குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, March 11, 2013

திரிபலாவின் மகிமை - 06


*****************************************************************************************************
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்

பகுதி 01
பகுதி 02
பகுதி 03
பகுதி 04
பகுதி 05
*****************************************************************************************************

சித்தர்களின் கருத்துப்படி எல்லா நோய்களுக்கும் காரணம் வயிறு, வயிறு சுத்தமாக இருந்தால் நோய்வராது என்பது சித்தர்களின் நோயணுகாவிதிகளில் ஒன்று, சாதாரண நிலையில் சரிவர இயங்கும் வயிறு நோயுற்ற நிலையில் வயிற்றில் சேரும் நச்சுப்பொருட்கள் நோயினை தோற்றுவிக்கும், இதனை ஆமம் என்பார்கள், இந்த ஆமத்தினை ஒவ்வொரு நாளும் வெளியேற்றுபவர்களுக்கு நோய் அண்டாது, அப்படி வந்தாலும் விரைவில் குணமாகி விடும். இந்த ஆமம் தோன்றுவதற்கு காரணம் சரியாக சீரணிக்காத உணவுகள் ஆகும். இந்த ஆமம் வாத, பித்த கபத்தின் சமனிலையினை கெடுக்கும். இதனால் நோய் உண்டாகும். இந்த தோஷ சமனிலை இன்மையினால் உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை வாசகர்கள் எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் ஆங்க்கிலத்தில் தருகிறோம்; 
 • Indigestion - அஜீரணம்
 • Flatulence - வாய்வுக்கோளாறு
 • Constipation - மலச்சிக்கல்
 • Increased cholesterol - கொலஸ்ரோல் அதிகரிப்பு
 • High blood pressure - உயர் இரத்த அழுத்தம்
 • Blood related disturbances - இரத்த நோய்கள் 
 • Heart related problems - இதய நோய்
 • Decreases body immunity - உடலின் நிர்ப்பீடனம் குறைதல் 
 • Respiratory disorder - சுவாச நோய்கள்
 • General body debility - உடலின் பொதுவான நரம்புத்தளர்ச்சி
 • Early aging - இளமையில் வயதான தோற்றம்
 • Liver related ailments - ஈரல் நோய்கள்
 • Diabetes - நீரிழிவு
 • Inflammation or edema in the body - நோய்த்தொற்று
 • Dull skin and skin problems - தோல் நிறம்மங்குதல், நோய்கள்
 • Decreased vision- பார்வைக்கோளாறு
 • Chronic headaches - நீண்டகால தலைவலி

இவற்றுக்கெல்லாம் தீர்வு ஏதும் உண்டா என்றால் அதற்கெல்லாம் ஒரே எளிய தீர்வு "திரிபலா" பொதுவாக திரிபலாவினை இலகுமலகாரி ஆகத்தான் பலரும் கருதுகின்றனர். அது அதன் ஒரு செய்கை மட்டுமே, அதன் செய்கை பலது அதுபற்றி சுருக்கமாக பார்ப்போம். 

உவர்த்தன்மை (Saline purgative): திரிபலையில் உள்ள உப்புத்தன்மை நீரினை உறிஞ்ச்சும் தன்மையுடையது, ஆதலால் அது குடலிற்கு செல்லும் போது சுற்றுப்புறத்தில் உள்ள நீரினை உறிஞ்சி மலத்தினை நீர்த்தன்மை உடையதாக்கும்,இதனால் மலச்சிக்கல், மலமிறுகுதல் போன்றவை நிகழாது. 

இலகு மலகாரி (Laxative): மலத்தினை இலகுவாக்கி குடலில் இருந்து வெளியேற்றும். இந்தப்பண்புகளால் குடலில் உள்ள ஆமத்தினை திரிபலா மெதுவாக அகற்றுகிறது, அதன் மூலம் உடலின் நோய்க்காரணிகளை அகற்றுகிறது. 

3 comments:

 1. Hello Sir,
  I live in USA. For the past one year I have two small Vitiligo patches (வெண் படை). Recently, I consulted an Ayurvedic Doctor, he told me that I have Kapa imbalance due to indigestion and constipation(மந்தாக்கினி). As a result, I have lot of toxic material (நச்சுப்பொருள்கள்) in my body. He prescribed திரிபலா, திரிகட்டு, and a mix of வேம்பு தூள்+மஞ்சள் தூள்+ஷிண்டிலகொடி தூள், so I am eating these for the past two months. He asked me to come back on April. I want to know your opinion about this treatment, what do you think? Do Vitiligo can be cured by Siddha medicines?
  Thanks
  Mohan

  ReplyDelete
 2. அன்பரே, சித்தவைத்தியத்தில் மனிதனுக்கு வரும் அனைத்து வியாதிகளும் குணமாக்ககூடியவையே! கர்மவியாதி அனுபவித்து தீர்க்கவேண்டும், அல்லது துரிதப்படுத்தி தீர்க்கலாம்,

  அடுத்து சித்த ஆயுள்வேத மருந்துகள் மருந்தை மட்டும் உட்கொள்வதால் நோய்குணமாகிவிடாது, உங்கள் கர்மபலன்,தினசரி உணவுப்பழக்கம், மன எண்ணங்கள், பிராணனது நிலை ஆகியவற்றை சரிசெய்வதன் மூலமே பரிபூரண குணமடையலாம்.

  மேலதிக விபரங்களுக்கு எமது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும், குருவருளால் உங்களுக்கு உதவமுடியும்!

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

சாதனை முன்னேற்றம்

அன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம். காயத்ரி சாதனா குரு அகத்தியர் சாதனா தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது பயணங்கள் தொடர்கிறது. ஆரம்பத்தில் நீங்...