இன்று அறிவியல் என்பது தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதும் அவற்றின் மூலம் பணத்தினைப் பெறுவது என்பதே. ஆகவே அது மக்களை ஏமாற்றும் ஒரு பெரும் வியாபாரமாகவே இருக்கிறது. அறிவியல் பூர்வமானது என்ற வார்த்தை இணைக்கப்பட்டவுடன் அது மிகவும் மதிக்கத்தக்கதாக மாறுகிறது. யாராவது அறிவியல் பூர்வமான வியாபாரத்தைப் பற்றி எதிராகப் பேசியவுடன் அத்தகையவர்கள் அறிவற்றவர்கள், விஞ்ஞானப்பூர்வமானவர்கள் இல்லை, மூட நம்பிக்கை நிறைந்தவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அறிவியலில் புரிதலுக்கான மாதிரியுருக்கள் அனேகமானவை கணித அடிப்படையிலானவை; அவற்றில் சிலது சொற்கள் மூலம் விளங்கப்படுத்தக் கூடியவையாக இருக்கும். அனேகமானவை அப்படி விளங்க முடியாதவையாக இருக்கும். நாம் நினைக்கும், விரும்பும்படி அந்த மாதிரியுருக்களை (mathemetical models) மாற்றிக் கொள்ள முடியும். (இதற்கு பேராசிரியர் கொலெஸ்ரோல் பற்றிய சுவையான கதை ஒன்றினைக் கூறியுள்ளார்)
1950 களின் மருத்துவ அறிவியல் தத்துவத்தின் (Medical Scientific Philosophy)மிக உன்னதமான விஞ்ஞானி பீட்டர் மெடாவர் அருமையான நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார். அதன் பெயர் Limits of Science - அறிவியலின் எல்லைகள், இது அறிவியலில் ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு மாணவனும் ஆழமாகக் கற்கவேண்டிய நூல். ஒன்று அல்லது இரண்டு உதாரணங்கள் மூலம் நவீன மருத்துவத்தின் அறிவியல் புனிதத்தன்மையை அறிந்துகொள்ளலாம்.
மருந்தாக்கத் துறையில் (field of pharmaceuticals) எந்தவொரு இரசயான மூலக்கூறும் விலங்கு கலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அறிவியல் கண்டுபிடிப்பாகக் கொள்ளப்படுகிறது. இப்படி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்த மூலக்கூறு கீழ்வரும் படிமுறைகள் மூலம் செல்லும்.
1) விலங்குகளில் பலமுறை சோதித்து அவதானத்தைப் பெறுதல்
2) சரியான மூலக்கூறினைப் பெறுதல்
3) மனிதனில் பரிசோதித்துப் பார்த்தல்
4) பிறகு எழுந்தமானமான கட்டுப்பாடுப் பரிசோதனை
5) இறுதியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரத்தினைப் பெறுதல்
ஆகவே மருந்தாக்க சந்தை தனது சந்தையினைப் பெருப்பித்துக் கொள்ள சமாந்திரமாக நோய்வருவதை தடுக்கும் காரணிகளாக மறைமுக உடல் நல ஆபத்துக்காரணிகளுக்கு என மருந்துகள் தயாரிக்கின்றன.
தற்போதைய நிலவரத்தின் படி USA இல் 90% மான நாற்பது வயதினை எட்டும் நபர்கள் ஆகக் குறைந்தது 01 ஆபத்துக்காரணியையாவது கொண்டிருப்பார்கள். 60 வயதில் இது 100% ஆபத்துக் காரணிகளைக் கொண்டிருப்பார்கள். இதை “risk factor hypotheses” என்று கூறுவார்கள்.
நாற்பது வயதை எட்டியவுடன் 90% மானவர்கள் தமது ஆரோக்கிய பரிசோதனையின்படி நோயைத் தடுக்கவென்று (கொலெஸ்ரோல் அதிகரித்துள்ளது; மாத்திரை சாப்பிடுங்கள் என்ற} பரிந்துரையின் படி மருந்துக் கம்பனியின் வாடிக்கையாளர் ஆகியிருப்பார். வயது கூடக்கூட அது சக்கரை, இதய நோய் என்று இன்னும் அதிகரித்து முழுவாடிக்கையாளராகும் பொறிமுறை நடக்கும்.
இது மிகவும் பயங்கரமானது;
தொடரும்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.