மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது யாழ் பல்கலைக்கழகத்தின் இலட்சியம்! யாழ் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு மாணவனும் இந்த இலட்சியத்தினை நோக்கி தனது வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தப்பணிக்கூற்றின் நோக்கம்.
இப்படி உயர்ந்த இலட்சியத்தை நடைமுறைப்படுத்த அவுஸ்ரேலிய வாழ் யாழ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கல்விப் பணி E- கல்வி நம்பிக்கை நிதியம்.
கல்வி கற்பதற்கு தடைகள் எவை என்பதை ஆராய்ந்து அந்தத் தடைகளை எல்லாம் எப்படி நீக்கலாம் என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய தீர்வுகளை உருவாக்கும் முன்னோடி கல்வி நிறுவனம்.
இன்று உலகம் zoom, google meet என்ற தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கு பலவருடங்களுக்கு முன்னர் பழைய SKYPE தொழில்நுட்பத்தினை வைத்துக்கொண்டு digital education தொடங்கிய முன்னோடிகள்.
இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இருக்கும் தமிழ்ப் பாடசாலைக்கும் இவர்கள் உதவி கிட்டும்.
பொதுவாக Charity என்றால் காசு சேர்த்து கட்டிடம் கட்டுவது, பொருட்கள் அன்பளிப்பது என்ற வகை தான தருமம் அல்ல இவர்களுடைய பணி!
ஒரு வேளைச்சாப்பாட்டிற்கு மீன் கொடுப்பதை விட மீனைப் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே உண்மையான உதவி என்ற சீனப்பழமொழியின் ஆழமான தத்துவத்தில் இயங்குகிறார்கள்.
எமது பிள்ளைகளின் கல்வியே எமது எதிர்காலம் என்ற உன்னத இலட்சியம் கொண்டவர்கள்!
மலையகத்தில் இந்த இலட்சியம் விதைக்கப்பட்டால் அடுத்த தலைமுறையில் தொழிலாளர்கள் பிரச்சனை என்ற ஒன்றைப் பற்றி சமூகப் பிரச்சனையாக நாம் உரையாட மாட்டோம்!
தாம் இயங்குவதுபோல் மற்றவர்களையும் அத்தகைய பணியைச் செய்யச் சொல்லி மற்றவர்களுக்கும் தூண்டல் கொடுக்கிறார்கள்.
ஒருவருடன் ஒருவர் ஒத்திசைந்து, ஒன்றிணைந்து ஒரு வேலையைச் செய்ய கடினமான "மைய நீக்க விசை" சமூகமான எமது தமிழ்ச் சமூகத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து, உள்வாங்கி பணியின் நோக்கமாகிய மாணவர்கள் கல்வியில் வெற்றிப்பெறச் செய்ய வேண்டும் என்று எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றிச் செயற்படும் நிறுவனம்.
சரி, ஏன் இந்தப்பதிவை எழுத வேண்டும்?
இன்று ஈ-கல்வியை தலைமை தாங்கி நடாத்தும் Muralee Muraledaran அண்ணாவிற்கு பிறந்த நாள்! அவரை வெறுமனே வாழ்த்துவது மட்டும் போதாது! அவர் உளமாரச் செய்யும் இந்தப்பணியைப் பற்றி நான் அவதானித்ததை பகிர்வது அவருக்குரிய நல்ல வாழ்த்தாக இருக்கும் என்றே இந்தப் பதிவு!
மரத்தின் கிளைகளும், இலைகளும் எல்லோருக்கும் தெரியும்; ஆனால் அவை ஊன்றி வளர்ந்து நிற்பது அதன் ஆணிவேரிலும், பக்க வேர்களிலும்! இதைப்போல் Dr. Kumaravelu Ganesan உம் எனக்கு தனிப்பட பரீட்சையமற்ற e-கல்வி குழுவினரும் இந்த உன்னத பணிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
இதைப்போன்றதொரு சேவை மாதிரியுருவை (service model) நாம் பொருளாதாரத்தில், தொழில் வாய்ப்புக்களில் எப்படி எமது சமூகத்திற்கு உதவலாம் என்று சிந்தித்தால் இன்னும் பல முன்னேற்றத்தினை துரிதமாகப் பெறலாம்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Muralee Muraledaran அண்ணா!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.