ஓநாய்க் கூட்டத்தின் வேட்டையாடல் நடத்தை மனிதக் குழுக்களில் தலைமைத்துவப் பண்பிற்கு ஒரு பாடம்.
ஓநாய்கள் சிக்கலான, நுண்ணறிவுடைய, அக்கறையுடைய, விளையாட்டுத்தனமுடைய, தனது குடும்பத்தின் மீது பாசம் மிகுந்த சமூக விலங்கு!
யானை, டொல்பின், குரங்குகள் இத்தகைய தனது பிள்ளைகளை வாழ்க்கைக்குப் பயிற்றுவித்து தயார்ப்படுத்தும் விலங்குகள் ஆகும்.
ஓநாய்க் கூட்டம் தனது இலக்கினை ஏற்கனவே வேட்டைக்கு நிர்ணயித்து விட்டு எந்தவொரு உயர்படி நிலைகளையும் (hierarchy) ஆக்கிக்கொள்ளாமல் மிகச்சொற்பமான தொடர்பாடலுடன் வேட்டையை வெற்றிகொள்ளும்! அவ்வளவு குழுவிற்குள் ஒத்திசைந்து இயக்கும் புரிதல் உடையது!
தமது குழுவுக்குள் சண்டை பிடித்துக் கொள்ளாது; அரசியல் செய்யாது! இலக்கின் மீது மாத்திரமே குழுவாகக் குறிவைக்கும்! தமது குழுவில் நலிந்தவர்களுக்கு உதவும். தனது வேட்டைத் தந்திரோபாயங்களை அடுத்த சந்ததிக்குக் கற்பித்து தனது குழுவின் உறுதி நிலையை வலுப்படுத்தும்.
ஓநாய்கள் தனது இரையைப் பிடிப்பதற்கு தகுந்த சந்தர்ப்பத்தை தனது குழுவுடன் சேர்ந்து உருவாக்கும். எதிரியை போலிச்சந்தர்ப்பத்தை உருவாக்கி எதிரியின் வலிமையைச் சோதித்து வெற்றியை உறுதிப்படுத்தும். தாக்கும் போது எதிரியை தனது குழுவுடன் சேர்ந்து திக்குமுக்காடச் செய்யும்!
தனியொரு ஓநாயாக பிடிக்கமுடியாத தன்னைவிடப் பெரிய இரையைக் கூட்டமாகப் பிடித்து வெற்றிபெறும்!
ஓநாய்களிடமிருந்து பெறும் பாடம்
1) தனது குடும்பத்தை, குழுவை, இனத்தைப் பாதுகாத்தல், வளங்களை உருவாக்குதல்.
2) இலக்கினை அடையவேண்டும் என்று நிர்ணயித்த பின்னர் தலைவனைத் தேடிக்கொண்டிருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இலக்கினை அடையப்போராடுதல்.
3) தமக்குள்ளேயே சண்டைபோட்டு யார் பெரியர் என்று நடக்காமல் அன்பும், பாசமும், பரிவுடனும் நடத்தல்.
4) தனது தகுதிக்கு மீறிய இலக்கினைக் குறிவைக்காது; குறிவைக்கும் போது குழு முழுமையாக இலக்கில் இயங்கும் படி குழுவிற்கு ஒழுக்கத்தைப் போதித்திருக்கும்!
5) குழுவிற்கு ஒழுக்கத்தையும், கட்டுக்கோப்பையும் காக்க தலைவர் இருப்பார்; ஆனால் வேட்டையாடும் போது இலக்கை அடைவதற்கு அனைவரும் தலைமைத்துவம் ஏற்று வேட்டையாடுவர்.
6) பெரிய ஓ நாய்கள் வேட்டையாடும் போது சிறியவர்கள் கவனமாக வெளிவட்டத்திலிருந்து கற்றுக்கொள்வார்கள்.
7) தலைவர் (alpha) வேட்டை இலக்கினைத் தேர்ந்தெடுத்தால் குழு அந்த இலக்கிற்கு அர்ப்பணிக்கும்!
இறுதியாக தமிழ் மக்களின் அரசியலிற்கு ஓநாய்கள் நல்லதொரு பாடம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.