ஆடி அமாவாசை முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் - திருப்திப்படுத்தல் எல்லோரதும் கடன்!
ஸ்தூல உடலை விட்டு நீங்கும்போது நாம் வாசனை - அதாவது வாழ்ந்த காலத்தில் ஏற்படுத்திக்கொண்ட இச்சைகளைச் சுமந்துகொண்டு இந்த ஐந்து பூதங்களாலான உடலை விட்டு வெளியேறுகிறோம். அடுத்த உடலைப் பெறவேண்டும் என்றால் இருக்கும் வாசனையை கரைக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் உண்டு, உறவாடி, பாசம் கொண்ட புத்திரர்கள், மனைவி, உரிமை கொண்டாடிய நிலம், செல்வம் இவை எல்லாவற்றையும் அவன் தனது வாசனா சரீரத்தில் ஏற்றிக்கொண்டு பூவுலகில் சுற்றிக்கொண்டு அடுத்த நிலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறான்.
இப்படித் தவிப்பவர்களுக்கு அவர்களுடன் உணர்ச்சியால் உறவுகொண்ட உடலில் உள்ள மனிதர்கள் தமது உணர்வை ஒன்றி உதவ முடியும். திருப்திப்படுத்த முடியும்.
தர்ப்பணம் என்றால் திருப்திப்படுத்துதல் என்று பொருள்! இதை அந்த ஆன்மாக்களுக்கு பிடித்ததைப் படையல் இடுதல் என்று சிலர் பின்பற்றுவார்கள்.
சிலர் கோயில், குளம், தீர்த்தத்தில் சடங்காக பின்பற்றுவார்கள்.
சிவபெருமானே பசுபதி - பசுவாகிய ஆன்மாவின் தலைவன்! ஆகவே சிவ உபாசனையில் ஆன்மாக்களின் வாசனை நீங்கி சிவபெருமானின் அருள் பொழிய சிவபூஜையாலும் எமது முன்னோர்களின் ஆன்மாவிற்கு நன்நிலை பெற வேண்டலாம்!
இதனை பித்ரு மோக்ஷ சாதனை என்று கூறுவர்! சிவபெருமானை அம்ருதகடேசுவரராக - ம்ருத்யுஞ் ஜெயராக ஆவாஹித்து அவரது அம்ருத கடாக்ஷம் எமது பித்ருக்களுக்கு வேண்டி அருள் பெறுதல் இந்த சாதனையின் அடிப்படை! சிவ உபாசனை, காயத்ரி ம்ருத்யுஜெய உபாசனை உடையவர்கள் கடைப்பிடிக்கக் கூடியது.
அனைவருக்கும் எம்முன்னோர்கள் வழிபட்ட வேதநாயகி அம்மையுடனுறை வேதவனநாதர் அருள் வேண்டி பிரார்த்தனைகள்!
தென்னாட்டில் சிவன் என்றும் எந்த நாட்டிலும் இறைவன் என்றும் அழைக்கப்படும் அந்த பரத்திற்கு போற்றி!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.