குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


எமது வலைத்தளத்தினை படிப்பவர்கள் ஸ்ரீ வித்தையின் மூலம் எளிமையான முறையில் தெய்வ சக்தியினை பெற்று ஆன்ம உயர்வும் எல்லா சௌபாக்கியங்களும் பெறும் ஸ்ரீ ஜோதியின் விளக்கமும் பங்கு பெறும் முறையும் இந்த இணைப்பில் காண்க


எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி: PDF கோப்பாக தரவிறக்கி கொள்ள

ஸ்ரீ வித்யா சாதனை படிவத்தினை நிரப்ப : படிவம்

மனிதனில் தேய்வ சக்தியை விழிப்பிக்கு காயத்ரி சித்த சாதனை : பயிற்சிக் குறிப்பினை தரவிறக்கி கொள்ள


ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


ங்கள் அகஸ்திய மகரிஷியின், குருமண்டலத்தின் அருள் பெறுவதற்கு உங்கள் பெயர் எமது பிரார்த்தனையில் இணைக்க இந்த இணைப்பில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.


நீங்கள் ஸ்ரீ ஜோதி இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 08.00 – 08.40 மணி அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


அகத்தியர் யோக ஞானதிறவுகோல் வகுப்பும் மூலகுரு மந்திர உபதேசமும் பெற‌ : இந்த படிவத்தை நிரப்பி தொடர்பு கொள்ளவும்

உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்

இங்கே


-அன்புடன் சுமனன் -

Sunday, January 13, 2013

காம ரகசியம் - 01னிதனால் அதிகமாக விரும்பப்படும், மனதினை ஆட்டிப்படைக்கும் விடயம் "காமம்", இன்றை உலகில் இதுபற்றி பலவித விழிப்புணர்வு இருந்தாலும் இதனை சரியான முறையில் வெளிப்படையாக அணுகும் வழிமுறையினை உலகிற்கு தந்தவர் ஓஷோ, ஏனெனில் காமத்தினைப் பற்றிய ரகசிய விஞ்ஞானம் இந்தியாவில் தாந்திரீகத்தின் ஊடாகவும், சீனாவில் தாவோவியலின் ஊடாகவும், மேற்கத்தைய நாகரீகத்தில் ரொசிகிருஷேஷியன் போன்ற இரகசிய சங்கங்களினாலும் தமது குழுக்களூக்கிடையில் மட்டுமே வெளிப்படுத்தி வந்தனர், இதனை மாற்றி அமைத்து வெளிப்படையாக கூறியவர் ஓஷோ மாத்திரமே எனலாம். இந்த தொடரில் ஓஷோவின் காமம் - தாந்திரீகம்-பாலுணர்வு தொடர்பான தகவல்களை தொகுத்து தரலாம் என எண்ணுகிறோம்.

இதனை வாசிப்பவர்கள் ஒரு வெளிப்படையான திறந்த மனதுடன் இவற்றை அணுகும்படி வேண்டப்படுகின்றனர், அல்லாது கீழ்ப்படுத்தப்பட்ட பாலுணர்வு தொடர்பான ஆக்கங்களோ அல்லது அப்படியான உணர்வினை இட்டுச்செல்லும் வகையிலான தகவல்கள் எதுவும் இங்கு இருக்காது. எல்லாவற்றிற்கும் ஊற்றாக இருக்கும் காமத்தினை பற்றிய வெளிப்படையான,ஆழமான புரிதலைப்பெறுதலே இந்த கட்டுரைத்தொடரின் நேக்கமாகும், இதனை ஒத்த மனதுள்ளவர்கள் இதனை வாசிக்கத்தொடரவும், அல்லாதவர்கள் விலகிச்செல்லலாம். 

காமம் என்பது வாழ்வின் மூலாதாரம், நாம் காமத்திலிருந்தே பிறக்கிறோம், ஒவ்வொரு கலத்திலும் காமத்தின் பகுதி கலந்தே இருக்கிறது. காமத்தினை மறுப்பவன் தற்கொலை செய்வதற்கு ஒப்பான நிலையினை அடைகிறான். அவன் தனது வாழ்வின் உயிர்ப்பினை இழக்கிறான். சரி அப்படியானால் ஏன் காமம் தவறானதாக கருதப்படுகிறது, இதனை விரிவாக வேறொரிடத்தில் பார்ப்போம். இங்கு காமத்தினைப்பற்றிய பொதுவான அணுகுமுறை பற்றி பார்ப்போம். 

