கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 05

நெல்லிக்காய் பற்றிய அறிவியல் தகவல்கள்

திரிபலாவில் மூன்றாவது சரக்கான நெல்லியின் மகத்துவன் பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம். 

நெல்லியில் உள்ள இரசாயன இயல்புகள் பின்வருமாறு;
The phytochemicals of this plant include hydrolysable tannins (Emblicanin A, Emblicanin B, punigluconin, pedunculagin)[35], flavonoids (Kaempferol 3 O alpha L (6” methyl) rhamnopyranoside, Kaempferol 3 O alpha L (6” ethyl) rhamnopyranoside), alkaloids (Phyllantidine and phyllantine). Gallic acid, ellagic acid, 1‐Ogalloyl‐ beta‐D‐glucose, 3,6‐di‐O‐galloyl‐D‐glucose, chebulinic acid, quercetin, chebulagic acid, corilagin together with isostrictinnin, were isolated from the fruit of Phyllanthus emblica.

A new acylated glucoside was isolated from the methanolic extract of the leaves of P.emblica. Their structures were named as apigenin 7‐O‐(6”‐butyryl‐beta)‐glucopyranoside, along with four known compounds gallic acid, methyl gallate, ,2,3,4,6‐penta‐Ogalloylglucose and luteolin‐4'‐Oneohesperiodoside. 

The seeds of P. emblica contain fixed oil, phosphatides and a small quantity of essential oil. In addition, the leaves contain gallic acid, ellagic acid, chebulagic acid and chebulinic acid. Phyllaemblic acid. 

உயீர்சத்து பெறுமதி
விட்டமின் சீ அதிகளவில் உள்ள கனி ஆரேஞ்சுப்பழம் போல் 06 மடங்கு விட்டமின் சீ யினை ஒரு நெல்லிக்காய் கொண்டிருக்கிறது. 

நவீன ஆய்வுகளின் படி (Mirunalini et al 2011) நெல்லி கீழ்வரும் இயல்புகளை கொண்டிருப்பதாக நிருபீக்கப்பட்டிருக்கிறது. 
  • ANTICANCER/ANTITUMOUR EFFECTS
  • புற்று நோய்க்கட்டிகளின் வளர்ச்சியினை தடுத்தல்
  • உடலின் எந்தப்பாகத்திலும் ஏற்படும் தேவையில்லாத கட்டிகள் ஏற்படுவதை தடுத்து கரைத்தல். 

இப்படியான அரியகுணங்களை இன்று விஞ்ஞானம் நிருபித்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்தே எமது முன்னோர்கள் நெல்லிக்கனியின் அருமையினை உணர்ந்து காயகற்பமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இத்தகைய அரிய காயகற்ப சரக்குகளின் கலவையே திரிபலா ஆகும், இதன் பெருமைபற்றி அடுத்துவரும் பதிவுகளில் பார்ப்போம். இந்தப்பதிவு திரிபலாவினை பாவித்து பயன்பெற்ற புராதன மன்னன் ஒருவனின் கதையுடன் முடித்துக்கொள்வோம்.

கி.மு முதலாம் நூற்றாண்டில் கனிஷ்க தேசம் (தற்போதைய வட இந்தியாவும் பாக்கிஸ்தானும் இணைந்த பிரதேசம்) ஆண்ட மன்னனின் ஆஸ்தான மருத்துவராக இருந்தவர் சரகர் என்ற புகழ்பெற்ற மருத்துவர். இவர் தனது மன்னனை திரிபலா இரசாயனமூலம் நூறாண்டுகள் வாழவைத்துள்ளார். அதுபோல் துருக்கியை கைப்பற்றிய மன்னன் மஹமூன் அல் ரஷீட் இற்கு அவனது படைத்தளபதி தனது உயர்ந்த பரிசாக கடுக்காயினை கொடுத்ததாக சரித்திரகுறிப்புகள் கூறுகின்றன, திபேத்திய பௌத்தமதத்தில் குணமாக்கும் புத்தரை 'நீல புத்தர்" என அழைப்பர், அவரது கையில் கடுக்காய் நிறைந்த பாத்திரம் இருப்பதாகவும் மறுகையில் கடுக்காய் செடியினை தாங்கியவராகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளார். அதுபோல் சங்க இலக்கியத்தில் அதியமான் அஔவையாருக்கு கரு நெல்லிக்காய் கொடுத்தமை நெல்லியின் மாண்பினை கூறுகிறது. இவற்றிலிருந்து வாசகர்கள் திரிபலாவின் மேன்மை பற்றி விளங்கியிருப்பீர்கள் என நம்புகிறோம். அடுத்தபதிவில் மேலும் விபரங்கள் பகிரப்படும்.

ஸத்குரு பாதம் போற்றி! 

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு