பொதுவாக சிங்கம் காட்டின் ராஜாவாகவும் நரி குள்ளத்தனம் செய்யும் சதிகாரனாகவும் பழங்கதைகளில் சொல்லப்படுகிறது. இப்படி உருவகப்படுத்த கதைசொல்லிகள் அவற்றின் நடத்தையியலை கூர்ந்து கவனித்து அவதானித்திருக்க வேண்டும்.
சிங்கத்தின் வேட்டை நடத்தை (hunting behavior) தனித்துவமானது. சிங்கம் தனது உணவிற்காக பெருமளவு உழைப்பைத் தரும் தன்மையுடையதல்ல! தனது எல்லையை வலிமையாக வரையறுத்துக்கொள்ளும். மேலும் அது வேட்டையாடும் இரையைத் தாக்க முன்னர் அது பாயப்போகிறது என்பது இரைக்குத் தெரியும் வகையில் காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையிலிருந்து தாக்கும். மேலும் ஒரு இரையைக் குறிவைத்து ஓடத்தொடங்கினால் வேறு இரையில் கவனம் வைக்காத ஏகாக்கிரம் உடையது. பாதையை மாற்றாதது. இரைத் தப்பிவிட்டது என்றால் உடனடியாக வேறு இரைக்கு குறிவைக்காது. மீண்டும் தனது எல்லைக்குள் வந்து அடுத்த இரையைக் குறிவைக்கும். ஆண்சிங்கங்கள் ஆகச்சிறிய முயல் போன்றவற்றினை பெரும்பாலும் குறிவைக்காது.
சிங்கம் எப்போதும் சிங்கிளாத் தான் வேட்டைக்குப் போகும். ஒருவேளை கூட்டமாகப் போகும் சந்தர்ப்பம் வந்தால் தமது கண்பார்வையால் யார் இரையைத் துரத்தப்போகிறோம் என்பதை அறிவித்துவிட்டு ஒருதிசையில் மாத்திரம் அந்தக்கூட்டத்தின் ஒரு சிங்கம் இரையை நோக்கிப் பாயும். மற்றவை பதுங்கிப் பாய்ந்து இரையைப் பயமுறுத்தும். தலைமை ஏற்று வேட்டையை நடத்தும் சிங்கத்தைப் போட்டி போட்டு குழப்பாது. வேட்டைச் சிங்கத்தின் தலைமைத்துவத்தை வேட்டை முடியும் வரை பொறுமையாக உதவி செய்யும் வகையில் காத்திருக்கும். மேலும் வேட்டை நடத்தையை மாற்றாது!
ஆக சிங்கத்தின் நடத்தை தரும் தலைமைப் பண்பு;
1) எதை நோக்கியும் அலைந்து திரியும் பழக்கம் இல்லை; தனது எல்லையை வகுத்துக்கொண்டு வேட்டையை நிகழ்த்தும்.
2) வேட்டையாடப் போகும் இரையை நம்பவைத்து கழுத்தறுப்பதில்லை; பாயுமுன்னர் இதோ நான் உன்னைக் கொல்லப்போகிறேன் என்பதை அறிவித்துவிட்டு முடியுமானால் தப்பித்துக்கொள் என்று நடத்தைக் காட்டி வேட்டையாடும்.
3) ஒரு தடவை குறித்த இரையைப் பிடிப்பது என்று முடிவு செய்து விட்டால் அதன் பேச்சை தானே கேட்காது.
4) தனது தகுதிக்கு குறைந்த சிறிய இரைகளை ஆண்சிங்கங்கள் குறிவைப்பதில்லை.
5) ஆண் சிங்கம் சிங்கிளாகத்தான் போகும்.
6) ஒரு சிங்கம் குறிவைத்த இரையில் மற்றைய சிங்கங்கள் குறிவைக்காது. வேட்டையாடும் சிங்கத்திற்கு cover up position கொடுத்து உதவும்.
இவையெல்லாம் இன்று தனிமனித வெற்றிப்பாடங்களாக போதிப்பதால் தான் அந்தக் காலத்து மனிதர்கள் சிங்கத்தின் நடத்தையில் அறிந்தவற்றை அரசனுக்கு தலைவனுக்கு ஒப்பிட்டார்கள்!
அடுத்து நரி பற்றிப் பார்ப்போம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.