ஸ்ரீ அரவிந்தர், யோக முறைகளை ஒருங்கிணைத்த மகாயோகி!
ஸ்ரீ அரவிந்தர் இன்புளுவென்சா தொற்றுக்காலத்தில் (1919 - 1920) வாழ்ந்தவர். அந்தக்காலத்தில் பரோடாவில் பேராசிரியராக பணிபுரிந்தவர். பிற்காலத்தில் Letters On Yoga நூலில் இந்த கொள்ளை நோயின் தாக்கம் பற்றி கீழ்வருமாறு பதிந்திருக்கிறார்;
{Complete Works of Sri Aurobindo, Vol. 31, Letters On Yoga-IV, P568-569}
நோயிற்கான சூஷ்ம காரணம் என்ன? விஞ்ஞானிகள் மனம் என்ற ஒன்றோ, எண்ணம் என்ற ஒன்றோ பௌதீக மூளையைத் தாண்டி இல்லை என்பதை மறுக்கிறார்கள். மனம் அல்லது எண்ணம் என்பது மூளையின் அதிர்விலிருந்து உருவாகிறது. அதேபோல் பிராணன் என்ற ஒன்று இல்லை அனைத்து இயக்கமும் உடலின் இரசாயனப் பதார்த்தங்களால் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்.
ஆனால் இங்கு பௌதீகத்தில் செயல் நடைபெறுவதற்கு supraphysical என்ற நுண்தளம் ஒன்று இருக்கிறது. அதன் சேவகர்கள்தான் மூளை, இரசாயனங்கள், இந்த நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகள் (germs) எல்லாம்.
இந்த supraphysical agent ஆகிய நுண்ணுயிரிகள் முதலில் உனது காந்த மண்டலத்தைத் தாக்கி உட்புகுகிறது. இந்தக் காந்த மண்டலம் வலிமையாக இருந்தால் எத்தனை மில்லியன் நுண்கிருமிகளும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. இவை உன்னைச்சூழ உள்ள காந்த மண்டலத்தை பிளந்தவுடன் அது உனது உடலை இயக்குகிற subconscient mind இனையும், பிராணசக்தியில் குழப்பத்தை உண்டு பண்ணி நோயைப் பற்றிய பயத்தையும், எண்ணத்தையும் உருவாக்குகிறது. இப்போது நீ அந்த நோய்க்கிருமிகள் உனது உடலில் செயற்படுவதற்குரிய சூழலை உனக்குள்ளே உருவாக்கியிருப்பாய்.
90% இறப்புகள் நோயுடன் போராட முடியாது என்ற பயம் உருவாகியவர்களுக்கே நடக்கிறது. பயம் உருவாகி விட்டால் உன்னால் உனது உடலை ஆளமுடியாது.
மாற்றாக உனது subconscient mind இல் நோயை எதிர்க்கும் மனநிலை வலிமையாக இருக்குமாக இருந்தால் நீ கொலெரா, பிளேக் ஆகியவற்றிற்குள் பாதிப்பில்லாமல் நடமாடலாம்! எந்த நோய்த்தாக்கமும் உருவாகாது.
இதை நான் பரோடாவில் கொள்ளை நோய்க்காலத்தில் வாழும் போது கண்டிருக்கிறேன்.
***************************
இந்தக் கருத்து நோய்வாய்ப்பட்டவர்களில் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு நுண்மைப் புரிதலைத் தருகிறது!
எவருக்கு எதிர்த்துப் போராடும் குணம் subconscient mind இல்லையோ அவர்களை இந்த supraphysical நுண்ணுயிரிகள் வெற்றிகொண்டு மரணம் வரை கொண்டு செல்லுகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.