காம ரகசியம் 07: விந்து/சுக்கிலம் என்பதன் பொருளை விளங்கிக்கொள்ளுதல்

எமது பதிவுகளில் நாம் எழுதும் இந்தப்பதிவுகள் காமத்தினை அடக்கி உடல் மன நோய்கள் அடையாமல் எப்படி யோகமாக்கி உயர்ந்த சக்தியாக பயன்படுத்துவது என்ற அறிவினை இந்தத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அறிவதற்காக வேண்டி எழுதுகிறோம். அந்த வகையில் இன்றைய சமூகத்தில் சரியாக படிக்காத சித்த வைத்தியர்களாலும், மேலைத்தேய சிந்தனையாலும் எமது முன்னோர்கள் கூறிய ஒழுக்கங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதில் சித்தர்கள் கூடிய விந்து, பித்தம் என்ற‌ வார்த்தைகள் தற்கால நவீன மருத்துவக் கருத்துகளுடன் ஒப்பிட்டு பின்னர் அதன் மூலம் சித்தர்பாடல்களின், மருத்துவத்தின் பொருளினை நோக்கும் போது குழம்பி வந்த பெருங்குழப்பமே எஞ்சுகிறது.

உதாரணமாக பித்தம் என்றால் சித்த ஆயுள் வேதத்தில் கருதும் பொருள் வேறு, அதே தற்காலத்தில் கல்லீரலினால் சுரக்கப்பட்டு கொழுப்பினை சமிபாடடைய செய்யும் பித்தம் என்ற பொருளில் மட்டும் நோக்கினால்  ஏற்படும் புரிதல் வேறு.

இப்படி தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட பொருள்தான் விந்து/சுக்கிலம் என்ற வார்த்தைகளும். இந்ததவறு தமிழர்களை குழப்பிய புண்ணியம் தமிழ் நாட்டில் இருந்த தனித்தமிழ் புரட்சியாளர்களுக்கும் பங்கிருக்கிறது. எமக்கு தெரிய எமது பாட்டனார்காலத்து வைத்தியர்கள், பண்டிதர்கள், புலவர்கள் சரியான அறிவு பெறுதலுக்கு எதுவித காழ்ப்புணர்வு நிலையும் இன்றி தமிழ்,சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்களாக இருந்தமையினால் புரிதலில் ஏற்படும் தவறுகளை இலகுவாக அறிந்துகொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். தனித்தமிழையும், தர்க்க அறிவினால் மட்டும் கட்டியெழுப்பப்பட்ட நவீன மனதினையும் வைத்துக்கொண்டு சித்தர்களது பாடல்களது பொருளை தெரிந்து கொள்ள  நினைக்கும் தற்காலத்து சிந்தனாவாதிகள்  குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாகவோ, கிணற்றுத்தவளைகளாகவோதான் இருப்பார்கள்.இதனால் சும்மா பழம் பெருமை பேசலாமேயன்றி பிரயோசனம் எதுவும் இல்லை. சித்தர்களது வரலாற்றினை எடுத்து நோக்குபவீர்களாக இருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். போகர் சீனா,யோகபு எனும் யூகி முனி அரபியா, கோரக்கர் கோரக்பூர் என ஓவொருவரும் வேறு வேறு கலாச்சாரத்தில் இருந்து வந்து தமிழில் எழுதி வைத்துச்சென்றார்கள். தமிழில் உள்ளதற்காக அனைத்தும் தமிழர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்று கூறமுடியாது. இதற்கு உதாரணமாக தற்கால நிலையினைவிளங்கிக்கொள்ளலாம். தற்போது அறிவியல் கல்விகள், கண்டுபிடிப்புக்கள் எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது, இரண்டாவது மொழியாக பிரஞ்சு மொழி இருக்கிறது. இரண்டையும் கற்றுக்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளலாம், உலக அரங்கில் எமது அறிவினை பகிரவும் விருத்தி செய்து கொள்ளவும் முடியும். அதுபோல் அக்காலத்தில் எல்லாக்கலைகளும் பாரததேசத்தினை மையமாக வைத்து தமிழிலும், சமஸ்கிருதத்திலும் ஆராயப்பட்டு கற்பிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். அவற்றை பல மொழி, கலாச்சாரத்தினை சார்ந்தவர்களும் செய்திருக்க வேண்டும். இந்த வரலாறும் உண்மையினையும் மற்றைய கலாச்சாரத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் இங்கு கூறவந்ததன் கருத்து; சித்தர்களது பாடல்களை, அறிவியலை பரந்த மனதுடன் எதுவித முன் துணிபுகளும் இன்றி அணுகவேண்டும் என்பதனை வலியுறுத்திக்கூறவே!

