எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள் 423)
என்ற குறளின் அடியை "மெய்ப்பொருள் காண்ப தறிவு" மகுட வாசகமாகக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இருந்த வவுனியா வளாகம், நீட்சி பெற்று, தனித்துவத்துடன்
"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு"
அறிவுடைமை குறள் எண்:422
மனத்தை கண்ட கண்ட இடமெல்லாம் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்ற மகுட வாசகத்துடன் இன்று உதயமாகிறது வவுனியாப் பல்கலைக்கழகம்.
இந்தக்குறள் யோகத்தில் தாரணை என்ற மனதை ஒருமைப்படுத்தி ஆற்றல் பெறுவதைப் பற்றிப் பேசுகிறது.
ஆக மெய்ப்பொருள் காண மனம் அங்கும் இங்கும் அலையாமல் மெய்ப்பொருளிலே இன்னும் ஆழமாகச் சென்று சாதனை படைப்போம் என்ற உறுதியுடன் உதயமாகிறது வவுனியா பல்கலைக்கழகம்!
இந்தத்தருணத்தில் நானும் பல்கலைக்கழகத்தின் ஒரு சிறு அங்கமாக இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியுடன் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூளை வளத்தை உருவாக்க, அறிவுசார் இலங்கையை உருவாக்க பாடுபடுவோம்!
இதை வடிவமைத்தவர் அன்புத்தம்பி, பேராதனைப் பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளர் Vimalathithan Vimalanathan அவர்கள்! விமலாத்தித்தன் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்; விவாத அரங்கு, கவிதை, தமிழ் என்பவற்றில் வித்தகர்! ஊடகவியலாளர். றோயல் கல்லூரியில் விவாதிகள் பரம்பரையை உருவாக்கிக்கொண்டிருக்கும் ஆசான்.
கால ஓட்டத்தில் என்னிடம் வந்து மாட்டிக்கொண்டவர்! எனது எழுத்துக்கள், நூல்களாக கட்டுரைகளாக அச்சுக்கு போகும் முன் முதலாவதாக மெய்ப்புப் பார்த்து திருத்தும் உரிமை கொண்டவர். எமது குருமண்டலத்தின் சாதகர்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.