குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 04, 2021

இயற்கை விவசாயம் - சேதன விவசாயம் சாத்தியமா? -1

சிலகாலத்திற்கு முன்னர் Dr. Kumaravelu Ganesan அவர்கள் இயற்கை விவசாயம் பற்றி ஒரு விவசாயி முகநூலில் கேட்ட கேள்விகளிற்கு எனது கருத்தை எழுதும்படி கேட்டிருந்தார்கள். சிக்கல் மிகுந்த கேள்விகளைக் கொண்ட வாழ்வாதாரம் பற்றிய துறை என்பதால் வெறும் உணர்ச்சி வசப்பட்ட கருத்துக்களை எழுதாமல் சிந்தித்து, சீர்தூக்கி எனது கற்கை, அனுபவம் என்பவற்றுடன் ஒப்பிட்டு சரியாக எழுத வேண்டும் என்று நேரம் எடுத்துக்கொண்டேன். 

கேள்விக்களுக்கு பதில் கூற எந்த அறிவுத்தளத்திலிருந்து நாம் உரையாடுகிறோம் என்ற தெளிவினை உருவாக்க அடிப்படைக் கருத்துக்களை உரையாடலாம் என்று நினைக்கிறேன். 

துறைசார் நிபுணர்கள் ஆர்வமாக உரையாடுவது வரவேற்கப்படுகிறது. 

முதலாவது, இதை எழுதுவதற்கு என்ன தகுதி எனக்கு இருக்கிறது என்பதை கூறிவிட்டு எழுதுவது இங்கிருக்கும் அவையோருக்கு தெளிவாக்க வேண்டும். நான் முறையாக சூழலியல் முதுமாணி வரை பயின்றவன். பின்னர் அறிவியல் ரீதியாக, பெரும் வர்த்தக ரீதியிலான முகாமைத்துவம் செய்யப்படும் வாழைச் செய்கையின் சூழலியல் முகாமைத்துவத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்தவன். தற்போது பயிர் விஞ்ஞானத்தில் எனது முனைவர் பட்ட ஆய்வினைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன். ஆகவே நான் தமிழில் முகநூலில் ஆன்மீகம், தத்துவம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதால் அறிவியல் தெரியாது என்று எண்ணி எவரும் வாதம் செய்ய வரவேண்டாம்! 

சுருக்கமாகச் சொன்னால் இரசானத்தை அள்ளித் தெளித்து, உரத்தை மண்ணில் கொட்டி விவசாயம் செய்யும் ஒரு பெரிய நிறுவனத்தில் சூழலிற்கு பாதிப்பை எப்படிக் குறைப்பது என்று ஆராய்ந்து நிர்வகிக்க வேண்டும். சவால் மிகுந்த வேலை! 

இந்தத் திட்டத்தில் எமது பழமையான தோட்டத்தின் உற்பத்தி திடீரென குறையத்தொடங்கியது. இதற்கான முன்மொழிவாக எமது உற்பத்தி விஞ்ஞானிகளால் ஆழமாக மண்ணை உழுது, பண்படுத்தி, இன்னும் அதிகமாக உரம் போட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் எந்த ஆக்கபூர்வமான விளைச்சலும் கிடைக்கவில்லை. மேலதிகமாக உரம் பாவிப்பது என்பது என்னைப் பொறுத்தவரையில் சூழலை மாசாக்கி மண்ணில் உவர்த்தன்மையையும், நிலத்தடி நீர் மாசினையும் உருவாக்கலாம் என்ற வாதம்! என்றாலும் நான் சூழலியல் போராளியாக மாறமுடியாது. எனது நிறுவனத்திற்கு win-win தீர்வு கொடுக்க வேண்டும்.

இதை ஆராயப்போக இணையத்தளத்தில் இப்படி ஒரு பிரச்சனையை சுபாஷ் பாலேக்கர் என்பவர் தனக்கு நடந்த அனுபவமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆர்வத்துடன் அவருடைய உரையைக் கேட்க, அதில் நாம் நிறுவனத்தில் ஒருவித arrogance உடன் விவசாயத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை உறைக்க ஆரம்பித்தது. 