எம்மெல்லோருக்கும் வாழ்வில் தவிர்க்கமுடியாத, அர்த்தமுள்ள, முக்கியத்துவமான விடயம் எனப்து தெளிவாக தெரிந்திருக்கிறது. ஆனால் அனைவரும் காமத்தினை தனிப்பட அணுகும் போது இரு தவறான அதீத அணுகுமுறையினை கடைப்பிடிக்கிறோம். முதலாவது அதீத அடக்கல், இதன் மூலம் அதன் மீதான இயற்கைக்கு மாறான விருப்பம் அதிகரிக்கிறது. இதற்கு உதாரணமாக ஒஷோ மேலைத்தேய கிருஸ்தவ கலாச்சாரத்தினை கூறுகிறார். கிருஸ்தவத்தின் முதன்மை அணுகுமுறை உலகின் இயல்பான நிலவரத்தினை பாவமாக பார்ப்பதன் மூலமே கட்டமைக்கப்படுகிறது. இப்படி அதீதமாக பாவமாக்கப்பட்ட காமம், பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் அடக்கப்பட்டு, அதன் நிரம்பு நிலையினை அடைந்த பின்னர்  வெளிபடும் நிலை இதன் மற்றைய எல்லையான அதீத காமத்தினை கட்டுப்பாடு இன்றி அனுபவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. 

இப்படி அடக்கப்பட்ட காமம் சந்தர்பம் கிடைக்கும் போது சமூக நியதிகளையும் மீறி அனுபவிக்கும் நிலைக்கு செல்கிறது, இதற்கு அண்மையில் உலகையே குலுக்கிய டெல்லி சம்பவம் ஒரு உதாரணம். இப்படி தவறாக அடக்கப்படும் காமத்தாலும், அது வெளிப்படுவதால் ஏற்படும் பாதிப்பினாலே இன்றைய பெரும்பாலும் பல காமம் சார்ந்த பாலியல் பிரச்சனைகள் உருவாகின்றது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. 

இந்த இரு நிலைகளூம் ஏற்படுவதற்கு காரணம் காமத்தினைப்பற்றி குறித்த மனதில் கட்டியெழுப்பபட்ட தவறான எண்ணங்களே காரணம், காமம் தவறு என்று மனதிற்கு போதிக்கப்படுகிறது, அது வலுவாக சித்தத்தில் இருக்கும் போது சாதாரணமாக மனதில் எழும் காம எண்ணமே மனதினை பலமாக தாக்குகிறது. ஆகவே காமம் தவறானது என்ற எண்ணம் மனதிலிருந்து களையப்படவேண்டும். காமம் எமக்கு தேவையான ஒன்று, இன்பம் பயப்பது, மனித குலம் உலகில் நிலைத்து நிற்க தேவையான அடிப்படை அமிசம் அது என்ற புரிதல் ஏற்படவேண்டும். காமத்தின் அடிப்படை மனிதனின் பேரன்பிற்கான ஊற்று என்பதானை புரிதல் வேண்டும். அன்பு இல்லாத காமம் அழகற்றது, ஆபத்தானது. அன்பின் அடிப்படையில் உருவாகும் காமம் மட்டுமே நம்பிக்கை, நேர்மை மற்றும் ஏற்கக்கூடிய காமமாக இருக்கும். காமத்தின் இந்த அடிப்படையினை சரியாக விளங்கிகொள்ளாது காமம் வேறு அன்பு வேறு, என்று நினைப்பதனால் காமத்தின் முழுமையான அமைப்பினை ஏற்க மறுக்கிறோம். காமம் என்பது எம்மில் அன்பினை முழுமையடையச் செய்ய இருக்கும் அடிப்படை விதையாகும். ஆக காமம் விதை என்றால் அன்பு அதிலிருந்து உருவாகும் விருட்சம் என்பதனை புரிதல் வேண்டும். 

காமத்தின் இரகசியம் இன்னும் தொடரும் ....

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

மனஉத்வேகங்களும் கருத்தாடல்களும் – ஒரு பெருங்குழப்ப கோட்பாட்டு புரிதல்

ஒரு பெருங்குழப்ப கோட்பாட்டாளனாய், யோக தத்துவ அடிப்படியில் மனதை விளங்கி கொள்ள முயல்பவனாய் இந்த சம்பவங்களை எப்படி பார்க்கலாம் என்ற ஒரு ப...