குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, August 14, 2021

கொரோனாவும் நம்பிக்கையும்

இருவகையான மனிதர்களைக் காண்கிறோம்; இறைவன் கோயிலிலும், திருவிழாவிலும் மட்டும்தான் இருக்கிறான் என்று நம்பிக்கொண்டு இறைவன் வந்து எம்மைக் காப்பாற்றுவான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தனது அறிவை அடகுவைத்த மூட நம்பிக்கையாளன். 

இன்னொரு புறம் அறிவு ஓரளவு இருக்கிறது, வாழ்க்கை நன்றாகச் செல்கிறது; தன்னை அறிவுள்ளவனாக, புத்திஜீவியாக காட்ட வேண்டும் என்றால் நான் இறைவன் இருப்பதை நம்பவில்லை என்று நாத்திகனாக காட்டிக்கொள்ள விரும்புபவன். 

எமது அறிவிற்கு அப்பாற்பட்ட நுண்மையான விஷயங்கள் பிரபஞ்சம் முழுவதும் இருக்கிறது. நாம் நம்பவில்லை என்பதற்காக அவை இல்லை என்பதும் முட்டாள்தனம். இவர்கள் ஒருவகை அகங்காரத்தினூடாக தம்மை எல்லைப்படுத்திக்கொண்டவர்கள். தமது புரிதலுக்கு மேலே ஒன்றும் இல்லை என்று மனிதன் நினைக்கும்போது அறிவினை எல்லைப்படுத்திக்கொள்கிறான். ஆகவே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு மேல் அறிவைப் பெற விரும்புபவன் தான் அறிந்தது சொற்பமானது, அதற்கு மேல் நிச்சயமாக நாம் அறியாதது இருக்கிறது என்ற உணர்வு வேண்டும். 

உண்மை இரண்டிற்கும் மத்தியில் இருக்கிறது; எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் பிரபஞ்சம் இயங்கிக்கொண்டிருக்கிறது; நான் நம்புகிறேனோ, அல்லது மறுக்கிறேனோ என்பது பற்றி அதற்கு எந்தக் கவலையும் இல்லை; அந்தச் சக்தி இயங்கும் திசையை சரிவர மனிதன் கணிக்கும் வரை மனிதன் கவனமாக அதன் விதிகளைக் கற்க வேண்டும். மனிதன் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறான். 

காலம் காலமாக புதிய சவால்களை மனித குலம் எதிர்கொண்டு வென்றிருக்கிறது. கொள்ளை நோய்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றின்போதும் மனித குலத்தில் உணர்ச்சிவசப்பட்ட மாற்றத்திற்கு பயந்த மூடர்கள் அதை எதிர்த்திருக்கிறார்கள். இல்லையென்றால் உலகம், எதிர்காலம் இருண்டுவிட்டதாக பயந்து ஒழிந்திருக்கிறார்கள். ஆனால் மனிதகுலம் அந்த அனுபவத்தை அறிவாக்கிக்கொண்டு புதிய பலத்துடன் மீண்டு வந்திருக்கிறது. 

ஆகவே எவரும் ஓடவுமும் முடியாது ஒளியவும் முடியாது. 

இப்போது மனிதர்களாகிய நாம் எமது அறிவிற்குத் தெரியாத, அனுபவமில்லாத, புதிய, அறிவினால் உறுதிப்படுத்தப்படாத ஒரு சந்தர்ப்பத்தினை எதிர்கொண்டுள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நிதானமாக, எமது மன உந்தல்களை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கப் பழகாவிட்டால் நமக்கும் பலருக்கும் ஆபத்து விளைவிப்பவர்களாக மாறுவோம்! 

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் என்கிறார் வள்ளுவர்; 

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்.

பெருஞ்சுனாமி அடிக்கும்போது சுனாமி அடங்கும் வரை மலை உச்சியில் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, கூர்ந்து அவதானித்து அடுத்தமுறை அப்படியொரு சந்தர்ப்பம் வந்தால் எப்படி சமாளிக்கலாம் என்ற அறிவைப் பெறுவதை விட வேறு எதுவும் உருப்படியாகச் செய்ய முடியாது. இப்படித்தான் மனித குலம் அறிவினை வளர்த்துக்கொண்டு வருகிறது. 

புறவயப்பட்ட மனிதன் கடவுளை தன்னைப்போல் உருவமுடையவனாகப் படைத்து கோயில், திருவிழா, சடங்கு, சாங்கியங்களை ஏற்படுத்தினான். இவை எல்லாம் மனிதனின் திருப்திக்கானவை! சிவவாக்கியச் சித்தர் ஒரு பாடல் கூறியுள்ளார்; 

"நட்ட கல்லைச் சுற்றி வந்து மோன மோன என்று முணுமுணுக்கும் மந்திரம் ஏதுக்கடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்"

இந்தக்காலம் கூட்டம் கூட்டாமல் நாதன் என்ற இறைவன் எமக்குள் இருக்கிறான் என்று உணர்வதற்குரிய காலம்! 

நல்ல ஓய்வு எடுங்கள்! ஆரோக்கியத்தின் அடிப்படை,

1) நல்ல உறக்கம்

2) மித ஆகாரம்

3) நல்லெண்ணமும், இலட்சியமும் உடைய மனம்

4) அளவான உடலுழைப்பு, உடல் பயிற்சி

வீட்டில் சிறிதளவு நேரம் ஒதுக்கி எண்ணங்களைக் கவனித்து, மூச்சினை ஆழமாக்கி உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து வணங்கி வாருங்கள்! இது உடல், உள ஆரோக்கியத்திற்கு மிக உயர்ந்த பயிற்சி! எமக்குள் ஆற்றலைக் கூட்டும்!

எக்காரணம் கொண்டும் வீண் பதட்டமும், பயமும் கொள்ளாதீர்கள்! அதற்காக அசட்டுத்தனமான, முட்டாள்தன தைரியமும் கொள்ளாதீர்கள்! சம பாவத்திலிருந்து சந்தர்ப்பத்தை எதிர்கொள்வோம்! 

கொரோனா பொஸிட்டிவ் என்றால் பயமுறாதீர்கள்; எனது உடலிற்கு பழக்கமில்லாத ஒரு புது எதிரி எனது உடலைக் கைப்பற்ற வந்திருக்கிறான். அவனை நான் எதிர்கொண்டு உடலை மீளக்கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள்! உடலிற்கு தன்னை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவு இயற்கையில் இருக்கிறது. எனது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எண்ணாதீர்கள்! அதுபோல் இந்த சந்தர்ப்பத்தை எப்படிக் கையாள வேண்டும் என்ற தகுந்த மருத்துவ அறிவு இல்லாமல் வீணாக கண்டவற்றை முயற்சித்து உடலைக் கெடுத்து ஆபத்தினை வாங்காதீர்கள். 

ஒவ்வொரு இருளுக்கும் அடுத்து ஒளி வரும்! இரவிற்கு பிறகு பகல் வரும்! அதுபோல் நோயிற்குப் பிறகு ஆரோக்கியம் வரும்! ஆகவே இவற்றிலிருந்து மீண்டு மிகுந்த ஆரோக்கியத்துடன் இந்த மனித குலத்தை நன்மைக்கு இட்டுச் செல்வோம் என்ற நம்பிக்கையுடன் காலத்தை எதிர்கொள்வோம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...