அதுவரை விஞ்ஞானத்தையே கற்று, விஞ்ஞான முறையின்படி விவசாயம் செய்துகொண்டிருந்த எனக்கு சுபாஷ் பாலேக்கர் கூறியது தர்க்கப்படி சரியாகப் பொருந்தி வருவதை சூழலியல் படித்த என்னால் இலகுவாக விளங்கக்கூடியதாக இருந்தது; 

அவருடைய இயற்கை விவசாயத்திற்கான ஆய்வுக் கேள்வி;

1. காட்டிற்கு யார் நீர் ஊற்றுகிறார்கள்? 

2. யார் உரம் போடுகிறார்கள்? 

3. யார் விதை நடுகிறார்கள்? 

4. இவை ஒன்றும் செய்யாமல் எப்படி காட்டில் உற்பத்தி சிறப்பாக நடக்கிறது? 

5. அப்படியென்றால் நாம் ஏன் காட்டைப் பார்த்துக் கற்றுக்கொள்ளக் கூடாது?

இந்த ஐந்து கேள்விகளுக்கும் விடையாக அவர் காட்டில் பயிர்கள் தம்மை ஒருங்கமைத்துக் கொள்ளும் அடிப்படையில் ஒரு மாதிரியுருவைக் கண்டுபிடித்தார். அதை ஏற்கனவே விளம்பரத்துக்கு அடிமையாகி இருக்கும் விவசாயிகளின் மனதிற்கு கொண்டு செல்ல கவர்ச்சிகரமான பெயரை இட வேண்டும் என்பதால் zero budget farming என்று பெயரிட்டார். உண்மையில் அதன் அர்த்தம் உள்ளீடு குறைந்த விவசாய முறை என்பதாகும். 

1. தோட்டத்தில் ஒரு நாட்டுப் பசுமாடு இருக்க வேண்டும்.

2. தோட்டத்திற்குள்ளே முதலாவது தடவைக்கு பிறகு உள்ளீடு எதுவும் வரக்கூடாது. 

3. தோட்டத்திலிருந்து விளைச்ச (பழம், தானியம்) தவிர மற்ற எதுவும் எரிக்கப்படகூடாது, மண்ணிற்கு உணவாக்கப்பட வேண்டும். 

4. உற்பத்திச் செலவு என்று எதுவும் இருக்கக் கூடாது. 

5. பல்பயிர் வகைமையாக உயிர்ப்பல்வகைமை இருக்க வேண்டும். அவரது மாதிரியில் 36x36 அடி ஒரு உற்பத்தித் துண்டாக கருதப்படுகிறது. இதற்குள் 16 பயிர்கள் வளர்க்கலாம். 

6. இந்தப் 16 பயிர்கள் 45 நாட்களில் பலன் தரத்தொடங்கி 05 வருடத்திற்கு பிறகு பலன் தரும் பயிர்களும் இருக்கும். 

7. மண்ணை அதிக உற்பத்திக்கு என்று அழுத்தம் தரக்கூடாது. 

இந்த ஏழாவது கருத்து மண்ணை அதிக உற்பத்திக்கு உந்தக்கூடாது என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம். மண்ணை நவீன விவசாயம் வெறுமனே ஒரு இரசாயனப் பதார்த்தமாக மாத்திரமே பார்க்கிறது. 

ஆனால் இயற்கை, காடு மண்ணை ஒரு உயிருள்ள   சூழற்றொகுதியாக பாவிக்கிறது. மண்ணில் இருக்கும் நுண்ணங்கிகளும், பரிணாமத்தில் ஆதியிலிருந்து மண்ணை உருவாக்கி வரும் மண்புழுவும் மண்ணின் உயிர்த்தன்மைக்கு அவசியமானது. 

நவீன இரசாயன விவசாயத்தின் உரங்கள் இந்த மண்ணின் உயிர்தன்மையினை இல்லாமலாக்குபவை என்பதே இங்கு புரிந்துகொள்ளக்கூடியது. 

நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர், மசானபு ஃபுகோகா எல்லோரும் சொல்லும் ஒருமித்த கருத்து “அதிக உற்பத்தி, அதிக இலாபம் என்ற மாயையில் நாம் எமது மண்ணை மலடாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதாகும். 

தொடரும்...


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...