கிரிக்கெட்டில் பந்து வீச்சாளரின் கடமை பந்து வீசுதல், துடுப்பாட்டக்காரரின் கடமை பந்தை எதிர்த்தாடுதல். பந்து வீச்சாளர் ஒவ்வொரு விக்கெட்டாக எடுத்து 10 பேரையும் ஆட்டமிழக்கச் செய்தால் வெற்றி! இதில் துடுப்பாட்டக்காரர் திறமையாக உயர அடித்தால் அவற்றைப் பிடித்துக்கொள்ள மற்றைய வீரர்கள். இதில் ஆட்டம் சரியாக ஆடுகிறோமா என்று நடுவர் இருப்பார்!
யோக சாதனையில்
மனம் - பந்துவீச்சாளர்
புத்தி - Team captain
மனதை ஒருமைப்படுத்தல், சிந்தனையைச் சீர்படுத்தல் - பந்துவீசுதல்
துடுப்பாட்டக்காரர் - எமது கர்மாவும், புலன்களும், மனதை ஒருமுகப்படுத்த விடாமல் திசைதிருப்பிக்கொண்டிருப்பவை.
சக ஆட்டக்காரர் - எமது உபாசனா தெய்வத்தின் பரிவாரங்கள் அல்லது சொந்த விழிப்புணர்வு, மனமும், புலன்களும் சிக்ஸர் அடித்தாலும் பந்தைப் பிடித்து ஆட்டத்தைத் தடுப்பவை.
நடுவர் - குரு
விக்கட் - நாம் அடையவேண்டிய பரம்பொருளாகிய பேரொளி!
பந்து வீச்சாளர் பல ஓவர் வீசி சில விக்கட் எடுப்பது போல் பல மணி நேர ஜெப, தியான சாதனையில் ஒரு சில வினாடிகள் (fraction of second) சீரிய ஏகாக்கிரம் வாய்க்கும்! ஒரு விக்கட் எடுப்பதால் ஆட்டம் முடிவதில்லை; அதுபோல் ஒரு தடவை ஏற்பட்ட தியான சாதனை முன்னேற்றத்தால் முழுமையாக எவரும் கர்ம பிரபாவத்திலிருந்து விடுபடுவதில்லை! பலருக்கு பல இன்னிங்ஸ் ஆடவேண்டிய கிரிக்கட்டாகத்தான் இருக்கும்!
யோக சித்தி என்பது பந்துவீச்சாளராகிய உங்கள் மனம் எவ்வளவு சீரிய ஏகாக்கிரமாக இருக்கிறது என்பதிலும், துடுப்பாட்டக்காரர் ஆகிய உங்கள் கர்மாவும், புலன்களின் தீய பழக்கவழக்கங்களின் வலிமை எப்படி இருக்கிறது என்பதிலும் தங்கியிருக்கிறது!
கிரிக்கட்டும் யோக சாதனைக்கு வழிகாட்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.