallic acid, 
  • Elagic acid, 
  • Tannic acid,
  • Amino acids,
  • Flavonoids like luteolin, rutins and quercetin etc.
அடுத்த பதிவில் தான்றிக்காய் பற்றி அறிவியல் என்ன கூறுகிறது என்று பாருங்கள். 

இந்த அறிவியல் பார்வையினை இங்கு பகிர்வதன் நோக்கம் யாதெனில், 
  1. சித்த மருத்துவத்தின் அறிவியல் பின்புலம் எத்தகையது என்பதனை அறிதல். 
  2. இன்றைய நவீன அறிவியல்  பலகோடி செலவழித்து செய்து கண்டு பிடிக்கும் இந்த வேதியல் பண்புகளை சித்தர்கள் தமது பாடல்களில் எவ்வளவு விரிவாக சொல்லிவைத்து சென்றுள்ளார்கள் என்பதனை உணர்தல். 
  3. அடுத்து சித்த வைத்தியர்கள் நவீன அறிவியல் ரீதியாக எமது மருந்துகளை எப்படி விளங்கப்படுதுதல் என்பதிற்கான முன்மாதிரியினை உருவாக்கல் என்பனவே. 
மேலே கூறப்பட்ட 03 வது நோக்கம் மிக ஆழமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு விடயமாகும். ஏனெனில் பெரும்பாலான சித்த வைத்தியர்கள் சித்தர் கூறியுள்ளார்கள் எனக்கூறி ஒருவித உயர்வு நவிற்சி தொனியில் உரையாடும் போது அவற்றை ஒரு மூட நம்பிக்கை சார்ந்த விடயமாக பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகல் உள்ளன. 

சித்தர் நூற்களில் கூறப்பட்டுள்ள (இடைச் செருகல்கள் தவிர்ந்த ) அனைத்துமே நவீன விஞ்ஞானத்துடன்பொருந்தி வரக்கூடியதுடன் அதற்கு அப்பாலும் செல்லக்கூடியது. ஆனால் அது பற்றிய சரியான புரிதலை  தற்கால நடையில் ஒப்பு நோக்கி புரிய வைப்பதும் இவற்றை எமது அடுத்த சந்ததிக்கு கொடுக்க வேண்டியதுபாரம்பரியமாக கற்றவர்கள் ஒவ்வொருவருவதினதும் கடமையாகும். 

அந்த கடலளவு பணியில் ஒரு சிறு துளிதான் முயற்சியில் இந்தப்பதிவுகள்!

ஸத்குரு பாதம் போற்றி!

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு