குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 12, 2013

காம ரகசியம்: 06 கட்டுப்படுத்தப் பட்ட பிரம்மச்சரியம்

இன்றைய இளைஞர்களில் குறிப்பாக ஆன்மீக நம்பிக்கையுடையவர்கள், யோகம் பழகவேண்டியவர்கள், சாதனை செய்து இறை அருள் பெறவேண்டும் என நினைப்பவர்களுக்கு உள்ள விடைதெரியாத பிரச்சனை "பிரம்மச்சரியம்",மிக அதிகமாக தவறாக விளங்கிகொள்ளப்பட்ட விடயம் பிரம்மச்சாரியம், இதனை விந்தடக்கம் என்று கூறிகிறார்கள், இது முற்றாக தவறான விடயம். பிரம்மத்தினை ஆச்சரிக்க (சார்ந்திருக்க) எதுவித முயற்சியும் இல்லாமல் நடப்பதே விந்தடக்கமே அன்றி வலிந்து விந்து வீணாகிவிடும் என அடக்குவது பிரம்மச்சரியம் ஆகாது. ஆக இந்தப்பதிவில் பிரம்மச்சரியம் பற்றிய ஒரு சில கருத்துக்களைப் பார்ப்போம்.

பிரம்மச்சரியம் என்பது இயல்பாக வரவேண்டியது, வலிந்து அடக்குவதல்ல,அப்படி அடக்கப்பட்ட காம உணர்வு எந்தவிதத்திலும் மனிதனுக்கு பயன்படமுடியாது. ஒரு அழுத்தமாக ஆழ்மனதில் பதிவுற்று வேறு ஒரு வழியில் வெளிப்படவே முயலும். இதனால் உள/மனப்பிரச்சனைகள் அதிகரிக்குமே அன்றி எதுவித ஆன்ம மன முன்னேற்றம் இருக்காது.

சித்தர் இலக்கியத்தில் விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று உள்ளதே அப்படி என்றால் அது பிழையா என்று கேட்பவர்களுக்கு அதே சித்தர்கள் அடக்ககூடாத உடலின் 14 வேகங்களி ரேதஸ் எனும் விந்தும் ஒன்று என்பதனை அறிவார்களா? சித்தர்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள், எதையும் முழுமையாகப் படிக்காத அறிவாளிகள்தான் அதனை பிழையாக வியாக்கியானப்படுத்தி விட்டார்கள்.
அப்படியானால் விந்தினால் ஒரு பிரயோசனமும் இல்லையா? அப்படியில்லை, ஒரு மனிதனின் ஆன்ம முன்னேற்றத்திற்கோ, பௌதீக முன்னேற்றத்திற்கோ உரிய மாபெரும் சக்தி விந்தில் தான் இருக்கிறது. சாப்பிடும் அன்னம், சப்த தாதுக்களாக மாறி இறுதியில் அதிஉயிர்ச்சத்து உள்ள விந்தாகவே மாறுகிறது. இத்னை வலிந்து கட்டுப்படுத்துவதே தவறு என்பதனை விளங்கி கொள்ளவேண்டியது.

இதனை சற்று விளங்கிக்கொள்வோம், இந்த அரிய சக்தியினை எப்படி உயர்ந்த சக்தி ஆக உருமாற்றுவதுதான் பிரம்மச்சாரியமே அன்றி வலிந்து விந்தினை உடலில் இருந்து வெளியேறாமல் தடுக்கும் எதுவும் பிரம்மச்சரியம் இல்லை.

இப்படி சாத்தியமாகக்கூடிய ஒரே சாதனை தியானம் மட்டுமே, தியானத்தின் மூலம் தானகவே மனம் பிரம்மத்தினை ஆச்சரிக்க, விந்து கட்டுப்பட்டு உயர் சக்தியாக உருமாறும். உண்மையாக சரியான தியானத்தினை செய்து வரும் யாரும் விந்தடக்கத்தினைப்பற்றியோ, பிரம்மச்சரியத்தினை பற்றியோ கவலைப்படத்தேவையில்லை!

யோகம் பழகவிரும்பும் ஒவ்வொருவரும் தமது உடலினதும், மனதினதும் இயக்கங்களை சரியான முறையில் புரிந்துகொண்டு தமக்கு சாதகமாக்கும் வழியில் முயலவேண்டுமே அன்றி போர் புரியக்கூடாது!
ஸத்குருவே போற்றி

5 comments:

  1. Yes. It's true. Sex has got nothing in the way to God. You can also write articles regarding concentration of the mind.

    ReplyDelete
  2. உடலில் தேவைக்கு அதிகமான தாது மற்றும் கொழுப்புக்களை குறுகிய நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும்போது அது தானாகவே விந்தாய் வெளியேறிவிடும். அதனால்தான் பிரம்மச்சரியம் அனுசரிப்பவர்கள் மாமிசம் மற்றும் கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்பதில்லை மேலும் அதிகப்படியாக கொழுப்பை எரிக்கவேண்டி அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிர்ந்த நீரில் குளித்து உடலின் வெப்பம் குறைக்கப்படுகிறது . மீண்டும் இழந்த வெப்பத்தினை கூட்டுவதற்க்காக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சர்க்கரை போன்றவை செல்களால் எரிக்கப்படுகிறது.

    ReplyDelete
  3. Thanks for your information.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

சாதனை முன்னேற்றம்

அன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம். காயத்ரி சாதனா குரு அகத்தியர் சாதனா தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது பயணங்கள் தொடர்கிறது. ஆரம்பத்தில் நீங்...