சித்தர்களின் அரிய கற்பமுறை - அறிவியல் ஆதாரங்களுடன்


"இது எமது 200 ஆவது பதிவு, இதிலிருந்து பலகாலமாக எழுதுவதற்கு எண்ணியிருந்த வைத்தியம் சார் குறிப்புகளை தரலாம் என எண்ணுகிறோம். எமது மற்றைய பதிவுகள் மன, ஆன்ம முன்னேற்றத்தினையே கூறுவதாக இருந்து வந்துள்ளது. இனிவரும் மருத்துவக்குறிப்புகள் பலருக்கும் அன்றாட தேவைகளில் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். படித்து பயன் பெற குருதேவரை பிரார்த்திக்கிறோம். "


சித்தர்களின் அரிய கற்பமுறை - அறிவியல் ஆதாரங்களுடன்
இன்று சித்தமருத்துவம் என்பது "பாட்டி வைத்தியம்" என்று நம்பப்பட்டு விளக்கமில்லாமல் அனுபவத்தின் மூலம் நம்பிக்கையில் குணமாகும் வைத்தியம் என்று பலர் கருதி வருகின்றனர். அதேபோல் கற்ற சித்தவைத்தியர்கள் கூட தாங்கள் சித்தவைத்தியர் என்பதனை காட்டுவதற்கு பழம் பாடல்கள் இரண்டை கூறி சித்தர்கள் கூறியது என மழுப்பி அதனை தற்கால மொழியில் விளக்க முடியாமல் இருப்பதால்  தற்கால கல்வி முறையில் கற்றவர்கள் அவர்களை அறிவியல் பின்புலமின்றி ஏதோ நம்பிக்கையில் செயற்படுகின்றார்கள் என எண்ணி விடுகிறார்கள். இதன் பயனாக தூய அறிவியல் கலையான சித்தமருத்துவம் இன்று பாட்டி வைத்தியமாகிவிட்டது. இந்த கட்டுரை தொடரின் நோக்கம் சித்தர்களின் காயகற்ப முறை ஒன்றினை அறிவியல் ரீதியாக புரிதலை ஏற்படுத்துவதாகும், இது காலத்தின் தேவையுமாகும். 

இவற்றை எழுதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று பட்டதாரி சித்த மருத்துவர்களும், பரம்பரை சித்தமருத்துவர்களும் என்னுடன் விவாதத்திற்கு வரலாம், அதற்கு பதிலாக எனது தகுதி பற்றிய சில குறிப்புகளை இங்கு தந்துவிட்டு மேற்கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன். 

- எமது தந்தை வழி ஆறு தலைமுறை சித்தவைத்தியர்கள், நான் ஏழாவது தலைமுறை, எனது தாய் பட்டம் பெற்ற ஆயுர்வேத மருத்துவர், சிறுவயது முதல் சித்தவைத்திய மருந்துகள் செய்வது தொடங்கி குணபாடம்/பதார்த்தகுண விளக்கம் குருமுறையாய் கற்றுள்ளேன். ஆக நான் பரம்பரை சித்த வைத்தியன்!
- கல்வி முறையில் வேதியல்/தாவரவியல் (Chemistry/Botany) ஆய்வுகள் செய்யக்கூடிய அளவிற்கு எம். எஸ்ஸி (M. Sc) வரை கற்றுள்ளேன். நான் ஒரு தொழில்சார் விஞ்ஞான ஆய்வாளன் (Professional Scientific researcher).

இந்த இருவழி அறிவுகளும் இந்த விடயத்தினை அணுகுவதற்கு உபயோகித்துள்ளேன்,

இனி விடயத்திற்குள் செல்வோம், 

சித்தமருத்துவத்தின் அடிப்படை மருந்து: திரிபலா சூரணம், இது ஒரு காயகற்பமும் கூட. இதப்பற்றிய விஞ்ஞான ஆய்வினைத்தான் இந்தப்பதிவினூடு பார்க்கப்போகிறோம்.

திரி என்றால் மூன்று என்று பொருள், பலா என்றால் பலனளிப்பது என்று பொருள். சித்த மருத்துவ அடிப்படையில் உடலின் அடிப்படை உடற்றொழிலியல் முத்தோஷங்களில் தங்கியுள்ளது. வாதம், பித்தம், கபம் ஆகிய முத்தோஷங்களும் சமனிலையில் இருந்தால் ஆரோக்கியம், சமனிலை கெட்டால் நோய். இந்த முத்தோஷங்களையும் சமப்படுத்தி பலனளிப்பது திரிபலா ஆகும். 

திரிபலா இல்லாதா சித்த ஆயுர்வேத மருந்துகள் இல்லை எனலாம். இது பொதுவாகா மலமிளக்கி எனக்கருத்தப்படாலும் இதன் இரகசியங்கள் அளவிகடந்தவை அவற்றைத்தான் இனிப்பார்க்கப்போகிறோம், 

தொடரும்...

Comments

 1. இன்னும் பல நூறு பதிவுகளை இந்த வலைப்பூ தொட இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நான் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்தவை வெறும் ஏட்டுசுரைக்காயக உங்கள் பதிவுகள் தோன்ற வைக்கின்றன்.தனி மனித மேம்பாட்டிற்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் தங்களுடைய பதிவுகள் மிகவும் உதவியாக உள்ளது. பல பதிவுகள் எளிதில் கிடைக்காத ஒன்றாகவும், நுண்ணிய, மாறுபட்ட இது வரை அறியாத கோணங்களில் பதியப்பட்டுள்ளன.

  தங்கள் சேவைக்கு நன்றி.

  ராஜேஷ் குமார்,
  பவானி.

  ReplyDelete
 2. அன்பு சுமனன் ,

  தங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு