குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Monday, January 14, 2013

காம ரகசியம் - 02


அடக்கப்பட்ட காமமும் காமத்தின் மீதான வேறுப்பும்

காமம் மிருகத்தனமானது என்ற கருத்து மீதான ஓஷோவின் பார்வை பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம். 

மனிதனும் ஒரு மிருக வகையினை சார்ந்தவன் தான், ஆனால் அவனை மிருகம் என்று மட்டும் சொல்லமுடியாது, அவன் ஒரு முடிவான் மிருகம் அல்ல, அவன் மேலும் மிருகமாகவும் முடியும், அல்லது மேல் நோக்கி தெய்வமாகும் வழியிலும் செல்லமுடியும். அவன் எதையும் தேர்வு செய்யும் உரிமையினை பெற்றுள்ளான். நாய் என்பது கடைசிவரை நாய் எனும் மிருகம்தான், ஆனால் மனிதம் புத்தர் என்ற புனிதராகவும் முடியும், ஹிட்லர் என்ற கொடுங்கோலனாகவும் முடியும். அவன் இருபக்க தேர்வு சுதந்திரம் உடையவன். 

இங்கு காமம் மிருகத்தனமானது என்ற கருத்தில் மிருகத்தனம் என்பதனை வரவிலக்கணப்படுத்த வேண்டும், உலக வரலாற்றில் மனிதனைத்தவிர எந்த மிருகங்களூம் அதிகளவு போர் செய்ததில்லை, தமது இனத்தையே கொடுரமாக கொலை செய்ததில்லை, இப்படியிருக்க மிருகத்தனம் என மனிதன் தனது தவறான செய்கைகளுக்கு வரைவிலக்கணப்படுத்துவது மிகவும் தவறானது. மனிதன் தனது தேர்வு செய்யும் உரிமை மூலம் மிருகத்தினை விட அதிகமாகவே முன்னேறிவிட்டான், அதனை சுட்ட மிருகத்தனம் என்கின்றான். இதனை புரிய சிறிய குட்டிக்கதை ஒன்றினை பார்ப்போம், 

ஒரு ஹோட்டலில் ஒருவர் தனது நாயுடன் தங்க்குவதற்கு விரும்பினார், அதற்கான அனுமதியினை முகாமையாளரிடம் கேட்ட போது கீழ்வரும் பதிலினை பெற்றார், அன்புள்ள ஐயா, நான் ஹோட்டல் துறையில் கடந்த முப்பது ஆண்டுகளாக உள்ளேன், இந்த முப்பது ஆண்டு சேவையில் நான் ஒரு நாயினை வெளியேற்றுவதற்காக ஒருபோதும் பொலிஸினை கூப்பிட்டதில்லை, எந்த ஒரு நாயும் எனக்கு செலுத்த வேண்டிய கட்டணத்திற்காக செல்லுபடியாகாத காசோலையினை தந்ததில்லை, எந்தஒரு நாயும் கட்டிலில் உள்ள போர்வையினை சிக்கரட் நாற்றத்தால் நாறடித்ததில்லை, எந்த ஒரு நாயும் தந்து சூட்கேஸில் துவாயினை சுருட்டி எடுத்து சென்றதில்லை, ஆகவே உங்களுடைய நாய் தாராளமாக தங்கலாம் என்றான், இதில் உள்ள செய்து நாய் எனும் விலங்கு மிகவும் இயல்பானது, செயற்கைதனம் அற்றது, ஆனால் மனிதன் சூழ்ச்சி நிறைந்தவன், எல்லவற்றிலும் தனது இலாபம் என்ன என்று பார்ப்பவன், 

ஆக மனிதன் எந்த நிலைக்கும் போகும் வாய்ப்பினை உடையவன், தாழ்ந்த நிலைக்கும் செல்லலாம், மேலான நிலைக்கும் செல்லலாம். ஆகவே மனிதனது மிருகத்தனம் என்பது என்னவென்று புரிதல் அவசியம், ஆதலால் காமம் என்பது மிருகத்தனம் அல்ல காமம் மிருகத்தனம் ஆக்கப்படலாம். அதேவேளை அது அன்பாகவும் மாற்றப்படலா, உயர்ந்த பிரார்த்தனை ஆகலாம், அதனை மிருகத்தனம் ஆக்குவதும் தெய்வீகம் ஆக்குவது மனிதனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அல்லது சுதந்திரமே அன்றி, காமம் மிருகத்தனமோ, பாவமானதோ அல்ல! அதனை அப்படி ஆக்குவது அதனை அணுகியவரின் அணுகுமுறையில் உள்ள தவறே அன்றி காமத்தில் உள்ள தவறு அன்று! 

காமம் என்பது இதுதான் என்று கூறக்கூடிய ஒரு திடப்பொருள் அல்ல! எது நல்லதாகவும், கெட்டதாகவும் மாற்றப்படக்கூடிய ஒருவாய்ப்பு! அவ்வளவே! அது உங்கள் கையில் உள்ளது, காமத்தினை கொண்டு பேரின்பத்தினையும் அடையலாம், யோகம் கூறும் அதி உன்னத நிலையான சமாதியினையும் அடையலாம்! காமத்தினை கடவுளை அடையும் ஒரு பாலமாகவும் பயன் படுத்தலாம்! இந்த சாராம்சமே தாந்திரீகத்தின் சுருக்கமான விளக்கமாகும்! 


ஆக காமத்தினைப்பற்றிய புரிதலில் மனிதனது வரைவிலக்கணங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விடயங்களாகும்! இப்படிப்புரிந்து கொள்ளும்போது காமத்தின் மீதான தவறான பார்வைகள் விலக்கப்பட்டு காமத்தினை ஆரோக்கியமாக அணுகும் தன்மை இளைஞர்களின் மனதில் கட்டாயம் உருவாகும், இதன் மூலம் நல்லதொரு ஆரோக்கியமான சமூகம் உருவாகும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை!

காமத்தின் இரகசியங்கள் மேலும் வளரும்!.........................

4 comments:

  1. நல்ல ஆரோக்கியமான ஒரு பதிவு ..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ..மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
    அன்புடன்
    http://nadikavithai.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...