இந்த வகையில் விந்து/சுக்கிலம் என்பது பற்றி எவ்வாறான தவறான கருத்து தமிழர்களிடையே விதைக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். இதனை சரியாக புரிந்து கொள்வதற்கு நாம் ஆயுர்வேத மூல நூற்களை சற்று ஆராயவேண்டும்.

Comments

 1. நல்லதோர் முயற்சி... தொடரட்டும்... பாடல்கள் மேற்கோள் காட்டினால் கருத்து பரிமாற்றத்திற்க்கு உதவியாக இருக்கும். உள்ளிருப்பது மிகப் பெரிய புதையல்...அணுகுவதில் பொறுமையும் பக்குவமும் தேவை

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அன்பின் தமிழ்வாணன்,
  உங்கள் வருகைக்கு நன்றி!

  சினிமா நடிகரைப்போல் வெறும் உணர்ச்சி வசப்பட்டு நீர் உம்மை பெரும் தமிழ் அறிஞர் என்று நிலை நிறுத்த முயாலாதீர். அது வெறும் சிறுபிள்ளைத்தனமானது. மேலே குறிப்பிட்ட கருத்துக்களுக்கு உமக்கு மாற்று கருத்து இருந்தால் அவற்றை தெளிவாக பதிவிடவும்.

  எம்மை சரியாக புரிந்து கொண்டு பதிவிடச்சொல்லும் நீர் இதுவரை தமிழை எவ்வளவு புரிந்து கொண்டு ஆய்வுகள் செய்துள்ளீர்கள், அவற்றை பதிவிடுங்கள் நாமும் கற்றுக்கொள்கிறோம்.

  அன்புடன்.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. அன்பின் தமிழ்வாணன்.

  இங்கு நாம் உங்கள் மீது கோபப்படவில்லை, பொதுவெளியில் நீங்கள் கேள்வி கேட்கும் போது பதிலளிப்பது தான் அவைக்கு மரியாதை. நீங்கள் கேட்ட அதே தொனியில் பதில் தந்தோம் அவ்வளவுதான். தங்கள் எண்ணம் கண்ணாடி போல் எனது பதிலிலும் பிரதிபலித்தது அவ்வளவுதான்!

  நாம் கோபப்படவில்லை, உங்களை அன்பின் தமிழ்வாணன் என்று விளித்து, அன்புடன் என்றுதான் முடித்திருக்கிறோம்.

  காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சுதான், அதற்காக மற்றவை எல்லாம் மண்குஞ்சு என்று சொல்லக்கூடாதல்லவா! எமது பெருமைகளை வெறுமனே வாய் வீரம் மட்டும் பேசாமல் நாம் முறையாக ஆராயவேண்டும், நிதானமாக அலச வேண்டும், இழந்த பெருமையினை பெற என்ன செய்யவேண்டும் என்பதனை தெரியப்படுத்த வேண்டும்.

  மேலே இந்த வலைத்தளத்திற்கு வரும் அனைவரையும் குருநாதரின் அருள் பெறவே பிரார்த்தித்து வரவேற்கிறோம். ஆகவே எவரும் எதிரியோ, வேண்டாதவரோ இல்லை, கருத்துக்களை காத்திரமாக பகிர்ந்துகொள்ளலாம். யோகம் பயின்றோம் என்பதற்காக கருத்துக்களை எதிர்க்கும் போது மௌனமாக சரி என ஏற்றுக்கொள்வது தர்மமாகாது.

  உங்களுக்கான பதில் உங்கள் மெயிலில் அனுப்பியிருக்கிறோம். உங்கள் சாதனையினை தொடருங்கள். குருநாதர் வழிகாட்டுவார்.

  அன்புடன்

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு