ஸ்ரீ கிருஷ்ணன் யோகீந்திரன்; மனிதர்கள் அடையக்கூடிய அதி உன்னத யோகத்தைப் பற்றிய பூரண விளக்கம் தந்த யோகி!
இன்று கிருஷ்ண அஷ்டமி!
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
ஸ்ரீ கிருஷ்ணன் யோகீந்திரன்; மனிதர்கள் அடையக்கூடிய அதி உன்னத யோகத்தைப் பற்றிய பூரண விளக்கம் தந்த யோகி!
இன்று கிருஷ்ண அஷ்டமி!
வைகாசிப் பௌர்ணமிக்கு தமிழ் நாட்டில் வெளியிட்ட நூல் கடைசியாக இன்று கைகளிற்கு வந்து கிடைத்தது!
அருமையாக வந்திருக்கிறது நன்றி தமிழி பதிப்பகம்
பெரு மகிழ்ச்சி!
அம்மாவும் மகளும் முதல் பிரதி பெற்றுக்கொண்டு வெளியிட்டு வைத்தனர்!
Zoom அறிமுக வெளியீட்டு விழாவினை தம்பிமார் Vimalathithan Vimalanathan Hari Arul ஏற்பாடு செய்கிறார்கள்!
ஏற்கனவே பதிவு செய்த அனைவருக்கும் கூரியர் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.
நூல் தேவைப்படுபவர்களும், அறிமுக விழாவில் பங்குபற்ற விரும்புவர்களும் தகவல்களை ஒருங்கிணைப்பதற்காக கீழ்வரும் கூகுள் படிவத்தில் உங்கள் விபரங்களை நிரப்பவும்
https://forms.gle/KjizaJeihJYmkLRn7
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எப்போதும் நிறைவானது, முழுமையான அறிவானதும், ஆனந்தமயமுமான சத் சித் ஆனந்த சிவபரம்பொருள் உயிர்கள் மேல் வைத்த கருணையால் தன்னை சதாசிவம் என்ற ஐந்து முகங்களுடைய மூர்த்தியாய் சகளீகரித்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.
இதுவே தோற்றத்தின் முதல் நிலை;
இந்த சதாசிவ ரூபத்தின் ஐந்து முகங்களும் உயிர்களுக்குத் தேவையான அறிவினை வெளிப்படுத்தியது.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று நான்கு திசைகளை நோக்கிய முகங்கள் முறையே வாமதேவம், தத்புருடம், அகோரம், சத்தியோஜாதம் என்ற நான்கு பெயர்களால் அழைக்கப்படும்.
ஐந்தாவது முகம் ஈசானம் ஊர்த்துவமாக மேல் நோக்கி இருக்கும். இது உயிர்களை சிவத்தை நோக்கிச் செலுத்தும் அறிவிற்கானது.
இந்த ஐந்து முகங்களூடாக சக்திநிபாதம் பெற்ற ரிஷிகளூடாக உருவாகிய சிவத்தை அடையக்கூடிய அறிவுகள் ஆகமங்கள் எனப்படும்.
இந்த ஐந்து முகங்களிலிருந்து சக்தி நிபாத தீக்ஷை பெற்ற மானுட குல ரிஷிகள் ஐவர்
வாமதேவம் - காசிபர்
த்புருடம் - கௌதமர்
அகோரம் - பரத்வாஜர்
சத்தியோஜாதம் - கௌசிகர்
ஈசானம் - அகத்தியர்
ஆகமம் என்பது சதாசிவ மூர்த்தத்திலிருந்து சக்தி பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டுவரும் சக்திநிபாத மரபு!
சக்தி நிபாதம் என்பது ஆன்மாக்களைச் சூழ உள்ள மும்மலங்கள் அழிந்து அங்கு சிவத்தை உணரும் தன்மையினை ஏற்படுத்தி சக்தியை நன்கு பதித்தல் என்று அர்த்தம்.
ஆகமங்களின் அறிவு உடலில் செயற்படும் தன்மையை உடலில் உள்ள ஆதாரங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
சத்தியோஜாதம் - சுவாதிஷ்டானம்
வாமதேவம் - மணிப்பூரகம்
அகோரம் - அநாகதம்
விசுத்தி -தத்புருஷம்
ஆக்னை - ஈசானம்
மூலாதாரம் என்பது ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் என்ற நான்கினையும் கொண்ட வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் உழலுபவர்களுக்கு ஆகம வழி இல்லை என்பதை அறியலாம். தனது கீழ்மனதின் உணர்ச்சிகளான ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் ஆகியவற்றை வென்று சிவஞானத்தைப் பெறவேண்டும் என்ற உறுதி பெற்ற உயிர்களுக்குரிய அறிவை சக்தி நிபாதத்திற்கூடாக தருவதைப் பற்றியே ஆகமங்கள் பேசுகின்றன.
மூலாதார அடிப்படை வாழ்க்கையை மனிதனின் பொது வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளலாம். இவற்றை சரிபடுத்தும் அறிவினை வேதங்கள் தருகிறது. வேதங்களின் பல துதிகள் ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இவற்றினை எப்படி சரி செய்வது, பிரச்சனைகளிலிருந்து வெளிவருவது பற்றியும் உரையாடும், அதேவேளை மிகவும் சூக்ஷ்மமாக ஆகமத்திற்குரிய கூறுகளையும் கொண்டிருக்கிறது. அதாவது வேதங்களின் பெரும்பகுதி மூலாதார வாழ்க்கையை சீர்படுத்தும் அதேவேளை உயர் ஞான வாழ்க்கை அடைவதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.
வேதங்கள் காலத்தால் முந்தியதாகவும் மனிதனின் ஆரம்ப பரிணாமத்தினை வழி நடாத்துவதாகவும் இருக்க, ஆகமங்கள் அவற்றின் உயர் ஞானக்கருத்துக்களை எடுத்துக்கொண்டு பிரபஞ்ச தோற்ற மூலமாகிய சதாசிவ தத்துவத்துடன் நேரடி சக்தி பரிமாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு உயிர்களுக்கு வழிகாட்டும் முறையைக் கூறுகிறது. இதனால் ஆகமத்தில் குருவும், தீக்ஷை மரபும் முக்கியமாகிறது.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த எப்போதும் நிறைவானது, முழுமையான அறிவானதும், ஆனந்தமயமுமான சத் சித் ஆனந்த சிவ பரம்பொருள் உயிர்கள் மேல் வைத்த கருணையால் தன்னை சதாசிவம் என்ற ஐந்து முகங்களுடைய மூர்த்தியாய் சகளீகரித்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.
இதுவே தோற்றத்தின் முதல் நிலை;
இந்த சதாசிவ ரூபத்தின் ஐந்து முகங்களும் உயிர்களுக்குத் தேவையான அறிவினை வெளிப்படுத்தியது.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று நான் கு திசைகளை நோக்கிய முகங்கள் முறையே வாமதேவம், தத்புருடம், அகோரம், சத்தியோஜாதம் என்ற நான்கு பெயர்களால் அழைக்கப்படும்.
ஐந்தாவது முகம் ஊர்த்துவமாக மேல் நோக்கி இருக்கும்.
இந்த ஐந்து முகங்களூடாக சக்திநிபாதம் பெற்ற ரிஷிகளூடாக உருவாகிய சிவத்தை அடையக்கூடிய அறிவுகள் ஆகமங்கள் எனப்படும்.
இந்த ஐந்து முகங்களிலிருந்து சக்தி நிபாத தீக்ஷை பெற்ற ரிஷிகள் ஐவர்
வாமதேவம் - காசிபர்
த்புருடம் - கௌதமர்
அகோரம் - பரத்வாஜர்
சத்தியோஜாதம் - கௌசிகர்
ஈசானம் - அகத்தியர்
ஆகமம் என்பது சதாசிவ மூர்த்தத்திலிருந்து சக்தி பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டுவரும் சக்திநிபாத மரபு!
சக்தி நிபாதம் என்பது ஆன்மாக்களைச் சூழ உள்ள மும்மலங்கள் அழிந்து அங்கு சிவத்தை உணரும் தன்மையினை ஏற்படுத்தி சக்தியை நன்கு பதித்தல் என்று அர்த்தம்.
ஆகமங்களின் அறிவு உடலில் செயற்படும் தன்மையை உடலில் உள்ள ஆதாரங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
சத்தியோஜாதம் - சுவாதிஷ்டானம்
வாமதேவம் - மணிப்பூரகம்
அகோரம் - அநாகதம்
விசுத்தி -தத்புருஷம்
ஆக்னை - ஈசானம்
மூலாதாரம் என்பது ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் என்ற நான் கினையும் கொண்ட வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் உழலுபவர்களுக்கு ஆகம வழி இல்லை என்பதை அறியலாம்.
மூலாதார அடிப்படை வாழ்க்கையை மனிதனின் பொது வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளலாம். இவற்றை சரிபடுத்தும் அறிவினை வேதங்கள் தருகிறது. வேதங்களின் பல துதிகள் ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இவற்றினை எப்படி சரி செய்வது, பிரச்சனைகளிலிருந்து வெளிவருவது பற்றியும் உரையாடும், அதேவேளை மிகவும் சூக்ஷ்மமாக ஆகமத்திற்குரிய கூறுகளையும் கொண்டிருக்கிறது. அதாவது வேதங்களின் பெரும்பகுதி மூலாதார வாழ்க்கையை சீர்படுத்தும் அதே வேளை உயர் ஞான வாழ்க்கை அடைவதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.
வேதங்கள் காலத்தால் முந்தியதாகவும் மனிதனின் ஆரம்ப பரிணாமத்தினை வழி நடாத்துவதாகவும் இருக்க ஆகங்கள் அவற்றின் உயர் ஞானக்கருத்துக்களை எடுத்துக்கொண்டு பிரபஞ்ச தோற்ற மூலமாகிய சதாசிவ தத்துவத்துடன் நேரடி சக்தி பரிமாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு உயிர்களுக்கு வழிகாட்டும் முறையைக் கூறுகிறது. இதனால் ஆகமத்தில் குருவும், தீக்ஷை மரபும் முக்கியமாகிறது.
காயத்ரி சாதனை எவரும் எந்த நிபந்தனையுமின்றி செய்யத்தொடங்கலாம். எனினும் சாதனை மூலம் ஆற்றல்களை, சித்திகளைப் பெற விரும்புபவர்கள் ஒரு சில நிபந்தனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் துரித சித்தியைப் பெறலாம்.
1. நல்ல நண்பர்கள், உறவினர்களை சுற்றமாகப் பெற ஒருவன் நல்லெண்ணெங்களை மனதில் உருவாக்கிக்கொண்டு காயத்ரியை ஜெபிக்க வேண்டும்.
2. செல்வமும் ஆனந்தமும் வாழ்க்கையில் பெற ஒருவன் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் ஜெபிக்க வேண்டும்.
3.மனோசக்தி பெற சத்துவ உணவுகள் மாத்திரம் உண்டு காயத்ரி சாதனை செய்ய வேண்டும்.
4. நல்லறிவும் ஞானமும் பெற தெய்வ சக்தி எம்முள் ஒளியாகப் பாய்ந்து எமது புத்தியைத் தூய்மைப் படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ளும் பாவனையில் சாதனை செய்ய வேண்டும்.
5. சூக்ஷ்ம ஆதாரங்களை செயற்படுத்த தினசரி உணவு உண்பதைப் போல் தவறவிடாமல் சாதனை செய்ய வேண்டும்.
6. அமரத்துவம் பெற; நான் என்ற எண்ணம் மறைந்து எம்மை அந்தப் பரம்பொருளின் பணிக்காக அர்ப்பணித்த பாவனையில் சாதனை செய்ய வேண்டும்.
Very valuable scientific presentations are ongoing, organized by our students; environmental society of Faculty of Applied sciences, University of Vavuniya.
Thank you Suresh Disanayake and Team
Our next environmental talk series will be in Sinhala organized by the Environmental Society of Faculty of Applied Science, University of Vavuniya.
The topic is Organic agriculture
This forum will be in the Sinhala Language, Please share with your Sihala speaking friends.
Topic: Environmental Talk Series III, SARAWATH BIMAK, WASA WISA NATHI HETAK
Time: Aug 21, 2021 09:00 AM Mumbai, Kolkata, New Delhi
Join Zoom Meeting
https://learn.zoom.us/j/61162616539...
ஸ்ரீ அரவிந்தர், யோக முறைகளை ஒருங்கிணைத்த மகாயோகி!
ஸ்ரீ அரவிந்தர் இன்புளுவென்சா தொற்றுக்காலத்தில் (1919 - 1920) வாழ்ந்தவர். அந்தக்காலத்தில் பரோடாவில் பேராசிரியராக பணிபுரிந்தவர். பிற்காலத்தில் Letters On Yoga நூலில் இந்த கொள்ளை நோயின் தாக்கம் பற்றி கீழ்வருமாறு பதிந்திருக்கிறார்;
{Complete Works of Sri Aurobindo, Vol. 31, Letters On Yoga-IV, P568-569}
நோயிற்கான சூஷ்ம காரணம் என்ன? விஞ்ஞானிகள் மனம் என்ற ஒன்றோ, எண்ணம் என்ற ஒன்றோ பௌதீக மூளையைத் தாண்டி இல்லை என்பதை மறுக்கிறார்கள். மனம் அல்லது எண்ணம் என்பது மூளையின் அதிர்விலிருந்து உருவாகிறது. அதேபோல் பிராணன் என்ற ஒன்று இல்லை அனைத்து இயக்கமும் உடலின் இரசாயனப் பதார்த்தங்களால் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்.
ஆனால் இங்கு பௌதீகத்தில் செயல் நடைபெறுவதற்கு supraphysical என்ற நுண்தளம் ஒன்று இருக்கிறது. அதன் சேவகர்கள்தான் மூளை, இரசாயனங்கள், இந்த நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகள் (germs) எல்லாம்.
இந்த supraphysical agent ஆகிய நுண்ணுயிரிகள் முதலில் உனது காந்த மண்டலத்தைத் தாக்கி உட்புகுகிறது. இந்தக் காந்த மண்டலம் வலிமையாக இருந்தால் எத்தனை மில்லியன் நுண்கிருமிகளும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. இவை உன்னைச்சூழ உள்ள காந்த மண்டலத்தை பிளந்தவுடன் அது உனது உடலை இயக்குகிற subconscient mind இனையும், பிராணசக்தியில் குழப்பத்தை உண்டு பண்ணி நோயைப் பற்றிய பயத்தையும், எண்ணத்தையும் உருவாக்குகிறது. இப்போது நீ அந்த நோய்க்கிருமிகள் உனது உடலில் செயற்படுவதற்குரிய சூழலை உனக்குள்ளே உருவாக்கியிருப்பாய்.
90% இறப்புகள் நோயுடன் போராட முடியாது என்ற பயம் உருவாகியவர்களுக்கே நடக்கிறது. பயம் உருவாகி விட்டால் உன்னால் உனது உடலை ஆளமுடியாது.
மாற்றாக உனது subconscient mind இல் நோயை எதிர்க்கும் மனநிலை வலிமையாக இருக்குமாக இருந்தால் நீ கொலெரா, பிளேக் ஆகியவற்றிற்குள் பாதிப்பில்லாமல் நடமாடலாம்! எந்த நோய்த்தாக்கமும் உருவாகாது.
இதை நான் பரோடாவில் கொள்ளை நோய்க்காலத்தில் வாழும் போது கண்டிருக்கிறேன்.
***************************
இந்தக் கருத்து நோய்வாய்ப்பட்டவர்களில் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு நுண்மைப் புரிதலைத் தருகிறது!
எவருக்கு எதிர்த்துப் போராடும் குணம் subconscient mind இல்லையோ அவர்களை இந்த supraphysical நுண்ணுயிரிகள் வெற்றிகொண்டு மரணம் வரை கொண்டு செல்லுகிறது.
இருவகையான மனிதர்களைக் காண்கிறோம்; இறைவன் கோயிலிலும், திருவிழாவிலும் மட்டும்தான் இருக்கிறான் என்று நம்பிக்கொண்டு இறைவன் வந்து எம்மைக் காப்பாற்றுவான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தனது அறிவை அடகுவைத்த மூட நம்பிக்கையாளன்.
இன்னொரு புறம் அறிவு ஓரளவு இருக்கிறது, வாழ்க்கை நன்றாகச் செல்கிறது; தன்னை அறிவுள்ளவனாக, புத்திஜீவியாக காட்ட வேண்டும் என்றால் நான் இறைவன் இருப்பதை நம்பவில்லை என்று நாத்திகனாக காட்டிக்கொள்ள விரும்புபவன்.
எமது அறிவிற்கு அப்பாற்பட்ட நுண்மையான விஷயங்கள் பிரபஞ்சம் முழுவதும் இருக்கிறது. நாம் நம்பவில்லை என்பதற்காக அவை இல்லை என்பதும் முட்டாள்தனம். இவர்கள் ஒருவகை அகங்காரத்தினூடாக தம்மை எல்லைப்படுத்திக்கொண்டவர்கள். தமது புரிதலுக்கு மேலே ஒன்றும் இல்லை என்று மனிதன் நினைக்கும்போது அறிவினை எல்லைப்படுத்திக்கொள்கிறான். ஆகவே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு மேல் அறிவைப் பெற விரும்புபவன் தான் அறிந்தது சொற்பமானது, அதற்கு மேல் நிச்சயமாக நாம் அறியாதது இருக்கிறது என்ற உணர்வு வேண்டும்.
உண்மை இரண்டிற்கும் மத்தியில் இருக்கிறது; எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் பிரபஞ்சம் இயங்கிக்கொண்டிருக்கிறது; நான் நம்புகிறேனோ, அல்லது மறுக்கிறேனோ என்பது பற்றி அதற்கு எந்தக் கவலையும் இல்லை; அந்தச் சக்தி இயங்கும் திசையை சரிவர மனிதன் கணிக்கும் வரை மனிதன் கவனமாக அதன் விதிகளைக் கற்க வேண்டும். மனிதன் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறான்.
காலம் காலமாக புதிய சவால்களை மனித குலம் எதிர்கொண்டு வென்றிருக்கிறது. கொள்ளை நோய்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றின்போதும் மனித குலத்தில் உணர்ச்சிவசப்பட்ட மாற்றத்திற்கு பயந்த மூடர்கள் அதை எதிர்த்திருக்கிறார்கள். இல்லையென்றால் உலகம், எதிர்காலம் இருண்டுவிட்டதாக பயந்து ஒழிந்திருக்கிறார்கள். ஆனால் மனிதகுலம் அந்த அனுபவத்தை அறிவாக்கிக்கொண்டு புதிய பலத்துடன் மீண்டு வந்திருக்கிறது.
ஆகவே எவரும் ஓடவுமும் முடியாது ஒளியவும் முடியாது.
இப்போது மனிதர்களாகிய நாம் எமது அறிவிற்குத் தெரியாத, அனுபவமில்லாத, புதிய, அறிவினால் உறுதிப்படுத்தப்படாத ஒரு சந்தர்ப்பத்தினை எதிர்கொண்டுள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நிதானமாக, எமது மன உந்தல்களை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கப் பழகாவிட்டால் நமக்கும் பலருக்கும் ஆபத்து விளைவிப்பவர்களாக மாறுவோம்!
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் என்கிறார் வள்ளுவர்;
அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்.
பெருஞ்சுனாமி அடிக்கும்போது சுனாமி அடங்கும் வரை மலை உச்சியில் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, கூர்ந்து அவதானித்து அடுத்தமுறை அப்படியொரு சந்தர்ப்பம் வந்தால் எப்படி சமாளிக்கலாம் என்ற அறிவைப் பெறுவதை விட வேறு எதுவும் உருப்படியாகச் செய்ய முடியாது. இப்படித்தான் மனித குலம் அறிவினை வளர்த்துக்கொண்டு வருகிறது.
புறவயப்பட்ட மனிதன் கடவுளை தன்னைப்போல் உருவமுடையவனாகப் படைத்து கோயில், திருவிழா, சடங்கு, சாங்கியங்களை ஏற்படுத்தினான். இவை எல்லாம் மனிதனின் திருப்திக்கானவை! சிவவாக்கியச் சித்தர் ஒரு பாடல் கூறியுள்ளார்;
"நட்ட கல்லைச் சுற்றி வந்து மோன மோன என்று முணுமுணுக்கும் மந்திரம் ஏதுக்கடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்"
இந்தக்காலம் கூட்டம் கூட்டாமல் நாதன் என்ற இறைவன் எமக்குள் இருக்கிறான் என்று உணர்வதற்குரிய காலம்!
நல்ல ஓய்வு எடுங்கள்! ஆரோக்கியத்தின் அடிப்படை,
1) நல்ல உறக்கம்
2) மித ஆகாரம்
3) நல்லெண்ணமும், இலட்சியமும் உடைய மனம்
4) அளவான உடலுழைப்பு, உடல் பயிற்சி
வீட்டில் சிறிதளவு நேரம் ஒதுக்கி எண்ணங்களைக் கவனித்து, மூச்சினை ஆழமாக்கி உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து வணங்கி வாருங்கள்! இது உடல், உள ஆரோக்கியத்திற்கு மிக உயர்ந்த பயிற்சி! எமக்குள் ஆற்றலைக் கூட்டும்!
எக்காரணம் கொண்டும் வீண் பதட்டமும், பயமும் கொள்ளாதீர்கள்! அதற்காக அசட்டுத்தனமான, முட்டாள்தன தைரியமும் கொள்ளாதீர்கள்! சம பாவத்திலிருந்து சந்தர்ப்பத்தை எதிர்கொள்வோம்!
கொரோனா பொஸிட்டிவ் என்றால் பயமுறாதீர்கள்; எனது உடலிற்கு பழக்கமில்லாத ஒரு புது எதிரி எனது உடலைக் கைப்பற்ற வந்திருக்கிறான். அவனை நான் எதிர்கொண்டு உடலை மீளக்கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள்! உடலிற்கு தன்னை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவு இயற்கையில் இருக்கிறது. எனது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எண்ணாதீர்கள்! அதுபோல் இந்த சந்தர்ப்பத்தை எப்படிக் கையாள வேண்டும் என்ற தகுந்த மருத்துவ அறிவு இல்லாமல் வீணாக கண்டவற்றை முயற்சித்து உடலைக் கெடுத்து ஆபத்தினை வாங்காதீர்கள்.
ஒவ்வொரு இருளுக்கும் அடுத்து ஒளி வரும்! இரவிற்கு பிறகு பகல் வரும்! அதுபோல் நோயிற்குப் பிறகு ஆரோக்கியம் வரும்! ஆகவே இவற்றிலிருந்து மீண்டு மிகுந்த ஆரோக்கியத்துடன் இந்த மனித குலத்தை நன்மைக்கு இட்டுச் செல்வோம் என்ற நம்பிக்கையுடன் காலத்தை எதிர்கொள்வோம்!
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது யாழ் பல்கலைக்கழகத்தின் இலட்சியம்! யாழ் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு மாணவனும் இந்த இலட்சியத்தினை நோக்கி தனது வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தப்பணிக்கூற்றின் நோக்கம்.
இப்படி உயர்ந்த இலட்சியத்தை நடைமுறைப்படுத்த அவுஸ்ரேலிய வாழ் யாழ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கல்விப் பணி E- கல்வி நம்பிக்கை நிதியம்.
கல்வி கற்பதற்கு தடைகள் எவை என்பதை ஆராய்ந்து அந்தத் தடைகளை எல்லாம் எப்படி நீக்கலாம் என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய தீர்வுகளை உருவாக்கும் முன்னோடி கல்வி நிறுவனம்.
இன்று உலகம் zoom, google meet என்ற தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கு பலவருடங்களுக்கு முன்னர் பழைய SKYPE தொழில்நுட்பத்தினை வைத்துக்கொண்டு digital education தொடங்கிய முன்னோடிகள்.
இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இருக்கும் தமிழ்ப் பாடசாலைக்கும் இவர்கள் உதவி கிட்டும்.
பொதுவாக Charity என்றால் காசு சேர்த்து கட்டிடம் கட்டுவது, பொருட்கள் அன்பளிப்பது என்ற வகை தான தருமம் அல்ல இவர்களுடைய பணி!
ஒரு வேளைச்சாப்பாட்டிற்கு மீன் கொடுப்பதை விட மீனைப் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே உண்மையான உதவி என்ற சீனப்பழமொழியின் ஆழமான தத்துவத்தில் இயங்குகிறார்கள்.
எமது பிள்ளைகளின் கல்வியே எமது எதிர்காலம் என்ற உன்னத இலட்சியம் கொண்டவர்கள்!
மலையகத்தில் இந்த இலட்சியம் விதைக்கப்பட்டால் அடுத்த தலைமுறையில் தொழிலாளர்கள் பிரச்சனை என்ற ஒன்றைப் பற்றி சமூகப் பிரச்சனையாக நாம் உரையாட மாட்டோம்!
தாம் இயங்குவதுபோல் மற்றவர்களையும் அத்தகைய பணியைச் செய்யச் சொல்லி மற்றவர்களுக்கும் தூண்டல் கொடுக்கிறார்கள்.
ஒருவருடன் ஒருவர் ஒத்திசைந்து, ஒன்றிணைந்து ஒரு வேலையைச் செய்ய கடினமான "மைய நீக்க விசை" சமூகமான எமது தமிழ்ச் சமூகத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து, உள்வாங்கி பணியின் நோக்கமாகிய மாணவர்கள் கல்வியில் வெற்றிப்பெறச் செய்ய வேண்டும் என்று எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றிச் செயற்படும் நிறுவனம்.
சரி, ஏன் இந்தப்பதிவை எழுத வேண்டும்?
இன்று ஈ-கல்வியை தலைமை தாங்கி நடாத்தும் Muralee Muraledaran அண்ணாவிற்கு பிறந்த நாள்! அவரை வெறுமனே வாழ்த்துவது மட்டும் போதாது! அவர் உளமாரச் செய்யும் இந்தப்பணியைப் பற்றி நான் அவதானித்ததை பகிர்வது அவருக்குரிய நல்ல வாழ்த்தாக இருக்கும் என்றே இந்தப் பதிவு!
மரத்தின் கிளைகளும், இலைகளும் எல்லோருக்கும் தெரியும்; ஆனால் அவை ஊன்றி வளர்ந்து நிற்பது அதன் ஆணிவேரிலும், பக்க வேர்களிலும்! இதைப்போல் Dr. Kumaravelu Ganesan உம் எனக்கு தனிப்பட பரீட்சையமற்ற e-கல்வி குழுவினரும் இந்த உன்னத பணிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
இதைப்போன்றதொரு சேவை மாதிரியுருவை (service model) நாம் பொருளாதாரத்தில், தொழில் வாய்ப்புக்களில் எப்படி எமது சமூகத்திற்கு உதவலாம் என்று சிந்தித்தால் இன்னும் பல முன்னேற்றத்தினை துரிதமாகப் பெறலாம்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Muralee Muraledaran அண்ணா!
வவுனியா நகரை காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவகையில் சூழலியல், சமூக பிரச்சனைகளை எதிர்கொள்ள தயார்ப்படுத்தும் சிந்தனையை உருவாக்க உலகளாவிய climathon செயற்திட்டத்தில் எமது வவுனியாப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு சூழலியல் மாணவர்கள் (Keerthanaram Thanabalasingam) இணைகிறார்கள்.
ஏற்கனவே யாழ் நகரை இணைத்து செயற்படும் Dr Prabu Nadaraja வும் குழுவினரும் வழிகாட்டுகிறார்கள்.
வவுனியாவின் சூழலியல் ஆர்வலர்கள் Dr. Mathurahan Selvarajah Vinasi Dhas ஆகியோருடன் அனைத்து வவுனியா வாழ் சூழலியல் ஆர்வலர்களையும் அழைக்கிறோம்.
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் "மக்களுக்கான சூழலியல்" கலந்துரையாடல் நிகழ்வு - 02!
யானை மனித முரண்பாடுகளைப் பற்றி அறிவியல் ரீதியாக கலந்துரையாடல் ஆய்வறிஞர் குழு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
Join Zoom Meeting
https://learn.zoom.us/j/65592011569...
Meeting ID: 655 9201 1569
Passcode: ENSOC2_UoV
யானைகள் பற்றிய அறிவியலை, உயிரியலைப் புரிந்துகொள்ள அனைவரும் வருக!
ஆடி அமாவாசை முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் - திருப்திப்படுத்தல் எல்லோரதும் கடன்!
ஸ்தூல உடலை விட்டு நீங்கும்போது நாம் வாசனை - அதாவது வாழ்ந்த காலத்தில் ஏற்படுத்திக்கொண்ட இச்சைகளைச் சுமந்துகொண்டு இந்த ஐந்து பூதங்களாலான உடலை விட்டு வெளியேறுகிறோம். அடுத்த உடலைப் பெறவேண்டும் என்றால் இருக்கும் வாசனையை கரைக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் உண்டு, உறவாடி, பாசம் கொண்ட புத்திரர்கள், மனைவி, உரிமை கொண்டாடிய நிலம், செல்வம் இவை எல்லாவற்றையும் அவன் தனது வாசனா சரீரத்தில் ஏற்றிக்கொண்டு பூவுலகில் சுற்றிக்கொண்டு அடுத்த நிலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறான்.
இப்படித் தவிப்பவர்களுக்கு அவர்களுடன் உணர்ச்சியால் உறவுகொண்ட உடலில் உள்ள மனிதர்கள் தமது உணர்வை ஒன்றி உதவ முடியும். திருப்திப்படுத்த முடியும்.
தர்ப்பணம் என்றால் திருப்திப்படுத்துதல் என்று பொருள்! இதை அந்த ஆன்மாக்களுக்கு பிடித்ததைப் படையல் இடுதல் என்று சிலர் பின்பற்றுவார்கள்.
சிலர் கோயில், குளம், தீர்த்தத்தில் சடங்காக பின்பற்றுவார்கள்.
சிவபெருமானே பசுபதி - பசுவாகிய ஆன்மாவின் தலைவன்! ஆகவே சிவ உபாசனையில் ஆன்மாக்களின் வாசனை நீங்கி சிவபெருமானின் அருள் பொழிய சிவபூஜையாலும் எமது முன்னோர்களின் ஆன்மாவிற்கு நன்நிலை பெற வேண்டலாம்!
இதனை பித்ரு மோக்ஷ சாதனை என்று கூறுவர்! சிவபெருமானை அம்ருதகடேசுவரராக - ம்ருத்யுஞ் ஜெயராக ஆவாஹித்து அவரது அம்ருத கடாக்ஷம் எமது பித்ருக்களுக்கு வேண்டி அருள் பெறுதல் இந்த சாதனையின் அடிப்படை! சிவ உபாசனை, காயத்ரி ம்ருத்யுஜெய உபாசனை உடையவர்கள் கடைப்பிடிக்கக் கூடியது.
அனைவருக்கும் எம்முன்னோர்கள் வழிபட்ட வேதநாயகி அம்மையுடனுறை வேதவனநாதர் அருள் வேண்டி பிரார்த்தனைகள்!
தென்னாட்டில் சிவன் என்றும் எந்த நாட்டிலும் இறைவன் என்றும் அழைக்கப்படும் அந்த பரத்திற்கு போற்றி!
சிங்கையைச் சென்றடைந்தது "யோகமும் இயற்கையும்" நூல்!
இலங்கைக்கு கப்பலேறிவிட்டது; ஆனால் இறங்கவில்லை!
சிங்கப்பூரில் முதல் பிரதி - இன்றைய ஆடி அமாவாசை நாளில் - சமூக ஆர்வலர், பொறியளாலர் Thirunavukkarasu Thayanthan அவர்களுக்கு சிலோன் செண்பக விநாயகர் கோயிலில் கையளிக்கப்பட்டது! படித்துவிட்டு கருத்துக் கேட்டிருக்கிறேன்.
சிங்கப்பூர் மலேசியாவில் வசிக்கும் அன்பர்கள் எவருக்கும் இந்த நூல் தேவைப்பட்டால் அறியத்தரவும்!
நன்றி Bhaskar Rajendran
நண்பர்களே, படித்து விட்டு உரையாடலை comment இனூடாக ஆரம்பியுங்கள்!
***********************************
தாவரம் தனக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் எப்படிப் பெறுகிறது என்பது பற்றி Liebig இற்கு முன்னராக இருந்த கோட்பாடுகளை humus theory எனப்படும். அதாவது மண்ணில் விழுந்து இறந்துபோன, தாவரங்கள், விலங்குகளின் அழுகிய பாகங்களே தாவத்திற்கு உக்கலாகி உணவாகிறது என்று நம்பப்பட்டது.
இந்தக்கோட்பாட்டினை மேற்கத்தேய தத்துவஞானிகளும், கீழைத்தேய தத்துவவாதிகளும் விவசாயத்தில் நம்பியிருக்கிறார்கள்.
பாரதத்தின் பழம்பெரும் விவசாய நூலாகிய பாராசர மகரிஷியின் க்ருஷி சாஸ்திரம் விலங்குகள், தாவரங்களை பயிர்ச் செய்கைக்கு எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி உரையாடுகிறது.
கிரேக்க தத்துவியலாளர் Democritus of Abdera (460- 360 BC) கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
“பூமித்தாய் மழையினால் செழிப்படைகிறாள்; மழை பயிர்களை உயிர்ப்பிக்கிறது; பயிர்கள் மனிதனையும் விலங்குகளையும் போசிக்கிறது; எவை பூமியிலிருந்து எடுக்கப்பட்டதோ அவை அனைத்தும் பூமிக்கு மீளச் செல்லவேண்டும். வாயு மண்டலத்தில் இருந்து எடுக்கப்பட்டது வாயுக்களாக மீண்டும் வாயு மண்டலத்திற்கு செல்ல வேண்டும். ஒரு உயிரின் இறப்பு என்பது அதன் அழிவு அல்ல; இந்த மூலகங்கள் எங்கிருந்து வந்ததோ அதற்கு மீளச் செல்லும் செய்கை”
இந்த தத்துவத்தை அரிஸ்டோட்டில் நிலம், நீர், அக்னி, வாயு ஆகிய நான்கு பூதங்களில் இருந்து ஒன்றிலிருந்து ஒன்றாக மாறி தாவரத்தினது, விலங்குகளது உடல் உருவாகுவதாக கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் மேற்கத்தேய விவசாயம் தாவரத்திற்கு தேவையான போசணைப்பதார்த்தங்களை இந்த சேதன உக்கல் மூலம் கிடைப்பதாக 2000 ஆண்டுகளாக 1840 இல் Liebig தனது இரசாயனவியல் அடிப்படையில் தாவரம் இயங்குகிறது என்று கூறும் வரை மேற்கூறிய தத்துவ அடிப்படையில் மேற்கத்தேயம் Humus theory இனையே 2000 வருடங்களாக தாவரத்தின் போஷாக்கிற்கு அடிப்படையாக கொண்டிருந்தது.
இதேபோல் கீழைத்தேயத்தில் பாரத தேசமும் இதே கொள்கையைக் கொண்டிருந்து என்பது பராசர மகரிஷியின் க்ருஷி சாஸ்திரம், அதர்வண வேத சுலோகங்கள் உறுதிப்படுத்துகிறது.
இதையே தமிழர்களும் சங்ககாலத்தில் கடைப்பிடித்து வந்தனர் என்பதற்கு இலக்கியங்கள் சான்றாகிறது; கலித்தொகை,108-60 கூறுகிறது;
“காஞ்சித் தாது உக்கன்ன தாது எருமன்றத்துத்”
என்றும்,
ஏரினும் நன்றால் எருவிடுதல்” (1038) என்று திருவள்ளுவரும்
மேலும் நற்றிணை, அகநானூறு என்பவையும் மாட்டின் எருவும், உக்கிய இலை குழைகளும் மண்ணிற்கு எருவாக இடப்பட்டது என்ற தகவலைத் தருகிறது.
மருத நிலக்குடிகளான வேளாண் சமூகத்தவர்கள் இப்படி உக்கலை மண்ணிற்கு இட்டு மண்ணை வளப்படுத்தும் அறிவைப் பெற்றிருந்தார்கள்.
இப்படி 2000 வருடமாக இந்தப் பூமியில் வாழ்ந்த மனித சமூகங்கள் மண்ணில் இருக்கும் இந்த உக்கல் – humus – இனை நம்பியே விவசாயம் செய்துகொண்டிருந்தனர்.
இந்த நம்பிக்கை 1840 இல் Lie Big தனது விவசாய இரசாயனவியல் கோட்பாடுகளை நிறுவும் வரை தொடர்ந்தது.
LieBig இடம் உக்கல் கோட்பாட்டின் இரண்டு போசணைப் பதார்த்தங்களின் கருதுகோள்கள் தோல்வியுற்றன. Lie big நவீன விவசாயத்திற்கு செய்த அறிவியல் பங்களிப்பாக மூன்று விஷயங்கள் பட்டியலிடப்படுகின்றன. (George W. Black, Journal of Chemical Education 1978 55 (1), 33)
1. உக்கல் – ஹுமஸ் ஆனது தாவரத்திற்கான காபன் மூலம் என்று நம்பப்பட்டு வந்ததை மறுத்து தனது ஆய்வுக் கணிப்பீட்டின் மூலம் அவை மண்ணிலிருந்தோ, உக்கலில் இருந்தோ கிடைப்பதில்லை. உக்கல் காபோனிக் அமிலத்தைத் தந்து தாவரங்களுக்குள் இரசாயன மாற்றங்கள் நிகழ்வதை ஆரம்பிப்பதாக கருதினார்.
2. இரண்டாவதாக தனது ஆராய்ச்சி முடிவுகளின்படி நைதரசன் அனைத்து தாவரங்களுக்கும் வளிமண்டலத்திலிருந்தே கிடைப்பதாக முடிவு கட்டினார். ஆனால் நீரில் கரைந்து தாவரம் எடுத்துக்கொள்ளக்கூடிய நைத்திரேற்று, நைத்திரைட்டுக்களைப் பற்றி அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. இது அவரைத் தாவரக் குடும்பங்களுக்குத் தவிர மற்றவை வளிமண்டல நைதரசனை நேரடியாகப் பெறமுடியாது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. இது தவறான ஒரு முடிவும் கூட.
3. மூன்றாவது விவசாய இரசாயனவியலின் அதிமுக்கிய பங்களிப்பு; இவர் பல்வேறு தாவரங்களை எடுத்து காயவைத்து அவற்றினை எரித்து அதில் அசேதன மூலகங்கள் வெவ்வேறு அளவில் இருக்கும் தரவுகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு தாவரத்திற்கும் அந்த மூலகங்கள் வெவ்வேறு அளவில் தேவைப்படுவதாகவும், அந்த தேவையை செயற்கை உரங்கள் மூலம் நிவர்த்தி செய்வதன் மூலம் அதிக விளைச்சல் பெறலாம் என்றும் முன்மொழிந்தார். இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு உருவாகியதுதான் இன்றைய நவீன செயற்கை உரப்பாவனை.
Lie big மண்ணுக்கும் தாவரத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை மிக எளிமைப்படுத்தியது அவருடைய ஆய்வுகளில் இருக்கும் வழுவாகப் பார்க்கப்படுகிறது. மண்ணுக்கும் தாவரத்திற்கும் இடையில் இருக்கும் சமநிலை மண்ணில் இருக்கும் உயிரங்கிகளினால் – பற்றீரியா – பங்கசுகளினால் சமநிலைப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்கவில்லை. உக்கல் – ஹுமஸ் கோட்பாட்டின் அடிப்படை மண் நுண்ணுயிரியலில் இருந்தது. இரசாயனவியலினை மாத்திரம் வைத்துக்கொண்டு Lie big உருவாக்கிய இந்தக் கொள்கையினை விவசாய வியாபார உலகம் நன்கு பிடித்துக்கொண்டது. உர வியாபாரம் செழிக்கத் தொடங்கியது!
காலங்கடந்து வளர்ந்த மண் நுண்ணுயிரியல் துறையால் அசுர வளர்ச்சி கண்டுவிட்ட இரசாயன உர அரக்கனிடம் போட்டி போட்டு வெல்ல முடியாமல் ஹுமஸ் எனப்படும் உக்கல் தோற்றுப்போனது. பிற்காலத்தில் ஹுமஸ் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை வளர்த்து தாவரத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்று புரிந்துகொள்ளப்பட்டது.
இங்கு நாம் புரிந்துகொள்ளப்பட வேண்டியது 2000 வருடங்களாக சேதன விவசாயம்தான் செய்யப்பட்டு வந்திருக்கிறது. எமது நாட்டில் பராக்கிரமபாகு அரிசி உற்பத்தி செய்து பர்மாவிற்கு ஏற்றுமதி செய்தது எந்தக்கம்பனியிலும் உரம் வாங்கி அல்ல என்பதும், ராஜ ராஜ சோழன் காவேரிப் படுக்கையை விளைநிலம் ஆக்கியதும் செயற்கை உரம் போடவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
180 வருடங்களுக்கு முன்னர் உலகை ஆண்டுகொண்டிருந்த ஒரு பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அறிவியல் பிரிவிற்கு (British Association for the Advancement of Science) ஒரு அரைக்குறை அறிவியல் புரிதலுடன் கொடுக்கப்பட்ட அறிக்கை அதிகாரத்தினால் உலகமயமாக்கப்பட்டது என்பதும், ஆயிரமாண்டு காலம் இருந்து வந்த ஹுமஸ் என்ற உக்கல் பற்றிய சுதேச அறிவினை ஆதரிக்காமல் பின் தள்ளியதாலும் வந்ததுதான் இந்த இரசாயன உர விவசாயம்.
தொடரும்!
1800 களில் விஞ்ஞானிகள் தாவர வளர்ச்சிக்குத் தேவையான மண்ணில் இருக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் எவை என்ற ஆய்வினை ஆரம்பிக்கின்றனர். 1822 களில் Carl Sprengel இனால் முன்வைக்கப்பட்ட Law of minimum விதி 1840 களில் Justus von Liebig க்கின் ஆய்வுத் தர்க்கங்கள் மூலம் இரசாயன உரத்தின் மூலம் பயிர்களின் விளைச்சலைக் கூட்டலாம் என்ற நவீன விவசாயம் உருவாகிறது.
Law of minimum விதி என்ன சொல்கிறது ஒரு தாவரத்தின் உச்சபட்ச வளர்ச்சிக்கு, விளைச்சலுக்கு அத்தியாவசிய மூலகங்கள் என்ற இரசாயனப் பதார்த்தங்கள் அவசியம்; அவற்றுள் மிகச்சிறிய அளவு, தேவையான இரசாயனம் தேவைப்படும் அளவை விடக் குறைவாக இருந்தால் அந்த தாவரத்தின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படும்.
இந்த அடிப்படையில் Liebig அதற்கு முன்னர் இருந்த உக்கல் கோட்பாடு – humus theory – இனை Liebig கேள்விக்கு உட்படுத்தி விவசாயத்தில் அதிக விளைச்சல் பெற இரசாயன உரம் அவசியம் என்று வாதத்தினை முன்வைக்கிறார்.
இன்று சேதன விவசாயம் ஏதோ புதிதாக உருவாக்கப்பட்டதுபோல் பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களாக மனிதகுலம் மக்கி, உக்கிய உக்கலைக் கொண்டே பயிர் செய்துகொண்டிருந்தனர். 1800 களில் இதைத் தொகுத்து தாவரவளர்ச்சிக்கும் மண்ணில் உள்ள உக்கிய சேதனப் பதார்த்தங்கள்தான் அவசியமானவை என்ற humus theory ஐ முன்வைக்க 1840 அளவில் Liebig Law of minimum கோட்பாட்டினை வைத்துக்கொண்டு ஒரு வாதத்தினை முன்வைக்கிறார்.
தாவர வளர்ச்சிக்குத் தேவையான நைதரசனை வளிமண்டலத்திலிருந்துதான் பெறவேண்டும். இவற்றை லேகுமினேஸ் தாவரங்களைத் தவிர மற்றவற்றால் பெறமுடியாது. ஆகவே விவசாயத்தில் அதிக விளைச்சலைப் பெற நாம் அதிகமாக நைதரசனை செயற்கையாக இட வேண்டும் என்று!
இந்தப் பெரும் பொய்யனின் – அதுதான் Lie Big இன் மொழிபெயர்ப்பு – இந்தக்கோட்பாடு அதிக விளைச்சலைக் கூட்டும் நவீன இரசாயன உர விவசாயப் புரட்சிக்கு வித்திட்டது.
Lie big ஒரு அசேதன இரசாயனவியலாளர்; அவருக்கு முன்னர் உலகம் உக்கல் கோட்பாடுதான் தாவரத்திற்குப் போசணைப் பதார்த்தத்தினைத் தருகிறது என்ற அறிவியலில் இயங்கிக்கொண்டிருந்தது. 1840 களில் British Association for the Advancement of Science இன் இரசாயனவியல் பகுதி அவரை அசேதன இரசாயனவியலில் பயன்பாட்டினைப் பற்றி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கச் சொல்லிக் கேட்கிறது. அவர் சமர்ப்பித்த அறிக்கையின் பெயர் “Organic Chemistry in its Application to Agriculture and Physiology”
இந்த அறிக்கை தாவர வளர்ச்சியில் இரசாயனவியல் எத்தகைய பங்களிப்பை நல்கலாம் என்று ஆராயப்பட்ட ஒரு Monograph ஆகும். இதன் ஆரம்பப் பந்தி இப்படி ஆரம்பிக்கிறது;
“The object of organic chemistry is to discover the chemical conditions essential to the life and perfect development of animals and vegetables, and generally to investigate all those processes of organic nature which are due to the operations of chemical laws” (Bradfield, 1942).
இவருடைய ஆய்வின் நோக்கத்தில் தெளிவாக வரையறுக்கிறார்; தான் தாவரம், உயிர்களின் வாழ்க்கைக்கு அவசியமான இரசாயனவியல் நிபந்தனைகளை இரசாயனவியல் விதிகளின் அடிப்படையில் ஆராயப்போகிறேன் என்று!
இந்த நோக்கம் உயிரியல் கூறுகளைத் தள்ளி வைக்கிறது; அதாவது மண்ணில் நுண்ணங்கி என்ன செயலைச் செய்கிறது; மண்புழு என்ன செய்கிறது என்ற காரணிகளை எல்லாம் நான் பார்க்க மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்கிறார்.
ஒரு தாவரத்தை எடுத்துக்கொண்டு அதற்குத் தேவையான இரசாயனத்தை அதற்குக் கொடுத்தால் அது அதிக விளைச்சலைத் தரும்; இதைத் தவிர அதைச் சூழ உள்ள உயிரினங்கள், நுண்ணங்கிகள் என்ன செயலை தாவரத்திற்கு செய்கிறது என்பதிலெல்லாம் எனக்கு அக்கறை இல்லை என்ற கருத்துப்பட தனது ஆய்வுகளை இரசாயனவியல் அடிப்படையில் மாத்திரம் ஆராய்ந்து தனது முடிவுகளை வைக்கிறார்.
அதேபோல் இதற்கு மாற்றாக ஏற்கனவே இருந்த உக்கல் கோட்பாடும் எப்படி உக்கலில் இருந்து தாவரத்திற்கு தேவையான போசணைப் பதார்த்தம் கிடைக்கிறது என்பதை தெளிவாக அறிவியல் நோக்கில் வைக்க முடியாமல் தடுமாறுகிறது. அந்தக்காலத்தில் நுண்ணுயிரியல் அதிக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஆகவே மண்ணிற்கு பற்றீரியா, பங்கசு செய்யும் சேவைகள் அறியப்படவில்லை. ஆகவே Lie Big இன் கருத்து வலுப்பெறுகிறது.
மேலும் Lie Big வெறுமனே விஞ்ஞானி மட்டுமல்ல! தனது கண்டுபிடிப்பை காசாக்க வேண்டும் என்ற வியாபாரியும் கூட! இவரே உர வியாபாரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். எந்த அறிவியலும் அதிகமாக காசு பார்க்க வேண்டும் என்றால் உண்மையை மறைத்து ஏமாற்று உத்திகளைப் பாவிக்கும் என்பது உண்மை.
Liebig உருவாக்கிய கோட்பாடு விவசாயத்தில் விளைச்சலைப் பெற அனைத்து இரசாயனம், உயிரியல் கூறு என்று எதுவுமில்லை, அதைப் பற்றி நாம் எதுவும் கவலைப்படத் தேவையில்லை என்ற N-P-K mentality இல் விவசாயத்துறை வளரத்தொடங்கியது. உண்மையில் Liebig தனது அறிவுத்திறனால் தனது காலத்தில் தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு மாறாக, நிபந்தனையுடன் கூடிய உச்ச பலனைத் தரக்கூடிய ஒரு உற்பத்தி முறையை உருவாக்க வித்திட்டார் என்று கூறலாம்.
Liebig கூறிய கோட்பாட்டின்படி ஒவ்வொரு தாவரத்திற்கும் தேவையான அளவு மாமூலகம், நுண்மூலகங்களை (Macro & Micro nutrients) தாவரங்களுக்குக் கொடுக்க விளைச்சல் அபரிதமாக கொடுக்கும் என்பதில் பொய் இல்லை! ஆனால் இந்த முறை தாவரம் இயற்கையாக மண்ணுடன் உறவுகொண்டு, மற்றைய தாவரங்களுடன் ஒன்றி வாழும் இயற்கைத் தன்மைக்கு எதிரானவையாக இருந்தது. இரசாயன உரங்கள் மண்ணில் நுண்ணுயிரிகளைக் கொன்று மண்ணை உப்பாக்கிக்கொண்டிருந்தது.
குடும்பத்துடனும், நண்பர்களுடனும், உறவினர்களுடனும் அளவாக உண்டு மகிழ்வாக வாழ்ந்துகொண்டிருந்த மனிதனை அதிகமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற போதையைக் காட்டி அவனை அதிக பணம், அதிக மன உளைச்சல் என்ற நிலைக்கு உட்படுத்தி பிறகு மன உளைச்சல் தீர தூக்க மாத்திரை கொடுக்கும் அதே நிலை நவீன விவசாயத்தில் தாவரங்களுக்கு உருவாக்கினார்கள்!
Liebig இன் கோட்பாடுகள் எப்படி Humus Theory இனை வென்றது! அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!
*************************************************************
இதை ஆர்வமாகப் படிப்பவர்கள் கீழே உங்கள் ஆர்வத்தினை comment ஆகத் தெரிவியுங்கள்! எவரும் ஆர்வமாகப் படிக்கவில்லை என்றால் நேரத்தை வீணடிக்காமல் வேறு வேலைகளில் செலவழிக்கலாம் என்று இருக்கிறேன்! லைக் போடுவதை விட comment அவசியம்! பலரும் படிக்காமல் லைக் போடலாம்; இதைப் படித்தால் இந்தக் கடைசிப் பந்தி வரை வந்து உண்மையாகப் படித்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும்.
ஸ்ரீ காயத்ரி மந்திரத்தின் பொருள் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரோளியை எம்முள் இருத்தி தியானிப்போமாக என்பதாகும்!
அதாவது ஒருவனுக்கு புத்தியானது விளக்கில் எரியும் திரிபோல் தூண்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்; அந்தத் தூண்டல் எல்லாவற்றிற்கும் மூலமான பேரொளியிலிருந்து நமக்குள் வரவேண்டும் என்ற முயற்சியை தியான சாதனையால் செய்ய வேண்டும்! இப்படி சாதனை செய்யும் ஒருவன் அறிவினைப் பெறுவான். இந்த அறிவு எப்படி இருக்க வேண்டும் என திருவள்ளுவர் அறிவுடமை என்ற அதிகாரத்தில் பட்டியலிட்டுள்ளார்.
1. ஒருவராலும் உட்புகுத்த, அழிக்க முடியாதது அறிவு
2. மனதைக் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் செல்லவிடாமல் தீமைகளில் செலுத்தாமல் நல்ல விஷயத்தில் மனதைச் செலுத்தும் ஆற்றல் அறிவு
3. பிறருடைய கருத்துக்களை எவ்வளவு கேட்டாலும் அதிலுள்ள உண்மைத்தன்மையினை அறிந்து தெளியும் ஆற்றலிற்கு அறிவு என்று பெயர்
4. கேட்பவர்களுக்கு புரியும்படி எளிமையாகச் சொல்வதும், பிறர் பேசும்போது நுண்மையாக எதைச் சொல்ல வருகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதும் அறிவு
5. உயர்ந்தவர்களை நட்பாக்கிக்கொண்டு அவர்களுடன் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு உறவாடி, பின்னர் சலித்துவிடாமல் சமநிலையில் உறவைப் பேணுவது அறிவு எனப்படும்.
6. உலகம் இயங்கும் வகையை அறிந்து அதற்கேற்றால் போல் தானும் இயைந்து வாழ்வதே அறிவு
7. பின்னர் நடக்கப்போவதை சரியாக அனுமானிப்பதே அறிவு, அப்படி அனுமானிக்கத் தெரியாதவர்கள் எவ்வளவு கற்றாலும் கல்லாதவர்களே.
8. பயப்பட வேண்டிய இடத்தில் பயந்து விலகிச் செல்லுவது அறிவுடைய செயல்.
9. பின்னர் நடக்கப்போவதை அறிந்து செயற்படக்கூடியவனுக்கு எந்த துன்பமும் இல்லை.
10. அறிவிருந்தால் மாத்திரமே எம்மிடம் இருக்கும் மற்றைய செல்வம், அதிகாரம் அனைத்தும் பயன்; இல்லாவிட்டால் மற்ற எது இருந்தாலும் ஒரு பயனும் இல்லை!
சூரிய ஒளியை ஒளித்தொகுப்பு மூலம் தாவரத்தின் பச்சையம் கவர்ந்து உணவாக – குளுக்கோசாக மாற்றுகிறது. அதாவது போட்டோனில் சக்தியாக இருந்த ஒன்றை திணிவாக மாற்றி பூமிக்குள் சூரியனின் ஆற்றலை உருமாற்றும் செய்கை. இந்த செய்கையின் அடிப்படையில்தான் பூமியின் ஒட்டுமொத்த உணவுச் சங்கலியும் ஆரம்பமாகிறது.
சூரிய ஆற்றல் இப்படி கவரப்பட்டு உணவாகியதை மனிதன் தனது இச்சைப்படி திருடிக்கொள்வதுதான் விவசாயம் அல்லது உற்பத்தி! ஆக மனிதனால் சக்தியைக் கவர முடியாது; உணவினை உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் இயற்கை செய்து வைத்துள்ள ஏற்பாடுகள் எல்லாவற்றையும் குழப்பவும், திருடவும் மனிதனால் முடியும் என்பதுதான் மனிதனின் சிறப்பியல்பு.
மனிதனின் இந்த திருட்டு இயல்பில்தான் விவசாயத்தின் மொத்தப் பிரச்சனையும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் மனிதனிற்கு இயற்கையிடமிருந்து அதிகமாக, அதேவேளை சுலபமாகத் திருடக்கூடிய விவசாய உற்பத்தி முறைகள் வேண்டும்! இன்னொரு இடத்தை, சூழலை நாசமாக்கி தனக்கும், தனது குழுவிற்கும், நாட்டிற்கும் உணவு வேண்டும்.
இரசாயன உரம் பாவிக்க வேண்டும் என்ற வாதத்திற்கு கூறும் காரணங்களில் ஒன்று;
உரம் பாவித்தால் அதிக விளைச்சல் கிடைக்கும்; அதிக விளைச்சல் கிடைத்தால் அதிக இலாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி உரம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் Supply & Demand பொருளியல் தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஒன்று அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால் சந்தையில் அதன் விலை குறையும் என்று.
நுவரெலியா மாவட்ட மரக்கறிச் செய்கையில் இதை அவதானிக்கலாம். அனைவரும் கோவா பயிரிட்டிருக்கும்போது கந்தசாமி அண்ணன் மாத்திரம் கரட்டைப் பயிரிடுவர். அந்த போகத்திற்கு கரட்டிற்கு அமோக விலை கிடைத்து கந்தசாமி அண்ணன் பெரிய பணக்காரன் ஆகிவிடுவார். இதை உரம் விற்பவர் தனது சந்தைப்படுத்தலுக்கு பாவித்து மூளைச் சலவை செய்வார் “பாருங்கள் கந்தசாமி, அண்ணேயோட தோட்டத்தில் இந்த உரம் போட்டு அமோக விளைச்சல்; இந்த உரத்தைப் பாவியுங்கள், இந்தமுறை கரட்டையும் போடுங்கள் என்று உரக்கடைக்கார ஊரில் உள்ள தோட்டக்காரர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துவார். உடனே அனைவரும் கரட்டும், உரமும் வாங்கிப் பயிரிடுவர். அடுத்த போகத்திற்கு கரட் கிலோ 30 ரூபாய் என்று வந்துவிடும். கரட் பயிரிட்டவர்கள் அனைவரும் நஷ்டமடைவார்கள்.
அதிக விளைச்சல் அதிக இலாபம் என்று கருதி தமது பணத்தை உரத்திற்காக வீணடித்து இறுதியில் நஷ்டமடையும் விவசாயி! இலாபமடையும் நபர் உரத்தை உற்பத்தி செய்தவரும், கமிஷனுக்கு விற்றவரும்!
ஆனால் இந்த விவசாயமுறையில் ஒரு நுட்பம் இருக்கிறது; அதிக விளைச்சல் வந்தால் அதை உயர்விலை பெறக்கூடிய சந்தை வாய்ப்பு கொண்டு செல்லும் உட்கட்டமைப்பைக் கொண்ட நிறுவனங்களுக்கு இந்த பயனைத் தரும். (ஆனால் மண்ணைக் கொல்லும் என்பதை மறக்கக்கூடாது) இந்த முறையைப் பயன்படுத்தித்தான் லத்தீன் அமெரிக்காவில் வாழையும், அன்னாசியும், மரக்கறியும் உற்பத்தி செய்து அமெரிக்கா, கனடாவின் நுகர்விற்கு செல்கிறது. ஆபிரிக்காவில் உற்பத்தி செய்து ஐரோப்பாவிற்கு நுகர்வாகிறது. இதைச் செய்யும் நிறுவனங்களின் மொத்த வருமானம் இலங்கை போன்ற நாடுகளின் வருமானத்தை விட பலமடங்கு பில்லியன் டொலர் வர்த்தகங்கள். ஒவ்வொரு நிறுவனமும் அறுவடை செய்து ஐந்து நாட்களில் ஐயாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சந்தைக்கு ஒரு சிறு கீறல் கூட ஏற்படாமல் மரக்கறியையும் பழத்தையும் கொண்டு செல்லும் சொந்தக் கப்பல், துறைமுக வசதி அவர்களுக்கு உண்டு!
இப்படி கிளியைப் பார்த்து நரி, சூடுபோட்டுக்கொண்டதைப் போல் உள்ளூர் விவசாயிக்கு அதிகம் உற்பத்தி செய்தால் இலாபம் என்று மாயை காட்டி ஏமாற்றும் வித்தையைத் தான் அனேக உரம் விற்பவர்கள் நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.
பிலிப்பைன்ஸ் உலகின் வாழை, அன்னாசி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு. இந்த நாடு 50 வருடங்களுக்கு முன்னர் நவீன இரசாயனத்துடன் மேற்கூறிய பயிர்களை பயிரிட்டு ஏற்றுமதி வருமானம் பெறுவது என்ற கொள்கையுடன் ஆரம்பித்தது. இன்று ஏறாத்தாழ பயிர் செய்யப்பட்ட இடங்களின் உயிர்பல்வகைமை அழிந்து, நீர் மாசாகி, மீன்வளம் குன்றி சூழலியல் பிரச்சனையுடைய நாடாக மாறியுள்ளது. எவ்வளவு உரப்பாவனை அதிகமாகிறதோ அந்தளவிற்கு நோய்த்தாக்கமும் அதிகரிக்கிறது. புதுப்புது நோய்கள், பீடைகள்!
எப்படி இருப்பினும் இப்படி உற்பத்தி செய்யப்படும் நிலங்கள் இருபது வருடங்களில் மலடாகும்! அதற்குப் பிறகு அந்த நிலங்கள் உவர் நிலங்களாகி பாலைவனமாகும்போது அங்கு எந்த விவசாயமும் செய்ய முடியாது.
இப்படி நிலத்தை உரப்பாவனையால் மலடாக்காமல் உயிர்த்தன்மையுடன் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையுடன் விவசாயம் செய்யலாம் என்பதைத்தான் இயற்கை விவசாயம் சொல்லுகிறது.
சூழலியல் விதியின்படி ஒரு தொகுதியினுள் அதிக சக்திவாய்ந்த ஒரு உயிரினம் இருந்தால் அந்தத் தொகுதி விரைவாக நோய்த்தாக்கம் அடைந்து அழிவடையும். ஆனால் பல்வகைமைத் தன்மை இருந்தால் ஒன்றை ஒன்று பாதுகாத்து நீண்டகாலம் நிலைத்திருக்கும். உதாரணமாக புல் மாத்திரம் இருக்கும் நிலம் சூரிய ஒளியில் கருகி நெருப்பு பிடித்து அழிந்து விடும். ஆனால் ஐந்தடுக்கு, ஆறு அடுக்கு உள்ள காடுகளில் மேலேயுள்ள உயர்ந்த விதானம் உடைய மரங்கள் சூரிய ஒளியைத் தாங்கி கீழே உள்ளவை தாங்கக்கூடிய அளவில் குறைத்துக் கொடுக்க அதன் நிழலில் மற்ற அடுக்கில் உள்ளது செழிப்புறும். இப்படி ஒவ்வொன்றும் சூரிய ஒளியை கவ்விப் பிடித்து உணவை உருவாக்கும். இப்படி பல்வேறு பயிர்கள் குறித்த ஒழுங்கில் ஒன்றுக்கு ஒன்று உதவும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட காட்டுத்தொகுதி அதிக உற்பத்தித் திறனுடையதாக இருக்கும்.
இதேபோல் ஒரு பயிரை மாத்திரம் பயிரிட்டு, அதிக உரம் போடப்படும் பயிரிற்கு நோய்த்தாக்கம் அதிகமாக இருக்கும். அதேவேளை எங்காவது ஒரு தடவை நோய் தாக்கினால் முழுப்பயிரும் நாசமாகிவிடும். மிகக் கவனமாக, அவதானத்துடன் பாவிக்கப்பட வேண்டியவை.
ஆனால் பல பயிர்களை உள்ளடக்கிய இயற்கை வேளாண்மையில் நிச்சயம் 10% இழப்பு பீடைகளால் இருக்கும். ஆனால் அவை வெகுவிரைவில் இயற்கை உணவுச் சங்கலி பீடைகளை கட்டுப்படுத்தும்.
தொடரும்…
சிலகாலத்திற்கு முன்னர் Dr. Kumaravelu Ganesan அவர்கள் இயற்கை விவசாயம் பற்றி ஒரு விவசாயி முகநூலில் கேட்ட கேள்விகளிற்கு எனது கருத்தை எழுதும்படி கேட்டிருந்தார்கள். சிக்கல் மிகுந்த கேள்விகளைக் கொண்ட வாழ்வாதாரம் பற்றிய துறை என்பதால் வெறும் உணர்ச்சி வசப்பட்ட கருத்துக்களை எழுதாமல் சிந்தித்து, சீர்தூக்கி எனது கற்கை, அனுபவம் என்பவற்றுடன் ஒப்பிட்டு சரியாக எழுத வேண்டும் என்று நேரம் எடுத்துக்கொண்டேன்.
கேள்விக்களுக்கு பதில் கூற எந்த அறிவுத்தளத்திலிருந்து நாம் உரையாடுகிறோம் என்ற தெளிவினை உருவாக்க அடிப்படைக் கருத்துக்களை உரையாடலாம் என்று நினைக்கிறேன்.
துறைசார் நிபுணர்கள் ஆர்வமாக உரையாடுவது வரவேற்கப்படுகிறது.
முதலாவது, இதை எழுதுவதற்கு என்ன தகுதி எனக்கு இருக்கிறது என்பதை கூறிவிட்டு எழுதுவது இங்கிருக்கும் அவையோருக்கு தெளிவாக்க வேண்டும். நான் முறையாக சூழலியல் முதுமாணி வரை பயின்றவன். பின்னர் அறிவியல் ரீதியாக, பெரும் வர்த்தக ரீதியிலான முகாமைத்துவம் செய்யப்படும் வாழைச் செய்கையின் சூழலியல் முகாமைத்துவத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்தவன். தற்போது பயிர் விஞ்ஞானத்தில் எனது முனைவர் பட்ட ஆய்வினைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன். ஆகவே நான் தமிழில் முகநூலில் ஆன்மீகம், தத்துவம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதால் அறிவியல் தெரியாது என்று எண்ணி எவரும் வாதம் செய்ய வரவேண்டாம்!
சுருக்கமாகச் சொன்னால் இரசானத்தை அள்ளித் தெளித்து, உரத்தை மண்ணில் கொட்டி விவசாயம் செய்யும் ஒரு பெரிய நிறுவனத்தில் சூழலிற்கு பாதிப்பை எப்படிக் குறைப்பது என்று ஆராய்ந்து நிர்வகிக்க வேண்டும். சவால் மிகுந்த வேலை!
இந்தத் திட்டத்தில் எமது பழமையான தோட்டத்தின் உற்பத்தி திடீரென குறையத்தொடங்கியது. இதற்கான முன்மொழிவாக எமது உற்பத்தி விஞ்ஞானிகளால் ஆழமாக மண்ணை உழுது, பண்படுத்தி, இன்னும் அதிகமாக உரம் போட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் எந்த ஆக்கபூர்வமான விளைச்சலும் கிடைக்கவில்லை. மேலதிகமாக உரம் பாவிப்பது என்பது என்னைப் பொறுத்தவரையில் சூழலை மாசாக்கி மண்ணில் உவர்த்தன்மையையும், நிலத்தடி நீர் மாசினையும் உருவாக்கலாம் என்ற வாதம்! என்றாலும் நான் சூழலியல் போராளியாக மாறமுடியாது. எனது நிறுவனத்திற்கு win-win தீர்வு கொடுக்க வேண்டும்.
இதை ஆராயப்போக இணையத்தளத்தில் இப்படி ஒரு பிரச்சனையை சுபாஷ் பாலேக்கர் என்பவர் தனக்கு நடந்த அனுபவமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆர்வத்துடன் அவருடைய உரையைக் கேட்க, அதில் நாம் நிறுவனத்தில் ஒருவித arrogance உடன் விவசாயத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை உறைக்க ஆரம்பித்தது.
அதுவரை விஞ்ஞானத்தையே கற்று, விஞ்ஞான முறையின்படி விவசாயம் செய்துகொண்டிருந்த எனக்கு சுபாஷ் பாலேக்கர் கூறியது தர்க்கப்படி சரியாகப் பொருந்தி வருவதை சூழலியல் படித்த என்னால் இலகுவாக விளங்கக்கூடியதாக இருந்தது;
அவருடைய இயற்கை விவசாயத்திற்கான ஆய்வுக் கேள்வி;
1. காட்டிற்கு யார் நீர் ஊற்றுகிறார்கள்?
2. யார் உரம் போடுகிறார்கள்?
3. யார் விதை நடுகிறார்கள்?
4. இவை ஒன்றும் செய்யாமல் எப்படி காட்டில் உற்பத்தி சிறப்பாக நடக்கிறது?
5. அப்படியென்றால் நாம் ஏன் காட்டைப் பார்த்துக் கற்றுக்கொள்ளக் கூடாது?
இந்த ஐந்து கேள்விகளுக்கும் விடையாக அவர் காட்டில் பயிர்கள் தம்மை ஒருங்கமைத்துக் கொள்ளும் அடிப்படையில் ஒரு மாதிரியுருவைக் கண்டுபிடித்தார். அதை ஏற்கனவே விளம்பரத்துக்கு அடிமையாகி இருக்கும் விவசாயிகளின் மனதிற்கு கொண்டு செல்ல கவர்ச்சிகரமான பெயரை இட வேண்டும் என்பதால் zero budget farming என்று பெயரிட்டார். உண்மையில் அதன் அர்த்தம் உள்ளீடு குறைந்த விவசாய முறை என்பதாகும்.
1. தோட்டத்தில் ஒரு நாட்டுப் பசுமாடு இருக்க வேண்டும்.
2. தோட்டத்திற்குள்ளே முதலாவது தடவைக்கு பிறகு உள்ளீடு எதுவும் வரக்கூடாது.
3. தோட்டத்திலிருந்து விளைச்ச (பழம், தானியம்) தவிர மற்ற எதுவும் எரிக்கப்படகூடாது, மண்ணிற்கு உணவாக்கப்பட வேண்டும்.
4. உற்பத்திச் செலவு என்று எதுவும் இருக்கக் கூடாது.
5. பல்பயிர் வகைமையாக உயிர்ப்பல்வகைமை இருக்க வேண்டும். அவரது மாதிரியில் 36x36 அடி ஒரு உற்பத்தித் துண்டாக கருதப்படுகிறது. இதற்குள் 16 பயிர்கள் வளர்க்கலாம்.
6. இந்தப் 16 பயிர்கள் 45 நாட்களில் பலன் தரத்தொடங்கி 05 வருடத்திற்கு பிறகு பலன் தரும் பயிர்களும் இருக்கும்.
7. மண்ணை அதிக உற்பத்திக்கு என்று அழுத்தம் தரக்கூடாது.
இந்த ஏழாவது கருத்து மண்ணை அதிக உற்பத்திக்கு உந்தக்கூடாது என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம். மண்ணை நவீன விவசாயம் வெறுமனே ஒரு இரசாயனப் பதார்த்தமாக மாத்திரமே பார்க்கிறது.
ஆனால் இயற்கை, காடு மண்ணை ஒரு உயிருள்ள சூழற்றொகுதியாக பாவிக்கிறது. மண்ணில் இருக்கும் நுண்ணங்கிகளும், பரிணாமத்தில் ஆதியிலிருந்து மண்ணை உருவாக்கி வரும் மண்புழுவும் மண்ணின் உயிர்த்தன்மைக்கு அவசியமானது.
நவீன இரசாயன விவசாயத்தின் உரங்கள் இந்த மண்ணின் உயிர்தன்மையினை இல்லாமலாக்குபவை என்பதே இங்கு புரிந்துகொள்ளக்கூடியது.
நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர், மசானபு ஃபுகோகா எல்லோரும் சொல்லும் ஒருமித்த கருத்து “அதிக உற்பத்தி, அதிக இலாபம் என்ற மாயையில் நாம் எமது மண்ணை மலடாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதாகும்.
தொடரும்...
எமது யோகமும் இயற்கையும் நூலைப் படித்த கோவையிலிருந்து வேலுமணி என்ற அன்பர் அனுப்பிய கருத்து:
நன்றி வேலுமணி அவர்களே!
உங்களின் யோகமும் இயற்கையும் எனும் உயரிய நூல் படிக்கும் பாக்கியத்தை தமழி பதிப்பகத்தார் தந்து உதவினார்கள். அவர்களுக்கு மிக நன்றி, நூலில் யோகம், இயற்கை விவசாயம் பற்றி மிக எளிமையாக சொன்ன விதம் மிக அற்புதமான ஒன்று, அனைவரும் படிக்க வேண்டிய நூல், மிக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்! மேலும் எழுதி மக்களை உய்விக்குமாறு கேட்கிறேன்.
வேலுமணி கோவை
நலமுடன் வாழ்க ஐயா
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள் 423)
என்ற குறளின் அடியை "மெய்ப்பொருள் காண்ப தறிவு" மகுட வாசகமாகக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இருந்த வவுனியா வளாகம், நீட்சி பெற்று, தனித்துவத்துடன்
"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு"
அறிவுடைமை குறள் எண்:422
மனத்தை கண்ட கண்ட இடமெல்லாம் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்ற மகுட வாசகத்துடன் இன்று உதயமாகிறது வவுனியாப் பல்கலைக்கழகம்.
இந்தக்குறள் யோகத்தில் தாரணை என்ற மனதை ஒருமைப்படுத்தி ஆற்றல் பெறுவதைப் பற்றிப் பேசுகிறது.
ஆக மெய்ப்பொருள் காண மனம் அங்கும் இங்கும் அலையாமல் மெய்ப்பொருளிலே இன்னும் ஆழமாகச் சென்று சாதனை படைப்போம் என்ற உறுதியுடன் உதயமாகிறது வவுனியா பல்கலைக்கழகம்!
இந்தத்தருணத்தில் நானும் பல்கலைக்கழகத்தின் ஒரு சிறு அங்கமாக இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியுடன் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூளை வளத்தை உருவாக்க, அறிவுசார் இலங்கையை உருவாக்க பாடுபடுவோம்!
இதை வடிவமைத்தவர் அன்புத்தம்பி, பேராதனைப் பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளர் Vimalathithan Vimalanathan அவர்கள்! விமலாத்தித்தன் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்; விவாத அரங்கு, கவிதை, தமிழ் என்பவற்றில் வித்தகர்! ஊடகவியலாளர். றோயல் கல்லூரியில் விவாதிகள் பரம்பரையை உருவாக்கிக்கொண்டிருக்கும் ஆசான்.
கால ஓட்டத்தில் என்னிடம் வந்து மாட்டிக்கொண்டவர்! எனது எழுத்துக்கள், நூல்களாக கட்டுரைகளாக அச்சுக்கு போகும் முன் முதலாவதாக மெய்ப்புப் பார்த்து திருத்தும் உரிமை கொண்டவர். எமது குருமண்டலத்தின் சாதகர்!
அரசியல், வியாபாரம், சமூக முன்னேற்றங்களில் தலைமைத்துவம் தேவை என்பதை அனைவரும் அறிவார்கள். தலைமைத்துவத்தின் நோக்கம் குழுவை இலக்கினை நோக்கிச் செலுத்துவது. ஆனால் சரியான மனச்சுத்தி இல்லாமல் தலைமைப் பண்பு வாய்க்காது.
எனது தொழில் நிபுணத்துவ ஆசான் சொல்லித்தந்தது, எப்போதும் உனது குழுவைத் தேர்ந்தெடுக்கும்போது உனக்கு உதவியானவர்களைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு அவசியமோ அதைப்போல் உனக்கு சவால் விடும் ஒருவனையாவது தேர்ந்தெடு என்பது! குறிப்பாக ஆமாச்சாமி போடும் நபரைத் தூர வை என்பார்! கேள்வி கேட்கும் புத்திசாலியை வைத்து வேலை வாங்க வேண்டும் என்றால் நீ அதை விடப் புத்திசாலியாக இருக்க வேண்டும்!
அனேக மனிதர்கள் தலைமைத்துவத்தை ஏற்க முன்னர் தமது அக உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதில்லை; யானை மாலை போட்டு பட்டத்திற்கு வந்ததைப் போல் சந்தர்ப்ப வசத்தில் தலைமைப்பதவி கிடைத்திருக்கும்! தமது உணர்ச்சிகளிற்கு அடிமைப்பட்ட மனதுடன் மக்களைக் குழப்பிக்கொண்டிருப்பார்கள்.
பயம் - மனதில் பயம் உள்ளவன் தலைவனாகினால் எப்போதும் எவரையாவது எதிரியாக்கி மக்களுக்கு அவனால் ஆபத்து என்று மனமாயை உருவாக்கி மக்களை ஒருவித உணர்ச்சிக்கு அடிமையாக்கி தனது அதிகாரத்தினைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பான்! இத்தகையவனது இலக்கு எப்படியாவது சாகும்வரை நான் அதிகாரத்தில் கதிரையில் இருக்க வேண்டும் என்பது. கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயம் காட்டியே வீணடிப்பான்.
பெருமை - பெருமை பிடித்தவன் எப்போதும் தன்னைப்பற்றி ஹீரோவாக பீற்றிக்கொண்டிருப்பதும், மற்றவர்கள் எல்லாரும் தனக்கு வாய்த்த அடிமை என்று நினைப்பதும், தனக்கு அடிமையாக இருக்கத் தகுதியாக எவனாவது இருந்தால் அவர்களை உடன் வைத்துக்கொள்வதும் இவனது பண்பு.
தாழ்வு மனப்பான்மை - சிலருக்கு தாம் எப்படித் தலைவனானோம் என்பதையே நம்பமுடியாமல் ஆழ்மனக்குழப்பத்தில் இருப்பார்கள்; கிட்டத்தட்ட 23ம் புலிகேசி போன்றவர்கள்; தாம் தலைவர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அடிக்கடி தமது தொண்டர்களுக்கு குடைச்சல் கொடுத்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள். தன்னை விட தகுதிவாய்ந்தவர்கள் எவராவது குழுவில் இருக்கிறார்களா என்பதை அவதானித்து அவர்களை கவனமாக கவனித்து வெளியேற்றுவதில் சிறப்பாகச் செயற்படுவார்கள்.
கபடம் - தான் அதிகாரத்தில் இருக்க ஒருவரை ஒருவன் ஒத்திசைந்து வேலை செய்ய முடியாமல் குழுவிற்குள் விரோதம் விதைத்து நச்சினைப் பாய்ச்சிக்கொண்டிருப்பவன்.
உண்மைத் தலைவன் - ஒவ்வொரு நொடியும் தனது மக்களுக்கு என்ன தேவை? அதை எப்படி அடைவது? என்ற இலக்கு உடையவன்! தன்னை விட தனது மக்கள் சரியான திசையில் சென்று இலக்கினை அடையவேண்டும் என்ற உறுதி உடையவன்.
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...